மாதாந்தத் தொகுப்புகள்: மே 2011

அஞ்சும்நெஞ்சனும், நகைச்சுவை ததும்பும் விளம்பரத்தட்டிகளும்…

பல நாட்கள் முன் நான் அஞ்சும்நெஞ்சன் கதை (முற்றும், சீக்கிரம்) என்ற இடுகையில் இம்மாமனிதர் அழகிரி பற்றி எழுதினேன். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விதத்தில் இவர் தொண்டரடிப்பொடிகள் மண்ணைக் கவ்வியுள்ளனர். திருப்தி. ஆனால் – நாம் தா கிருட்டிணனை மறக்க முடிந்தாலும், எரிந்த தினகரன் பணியாளர்களை அவர்களின் அயோக்கிய மாறன் முதலாளிகள் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லையானாலும்,  தோழர் லீலாவதியின் வீச்சரிவாள் கொலையை நாம் எப்படி மறக்க முடியும்? இந்த ஆளை எப்படியாவது [...]

தமிழகத்தின் துரதிர்ஷ்டம்: கயல்விழி ‘அழகிரி’ வெங்கடேஷ்

மெய்யாலுமே, திமுக கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால்,  கயள்விளி அளகிரி சொல்லக் கூடியது போல: “கலைங்கர் காப்பாட்ராவிட்டால் மெள்ளத் தமிள் இனிச் சாவும்.“ இம்மாதரசி பேசாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்து, மகிழ்ச்சியுடன் இருந்தால் யாரும் இவரைப் பற்றிப் பேசமாட்டார்கள். ஆனால், இவர் கிவிதை எழுதுகிறார் (ஆம், அது அவர் அப்பன் வூட்டுச் சொத்துத் தான்) – அதை ‘பகீர‘ங்கமாகப் படிக்கவும் செய்கிறார் (கனிமொழி மட்டும் கிவிதை எழுதலாமா?) – அரசியலில் ஈடுபடுகிறார் – அரங்கத்தில் பேத்துகிறார் – [...]

செந்தில் கவுண்டமணி வடிவேலு – நகைச்சுவை(!)

வெந்த புண்ணில் வடிவேலுவைப் பாய்ச்சுவது சரியில்லைதான், இருந்தாலும்… அவர் சொன்னது போலவே அனைத்துத் தொகுதிகளிலும் திமுக பெற்ற வெற்றிக்கு உழைத்திட்ட வடிவேலுவுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் அன்றோ? =-=-=-=-= அயோக்கியத்தனமான கொலைகளுக்காக (தா கிருட்டிணன், போற்றுதற்குரிய கவுன்சிலர் லீலாவதி, தினகரன் பணியாளர்கள் மற்றும் பலியான பலர்), மதுரை அழகிரியின் கொட்டையைப் பிடிக்க நேரமாகிக் கொண்டிருக்கிறது, சீக்கிரமையா சீக்கிரம்!

வீரமணி: மோசமான வழிகளில் பொருள் ஈட்டிய கருணாநிதி போன்றவர்கள் எல்லாம் கூட அறப்பணி செய்கின்றனர்

அண்மையில்,  கருணாநிதியால், திமுகவிற்கு ஏற்பட்ட தோல்விக்குப் பின் வெளியிடப்பட்ட  கருணாநிதியின் அறிக்கையில் (பார்க்க: ‘விடுதலை’யில் வெளிவந்த ‘கலைஞர்’ அறிக்கை – “கழகம் தர்ப்பைப் புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று துடிக்கும் சக்திகள்! கலைஞர் தீட்டிய சுயமரியாதைப் புதினம்!” ) அவர், தான் எவ்வளவு ரூபாய்களை, என்னென்ன விதமாக, பலவிதமான பணிகளுக்குக் கொடுத்திருக்கிறேன், எப்படி  பல மனிதர்களுக்கு உதவி செய்திருக்கிறேன் என்று ‘மன ஓலம்’ இட்டு ஓவென்று அழுது ஆகாத்தியம் பண்ணி கண்ணீர்ப் பெருக்கெடுத்து, ஒப்பாரி [...]

