கனிமொழிதான் கருணாநிதியின் உண்மை ‘வாரிசு’

29/03/2011

நான் ஸ்ரீலஸ்ரீ கனிமொழிமயி மடத்தைச் சேர்ந்தவன் அல்ல.

மேலும் எனக்கு சொந்த வீடு (சொந்த சம்பாத்தியத்தில் கட்டியது) இருக்கிறது. ஆகவே எந்தக் கழுதையையும் அல்லது மனிதரையும் துதி பாடவேண்டிய அவசியமும் இல்லை. வீட்டு வசதி வாரிய வீடு எனக்கு வேண்டாம். சுளுவான அடிமாட்டு  விலையில் மக்களை ஏமாற்றி மனைகளும் வேண்டாம். கனிமொழி, என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

தவிர மிகப் பிரமாதமான ‘உலகத் தரம் கொண்ட’  கவிதைகளைப் படித்து இன்புற்றிருக்கிறேன் – சில மகத்தான கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் நேரிலும் அறிந்திருக்கிறேன் (தருமு சிவராம், ஜி நாகராஜன், சுந்தர ராமசாமி,   போன்ற ஆளுமைகள்), தீ போன்ற நேர்மையாளர்களை தனிப்பட்ட முறையில் அறிந்தும் இருக்கிறேன். மேலும் பிச்சை பெற நினைக்கும் எண்ணமும் இல்லை.

இருப்பினும் சொல்வேன், ஆணித்தரமாக – கனிமொழிதான் கருணாநிதியின் நேரடி வாரிசு.

அதற்கு முப்பெரும்(!) காரணங்கள் உள்ளன. அவையாவன:

 1. சுயநலமே பொது நலம்.(அல்லது, ‘கயமையே கண் கண்ட தெய்வம்’)
 2. (இலக்கியப்)போலித்தனம்
 3. நேர்மையும், சுய பச்சாத்தாபமும்

இப்போது மேற்கண்ட காரணங்களை சற்று விரிவாகப் பாக்கலாம்…

சுயநலமே போது நலம்.(அல்லது, ‘கயமையே கண் கண்ட தெய்வம் ‘)

ஸ்டாலின், அழகிரி போன்ற அண்ணன்களெல்லாம் (பெரிய ஊழல்வாதிகளாக இருந்தாலும்) திமுகவின் வளர்ச்சிக்கு (ஆகவே சொந்த ‘வளர்ச்சி’க்கும்) மிகவும் சிரத்தையுடன் பணி ஆற்றினார்கள், ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் (தங்கள் மனமாச்சரியங்களுக்கும், புரட்டுகளுக்கும், கயமைகளுக்கும், பொச்சரிப்புகளுக்கும், சகோதரத்வேஷங்களுக்கும், இன்ன பிற விஷயங்களுக்கும்  அப்பாற்பட்டு) கட்சியின் விசுவாசிகள் – அதாவது, அவர்களுக்கு, தங்களாலும் கட்சி வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என நினைக்கிறேன்.. அவர்களுக்கு என்று தொண்டர்களும் குண்டர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கென்று நிச்சயமாக ஒரு அடிக்கட்டுமானம் கட்சியில் இருக்கிறது. அழகிரிக்கு ஒரு வசீகரமும் (ஆண்மை(!) மிக்க ‘செயல் வீரர்’)  என்ற ஒரு கூடுதல் தகுதியும் இருக்கிறது. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இவர்கள் மக்கள் தலைவர்கள் (mass leaders) தான். ஆக  ஒரு விதத்தில், ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தில் இவர்கள் பங்கை (நமக்கு அது பிடிக்கிறதா என்பது வேறு விஷயம்) குறைகளுடனும், தேவைகளுடனும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

