கனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல்

27/03/2011

கனிமொழி ஒருகாலத்தில் நல்ல மனிதராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் கவிஞராக இருந்ததே இல்லை –

காரணங்கள்: கடன் வாங்கப்பட்ட அனுபவங்களும், கவிதை அனுபவம் இல்லாமையும் – முக்கியமாக அடிப்படை கற்பனை வளம் இல்லாமையும். ஆனால் கனிமொழி-அடிப்பொடிகள் அவரை எங்கோ தூக்கி வைக்கிறார்கள்.

ஒரு  மதிக்கத்தக்க பெரியவருடன் (இவர் தமிழில் குறைந்த பட்சம் ஒரு மகத்தான சிறுகதை எழுதியிருப்பவர்) அண்மையில் பேசிக்கொண்டிருந்தேன் – அவர் சொன்னார்: “கனிமொழி நண்பர்களை நன்றாக ‘கவனித்து’ ஹெல்ப் செய்கிறார் – ஆனால் வடநாட்டு மீடியா இவரை சரியாக சித்ததரிக்காததுதான் இந்த ஊழல் குற்றசாட்டுக்கெல்லாம் காரணமோ என்னமோ… ; ‘   ஆனால், நான் இப்பெரியவரின் மனத்தை சிதைக்க விரும்பவில்லை… பொதுவாக சிரித்துவிட்டு வேறு விஷயங்களுக்குப் போய் விட்டோம்.

நிற்க, கனிமொழி துதி பாடினால் நண்பர்களாகி விடலாம் – தகுந்த (அதாவது: தகாத) ‘ஹெல்பும்’ பெற்றுக்கொள்ளலாம். வீடு வசதி வாரிய வீடுகளாகட்டும், மனைகளாகட்டும், ‘சங்கம’ விவகாரங்கலாகட்டும் – எப்படியோ தொண்டரடிப்போடியோ, குண்டரடிப்பொடியோ –  ‘ஹெல்ப்’ பெற்று விடுவார்கள்.. (ஆனால் சாரு நிவேதிதா, ஞாநி போன்றவர்கள் – மனத்தில் நினைப்பதை நேர்மையாக பட்டென்று போட்டுடைத்து பேசி / எழுதி விடுபவர்கள் – எப்பொழுதுமே கனிமொழி போன்றவர்களால் இவர்கள் ‘ஹெல்ப்’ பெறவே முடியாது. விரும்பவும் மாட்டார்கள் என நினைக்கிறேன்.)

… ஆக ‘கை தட்டுங்கள், ஹௌசிங் போர்டு கதவு திறக்கப்படும்’ என்கிற  அவல நிலைமை இருக்கும்போது, அடிப்பொடிகளின் மகிழ்ச்சிக்கும் பரணி பாடுவதற்கும் கேட்பானேன்!

ஆனால்… படியுங்கள் கீழ்க்கண்ட வரிகளை – உங்களுக்குத் தெரியும் கனிமொழியைப் பொறுத்தவரை கவிதையும் மூச்சும் (மூச்சாவும்?) ஒன்றுதான்… இவ்விஷயத்தில் அவருடைய நேர்மையை மெச்சுகிறேன்

மூச்சு
பெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது.

சும்மா மடக்கி மடக்கி மண்டையில் தட்டி அவ்வப்போழ்து கருவறைகளைப் பற்றி  எழுதினால் அவர் எழுதுவது கவிதை ஆகி விடாது. அவரே சொல்வது போல இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை!

