திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…

31/03/2011

படிக்கவும்: ஒரு அறிவிப்பு (அல்லது எச்சரிக்கை)

கீழ்க்கண்ட கட்டுரை கண்ணதாசனால், திமுக வின் ஆரம்ப நாட்களை (1950கள்)  நினைத்துப் பதிவு செய்யப்பட்டது. யோசித்துப் பார்த்தால், கருணாநிதி கும்பல் கடந்த 60 வருடங்களாகத் திருந்தவே இல்லை என்று தெரியும்… இந்தக் காமத்தில் மட்டுமே ஊறித்  திளைத்திருந்த காலம் தான் (மற்றபடி பொதுவாழ்வில் நேர்மையாளராக இருந்த) அண்ணாதுரையைக் கூட  ‘அவள் படி தாண்டாப் பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’ என்று பிற்பாடு சொல்ல வைத்தது.

காமம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கம். என்னைப் பொறுத்தவரை  ‘consenting adults’ – அதாவது ஒருவரை ஒருவர் விரும்பி, மற்றவர்களுக்குத் தொந்திரவு கொடுக்காமல், உறவு கொள்ளுதல் என்பதை யாராலும் குறை சொல்ல முடியாது – அதற்கு முகாந்திரமே இல்லை. அது அவர்கள் சம்பந்தப்பட்ட, தனிப்பட்ட விஷயம். ஆனால் இங்கு திமுக வரலாற்றில் (!)  நடப்பதோ, நடந்திருப்பதோ நேர்மையான காமம் இல்லை – இவை வன்புணர்ச்சிகளோ, அல்லது லஞ்சங்களோ, அல்லது வடிகட்டிய  அயோக்கியத்தனங்களோ தான்…

நண்பர்களே, மேற்கண்ட பாதகங்களுக்கு என்ன தண்டனைகள் தரப்பட வேண்டும்?

 • வன்புணர்ச்சிகள் – இவற்றுக்கு மரணதண்டனை தரப்பட வேண்டும்
 • லஞ்சங்கள் (பணத்திற்குப் பதிலாக காமப்பரிசுகள்) – இதற்கு சிறையில் போடப்பட வேண்டும் – குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை
 • வடிகட்டிய  அயோக்கியத்தனம் (அனுபவித்து விட்டு பணம் கொடுக்காதிருப்பது) – குஞ்சாமணியை அறுத்து ‘அண்ணா சாலையில்’ அம்மணமாக நடக்க விடவேண்டும்.

ஆனால், திரைப்படங்களினாலும், மயிர்க் கூச்சரிப்பு அடுக்கு வசனங்களினாலும் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, அப்போதே காயடிக்கப்பட்ட தமிழகம் என்ன செய்தது? இந்த பொறுக்கிகளை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தது. சீ – என்ன கேவலம் இது!

தமிழகத்தில் இந்த  வன்புணர்ச்சி முன்னேற்றக் கழகம் வளர்ந்தது ஒரு சாபக்கேடு. திமுக தயாரிப்பில் மிகச்சில தலைவர்களைத் தவிர (அபூர்வமான வை கோபால்சாமி நினைவுக்கு வருகிறார்) அனைவரும் கீழ்த்தரமான பொறுக்கிகள் என்பது மிகுந்த வருத்தத்தைத் தரக்கூடியது.

மற்ற கட்சிகள் எல்லாம் உத்தமம் என்று சொல்ல வரவில்லை.  ஆனால் தயங்காமல் சொல்ல முடியும், திமுகவில் தான் அயோக்கியத்தனம் அதன் தலைவர்களுக்கான ஒரு அடிப்படை குணம் – தொண்டர்கள் பாவம், அவர்கள் அவ்வப்போது தீக்குளிக்க அல்லது கருணாநிதி கதை வசனம் எழுதியப் புழுக்கைப் படங்களைப் பார்த்து விசிலடிக்கத்தான், பணம் அழத்தான் லாயக்கு…