(ஜெயலலிதா போன்ற அக்காக்களும் மேற்கண்ட வகைதான், ஆனால் தமிழ் நாட்டு அரசியலில் உள்ள ஒரே ஆண் இவர் என்பது என் எண்ணம்.தவிர, படிப்பாளி என்கிற பிம்பமும் அடிப்படை புத்திசாலித்தனமும் இவருக்கு ஒரு வசீகரத்தைக் கொடுக்கின்றன. தீவிர யோசனை செய்து தைரியமாக (நேர்மையுடனா என்பது விவாதத்திற்கு உரியது…) முடிவுகளை எடுக்கக் கூடியவர். வழவழா கொழகொழா இல்லவே இல்லை. மேலும், ஊழல் நிச்சயம் மேற்கண்டவர்களை விடக் குறைவு. இவரது தடாலடிஅரசியல் புரிந்து கொள்ளப்படக்கூடியதா, தமிழகத்துக்கு உதவுமா என்பது வேறு விஷயம். ஆங்கிலத்தில் TINA என்று ஒரு சுருக்கம் உள்ளது – there is no alternative – ‘இதற்கு ஒரு மாற்று இல்லை’ – தற்போதைக்கு நமக்கு வேறு வழியே இல்லை.)

ஆனால் கனிமொழி போன்ற தங்கைகள் திமுகவின் வளர்ச்சியில் எந்த அக்கறையுமில்லாமல் (நம் தமிழ்நாட்டிற்கு இது ஒரு நல்ல விஷயம் என்றாலும்), ஒரு விதமான கவலையுமில்லாமல், உதிரித்தனமாக பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவ்வகையில், கனிமொழிதான், கருணாநிதியின் உண்மை வாரிசு – ஏனெனில் கருணாநிதியும் (இவராவது முற்காலத்தில் கொஞ்சம் புத்தி சுவாதீனத்துடன் இருந்தார், கட்சியை தன் வழியில் வளர்க்க முயற்சித்தார்), கனிமொழியும் நினைப்பதெல்லாம் தங்கள் ஜேபிகளைப்  பற்றியும், தங்களைப் பற்றியும் மட்டுமே! இவர்கள் தங்களைச் சுற்றி ஜால்ராக்களை மட்டுமே வைத்துக்கொள்வார்கள், இந்த ஜால்ராக்களும் தீவட்டிக் கொள்ளைக்காரர்களாக இருக்க வேண்டும். தொண்டர்களைப் பற்றியோ அல்லது கட்சியைப் பற்றியோ ஒரு கரிசனமோ, யோசனையோ இல்லவே இல்லை. (எப்படி கனிமொழி போன்றவர்களை ஸ்டாலின்களும், அழகிரிகளும் பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது ஒரு வியக்க வைக்கும் விஷயம். என்னமோ போங்க, இதுதான் ‘கட்சிக் கட்டுப்பாடு’ என்பதோ என்ன எழவோ… அல்லது இதுதான் ‘குடும்பக் கட்டுப்பாடா?’)

எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவது தான் ஆதாயம் என்பதற்கும் மேல், தீயையும், சாம்பலையும் கூடத் திருடிக்கொண்டு ஓடுபவர்கள், இந்த இரு உதிரிகள்.

(இலக்கியப்)போலித்தனம்

மேற்கண்ட கல்யாணகுணங்கள் தவிர, கனிமொழிக்கும், கருணாநிதிக்கும் மற்றொரு இணைப்பு உண்டு. அது தான் அவர்களுடைய (இலக்கியப்)போலித்தனம். இது  ஸ்டாலின், அழகிரிகளிடம் அறவே இல்லை. அவர்கள் இவ்விஷயங்களில் தங்களை ஏமாற்றிகொள்ளவில்லை. (ஜெயலலிதாவும் அப்படியே)

அதாவது, தாம் எழுவதுதான் திரைப்பட வசனம், தான் ஒடிப்பது தான் கவிதை. நாங்கள் எழுதுவது தான் இலக்கியம். நாங்கள்தாம் தமிழ்க்கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள், நாங்கள் அசைந்தால் அசையும் தமிழம் எல்லாமே – இன்ன பிற அடிப்படையே இல்லாத எண்ணவோட்டங்கள்.

இது கனிமொழியின் ஒரு தலைப்பில்லா  கிவிதையின் பகுதி. இதில் இவர் நம் செந்தமிழ்நாடைத்தான் ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கிறார் என்று எண்ணுகிறேன்… மறுபடியும் மறுபடியும் இவரது நேர்மையை மெச்சுவதைத் தவிர வேறு எதுவுமே செய்ய முடியாது – எவ்வளவு அழகாக ஒடித்து, வரிகளின் மண்டைகளில் டமால் டமால் என்று அடித்து, வார்த்தைகளின் தலைகளில் செல்லமாகக் குட்டி, ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.