நிற்க. மன்னிக்கவும்  நான் அவருடைய வரதட்சிணை பற்றி எழுத ஆரம்பித்து என்னவோ எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நீங்கள் கேட்பது காதில் விழுகிறது – என்ன, இந்தப் பெண்ணியம் (ஹ ஹா!) பேசும் ‘மாதர் குல திலகமா’ வரதட்சிணை கொடுத்தது? இவருடைய தகப்பனார் (அதாவது ‘என் மகளின் தாயாரின் பெண்ணின் தந்தை’) முத்துவேல் கருணாநிதி அவர்களாவது, தன் திராவிடக்கொழுந்துவிற்கு வரதட்சிணை கொடுப்பதாவது? என்ன அவதூறு இது? ஒரு பழம்’பெறும்’ மற்றும் அதை பெற்றவுடன் தின்று கொட்டையையும் அமுக்கிவிடும் ‘Brilliant Strategist’ தலைவரைப் பற்றியே இத்தகைய காழ்ப்புக்குரிப்பா? இது நியாயமா? அடுக்குமா? அய்யன்  வள்ளுவனுக்கு சிலை அமைத்திட்டாலும் இவர் ஜாதகம் இப்படித்தானோ? மட்ராஸ் மங்கமம் கூட அம்மணிக்கு மதிப்பு வாங்கித் தரவில்லையா?   அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பது நியாயமா?

சரி. விஷயத்துக்கு வருவோம். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்ட செய்தி இது…

வருடம் 1989 . கனிமொழிக்கு திருமணம் நிச்சயிக்கப் படுகிறது.மணமகன் பெயர் அதிபன் போஸ். சிவகாசி சார்ந்த ஒரு பணம் படைத்த  தொழிலதிபர் குடும்பத்தைச் சார்ந்தவர். தகப்பனார் பெயர் ‘சுபாஷ் சந்திர போஸ்.’ தாயார் பெயர் ‘காஞ்சனா போஸ்.’ பல வருடங்கட்கு முன்பு இக்குடும்பம் தேசபக்தியுடன் இருந்திருக்கக் கூடும்.மன்னித்து விடலாம்.

இச்சமயம் இந்தியன் வங்கி அதிபருக்கு ஒரு போன் வருகிறது.  அங்கு அப்போது  கோபாலகிருஷ்ணன் என்பவர் உயரதிகாரியாக இருந்தார். இவர் ஒரு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவர். பழகுவதற்கும் இனிமையானவர். அவருடைய இளமையில் மிகுந்த நேர்மையோடும் துடிப்போடும் இருந்தவர் தாம்.

உங்களில் சில பேருக்கு இவை நினைவிருக்கலாம். – அப்போது (ஏறக்குறைய 1988 – 1997)  ஊழல் கொடிகட்டிப் பறந்தது இந்தியன் வங்கியில் – அதன் நிதி நிலைமையும் வெகு மோசமாக இருந்தது. மற்றும் பல வங்கிகளிலும் இப்படித்தாம். ஆனால் இந்தியன் வங்கியில், அது மதன் கார்ட்டூன் போல  ‘சாரி, கொஞ்சம் ஓவர்.’   அச்சமயம் கோபாலகிருஷ்ணனுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தது மேலும்.  ஆகவே ‘சேராத இடம் சேர்ந்து’ அவர் வஞ்சனையில் வீழ்ந்தார். அவரை நியாயப் படுத்தவில்லை இங்கு.

இப்போது இந்த கோபாலகிருஷ்ணன் சிறையில் இருக்கிறார். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.  ஆனால் அவர் உதவி (!) செய்த அனைத்து பெருச்சாளிகளும் (கட்சி வேறுபாடுகள், ஜாதி சங்க வேறுபாடுகள் – போன்றவைகளுக்கு அப்பாற்ப்பட்ட பெருச்சாளிகள் இவர்கள் எல்லோரும்)  அவரைக் காப்பாற்றவில்லை. சீந்துவார் இல்லாமல் இருக்கிறார், பாவம். இப்பெருச்சாளிகளில், கருணாநிதியின் அடிப்பொடிகளும் அடக்கம். இவர்களால் பல்லாயிரம் கோடி ஸ்வாஹா – வயிறு பற்றி எரியவேண்டிய விஷயமிது. (சுப்பிரமணியன் சுவாமி அப்போதே இதைப் பற்றியெல்லாம் பேசினார் – அனைத்தும் உண்மை – ஆனால் நமது புத்திஜீவிகள் இந்த ஆளை ஒரு கோமாளியாகத்தான் பார்த்தார்கள். ஊடகங்களும் இவரை எப்போதும் ஒரு பொய்யராகவும், விளம்பரப்ரியராகவும் தான் சித்தரித்தன – சித்தரிக்கின்றன, என்னைப் பொறுத்தவரை  இவர் ஒரு நேர்மையாளர். அநீதி கண்டு பொங்குபவர். இவர் இல்லாவிட்டால், மிகப்பெரிய ஊழல்களும், நெறி முறை தவறுதல்களும் – இவைகளைப் பற்றிய கருத்துகளும் மக்களை சென்றடையா.)

