(அல்லது) இதுதாண்டா ஸ்த்ரீஷக்தி! :-)

ஆஸிஃபா கான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலிருந்து...

ஆஸிஃபா கான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலிருந்து…

… அத்தனை செய்திகளை நகைச்சுவையுணர்ச்சியுடன், எளிமையான ஹிந்தியில், வசைகள் இல்லாமல் தொடர்ந்து சொல்கிறார்! தெளிவான, ஸ்பஷ்டமான உச்சரிப்புகள். செதுக்கியெடுக்கப் பட்ட கிண்டல்கள்.  நைச்சியமான நையாண்டிகள். தேவையானபோது சரியான ஆங்கிலப் பதங்கள். கூட்டத் திரள்கள் மயங்கிக் கேட்கின்றன, ஆரவாரம் செய்கின்றன! காங்க்ரெஸ் கட்சிக்கும், தீஸ்தா செதல்வாத் தர அழுகுணி ஆட்டம் ஆடும் புளுகுணி மாங்கொட்டைகளுக்கும், தொழில்முறை கஞ்சிக் கலய மனிதவுரிமைவாதிகளுக்கும் திருப்பித் திருப்பிச் சவுக்கடி.

குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றிய அங்குள்ள மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய – எளிதில் சரிபார்த்துவிடக் கூடிய விவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது எளிமையாக்கி அவற்றைச் சாமானியர்களின் வாழ்க்கைகளோடு பொருத்திச் சரியாகப் புரிந்துகொள்ள வைக்கிறார்.  நரேந்த்ரமோதிக்காக வாக்குச் சேகரிக்கிறார். குஜராத்திய கிராம/ நகர ஜனங்களிடம் ‘அர்ரே பாயீ  ’ என்று இழுத்துப் பேசி (என் மனதையும்) கொள்ளை கொள்கிறார். Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா தீஸ்தா செதல்வாத்! :-(

“என்னுடைய வாழ்க்கையின் ஒரே கோஷம் – நான் இந்தியனாகப் பிறந்தவன், ஒரு உண்மையான இந்தியனாக இருப்பதில் பெருமைப் படுபவன்”

– ரயிஸ்கான் பதான்

ரயிஸ்கான் அவர்களை – போராளிப் பெண்மணி, நிரந்தர மனிதவுரிமை மாதர் திலகம், குஜராத்தின் புரட்டுத்தலைவி அம்மணி மகாமகோ தீஸ்தா செதல்வாத் (Teesta Setalvad) அவர்களின் செல்லக் கைத்தடியாகத் தான் அறிந்திருந்தேன் – அதுவும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என நினைவு.

இப்போதிருப்பதை விட மிக மும்முரமாக, அமெரிக்க அரசிடமிருந்தும், தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிச்சை போடும் கனவானிய ஸ்தாபனங்களிலிருந்தும் பணம் வாங்கிக் கொண்டு – ஒரு மோதி எதிர்ப்பு நிலையையும், ஆகவே ‘ஸெக்யூலரிஸ’  காதலுணர்ச்சியை ஏற்றிக் கொண்டு, தீஸ்தா அம்மணி பவனி வந்து கொண்டிருந்த கால கட்டங்கள் அவை… இந்த அம்மணியைப் பற்றி ஒரு பதிவை முன்னமே எழுதியிருக்கிறேன். (பிச்சை போடுபவர்களும், பிச்சைக்காரர்களும்…)

ரயிஸ்கான் அவர்களும் தீஸ்தா சொல் கேட்டு, மோதிக்கு எதிராக, குஜராத் அரசுக்கு, காவல்துறைக்கு எதிராகச் சாட்சிகளை ஜோடிப்பதையும், பொய்வதந்திகளைப் பரப்புவதையும், பொய் ஆவணங்களைத் தயாரிப்பதையும் — கொஞ்சம் வெள்ளந்தியாகவே செய்திருக்கிறார்; ஏனெனில் ரயிஸ்கான் உண்மையாகவே, தான் தன்னுடைய சக முஸ்லீம்களுக்கு உதவுவதாகவும், தீஸ்தா ஒரு ‘மாறாது போல வந்த மாமணி’ போலவுமெல்லாம் ஒரு மனப் பிரமையில் இருந்திருக்கிறார்.    Read the rest of this entry »