…கண்ணதாசன் திமுக வின், ஆரம்ப கால தீவிர தொண்டராகவும் போஷகராகவும் இருந்தார் – பின்பு வெறுத்துப்போய் வெளியே வந்தார். வனவாசம் என்றொரு புத்தகம் எழுதி வெளியிட்டார் – 1965ல் – இந்தப் புத்தகத்தின் இருபத்து இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து சில பகுதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் குறை சொல்ல வேண்டுமென்றால், அவரே ஸ்திரீலோலன் தானே என்று பேசலாம், அவருக்கு என்ன உரிமை இருக்கிறது மற்றவர்களைக் குற்றம் சொல்ல என்று நினைக்கலாம்.

அவர் பாராட்டினால் ஒரேயடியாகப் பாராட்டுவார், தூற்றினால் ஒரேயடியாக மண்ணில் வைத்துத் தேய்த்து விடுவார் எனலாம். உண்மைதான். அவர் அப்படித்தான். ஆனால் கண்ணதாசன் ஒருபோதும் மனதாரப்  பொய்  சொன்னதில்லை. தன்னைப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசியவர், எழுதியவர். சாக்ரடீஸ்  சொன்னதாக ஒரு வசனம் உண்டு: “The unexamined life is not worth living”  –  கண்ணதாசன் அப்படித்தான் வாழ்ந்தவர் – அவர் வாழ்க்கை அவரால் எப்போதுமே பரிசீலிக்கப் பட்டிருக்கிறது. அவருடைய நேர்மையை, எண்ணங்களை மறுபரிசீலனை செய்யும் தன்மையை,  ஒருவரும், ஒருபோதும் புறம்தள்ள இயலாது.

[ இந்தக் கட்டுரையின்  தலைப்பு என்னுடையது; கண்ணதாசனுடையது அல்ல‘அவன்’ என்று கட்டுரையில் கண்ணதாசன் குறிப்பிடுவது, தன்னைத்தான். அக்காலத்தில் கருணாநிதிக்கு உற்ற நண்பராக இருந்தார், கண்ணதாசன். கருணாநிதி அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார் தலைவராக – அண்ணாவை – மன்னிக்கவும், அண்ணாவின் பதவியை நோக்கி..]

—– கட்டுரை ஆரம்பம் —-

“சென்னையிலே அவனது நண்பர்கள் வெகு உற்சாகமான முறையிலே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

மேடையிலே தாய்மார்களைப் பற்றி ரத்தக் கண்ணீர் வடிகின்ற அவர்கள், அந்தத் தாய்மார்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அனுபவபூர்வமாக காணும் கட்டம் ஆரம்பமாயிற்று.

அந்நாளில் திமுக பிரபல இயக்கமாக இல்லை. வாடகைக் கார் டிரைவர்களுக்கும், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது.

அவனும் ஒரு தலைவனும் ஒரு நாள் இரவு ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக் கொண்டு பெண் வேட்டையில் ஈடுபட்டார்கள். ஒவ்வோர் இடமாக போய்ப் பார்த்தார்கள். கடைசியில், தேனாம்பேட்டைப் பக்கமுள்ள குடிசைகளின் அருகில்  வாடகைக்கார்  நின்றது. ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மடமடவென்று வந்து காரில் ஏறிக்கொண்டனர். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்?

அத்தனையையும் ஏற்றிக் கொண்ட வாடகைக்கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.

திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக் கூட  பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பி விட்டார்கள்.

அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவை குறைவாகவும் போய்விடும்.

ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கெட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை!

 • “மேடையில் என்னென்னமோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”
 • “நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”
 • “உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபை எல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”

இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.

திமுக வின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர்கள் என்றும், காமுகர்கள் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவனுக்குக் கொஞ்சம் கூட கோபம் வருவதில்லை. காரணம் – அதுதான் உண்மை!

