ஒத்திசைவு…

| … | γνῶθι σ0εαυτὸν | बूद्धूराम् | … | If you don't read the newspaper you are uninformed, if you do read the newspaper you are misinformed" ~~ Mark Twain | especially with 'The Hindu' – India's notional noosefaffer! |

ஒரு அறிவிப்பு (அல்லது எச்சரிக்கை)

with 10 comments

நண்பர்களே,

5 நாட்களிலேயே, இந்த வலைப்பூ எண்ணிறந்த வாசகர்களினால் படிக்கப் பட்டுள்ளது எனக்குத் திருப்தியைத் தருகிறது. கருணாநிதி கும்பலின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, ஏதோ என்னாலான பங்கு.

நான் நினைத்த மாதிரியே, பிரசுரிக்கக் கூடிய பின்னூட்டங்களை (மிகமிகக் குறைந்த எண்ணிக்கைதான் இவை) விட உருட்டியும், மிரட்டியும் வந்த பின்னூட்டங்கள் தான் அதிகம்  – இவற்றை சட்டை செய்யாமல் குப்பையில் தள்ளி விட்டேன்..ஆனால், நான் இந்த முகம் தெரியா மாக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.  உங்கள் IP முகவரி மூலம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று தோராயமாக அல்லது துல்லியமாக கண்டு பிடிக்க முடியும் – அதற்கேற்ற உபகரணங்களும், ISP நண்பர்களும் carrier  ஆட்களும் எனக்கு இருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் எனக்கு இந்த புதைபொருள் ஆராய்ச்சிக்கு நேரமில்லை. மேலும் நான் பனங்காட்டு நரி. ஆகவே, தயவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

ஏன் அனாமதேயங்களே, நீங்களும் தமிழர்கள் தானே? உங்களுக்குத் தெரியவில்லையா உங்கள் தலீவரும் அவர் வாரிசும், நீங்கள் ஏமாந்தால் உங்கள் அடிமடியிலேயே கைவைத்து உங்கள் குஞ்சாமணியையே  திருடிவிடுவர் என்பது? நீங்கள் சிந்திப்பீர்களாக. என்னைத் திட்டினால் பரவாயில்லை, என்னுடைய வாதங்களை தர்க்க ரீதியாக மறுத்தால் பரவாயில்லை – உங்கள் பின்னூட்டங்களை அவசியம் பிரசுரிப்பேன். ஆனால் சும்மா மிரட்டாதீர்கள். உங்கள் அனைத்து ஓட்டைகளையும் மூடிக் கொண்டு செல்லுங்கள் – அல்லது நீங்கள் ஒரு ராஜஜால்ராசோழன் கருணாநிதியின் சார்பாக ஒரு  வலைப்பூவினை ஆரம்பியுங்கள்.  ஒரே விஷயம் – குறைந்த பட்சம் ஒரு மொழியிலாவது நீங்கள், கொஞ்சம் படிக்கும்படியாக எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும், உங்கள் பின்னூட்டங்கள் பரிதாபமாக இருக்கின்றன. நீங்கள் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டும்போது, உங்கள் எழுத்துப் பிழைகள் எனக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. நீங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். உங்களுக்கு என் ஆசிகள்.

நிற்க. தேர்தலுக்கு மிகக் குறைந்த காலமே உள்ளது. கருணாநிதி கும்பலோ பணமும், அதிகாரமும் கொடுக்கும் திமிரில், சிந்திப்பவர்கள் வாக்குச்சாவடி பக்கம் கூடப் போகமாட்டார்கள் என்ற தெம்புடன், அவர்களது ஆபாசப் பணப் பைகளை விரித்து நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, தமிழகம் தற்காலத்து இத்தாலி போல முழுவதுமாக சீரழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். நான் அறிவுரை கூற வரவில்லை.

குறைந்த பட்சம் நீங்கள், இந்த வலைப்பூ போன்ற தளங்களில் உள்ள கட்டுரைகளை(!), உங்கள் நண்பர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு அனுப்ப முடியுமா? Mirror செய்ய முடியுமா? உங்கள் அருகில் உள்ள வாக்காளர்களிடம் பேச முடியுமா?

கடைசியாக நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால் – நாம் ஒவ்வொருவரும், ‘காலத்தின் கட்டாயத்தால்’ யாருக்கு வாக்கு அளிக்கப் போகிறோம் என நினைத்து மனக் கிலேசம் அடைவதை விட, எண்ணிப் பார்க்க வேண்டியது, இக்கேள்வி தான்….

