ஒத்திசைவு…

| … | γνῶθι σ0εαυτὸν | बूद्धूराम् | … | If you don't read the newspaper you are uninformed, if you do read the newspaper you are misinformed" ~~ Mark Twain | especially with 'The Hindu' – India's notional noosefaffer! |

கனிமொழியின் துறைமுகப் பணி

with 6 comments

இது கனிமொழி ‘கன்டைனர்மொழி‘ யான கதை. (ஐயகோ!இவர் இன்னும் என்னவெல்லாம் அவதாரங்கள் எடுக்கப் போகின்றாரோ? நம்மை ‘கருணாநிதியை நம்பும் கடவுள்’ காப்பாற்றுவாரா? அல்லது ‘கடவுளை நம்பாத கருணாநிதி’ அழித்தொழிக்கப்போகிறாரா? அல்லது ஒரு காலத்தில் பிலிம் ரஜினி சொன்னது போல, ஆண்டவன் வந்தாலும் நம்மைக் காப்பாற்ற முடியாத நிலைமை வரப்போகிறதோ என்ன எழவோ… ஏடு கொண்டலவாடா….)

நிற்க. (சும்மா சொன்னேன். உட்கார்ந்து படியுங்கள், நண்பர்களே!)

நம் இரயில் வண்டிகளுக்கு பிளாட்பாரங்கள் இருப்பது போல, துறைமுகங்களில் க்வீ (quay ) எனப்படும் மேடைகள் இருக்கும் – மேடை என்றால் கருணாநிதிக்கு வாழ்த்து விழா (எ கா:  ஜெகத்ரட்சகனால், பத்திரிக்கையாளர்கள் மேல் வள்ளென்று வழக்கமாக விழுவதால் – ‘அய்யன் இரண்டாம் வள்ளுவனே!’ என பட்டம்/பரிசில் வழங்க)    எடுக்க அமைக்கப்படக்கூடியவை போன்றவையோ அல்லது தமிழக தலைமைச் செயலகம் திறக்கப்பட்ட போது நகைச்சுவை உணர்ச்சியோடு, நம் மக்கள் பணத்தில் போடப்பட்ட சினிமா செட்டோ அல்ல இவை.  இவை உண்மையில் மிக மிகப் பெரியவை. இம்மேடைகளில் கன்டைனர் டெர்மினல்கள் கட்டப் படும். இம்மேடைகளில் கப்பல்களில் போக வேண்டிய, வந்த கன்டைனர்கள் அடுக்கி வைக்கப் பட்டு எங்கே செல்ல வேண்டுமோ அங்கு அனுப்பி வைக்கப் படும்.

சென்னை துறைமுகம் - கன்டைனர் டெர்மினல் - ஒரு பகுதி

இந்தத் தொழிலில் மூலதனம் (‘நிதி’) வேண்டும். தரம் வாய்ந்த முன் அனுபவம் வேண்டும். மிகுந்த, துடிப்பு மிக்க உலகளாவிய குழுமங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. ஆகவே இத்தொழிலில் புது ‘பச்சைக் கொம்பு’ ஆசாமிகள் முனைவது என்பது முடியாத ஒன்று. மேலும், இத்தொழிலில் ஈடுபட வாய்ப்புக் கிடைப்பது இன்னமும் கடினம்;  ஆனால் நீங்கள் ஏதாவது  தகிடுதத்தம் செய்து உங்களுக்கு ஒரு கன்டைனர் டெர்மினல் கிடைத்தால், அது உங்கள் 1௦௦௦ தலைமுறைகளுக்கு – அவர்கள் உட்காரக் கூடத் தேவையில்லை – அப்படியே ஊட்டப்பட்டுச் சாப்பிடலாம். மேலும் இதற்கு நெடுநாள் லீஸ் கிடைத்தால் இது ஹல்வா மாதிரி – அதாவது, கன்டைனர், கன்டைனராக ஹல்வா, அனுதினமும்!