ஒ! கதை சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா?

… போனில் நல்ல செய்தி. கனிமொழிக்குத் திருமணம். நடக்கவிருக்கும் செய்தி – இந்தியன் வங்கியின் உதவி தேவை. ஆஹா! பேஷாக! அவசரமாகப் பணம் பட்டுவாடா பண்ண வேண்டும், யாருக்கு – போஸ் குடும்பத்தினருக்கு அப்படியே செய்கிறோம்..தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்.

இந்தியன் வங்கியின் துறைமுகம் கிளையிலிருந்து அடுத்தநாள் சில ஊழியர்கள் செல்கின்றனர் – சென்னை வந்து தங்கியிருக்கும் போஸ் குடும்பத்தை நோக்கி! அவர்கள் இடமிருந்து ஒற்றைக் காகிதங்களில் கடிதம் வாங்கிக் கொள்கின்றனர். நகைப்புக்கிடமான இக்கடிதங்களின் சாராம்சம்: ‘எனக்குச் சொந்தச்செலவுக்காக பணம் வேண்டும்.’

அவர்களுக்கு உடனடியாக கீழ்கண்ட அளவு பணம் கொடுக்கப் படுகிறது:

அதிபன் போஸ்: பத்து லட்சம்; சுபாஷ் சந்திர போஸ்: இருபத்தைந்து லட்சம்; காஞ்சனா போஸ்: பத்து லட்சம்.

எப்படி? Clean Overdraft ஆக! ஒரு விதமான அடமானம், கியாரண்டீ ஒரு இழவும் இல்லாமல். தஸ்தாவேஜுகள் சரிஇல்லாமல். ஒரு கேள்வி கூட கேட்காமல். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு… கருணாநிதி சோழனின் மகள் அல்லவா? நம் தமிழ் இளவரசி அல்லவா, கனிமொழி? மக்கள் பணம் என்றால் மகேசன் பணம் தானே?  அதுவும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே. ஆஹா! அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!

சுப்பனுக்கும் குப்பனுக்கும் இப்படி தூக்கிக் கொடுப்பார்களா என்று நீங்கள் கேட்டால் – சமூக நீதி உங்கள் வீட்டிற்கு ஆட்டோவில் வரும். எங்கள் தலீவரை என்ன மசுருக்கு இஸ்கரே என்று உங்களுக்கு அர்ச்சனை நடக்கும்.  எலும்புகளை உடைக்கும். பேய் அரசு செய்தால் பிணம் எண்ணும் சமூக நீதி…

… எப்படியோ, திருமணமும் நன்றாக நடைபெற்றந்து. வேறு எவ்வளவு இடங்களின் இருந்து மண்டகப்படி போயிற்றோ! எவ்வளவு பேர் கப்பம் கட்டினார்களோ! ஆனால் வருந்தத் தக்க விதத்தில் திருமணம் விவகாரத்தில், மன்னிக்கவும் இந்த கூகிள் எடிட்டர் சரியில்லை – விவாகரத்தில் முடிந்தது.

