அதிர்ச்சியளிக்கும் செய்தி – உலகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சந்தேகாஸ்பதமான முறையில் மரணம்! 

இதற்கும் இஸ்லாமியத் தீவிரவாதம்தான் காரணமாகச் சொல்லப்படுமா, அல்லது மிகச்சரியாகவே, உலகத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குப் பின்னாலும் இருக்கும் ஹிந்துத்துவாதான்,  அதுவும் குறிப்பாக, நரேந்திரமோதிதான்  காரணம் என அறியப்படுமா?

மேலே (அதாவது கீழே) படித்தால், உங்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு வரலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்!

Read the rest of this entry »

எனக்கு ஓடுவது(ம்) பிடிக்கும்.

1983-4 வாக்கில், சுமார் ஒரேயொரு மாத ஓட்டப் பயிற்சிக்குப் பின் முழு மாரத்தான் ஓடித்தான் தீருவேன் என அப்படியொரு ஓட்டத்தை முட்டாள்தனமாக ஓடி – அதன் முடிவில் தள்ளாடி மாரடைத்துக் கண்மங்கி மயங்கி விழுந்த பைத்தியக்கார மஹாத்மியமும் நடந்திருக்கிறது. :-)

Read the rest of this entry »

கடந்த பதினைந்து-இருபது ஆண்டுகளாக, இந்தக் ‘கடவுளின் சொந்த நாடு’ எழவுக்குச் செல்வதை தவிர்த்து வந்திருக்கிறேன் என்றாலும், இக்காலங்களில், என்னுடைய இந்த அடிப்படை உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. எடுத்துக்கொண்டிருக்கும் காரியம் அப்படி.  காலத்தின் கந்தறகோளம்தான் இது, வேறென்ன சொல்ல…

Read the rest of this entry »

இதனைப் படிக்கப்போகும் ஓரு சிலருக்கு இந்த விண்ணப்பம் (= SkyBread ©எஸ்.ரா; ஆனால் மன்னிக்கவும், இது விண்ஆப்பம் அல்ல – இதனை அவர் எப்படிப் பெயர்த்துத் தள்ளுவார் என்பதை நினைத்தாலே எனக்கு ஏடாகூடமாகக் கதிகலங்குகிறது! அது SkyAngloIndian என விரியுமோ என்ன எழவோ!).

(குறைந்த பட்சம் – அந்த எழவெடுத்த அமெரிக்க ஸிலிக்கன்வேலி பகுதியில் வசிக்கும், அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக உட்கார்ந்த இடத்திலிருந்தே நக்கல் கருத்துகளை உதிர்க்கவேண்டிய ஜனநாயகத்தேவை அவசியம் இருந்தாலும் வேலைவெட்டியற்றுத் தொடர்ந்து இந்த ஒத்திசைவுக்கு வரும் பாவப்பட்ட அந்த  மூன்று நண்பர்களுக்காவது இந்த விண்ணப்பம்! டேய் பசங்களா –  வங்கிக் கணக்கில், மாதாமாதம் ஏறிக்கொண்டிருக்கும் டாலர்களை சும்மாச்சும்மா எண்ணிக்கொண்டே, அதேசமயம் சீப் ஃளைட்டுகளுக்காக, ‘டீல்’களுக்காக ஏங்கிக் கொண்டே இருக்காமல் – பெண்பிள்ளை வளர்ந்துகொண்டிருப்பதால் (ஆகவே ‘வேர்களைத் தேடுவதாக’ பாவலா பண்ணிக்கொண்டு) இந்தியாவுக்குக் கண்டிப்பாக அடுத்த வருடம் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்ச் சேர்ந்தேயாகவேண்டும் என வெட்டிக் கனவு கண்டுகொண்டிருக்காமல்  – உருப்படியான அமெரிக்கக் காரியங்களுக்கும் உதவி பண்ணுங்கடா. ங்கொம்மாள… பெருஸ்ஸா க்ரீன்கார்டும் குடியுரிமையும் வாங்கிக்கினுதானாடா அமெரிக்காவ முன்னேத்தப் போற்றீங்க? போக்கத்தவனுங்களா…)

சரி. ஜான் பெர்ரி பார்லொ – இந்த இணைய உலகத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் பலதளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் மகாமகோ மனிதர். *பொக்கிஷம்*. அவருடைய ஆரோக்கியத்துக்காக, மருத்துவச் செலவுகளுக்காக இந்தக் கோரிக்கை. முடிந்தால் – நம் அனைவராலும் உதவப்படவேண்டிய நபர்தான் அவர்.

screenshot-from-2016-10-12-184310
-0-0-0-0-0-0-0-0-0- Read the rest of this entry »

பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(

ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-(( Read the rest of this entry »

(15) < (இளமை) < (மறுசுழற்சித்_தருணம்-1.5**) என்றறிக.

Read the rest of this entry »

அம்மணி அமுக்தா மஹாபத்ரா அவர்களை எனக்குப் பலப்பல வருடங்களாகத் தெரியும் – மாமாங்கங்களாகவே கல்வித்துறையில் – குறிப்பாக அம்மணி மான்டிஸொரி முறைமைகளில் பணியாற்றி வருபவர். நம் தமிழகத்திலும் பலவருடங்கள் – அரசுப்பள்ளிகளுடன் இணைந்தும்  வேலைசெய்திருப்பவர். எனக்கும் அம்மணி மான்டிஸொரி அவர்கள்மீது தறுதலைப்பட்ச மீளாக்காதல், ஆகவே அமுக்தா அவர்கள் அனுப்பிய அழைப்பிதழையும் + சில ஆவணங்களையும் (+ என்னுடைய மேலான பரிந்துரைகளையும்) இப்பதிவின் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் அவசியம் இதற்குச் செல்லவும்.

ஆனாலும், முழுவிவரங்ளையும் தெரிவிக்காமல் மனதாற உங்களைக் காயடிக்கக்கூடாது – ஆகவே

Read the rest of this entry »