மாதாந்தத் தொகுப்புகள்: December 2011

காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-2)

இது இவ்வரிசையில் கடைசி பதிவு. (அப்பாடா!) நீங்கள் இதற்கு முந்தைய இரு பதிவுகளைப் படித்தால் இப்பதிவு புரியக் கூடும்… காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1) காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… … இந்த இரு பிரிவுகள் 1 ) சிந்திக்கும் திறனற்ற வெள்ளைக்கார  மனம் கொண்ட படித்த  மௌடீகர்கள் 2 ) சிந்திக்கும் திறனற்ற படிக்காத கிணற்றுத் தவளைகள்… இவை தவிர பெரும்பாலோர் மூன்றாம் பிரிவினர் – இந்த, மிகுந்த, மிக்க பெரும் பெரும்பான்மையான மற்றவர்களுக்கு – எந்த [...]

காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1)

ஏன் இப்படியானது என யோசிக்கிறேன்…  (திடுக்கிடும் தொடர்வதை தொடரகிறது…) சிறிது அசை போட்டுப் பார்த்தால் – அக்காலத்திலும் இக்காலத்திலும் – மிகப் பல இளைஞர்கள் – பல தரப் பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளாகவே  (குறிப்பிட்ட தத்துவங்களுக்கும், நிலைப்பாடுகளுக்கும், அரசியல்-சமூகக் குறியீடுகளுக்கும்) நிலைத்து விடுவது ஒரு சாதாரணமான, வாடிக்கையான விஷயமே… இதில் விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் இம்முதிரா இளமை உணர்ச்சிக் குவியல்களுக்குள் இருந்து மீண்டு வெளிவர, விடுபட முடிவதே இல்லை… ஏனெனில், படிப்பறிவு மட்டும் போதாது – [...]

காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்…

மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களைப் பற்றி – அவரின் ஞான, கர்ம, பக்திக் கீற்றுகளை ஓரளவாகவாவது புரிந்து கொள்ள முயற்சி செய்வது, அவருடைய பல் வேறு விதமான ஆச்சரியப்பட வைக்கும் ஆளுமைகளை அவதானிப்பது, அவரால் எப்படி மிகப் பல விஷயங்களைச் செய்ய முடிந்தது – தன்னலம் கருதா தூய அறம் சார்ந்து – ஆன்மாவிலிருந்து அறிவியல் ஊடாக அஹிம்சை வழியில் அரசியலை நோக்கி, ஒவ்வொரு விஷயத்திலும் – அது உணவானாலும் சரி, நுண்நோக்கியானாலும் சரி, விரதமானாலும் சரி, [...]

இரங்கல்: ஜான் மக்கார்த்தி

வர வர செய்தித்தாள் எதுவுமே படிப்பதில்லை என்கிற கங்கணம். விதி விலளக்காக, கார்த்திகைக்கு ஓர் நாள், சதுர்த்திக்கு ஓர் நாள் என்று எப்போதாவது படித்தால் அதிகம். பொதுவாக, தினசரிச் செய்திகளில் கொலை-ஊழல்-அழிவு இன்னபிற பற்றிய விவரங்கள் அதிகமென்பதால் ஒரு ஆயாசமும் அலுப்பும்… இவற்றைப் படிக்காமல் இருந்தாலே – நிம்மதியாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் என்றொரு எண்ணம். வாரம் ஒரு முறை, எனக்குப் பிடித்த இணைய தளங்களை ஒரு சுற்று வந்தால் அது அதிக பட்ச [...]

‘சில்லறை’ வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது: கருணாநிதி

நமக்குத் தெரியாதா – ‘சில்லறை’ வணிகம் வர்த்தகம் என்றால் நம் கருணாநிதி அவர்களை, அவர்களின் முந்நூற்றுச் சொச்சம் குடும்ப அங்கத்தினர்களை மிஞ்ச, இப் பிரபஞ்சத்தில் வேறு மனிதர்களே கிடையாது என்பது. ஆனால்,  நமக்கு  இன்னொரு  உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது – அதாவது, நம் பெரு மிதிப்பிற்குடைய கருணாநிதி அவர்களின் — நம் பாவப் பட்ட தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாலும், அகில இந்தியா முழுவதும் உலா வரும் ஊழல் சில்லறைப் பண வாணிகமும் தம்மிடம் தான் வரவேண்டும் [...]

ஸ்டாலின் தனக்குத் தானே ‘தூக்கு தண்டனை’ (!) கொடுத்துக் கொள்ள (நாம்) தயார்!

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனக்குத் தானே தண்டனை: மு.க.ஸ்டாலின் சிரிப்புத்தான் வருகுதய்யா… கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடப்பட்டது. அப்போது என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. யாராவது, எந்தத் தேசத்திலாவது, அது சீனாவாக இருந்தாலொழிய பண ஊழலுக்கு தூக்கு தண்டனை பெற்றதாக சரித்திரம் உண்டா? சரி,  இதனை வேண்டுமென்றால், ஒரு [...]

கருணாநிதியும் ‘தமிழர் படை’யும்

அய்யய்யோ இது என்ன புதிதாக கிளம்புகிறது தமிழர் படை, சொறி சிரங்கு என்று தாங்கள் மனக் கிலேசமடைய வேண்டா. ஏனெனில் உங்களுக்குத் தான் தெரியுமே, நம் கலைங்கர் சம்பந்தப் பட்ட எதுவும் ஒரு சமுதாய நோய் தானென்று! ஏனெனில், அண்மையில் கலைங்கர் அருளிச் செய்த வாயமுதமாக படிக்கக் கிடைத்தது – திடுக்கிடும் விதத்தில், ‘சண்டை போட்டால் நாட்டில் ஒற்றுமை இருக்காது‘ என்ற போக்கில் – முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி – அன்பு – சகோதரத்துவம் – [...]

Follow

Get every new post delivered to your Inbox.