அரசியலையே அவர்கள் வேடிக்கையாகத்தான் நடத்தினார்கள். ஒரு விடுதலை இயக்கமானது, தனக்கு வைத்துக்கொள்ளவேண்டிய கட்டுப் பாடுகளை திமுக என்றுமே வைத்துக் கொண்டதில்லை.

கட்சித் தொண்டும் ஒரு வகையான பொழுதுபோக்கு என்றிருந்ததால் அவனும் தன்னை  அறியாமல் அதிலே மேலும் ஈடுபடத் தொடங்கினான்.

கட்சியினுடைய ஆரம்ப காலமான அக்காலத்திலும், ஒரு தலைவர் இன்னொரு தலைவரைக் கேலி செய்வதே வாடிக்கையாக இருந்தது. “நீ இப்படி செய்யலாமா?” என்று ஒருவரைக் கேட்டால், “என் அவர் மட்டும் என்ன யோக்கியராம்?” என்று பளிச்சென்று பதில் சொல்வார்கள்.

பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்கின்ற தொண்டர்கள் அன்றும் சரி, இன்றும் சரி, அவ்வளவு உத்தமமானவர்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் பரிதாபமாக இருக்கும்.


கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுவது போல் நலம் நாடிப் பிறந்த ஜனநாயகத்தில் நாணயம் கெட்டவர்கள்தான் குடியேறினார்கள். போலிகளும் பொய்யர்களும் தவிர, யோக்கியர்கள் யாரும் ஜனநாயகத்தில் பெரும் புகழ் பெற முடியாதே என்று அவன் அஞ்சத் தொடங்கினான்.

சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் எதிர்ப்புக்களை எல்லாம்  சமாளித்துக் கட்சியை வளர்த்த உத்தமர்கள், அன்று செல்வாக்கு அற்றுக் கிடந்தார்கள். அரை வேக்காடுகளும் ஆர்ப்பாட்டக் குடுவைகளுமே தலைவர்களென்று தம்பட்டமடித்துக்கொண்டு ஊர்வலம் வந்தார்கள்.

ஒவ்வோர் அரசியல் கட்சியிலுமே நிலைமை இதுதான்! ஒழுங்காக உழைத்தவன், தியாகம் செய்தவன் எங்கேயோ கிடப்பான். அவனை ஏமாற்றிக் கீழே தள்ளியவன் எல்லா பதவிகளிலும் அமர்ந்து கொண்டிருப்பான்.

…”
— கட்டுரை முடிவு —-

(அடுத்த பதிவில் மேலும் சில…)   –  திமுக …பொம்பளைப் பொறுக்கிகள் … பாகம் 2

படிக்கவும்: ஒரு அறிவிப்பு (அல்லது எச்சரிக்கை)

7 Responses to “திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…”

 1. unmai Says:

  Super. Every one voting these crooks should be ashamed of.

 2. karthi Says:

  i was looking for this for long time,to read vanavasam through the onlne.(2years).thanks for your publish.


 3. இதையும் கொஞ்சம் படிங்க
  http://sagamanithan.blogspot.com/

  • ramasami Says:

   படித்தேன் ‘சகமனிதன்’ அவர்களே. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

 4. kuzhali Says:

  nanbare, ungal muyarchikku paaraattukkal. intha DMK paavigal kevalamanavargal endru theriyum aanaal inthalavukku tharam kettavargala… ninaikkave nenjam kumurukirathu….. ivargalai verodu azhikkavendum…

  • ramasami Says:

   நன்றி ‘குழலி’ அவர்களே. திமுக எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப் பெற்ற இயக்கம். மிகவும் நல்ல, நேர்மையான தலைவர்கள் அதில் இருந்தனர். ஆனால் இப்போது அவர்களை விரல் விட்டுக் கூட எண்ண முடியாது…

   நான் ஒரு squeamish (இதற்குத் தமிழ் வார்த்தை என்ன?) என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஆசாமி அல்ல. ஆனால் என்னைக் கூட எழுதத் தயங்கவைக்கும் அராஜகங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

   பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s