ஆனால் 1989இல்  அள்ளப்பட்ட இப்பணம் திருப்பி கொடுக்கப்படவே இல்லை – பத்து வருடங்களுக்குப் பின்னும் இதே கதைதான். கடனாளியைக் கண்டு பிடிக்க  முடியவில்லையாம்.. கருணாநிதிக்கோ அல்லது கனிமொழிக்கோ இதன் பற்றிய கவலை இருந்தால் தானே – இவர்களா பணம் கொடுத்தார்கள்? என்ன இருந்தாலும் எவர் திருப்பிக் கொடுப்பார்கள் வரதட்சிணையை? அதுவும் போயும்போயும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே! அது இப்போது குட்டி போட்டு சிலபல கோடிகள் தானே! வங்கியும் இவற்றை தள்ளுபடி செய்தது. வழக்கா போடமுடியும் பிசாத்து பெறாத பத்திரங்களை வைத்துக் கொண்டு?

ஆக கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாரின் மண்டையிலேயே ஓங்கி உடைத்த மகாத்மியம் தான்  கருணாநிதியின் மகத்தான கைங்கர்யம். வாழ்க அவரது குற்றம்!

அம்மணி சம்பந்தப்பட்ட ஊழல்கள் அப்போதே ஆரம்பித்து விட்டன. மேலும் அவர் மட்டும் இல்லை – இக்குடும்பத்தைச் சார்ந்த அனைவருமே சமதர்மமாக மக்கள் பணத்தை மகேசன் ( பார்க்க: ‘நான் கடவுள்’) பணமாக மாற்றியுள்ளனர். என்னே அவர்கள் பணப்பணி! அல்லது பணப்பிணி அல்லது பிணப்பணி…

மற்ற வயிறெரிய வைக்கும் நிகழ்ச்சிகளை மற்றொரு சமயம் பார்க்கலாம்…

—–
வங்கிகள், அதுவும் அரசுடைமை செய்யப்பட வங்கிகள் எப்படி செயல் படுகின்றன? அல்லது எப்படி செயல் படவேண்டும் – என்பது பற்றியெல்லாம் நாம் யோசிக்க வேண்டும். இந்தியன் வங்கி ஒரு எடுத்துக்காட்டுதான்… இது பற்றி மற்றோர் சமயம் எழுதுகிறேன்.

ஆனால் – சில நண்பர்கள், வங்கி செய்ததிற்கு கருணாநிதியோ அல்லது கனிமொழியோ எப்படி பொறுப்பாக முடியும் என்று வினவலாம்.

உண்மைதான் நண்பர்களே! கருணாநிதி இந்த வரதட்சிணை கொடுக்கவில்லை. கனிமொழியும் இக்காரியம் செய்யவில்லை. கொடுத்தது எண்ணிறந்த இந்திய மக்கள். பண்டாரப் பரதேசிகள் – ஆனால், நேர்மையானவர்கள், வரி ஒழுங்காகக் கட்டுபவர்கள் – ஒரு பீடி வாங்கினாலும் கூட…

கொசுறு: கீழ்க்கண்ட வரிகள், கனிமொழியின் ‘பிற்பகல்‘ ஆக்கத்திலிருந்து (அம்மணீ – உங்கள் நேர்மையை மெச்சுகிறேன், மீண்டும்… இதை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாமா? திஹார் எப்போது செல்வதாக உத்தேசம்??)

“அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருக்கிறேன்”

( http://rammalar.wordpress.com/2009/01/11/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ )

5 Responses to “கனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல்”

  1. Viswa Says:

    நல்ல தொடக்கம். மேலும் எழுதுங்கள் இந்த ஆபாசப் பிறவிகள் பற்றிய உண்மைகளை. எழுதிய பின்னர் உங்கள் பதிவை பிரபலப் படுத்துங்கள் நிறைய பேர்கள் படிக்கட்டும்

  2. M.S.Vasan Says:

    Good analytical review. People never relies the heroism of Mr. Swamy on Madurai Idly Shop issue. His daring legal action against JJ when she was a giant in her 1st term as CM. Rajiv`s 2.2 million USD deposit in SWISS account details in his Party web site. His letter to PM and the PIL filled with the Apex court are the main turning points on this almost dead 2G spectrum issue then. He is the real HERO. Rests of the Politicians are too greedy to be honest. Hence other branded him as a joker and use that as shield to guard them from his hot and real accusation.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s