எச்சரிக்கை: அய்ஜஸ் இல்மி அவர்கள் பொஜக-வின் (= ஆம்ஆத்மி டீ பார்ட்டி) தலைவர்களின் ஒருவரான அம்மணி ஷஸியா இல்மி அவர்களின் சகோதரர். இந்த ஷஸியா அம்மணியானவர், ஊழலுக்கு எதிராக கொதித்துக் கொண்டிருக்கும்போதும், காங்க்ரெஸ்ஸுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும்போதும், தொலைகாட்சிக்காரர்களால் அடிக்கடி ஆம்ஆத்மி கட்சி சார்பாக பப்பரப்பா நேர்காணல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோதும்…

… முடிந்தபோதெல்லாம் மன்மோஹன் ஸிங் அவர்களுடன் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் துள்ளிக்குதித்துக் கொண்டு இந்திய அரசுச் செலவில் (= நம்முடைய வரிப்பணம்), இலவச வெளி நாட்டுப் பயணங்கள் சென்றவர்! இதுதான் பெரும்பாலான தொழில்முறை ‘பொதுவாழ்வில் தூய்மை விரும்பி’களின் அழகு; ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம், விட்டெறியப்பட்ட எலும்புகளைப் பொறுக்கித் தின்றுகொண்டு, அற்ப மாறாட்ட போங்காட்டம்!

ஆனால், ஷஸியா அம்மணியின் சகோதரர் அய்ஜஸ் அப்படியல்லர். இரட்டை வேடமணிபவர் அல்லர்.

அய்ஜஸ் அவர்களின் குடும்பம்  ஸியாஸத் ஜதித் (Siyasat Jadid)   எனும் உருது தினசரியை நடத்திக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியிலும் இல்லாமல் ஒரு இந்தியவிரும்பியாக மட்டுமே இருந்த இந்த அய்ஜஸ், எம்ஜெ அக்பர் (நாம் மிகவும் மதிக்கும் படிப்பாளிகளில், சிந்தனையாளர்களில், பத்திரிகையாளர்களில்  ஒருவர் இவர்) அவர்களுடன் பாஜக-வில் அண்மையில் இணைந்தார்.

Read the rest of this entry »

(அல்லது) பாமோலின் கவரால்…

பாமாயில் (PalmOil) என்ற பெயரை வக்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்.

அடச் சட்… :-(

நான் எழுத வந்தது:   ‘கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்‘ என்றவொரு மகாமகோ படுபயங்கர பயபீதியளிக்கும்,  திடுக்கிடவைத்துத் தூக்கிவாரிப்போடும்  தகவலுடன் ஆரம்பிக்கும் ‘கோகோலின் பெயரால்’  எனும் தலைப்புடைய மிக முக்கியமான கட்டுரையைப் பற்றித்தான். :-((

சரி. பெயரைப் பெயரிடுவார்கள் – ஆகவே,  மயிரை மயிரிடுவார்கள் எனும் அடிப்படைப்  புரிதலுடன் ஆரம்பிக்கத்தான் நினைக்கிறேன். :-((( இருந்தாலும் அழுகைஅழுகையாக வருகிறது. Read the rest of this entry »

சிஷ்டி அவர்கள் ஒரு சூரத் நகர இளைஞர் -  மத நல்லிணக்கத்துக்கும், இந்தியகுஜராத்தி முஸ்லீம்களின் மேன்மைக்கும் பாடுபடும் மதத் தலைவர். ஆனால் இவர், ஒரு சாதாரண, படிப்பறிவற்ற, மற்ற நம்பிக்கைகளின் மீது வெறுப்பைக் கக்கும் தொழில்முறை மதத்தலைவர் அல்லர்.  வெறுப்பை மூலதனமாக வைத்துப்  பணத்தையும் புகழையும் அடைய நினைப்பவர் அல்லர்.

உலகளாவிய அளவில், இஸ்லாமை நம்புபவர்களை, அவர் கண்டுகொண்ட ஸூஃபி முறை ஞானமார்க்கத்தில் வழி நடத்துபவர். ஓரளவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு படைத்தவர். சூரத்தின் அதோதராவில் உள்ள தர்காஹ் ஷாரிஃப்-ன் கடினஷின் (=தலைமை உபாசகர்); உம்மா அகிலம் எனும் தொலைக்காட்சி அலை வரிசையை நடத்துபவர். (இந்த அலை வரிசையைப் பற்றிச் சில செய்திகள் அந்தக் கேடுகெட்ட விக்கிபிடியாவில் இருக்கின்றன; வேறு வழியேயில்லாமல், சோம்பேறித்தனமாக இந்தச் சுட்டியைக் கொடுக்கிறேன்; தொலைக்காட்சிக்கும் எனக்கும் வெகுதூரம்)

எச்சரிக்கை: இவர் மோதியின் நண்பர். அவருடைய அரசியல் ஆதரவாளரும்கூட.