அது:  ஒழிக்கப்பட வேண்டியது எதனை?

நன்றி.

(மதிப்புக்குரிய வை கோபால்சாமி இந்தக் கேள்வியை நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்)

Written by வெ. ராமசாமி

30/03/2011 at 23:07

Posted in DMK, politics, tamil

10 Responses

Subscribe to comments with RSS.

 1. don’t worry about these dogs. Continue the good work

  unmai

  30/03/2011 at 23:22

  • நண்பர் ‘உண்மை’ அவர்களுக்கு நன்றி. – உங்கள் பின்னூட்டங்களுக்காக, ஊக்குவிப்புக்காக.

   ஆனால், நான் நாய்களை மிகவும் மதிப்பவன். விரும்புபவன். ஆகவே அவைகளைக் கேவலமாக – திமுகவினருடன், முக்கியமாக திமுக தலைவர்களுடன் ஒப்பிடமாட்டேன்.

   ramasami

   31/03/2011 at 19:58

 2. உங்கள் தைரியத்திற்கு ஒரு சலாம். தொடர்ந்து பல சிக்ஸர்களை அடிக்க வேண்டுகிறேன். வெளிநாட்டில் இருந்தாலும் , எங்கள் எண்ணம் என்றுமே தாய்தேசத்தைப் பற்றியே நினைக்கிறது. நன்றி.

  ஷங்கர்

  ஷங்கர்

  01/04/2011 at 08:05

  • நன்றி, ஷங்கர் அவர்களே.

   பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும், நற்றவையாயினும் நனி சிறந்தனவே…

   ramasami

   04/04/2011 at 20:16

 3. பாராட்டுக்கள். உண்மையைத் துணிந்து சொல்லத் துணிவதற்குப் பாராட்டுக்கள். பெருகட்டும் இத்துணிவு. சலசலப்புகளைப் பொருட்படுட்த்த வேண்டாம். தி மு க பொறுக்கிகள் இணையத்திலும் அதிகம். இதற்காகவே காசு கொடுத்து அமர்த்தப் பட்ட பொறுக்கி பூத் ஏஜெண்டுகள் எல்லாம் இருக்கிறார்கள். அந்தப் பொறுக்கியை நீங்கள் சவுக்கு தளத்தில் அடிக்கடி காணலாம் இங்கும் வந்து உங்களை மிரட்டிப் பார்ப்பான். தொடர்ந்து உங்கள் பணியைச் செய்யவும். முடிந்தால் அழகிரியின் ரவுடிக் கும்பலில் உள்ள ஒவ்வொரு பொறுக்கியின் ஜாதகத்தையும் சேகரித்து இடவும். ஜெ நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்

  துணிவான தேவையான ஒரு சேவை. தொடருங்கள்

  பாராட்டுக்கள்

  விஸ்வாமித்ரா

  viswamitra

  04/04/2011 at 22:38

 4. mr. ramsamy. dogs are evolved from wolves. dogs have a good behaviour though they come from a fox family. so i guess these people can be referred to wolves.

  sathish

  11/04/2011 at 12:55

 5. உங்களின் எழுத்துக்களின் மூலமே இந்த கயவர் கருணாநிதியின் கடந்தகால ஊழல் வரலாறையும் தெரிந்துகொண்டேன்…தொடர்ந்து எழுதுங்கள்…வாழ்த்துக்கள்…

  thendral

  10/05/2011 at 19:42

 6. vanakkam,

  Good work !! Kindly keep it on. A big salute for your bravery.

  With warm regards

  V Rathna Kumar
  An Army Ex-Serviceman

  Rathna Kumar

  14/10/2011 at 14:45

 7. இப்பதா ன் உங்க ப்லோகை பார்த்தேன் .ஒரு வருடம் ஆனாலும் உங்களை பாராட்டியே ஆகணும்.

  ilatchiyakudumbam

  05/04/2012 at 10:13

 8. ஐயா, தங்களுக்கு நான் எழுதி வெளி இட்டு உள்ள திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தை அன்பளிப்பாக அனுப்ப விரும்புகிறேன். தங்களுடைய அஞ்சல் முகவரியை என்னுடைய கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப இயலுமா?
  prof_venkat1947@yahoo.co.in

  R Venkatachalam

  19/12/2012 at 09:48


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s