” …
முகமற்று நொதிக்கும் வாழ்வு.
விடிந்தபின் விரியும் கள்ளிப்
பாலையின் வெடித்த நிலங்கள்.
புழுதிக் காற்றில் அலையும் காய்ந்த
விந்துகள் வண்புணர்வில்
புழை கிழிந்துகதறும் சிறுமியைப்போல்
மருண்டு அழுகிறேன்
…”

Moneyமொழி அம்மணீ அவர்களே, நீங்களே உங்கள் கிவிதையில் சொல்வது போல, தமிழகமே உங்கள் கும்பலின் வன்புணர்வால் மருண்டு அழுது கொண்டிருக்கிறது. தமிழ்த்தாயின் புழை கிழிந்து அவள் கதறிக்கொண்டிருக்கிறாள். தயை செய்து உங்கள் வன்புணர்வை நிறுத்துவீர்களா?

கிவிஞரின் கிவிதை இப்படி இருக்கிறது. தலீவரின் அலக்கியம் எப்படி என்று பார்க்கலாமா?

திருவாளர் கருணாநிதியின் எழுத்து அனைத்தும் (ம்ம்ம், தோராயமாக, ஏறக்குறைய) ஒரு காலத்தில் பரீட்சைக்குப் படிக்கும் மாணாக்கனைப் போலப் படித்திருக்கிறேன், எப்படியாவது எங்காவது  தன்னிலை மறந்து போயாவது இம்மனிதர் .ஏதாவது  ஆபாசம் ( = உண்மை இல்லாதது) இல்லாமல் தரம் வாய்ந்ததாக எழுதியிருப்பார் என்றால், மிகவும் வருத்தத்துடனும், அயர்வுடனும்  சொல்கிறேன்: ஒரு ‘முடி’யும் இல்லை, மன்னிக்கவும்.

ஈ வே ராமசாமி நாயக்கர் இருந்திருந்தால்  ‘என்ன வெங்காயம் இந்த கிறுக்கன் எழுதிக் கிழிக்கிறான்’ என்பார்.

மனம் நொந்து போய் உள்ளேன். வெந்த புண்ணில் வடிவேலுவைப் பாய்ச்சாதீர்கள், தயவு செய்து…

வடிவேலுவும் மஞ்சள் மகிமையும் (நன்றி: 'சவுக்கு')

கிலக்கியம், கிவிதை, உடனிறப்புக்குக் கிடிதம், திரைப்பட சவனம் – இன்ன பிற எல்லாவற்றிலும் இவ்விருவரும், அவரவர் தகுதியின்மையைப் பொறுத்து எழுதிக் கிழித்திருக்கிறார்கள். இவர்கள் எழுத்தினால், அவை தேவை இல்லாமல் காகிதங்களில் அச்சேற்றப் பட்டதால், எவ்வளவு காடுகள் அழிந்தனவோ, பாவிகள்…

நேர்மையும், சுய பச்சாத்தாபமும்

தந்தையார் கருணாநிதியார் அவ்வப்போது வெளிப்படுத்தும் எண்ணங்களைப் பாருங்கள்:

 • 13 வருடங்கள் தண்டனை கொடுத்தது போதாதா?
 • என்னை முதலமைச்சர் ஆக்குங்கள், தயவு செய்து, நான் MGR வந்தவுடன் அவரிடம் தந்து விடுகிறேன்…
 • என் ஜாதகம் எப்போதுமே இப்படித்தான்
 • தமிழன் சோற்றால் அடித்த பிண்டமானதால் தானே இப்படி…
 • புறங்கையைதானே நக்கினோம்? மன்னிக்கக் கூடாதா?
 • நான் பூணூல் போடாதவன் என்று தானே ——- செய்கிறீர்கள்?
 • ஐயோ, ஐயையோ, அடிக்கறாங்க, அடிக்கறாங்க
 • நான் சூத்திரன் என்று தானே —— சொல்கிறீர்கள்?
 • மௌன அழுகை அழத்தான் முடியும்…