இங்கு தான் வருகிறார் டி ஆர் பாலு  – இவர் சமீப காலம் வரை மத்திய மந்திரியாக இருந்து கொள்ளை அடித்தவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்  -‘சாலைகள், சாலைப் போக்குவரத்து, கப்பல்’ சம்பந்தப்பட்ட விஷயங்களை, அதாவது ‘போக்குவரத்துக்களைப்’ பார்த்துக் கொண்டிருந்தார். இப்பதவி மூலமாக இவர் தன் தானைத் தலைவருக்குக் கட்டிய கப்பங்களில் ஒன்று தான் இந்த கப்பல் பற்றிய ‘கன்டைனர் டெர்மினல்’  லீஸ் தொழில். இது சோழ நாட்டு இளவரசிக்கு தாரை வார்க்கப் பட்டது. அதாவது, இளவரசி கனிமொழியார் அவர்களின் பினாமிகளுக்கு

(ஆனால் இந்த பாலு ‘அடித்த’ வேகமும் முறையும் மிகவும் ஆபாசமாகவும் கேவலமாகவும் இருந்ததால், இவருக்கு நீரா ராடியா கூட ‘ உதவி’ செய்ய முடியவில்லை! மேலும் இவர் பழம் தின்று கொட்டையையும் அமுக்கும் தலைவருக்கே பணம் சரியாக கொடுக்காததினால்,  பட்டுவாடா செய்யாததினால், ஐயோ என்று போனார் என்கிறார்கள்!)

சென்னைத் துறைமுகத்தில் இப்போது இரண்டு டெர்மினல்கள் தான் உள்ளன. கற்பனை செய்து பாருங்கள் – இந்தியாவின் ஒரு பெரிய துறைமுகம் – எக்கச்சக்கமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் நடந்து கொண்டிருக்கும் நேரம் – GNP ஏறிக்கொண்டே இருக்கிறது – எங்கு திரும்பினாலும் வளர்ச்சி. (அதாவது, தமிழ் நாட்டைத் தவிர – இங்கு தான் எல்லாரையும் பிச்சைக்காரர்களாக்கி விட்டார்களே!)

இப்படி அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்போது இந்தத் தொழில் சாதாரணமான ஒருபொன் முட்டையிடும் வாத்து அல்ல. இது ஒரு பொன் சாணமிடும் யானை! முட்டை தினம் தினம் வராது. ஆனால் சாணம் தினந்தோறும், பல நேரங்களில் வர வேண்டும். மேலும் இது யானைடமிருந்து!  இப்படி அபரிமிதமாக வரும் பணம், ஆபாசமான பணம், அயோக்கியத்தனமாக சேரும் பணம்,  சாணம் தானே?

நீங்கள் சென்னை துறைமுகத்தினுள் சமீப காலங்களில் எப்பொழுதாவது சென்றிருப்பீர்களானால், உங்களிடம் அவசியம் கேட்டிருப்பார்கள் – “என்ன சார், உங்களுக்கு ‘கனிமொழி’ டெர்மினல் பற்றி தெரியுமா? அவ்வப்போது ராசாத்தி அம்மாள் கூட வந்து போவார்களே, மேற்பார்வை பாக்க… ஆனாக்க அவிங்க காருலேய ஒக்காந்துகிட்டு இருப்பாங்க… பெரிய AC கார்.  என்ன பார்க்க வராங்க ஏது பண்ண வர்றாங்களோ, ஒண்ணுமே நமக்குத் தெரியாது… கனிமொழி மேடம் கூட அப்பப்போ வருவாங்க… ”

ஆனால் நண்பர்களே, துறைமுகம் என்பது ஒரு சுற்றுலாத் தளம் அல்ல.  இரும்பு மற்றும் எண்ணிலா கனிமங்களும், நிலக்கரியும், பெட்ரோலியமும், புழுதியும், வியர்வையும், புகையும், வாசனைகளும், நாற்றங்களும், மாபெரும் சப்தங்களும், அபாயகரமான ஊர்திகளும் அங்கெங்கினாதபடி எங்கும் நிறைந்த மர்மப் பிரதேசம்.  ஏதோ புரிந்து கொள்ள முடியாத வேற்றொரு கிரகத்தில் இருப்பது போல ஒரு மனங்கலைக்க, பதற வைக்கும் சுற்றுச் சூழல். அங்கு எப்படித்தான் நம் மக்கள் வேலை செய்கின்றார்களோ என்று நினைத்தாலே இந்த உலக வளர்ச்சி, பொருளியல், சுற்று சூழலியல் போன்ற விஷயங்கள் சார்ந்த வருத்தம் ஏற்படும்..அம்மக்கள் மேல் பரிதாபம் ஏற்படும். தம் மக்களுக்காக, பெயர் தெரியாத மூன்றாம் பேர்களுக்காக எவ்வளவு கடுமையான உழைப்பு!!