இவரும் மாய்ந்து மாய்ந்து மோதிக்கு எதிராக, இந்தியாவின் பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப் படும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், பாவம். Read the rest of this entry »

குணோத்ஸவ் = தரத்தைக்  கொண்டாடுதல்!

முன்குறிப்பு:

நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு 1) குஜராத் போகவில்லை (போய்ச் சில வருடங்கள் அங்கு தங்குவதாக, சுற்றுவதாகச் சில திட்டங்கள் இருந்தாலும், அடுத்த ஏழு வருடங்களுக்கு நிச்சயமாக அவற்றைச் செயல் படுத்த முடியாது), 2) ‘கூக்ள் தேடி’ மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இணையத்தையும் ஒற்றியெடுக்கவில்லை (ஏனெனில், எனக்கு திடீரெக்ஸ் காப்பியடித்து ஞானவானாகக் காண்பித்துக்கொள்ளும் முனைப்பும், முக்கியமாக வயதும் இல்லை)

ஆனால், நான் இக்காலங்களில் ஒரு சாதாரண கிராமப்புறப் பள்ளி ஆசிரியன். கல்வியைப் பற்றி, அதன் தமிழக நிலையைப் பற்றி மிகக் கவலைப் படுபவன். நம் இழி நிலையைச் சரிசெய்வதில் இருக்கும் மகாமகோ இடர்களை (ஒரு மண்புழுவினைய பார்வையில்) உணர்ந்து புழுக்கத்தில் இருப்பவன். சில சமயம் – யோசிக்கும் தருணங்களில், வரப்போகும் 10 -20 ஆண்டுகளில் எப்படிப்பட்ட தமிழகத்து இளைஞர்களை எதற்காக  வார்த்தெடுக்கப் போகிறோம் என்று யோசித்து, நொந்துபோய்அடிவயிற்றில் கலவர உணர்ச்சியோடு இருப்பவன்… ஆக, இப்புழுக்கங்களுக்கு எதிராக, பல சமயங்களில் வெறியுடனும் சில சமயங்களில் மகாமகோ அயர்வுடனும் பணியாற்ற (mostly like a headless chicken) முயன்று கொண்டிருப்பவன். பலமுறை கேவலமாகத் தோற்றுக் கொண்டும், சிலதருணங்களில் மட்டும் (ஆசுவாசமளிக்கும் வகையில்) சில சிறு சிடுக்கவிழ்த்தல்களுக்காக, அற்பத்தனமாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டும். :-(  Read the rest of this entry »

தேர்தல் ஜனநாயகம் ஒட்டு உணர்ச்சிகரப் புல்லரிப்பு என்றால், பொதுவாகவே குடிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் படிப்பறிவும் அதிகம் இல்லாத நம் நாட்டில் -  பல நடைமுறை ரோதனைகள்  இருப்பது சகஜமான விஷயமே! மேடைப்பேச்சுகள், வெறும் ஏச்சுகளாக மட்டுமே இருப்பதும்,  கருத்துவேற்றுமைகள் அடிஉதை சண்டைகளாக மாறுவதும் நடந்துகொண்டிருப்பவைதான்…

ஆனால் இந்த மோதி எதிர்ப்பு விவகாரத்தில்தான்- எனக்குத் தெரிந்து, உரையாடல்கள் மிக மிகக்  கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன…  கண்டமேனிக்கும் கோமாளித்தனமான குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த கருத்துலகக் கபோதிகள்.

மோடி என்றால் மோடிமஸ்தான், பில்லிசூனியம் வைப்பாரென்பார்கள்; மோதி என்றால் மோதி விடுவார், ஜாக்கிரதை என்று அலறுவார்கள்.  மோதி இந்தப் பக்கம் வந்தால், ஏன் அந்தப் பக்கம் போகவில்லையென்பார்கள். அந்தப் பக்கம் போனால் – இந்தப் பக்கத்துக்கு ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் வைப்பார்கள்! Read the rest of this entry »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 196 other followers