மேற்கண்டவை ஒரு சாம்பிளுக்கு, ஒரு குட்டி எடுத்துக்காட்டுக்குத்  தான். இதில் உள்ள பளிச்சிடும் நேர்மையையும் பச்சாதாபத்தையும் நீங்கள் அறிவீர்கள். மனிதர் அனுபவித்துதான் இப்படி பேசி / எழுதியிருக்கிறார். தலீவரோட ஒரு வரி அழுகைகள், சோக கீதங்கள், முத்தாய்ப்புகள்  ஒரு 130ஆவது  என்னிடம் இருக்கும் – அவ்வளவு தான் என்னால் முடிந்தது – அழுகைகள் கரையில, படிப்பவர் நாள் சில, என் செய்வது! கலைஞர் அழுகை, விசும்பல்கள் அனைத்தையும் தட்டச்சு செய்து உங்களை நான் மலைக்க வைக்கப் போவதில்லை, மேலும் எனக்கே அழுவாச்சியா வருது… .

தம் தந்தையாரைப் போலவே, மாதரசிக்கும் பல பிரச்சினைகள். ஒரு சமயத்தில் தந்தையாரிடம் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூட மிரட்டியுள்ளார். பாவம். கவிதையோ எழுத வரவில்லை. மத்திய அமைச்சரவையில் இடமில்லை. சகோதரர்களுடன் சுமுக உறவு இல்லை. இந்த துயரகரமான சூழலில் இந்த சிபிஐ நோண்டல்கள் வேறு. ஆக அவர் தன்னைப் பெண்ணியவாந்தியாகவும், கவிதாயினியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.  இவ்வேடங்களில் அவரால் ‘ஆணாதிக்க சமுதாயம்’ பற்றிக் கோபத்தைக் கொண்டவராகவும், ‘மென்மையான இலக்கிய நுண் உணர்வுகள்’ கொண்ட படைப்பாளியாகவும் தன்னைத்தானே மெச்சிக் கொள்ள முடிகிறது. தொண்டரடிப்பொடிகளும் இருக்கிறார்கள்… ஆனால், சில சமயம் அவரையும் மீறி உண்மைகள் அவரது கவிதைகளில் வந்து விடுகின்றன… மேலே ஒரு எடுத்துக்காட்டு, மேலும் ஒரு முந்தைய பதிவில் இன்னொரு உதாரணம்.

இதைத்தவிர நீரா ராடியாவுடன் இவர் பேசியுள்ள பேச்சுக்களில், என்ன ஒரு சுயபச்சாத்தாபம்! த்சோ, த்சோ,  த்சோ…

ஆனால் நண்பர்களே, ஸ்டாலினும் , அழகிரியும் இவர்களைப்போல கையறு நிலையில் இருப்பதுவுமில்லை. ஒப்பாரி வைப்பதும் இல்லை. (ஜெயலலிதாவோ ஒரு நம்ப முடியாத அளவுக்குத் தன்னம்பிக்கையும், தடாலடித்தனமும் (hubris) கொண்டவர்)

தட்டச்சு செய்து கொண்டே இருக்கலாம். ஆனால்…

=-=-=-=-=-=

மறுபடியும் இக்காரணங்களைப் / குணங்களைப் பட்டியலிடுகிறேன் – இவை கனிமொழியால், தன் தகப்பனாரிடமிருந்து முழுவதுமாக உள்வாங்கப் பட்டுவிட்டன…

 1. சுயநலமே பொது நலம்.(அல்லது, ‘கயமையே கண் கண்ட தெய்வம்’)
 2. (இலக்கியப்)போலித்தனம்
 3. நேர்மையும், சுய பச்சாத்தாபமும்

ஸ்டாலினும் , அழகிரியும் இக்கல்யாண குணங்களைக் கொண்டவர்களாக இல்லை. ஆகவே மன்னிக்கவும்.

ஆகவே, இம்முப்பெரும் காரணங்களினால் தான் சொல்கிறேன் – – கனிமொழிதான் கருணாநிதியின் நேரடி வாரிசு.

கருணாநிதிக்குப் பின் திமுகவின் தலைவி, கனிமொழிதான்.

ஆமென்.

2 Responses to “கனிமொழிதான் கருணாநிதியின் உண்மை ‘வாரிசு’”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s