இதற்கு எதற்கு கிவிஞரின்(!?) தாயார் வருகிறார்? நம் தமிழ் உழைப்பாள மக்களுடன் உரையாடுவதற்கா? அல்லது எப்படி நம் துறைமுகங்கள் எப்படி பணி செய்கின்றன என்று பார்க்க வருகிறாரா? அல்லது சுற்று சூழலியல் நோக்கில் மேதா பட்கர் போல ஏதாவது நேர்மையாகவும், துணிவாகவும் செய்ய நினைக்கின்றாரா?  நாம் தலைவர்களும், துணைவிகளும், கவிஞர்களும் நம் மக்களுக்காகத்தான் அல்லும் பகலும் உழைக்கிறார்கள் என நினைக்கிறோம்… என்ன புல்லரிப்பு!

ஆனால் நண்பர்களே, உண்மை என்னவென்றால், அங்கு ராசாத்தி அம்மாள் தொழில் அதிபர் (நன்றி, ‘சவுக்கு’)ஆக வருகிறார். ஏனெனில் அங்கு கன்டைனர்களும் வருகின்றன.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? (சோழியர்கள் மன்னிக்கவும்)

ஜி கே வாசன் தான் தற்போதைய மத்திய அமைச்சர் (கப்பல் போக்குவரத்து) – பாவம், இந்த கயமைநிதி கும்பலின் காரணமாக, இவர் சென்னைத் துறைமுகத்திற்கு வருவதே இல்லை. வந்து பார்த்தால் தானே ஊழலின் பரிணாம வளர்ச்சி தெரியும்? அப்படித் தப்பித் தவறி ஏதாவது ஏடாகூடமாய் தெரிந்தால் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டி வருமே! ஆனால் ‘சொக்கத் தங்கம்’ அதனை விரும்புமோ என்னவோ! இருதலைக் கொள்ளிஎறும்பாய் தவிக்கிறார் பாவம். ஆனால் தறுதலைக்கொள்ளிஎறும்புகளும், உதிரிகளும் எரிகிற மக்கள் பிரச்சினைகளில் கொள்ளை அடிப்பதுதான் கொள்கை என்றிருந்தால், அவற்றைக் கண்டு கொள்ளமாட்டேன் என்பது என்ன நியாயம்? என்ன அமைச்சர்…

உங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். கருணாநிதியின் (அதாவது ‘என் மகளின் தாயாரின் பெண்ணின் தந்தை’) வாரிசுகள் மிக்க, அளவும் எல்லையும் கடந்த மாபெரும் புத்திசாலிகளாகத் தான் இருக்க வேண்டும். மிகக் குறைந்த காலத்திலேயே, இப்பெரும்பொருள் ஈட்டக் கூடிய அனைத்துத் தொழில்களிலும் எப்படி இவர்கள் வந்தனர்? அதுவும் இவ்வளவு சிறு வயதில்? எங்கிருந்து இவர்களுக்கு முதலீடு செய்ய நிதி வந்தது? எப்படி இவர்களுக்கு இத்தொழில்களை பற்றிய விஷய ஞானம்? இவர்களில் யாராவது ஒருவராவது திருபாய் அம்பானி போல சிறு வயதிலிருந்து உழை உழைஎன்று உழைத்து மேலே வந்தார்களா? ஹ்ம்ம்…

ஆனால் நண்பர்களே, நீங்கள் சற்று யோசிக்க வேண்டும். திமுக தானைத் தலைவரிடம் இல்லாத நிதியா?

வைரமுத்துவிடம் கேட்டல் அவர் உடனே ‘கள்ளன்காட்டு  நிதிகாசம்‘ எழுதி விடமாட்டாரா என்ன?

‘நிதிக்கே நிதி நித்தம் நல்கும் ராஜஜால்ராசோழனே!’ என்று ஆரம்பித்து எழுதினாரென்றால் நம்மால் தாங்க முடியுமா??

கோழைமணிதான் (‘சவுக்கு‘ பாஷையில் குஞ்சாமணி) ஓடோடி வந்து அறிக்கைப் புழுக்கை வெளியிட மாட்டாரா?

