தேர்தல் முடிவுகள் மிகவும் திருப்தி தரக் கூடியதாக இருக்கின்றன.
தமிழகத்துக்கும், ஜனநாயகத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மிகப் பல நன்றிகள்…
இந்த கவிதை தான் – நம் தமிழக மக்கள், கருணாநிதிக் கும்பலுக்கு விட்ட அறைகூவல் அல்லவா?
சவால்
நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்.எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.
இது ‘பசுவய்யா’ என்கிற பெயரில் சுந்தர ராமசாமி எழுதிய அற்புதமான கவிதை. அறுபதுகளின் கடைசியில் வந்ததாக ஒரு நினைவு.
என் நினைவிலிருந்து இந்தக் கவிதையை தட்டச்சு செய்திருக்கிறேன் – தவறுகள் இருப்பின் தெரிவியுங்கள் , திருத்துகிறேன்.
முடிவுகள் அறிவிக்கப் பட்ட தினம் (நேற்று) நான் பழனி மலைகளில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்தேன், – அங்கு தேர்தல் முடிவுகள் வர வர, திமுக தோல்வியைப் பற்றிய மக்களின் மகிழ்ச்சியை, எழுச்சியை, கோலாகலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு மனதில் தொடர்ச்சியாக இவ்வரிகள் தான் ஓடிக்கொண்டிருந்தன..
தமிழகத்துக்கும், ஜனநாயகத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மறுபடியும் மிகப் பல நன்றிகள்…