வீரமணி: ஸ்டாலின் சாயிபாபாவுக்கு மரியாதை செலுத்த படையெடுத்ததுதான் பெரிய தேசிய சோகம்

சூரியன் வானத்தில் நடத்தும் வருடாந்திர ஜாலங்களான உத்தராயணம் (வடதிசை நோக்கிய பயணம்) தட்சிணாயனம் (தெற்குத் திசை நோக்கிய பயணம்) போல நம் வீரமணியும் சளைக்காமல் அம்மையாருக்கும், கருணாநிதிக்கும் மாற்றி மாற்றி, அரசாங்கம் மாறும்போதெல்லாம் காவடி எடுப்பது தெரிந்ததே. காண்டாமிருகம், முதலை முதல் பழங்கால டைனோசார்கள் வரை அனைத்தும் வெட்கப் படவேண்டிய அளவுக்கு, தடிமனான புறத்தோல் கொண்ட, தோல்வலி கொண்ட தோழர் இவர் என்பதும் நமக்குத் தெரியும். நிற்க, வீரமணியின் ‘விடுதலை’ (நமக்கு எப்போது தான் இம்மனிதரிடமிருந்து  விடுதலையோ!) [...]

பழ நெடுமாறன்: கருணாநிதிக்குப் பகிரங்கக் கடிதம்…

சில நாட்கள் முன், கருணாநிதியின் ஒப்பாரி அறிக்கை பற்றியும் (‘நண்பர்கள் நன்றி மறந்தார்கள்’ என்பது போன்ற) வீரமணியின் அறிக்கையையும் கேலி செய்து ஒரு இடுகை இட்டிருந்தேன். வீரமணியின் புதிய அறிக்கையில் பல திடுக்கிடும் பல்டிகள் !! இப்போது, இன்றைய  தினமணியில் பழ நெடுமாறன் அவர்களின் – மிகத் தெளிவாக, அழகாக, மிகுந்த பண்புடனும், மரியாதையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும்  எழுதப் பட்டுள்ள பதில் அறிக்கை வந்துள்ளது. கருணாநிதியின் இன்னும் சில சில்லறைத் தனங்களையும், விடலை  மனக்கோட்பாடுகளையும், துரோகங்களையும் – இது மிகக் கோர்வையாகச் சொல்கிறது. [...]

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 10-14 பக்கங்கள்

படித்தீர்களா? சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள் சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 5-9 பக்கங்கள் அடுத்த சில நாட்களில் – முழு அறிக்கையும் பிரசுரிக்கப்படும். நீங்கள் இந்த அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் இட்டால், அது என்னவாக இருந்தாலும், உபயோக கரமாக இருக்கும். நன்றி.

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 5-9 பக்கங்கள்

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள் சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 10-14 பக்கங்கள்

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்

நீங்கள் முதலில் கீழ்க்கண்ட இடுகைகளைப்  படிக்க வேண்டும்: சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்… சர்க்காரியா கமிஷன் பின்புலம் படித்து விட்டீர்களா? சரி, இப்போது உங்களுக்கு சிறிது, இம்மனிதர் (கருணாநிதி) பற்றி,  அவர்தம் தொடரும் ஊழல் கதை பற்றி அறிமுகமாகியிருக்கும் என நினைக்கிறேன் – அதாவது, உங்களுக்கு முன்னமே இவை பற்றித் தெரியாமலிருந்தால்! இந்த இடுகையில் இருந்து ஆரம்பித்து, மொத்தம் மூன்று இடுகைகளில், இந்த முன்னோட்ட அறிக்கை பிரசுரிக்கப் படுகிறது. [மன்னிக்கவும் - இந்த அறிக்கைகள், முழுவதும் ஆங்கிலத்தில் தான் [...]

சர்க்காரியா கமிஷன் பின்புலம்

சர்க்காரியா கமிஷன் பற்றிய முன்னோட்ட இடுகையைப் படித்தீர்களா? இல்லாவிட்டால், முதலில் அதனைப் படித்துவிட்டு வரவும். சர்க்காரியா கமிஷன்:  1976-ஆம் ஆண்டு இந்திரா காந்தியினால் – கருணாநிதி பற்றும் அவர் அமைச்சர்கள் மீது அப்போதிருந்த வானளாவிய ஊழல்கள் பற்றி விசாரிக்க – ஒரு அப்பழுக்கற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தான் இது. இதே சர்க்காரியா அவர்கள், பின்னாளில் (1983) மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆய்ந்தறிந்து, சிபாரிசுகளை முன்வைக்க ஒரு அதே இந்திரா காந்தியினால் கமிஷன் [...]

Follow

Get every new post delivered to your Inbox.