வாலி கூட ஓடி வந்து வால் பிடிக்க மாட்டாரா?  ஏற்கனவே நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் – இதில் இக்கொசுக்களும் சேர்ந்து கொண்டால்… தொல்லை.

மேலும் கனிமொழியின் அறிவை (அரிவை அல்லவா? அவர் அப்படித்தான்!) குறைத்து மதிப்பிட முடியாது.(எனக்குத் தெரிந்து, அவரை விட ஒரே ஒருவர் தான் அறிவில், பராக்ரமத்தில், வசீகரத்தில் உயர்ந்தவர். அவர் தான் நம்முடைய ‘one and only’ பிலிம் ரஜினி) கனிமொழியின் நுண்ணிய மூளையும், நுண்மான் நுழைபுலமும் யாருக்குத் தான் தெரியாது? எங்கே கை வைத்தால் எங்கே ஜேப்படி அடிக்கலாம் என்று கற்றா கொடுக்க வேண்டும்? அவர் யாருடைய மகள்? தந்தை 1000 கோடி அடித்தால், நமது தமக்கையார் 100000 கோடி அள்ளாமலா விடுவார்?

இந்த துறைமுகப்பணியில் அம்மணி (ammoney) எவ்வளவு திரைகடல் ஓடாமல் திரவியம் தேடுகிறார் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.

(காமராஜருக்கும், ராஜாஜிக்கும், ஏன் எம் ஜீ ஆருக்கும் கூட கோவில் கட்டி கும்பிட வேண்டும்…)

பி. கு: இந்த கும்பல் என்னதான் பண்ணுமோ இவ்வளவு கொள்ளை அடித்து? வரும் தேர்தல்களில் இவர்கள் ஆளுக்கு 1 லட்சம் கொடுக்கலாம். அதற்குப் பின்னும் அவர்களிடம் 999 தலைமுறைகளுக்கு துட்டு இருக்கும். என்ன ஈனப் பிறவிகள். சீ!

Written by வெ. ராமசாமி

28/03/2011 at 22:08

Posted in DMK, politics, tamil

6 Responses

Subscribe to comments with RSS.

 1. Like octopus this family ventured into all the money making departments and misusing the authority to amass wealth. I don’t know whether we can take all these things to public. It’s overwhelming.

  unmai

  28/03/2011 at 22:49

 2. ///காமராஜருக்கும், ராஜாஜிக்கும், ஏன் எம் ஜீ ஆருக்கும் கூட கோவில் கட்டி கும்பிட வேண்டும்///

  காமராஜரைப் பற்றிய கருத்துக்கள்: அவர் படிக்காதவர், கள்ளநோட்டுக் கும்பலுக்கு உதவி செய்கின்றவர், கலப்பட வியாபாரிகளுக்கும் பதுக்கல் காரர்களுக்கும் உதவி செய்பவர் என்றுதான். அது முற்றிலும் உண்மை.காமராஜர் அன்று செய்த தவறுதான்- இன்றுவரை சிவகாசி கள்ளநோட்டு அச்சடிப்பு. அவர்கள் நடத்தும் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெறும் சிறுவர் பனி மற்றும் வெடி விபத்துக்கள். விருதுநகர் பதுக்கல் பேர்வழிகள் -அதனால்தான் இன்றைய வெங்காய விலை ஏற்றமும் என்பது நாடறிந்த உண்மை. கலப்படமும் போலிகளும் இவர்களின் கைவண்ணம்தான். பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்.வியாபரத்தை கையில் எடுத்து நாட்டைக் குட்டி சுவராக்கினவர்கள்.

  காமராஜரின் இன்னொரு முகத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அவர், திருமணம் செய்யவில்லை-ஆனால், அவர் ஆண்களோடும் பெண்களோடும் உறவு கொள்பவர்.
  ஆனந்த் தியட்டர் முதலாளி- உமாபதி, காமராஜருக்காகவே ஒரு கல்யாணம் செய்தார். அந்தப் பெண்மணியை இரகசியமாக காமராஜர் வைத்திருந்தார்.
  பெர்ய மனிதர்கள் எல்லோரும் காமராஜரை பெண்களைக் கொண்டு மயக்கி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.அது மட்டுமல்லாது, காமராஜர் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அயிரை மீனும்- கோழியும் மிகப் பிரியமாக சாப்பிடுவார்.இவை எல்லாம் தனிப் பட்ட விஷயங்கள்.

  ஆனால் ஒழுக்கமான வாழ்வை கொச்சைப் படுத்தி எழுதும் போது, நாமும் உண்மைகளை சொல்ல வேண்டியுள்ளது. அல்ப சந்தோஷங்களுக்காக தன் பதவியைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் தலைவன் என்று அழைக்கத் தகுதி இல்லாதவர்கள்.அந்தக் காலத்தில் எந்த முதல் மந்திரியும் சொத்து சேர்க்கவில்லை.

  ஆகவே காமராஜர் தன் தாயைக் கூடக் கவனியாமல், ஓரின சேர்க்கையில் இன்பம் கண்டு சென்னையே கதியாகக் கிடந்தவர். தன் சொந்த தொகுதியில் தோற்றுப் போனவர். இரண்டு சமூகங்களைப் பிரித்து அரசியல் லாபம் அடைந்தவர்.

  இந்தக் காலத்து அரசியல் தலைவர்கள் எல்லா உண்மையும் அறிந்து வைத்துக் கொண்டே- அரசியல் லாபத்திற்காக மீனுக்குத் தலையும் பாம்பிற்கு வாலும காட்டுகின்றனர்.
  இன்றைக்கு கிறிஸ்தவ சமயத்தை ஆக்கிரமிப்பு நடத்தும் இந்த காமராஜ தொண்டர்கள் அந்த மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்துக் கொண்டிருப்பது -சாலமன் பாப்பையா வரை சொன்ன உண்மைகள்.

  Raja

  10/08/2011 at 02:00

  • idhu yenna!!!

   raju salem

   15/08/2011 at 15:29

 3. இங்கே காமராஜர் குறித்து ஒருவர் சொல்லியிருக்கின்றாரே? உங்கள் கருத்து என்ன ராம்?

  ஜோதிஜி

  05/07/2013 at 13:16

  • அது அவர் கருத்து. எப்படி அவர் இந்த முடிவுகளுக்கு வந்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பொதுவாக இப்படிப்பட்ட கருத்துக்களை / பின்னூட்டங்களை நான் அனுமதிப்பது இல்லை. ஆனால், நம் மக்களின் ஒரு சாராரின் அறிதல்கள் இப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியவரவேண்டும். அவ்வளவுதான்.

   ஆனால், எனக்குத் தெரிந்து இப்படிக் கீழ்த்தரமாலப் பலமுறை (இந்தக் கருணா நிதி உட்பட) இப்படிக் கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். இதை விடவும் கேவலமாகவும் கூட. காமராஜைப் பற்றி மட்டுமல்ல – ராஜாஜி, பக்தவத்சலம் போன்றவர்களைப் பற்றியும் கூடத்தான். ஸ்டாலின் – அதாவது, இசுடாலின் – அவருடைய இளம்வயதில், இந்திராவைப் பற்றிப் படு கேவலமாகப் பொதுக் கூட்டங்களின் பேசியவைகளைத் தொகுத்தால் அரண்டு விடுவோம். (ஆனால் இவர் எனக்குத் தெரிந்து இப்போது இப்படிப் பேசுவதில்லை)

   ஒருவேளை இவர் இம்மாதிர் ஆட்களின் பேச்சுக்களை ஆராயாமல் செரித்து விட்டாரோ என்னவோ.

   விட்டுவிடுங்கள், பாவம்.

   ramasami

   06/07/2013 at 08:30

   • https://plus.google.com/u/0/communities/111627536687519891951

    நேரம் கிடைக்கும் போது இந்த தளத்தில் உள்ள ஒலித் தொகுப்புகளை கேட்க முடிந்தால் கேட்டுப் பாருங்கள்.

    மேலே காமராஜர் குறித்து சொன்னவர் அவசியம் இந்த உரையை கேட்க வேண்டும்.

    இன்னும் நாலைந்து நாட்களில் உங்களின் பெரும்பாலான தலைப்புகளை படித்து முடித்து விடுவேன் என்று நினைக்கின்றேன். நேற்று தான் திருப்பூரில் உள்ள ராஜமாணிக்கத்துடன் உங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

    ஜோதிஜி

    06/07/2013 at 08:52


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: