திமுக …பொம்பளைப் பொறுக்கிகள் … பாகம் 2

31/03/2011

இதன் முதல் பாகம் படித்து விட்டீர்களா? படிக்காவிட்டால், இந்த இடுகையைப் புரிந்துகொள்ள முடியாது.

அய்யா கருணாநிதி அவர்களே, என்னை நீங்கள் என்ன நிலைமைக்குத் தள்ளி விட்டீர்! உங்கள் கழிசடைப் படைப்புக்களான(!), அரைகுறை கிளுகிளுப்புக்கள் நிறைந்த  ‘கபோதிபுரக் காதல்,’ ‘ரோமாபுரி ராணிகள்,’ ‘வாழ முடியாதவர்கள்,’ ‘குமரிக் கோட்டம்’   ஆரம்பித்து ‘பொன்னர் சங்கர்’ ரேஞ்சுக்கு என்னை குறைத்து விட்டீர்களே…ஐயகோ!

எனக்கு என்ன வருத்தம் என்றால் உங்களால், ஒரு அடுக்கு மொழி, அரைவேக்காட்டுக் காமம், வெட்டித் துள்ளல் நடையை மீறி எதுவும் எழுத முடியவில்லையே! திருக்குறளுக்கு உரை எழுதினால் கூட நீங்கள் ‘காமாந்தகக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ – அல்லது ‘போர்த்திக் கொள்வதெல்லாம் மஞ்சள்’ என்று தானே இருக்கிறீர்கள்?

நீங்கள் வைத்த கலையுணர்வற்ற கன்யாகுமரி திருவள்ளுவர் சிலை கூட கடலிலிருந்து ஆபாசமாக எழும் அழகுணர்ச்சியற்ற ஆணுறுப்பு போலத்தானே இருக்கிறது? பாவம், வள்ளுவர் என்ன தவறு செய்தார்? உங்கள் எழுத்தில் சொற்குற்றம், பொருட்குற்றம், இலக்கணப் பிழை ஏதாவது கண்டாரா? குறளுக்கு உரை எழுதி வள்ளுவரையே காயடித்ததில் திருப்தி இல்லையா?

குறைந்த பட்சம்,  pornography என்று சொல்லப்படும் ‘பாலுணர்வுக் கிளர்ச்சி’ சார்ந்த கதைகளை கூட கலை போன்று எழுத முடியவில்லையே உங்களால்? உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்  Mark Twain கூட மிக அழகாக பாலுணர்வுக் கதைகள் எழுதியுள்ளார். வ்ளாடிமிர் நபோகொவின் ‘லோலிதா’ படித்ததுண்டா? ஏன், நம் தமிழ் நாட்டிலிருந்து கூட கி. ராஜநாராயணன் அற்புதமான ‘வயது வந்தவர்களுக்கு’ கதைகள் எழுதியுள்ளார். இவற்றை படித்ததுண்டா? யோசித்ததுண்டா? கேள்வியாவது பட்டதுண்டா? உங்களுக்குத் தெரியாதா என்ன? எந்த செயலிலும் தொழிலிலும் உன்னதம் அடையவேண்டுமானால், தொடர்ந்த, குவிந்த உழைப்புத் தேவை என்பது…

ஆனால் பாவம், உங்களுக்கு விழாக்களுக்குப் போகவே நேரம் சரியாக இருக்கிறது; மிஞ்சிய நேரங்களில் மட்டசபை வளாகத்தில் உள்ள  மீன்களுக்கு பொரி போடவேண்டும். ‘சொக்கத் தங்க’ த்திடமிருந்து தொலைபேசி வருமா என்று காத்திருக்க வேண்டும். எஞ்சிய நேரத்தில் கதை-வசனம், தனக்குத்தானே கேள்விபதில், பிரதமருக்குக் கடிதம், உடன்இறப்புக்குக் கடிதம், இன்ன பிற. சில சமயம் எனக்கு பேதி வரவைக்கும் கவிதை(!) வேறு!  உங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் அயர்வாக இருக்கிறது.

சுர்ஜித் சிங் போகட்டும். அம்மா சிரேயா, கவுன் போட்டிருப்பதால் நீ தான் அடுத்த கவ்னர், ... ஏனென்றால், முன்பு நாகர் கோவில் தமிழகத்தில் இருப்பதால், தமிழர்கள் தான் நாகர்கள் - என்று உரைத்தேனே, கேட்டிட்டாயா? என் லாஜிக் புரியவில்லையா? (ஹ்ம்ம். எல்லாம் என் ஜாதகம்)

முழுவதும் வக்கிரமாக எழுதக் கூட வக்கில்லையே!  ஒரு ‘சரோஜா தேவி’ அல்லது ‘ரசவந்தி’ அளவுக்குக் கூட எழுத முடியவில்லையே! Sado-masochism போன்ற வகைகளைக்கூட தருவித்துக் கொள்ள முடியவில்லையே!  ஏன் இவைபோன்று எழுதவேண்டும் என்றாலும்கூட  உண்மையாலுமே உழைக்க வேண்டும் என்றா? அல்லது உங்களின் செல்லங்களான உடன்இறப்புகளுக்கு   கொஞ்சம் புத்தி மட்டு – ஆகவே அவர்களைச் சோதிக்க முடியாது என்பதாலா?

உண்மையாகவும், நக்கலில்லாமலும் சொல்கிறேன் – உங்களுக்கு இருக்கும் மூளையையும், மனித மனோதத்துவம் குறித்த ஆழ்ந்த புரிதல்களையும் கொண்டு  – நீங்கள் தமிழகத்திற்காக, தமிழ் மக்களுக்காக பாடுபடலாமே, உழைக்கலாமே! ஏன் இப்படி, அநியாயத்திற்கு பணம்-பெண்-பாசம் என்கிற முப்பெரும் பூதங்களைச் சார்ந்தே உங்கள் மூளையும் உடம்பும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன?

எப்படியோ போங்கள் – விஷயத்திற்கு வருவோம்…

[கீழ்க்கண்ட கட்டுரையும் கண்ணதாசனால், திமுக வின் ஆரம்ப நாட்களை (1950கள்)  நினைத்துப் பதிவு செய்யப்பட்டது.  …கண்ணதாசன் திமுக வின், ஆரம்ப கால தீவிர தொண்டராகவும் போஷகராகவும் இருந்தார் – பின்பு வெறுத்துப்போய் வெளியே வந்தார். வனவாசம் என்றொரு புத்தகம் எழுதி வெளியிட்டார் – 1965ல் – இந்தப் புத்தகத்தின் இருபத்து மூன்றாம் அத்தியாயம் இது.  ‘அவன்’ என்று கட்டுரையில் கண்ணதாசன் குறிப்பிடுவது, தன்னைத்தான். அக்காலத்தில் கருணாநிதிக்கு உற்ற நண்பராக இருந்தார், கண்ணதாசன். கருணாநிதி அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார் தலைவராக – அண்ணாவை – மன்னிக்கவும், அண்ணாவின் பதவியை நோக்கி..]

—– ஆரம்பம் —-

“அவனுடைய நண்பர் சரியான அரசியல்வாதி.

தமிழ் நாட்டில் பிச்சைக் காரர்கள் இருப்பது பற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார். ஆனால் ஒரு பிச்சைக்காரனுக்குக் கூட கையை விட்டுக் காலணா கொடுத்ததில்லை.

தொழிலாளர்களையும் அவர்கள் ரத்தம், நரம்புகளையும் பற்றித் துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார். அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.

தான் முன்னேறுவதுபோல் இன்னொருவனும் முன்னேறி விடாமல் இருக்க சகலவிதமான வழிகளையும் கையாளுவார். அரசியல் உலகம் அத்தகைய பிரகிருதிகளுக்குத்தான் வழி திறந்து வைத்திருந்தது.

ஏன்? வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரத் தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துக் காரியமும் முடிந்தபின், சத்தம் போட்டு அந்தப் பணத்தையே திரும்பி வாங்கி வந்தவர் அவர்.

தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, அந்தப் பெண்ணின் தகப்பனாரோடு சண்டைக்குப் போய், அவர் செய்த ஆர்ப்பாட்டங்கள் சுவையானவை.

சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்த சந்திலே தான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார்.

மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர்.

அவனும் அவனுடைய  ‘துள்ளுதமிழ் தோழனும்’ இன்னும் ஒரு தற்கால MLAவும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள். மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்த பிரமுகர் சேர்த்துக் கொண்டார். அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டது.

இரவு பதினோரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பான பேச்சுக் குரல் எழுந்தது. நேரம் ஆக ஆக, அது வாக்குவாதமாக வளர்ந்தது. ‘கலா ரசிகர்’ வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக் கொண்டார்.

எங்கே என் துண்டு? ஐயகோ காணாமல் போய்விட்டதா? சரி, சற்றொப்ப சிறிது நேரத்துக்கு இந்த தலைப்பாகையை அணிந்திடுகிறேன்...

நாட்டு வைத்தியரைத் தட்டி எழுப்பினார். “உன் பெண் சரியாக நடந்து கொள்ளவில்லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக்கொடு” என்றார். “போலீசைக் கூப்பிடுவேன்” என்று மிரட்டினார். போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலா ரசிகர் மறந்தே போனார்.

இறுதியில், ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டுதான் ஆளை விட்டார். பின் ஒரு வாரம் வரை, அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார். அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து அதே மாதிரிக் காரியத்துக்குத்தான் பயன் பட்டது.

விடுதலை இயக்கத்தின் பிரமுகர்களை கவனியுங்கள். எப்படியோ அப்பாவிப் பொதுமக்களின் நம்பிக்கையைப்  பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையைக் கவனியுங்கள்.

சமுதாயத்தின் இருண்ட பகுதிகளை ஒளிமயமாக்கப் புறப்பட்ட அவர்கள், பொழுது இருண்டபிறகுதான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள். எந்தெந்தத் துயரங்களிலே இந்தச் சமுதாயம் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவர்கள் புலம்புவார்களோ, அந்தத் துயரங்கள் பலவற்றிற்கு அவர்களே தான் காரணம் ஆனார்கள்.

…”
— முடிவு —-

இது வடிகட்டிய  அயோக்கியத்தனம் (அனுபவித்து விட்டு பணம் கொடுக்காதிருப்பது) அல்லவா? மிகவும் கஷ்ட நிலையில் உள்ள ஒரு குடும்பம், ஒரு வழியில் பணம் ஈட்ட நினைக்கிறது. அந்தப் பெண்கள், பிச்சை எடுக்கவோ, திருடவோ, பொய் சொல்லவோ இல்லை. அவர்களால் என்ன பணி செய்ய முடியுமோ அதைச் செய்து பசியாற நினைத்திருக்கிறார்கள். இதில் நாம் கற்பு, துப்பு என்று வெட்டிக் கற்பிதம் / வியாக்கியானம் செய்ய முடியாது. ஆனால் இந்த ‘கலா ரசிகர்’ கடைந்தெடுத்த கயமையுடன், பொறுக்கித்தனமாக நடந்து கொண்டு, வக்கிரத்துடன் அதைக் கொண்டாடி வேறு இருந்திருக்கிறார்.

இந்த மாண்புமிகு ‘கலா ரசிகர்’ அவர்களின்  குஞ்சாமணியை அப்போதே அறுத்து ‘அண்ணா சாலையில்’ (அப்போது இது ‘மவுண்ட் ரோடு’ எனப்பட்டது) அம்மணமாக நடக்க விட்டு கூவக்கரையில் உப்புக்கண்டம் போட்டிருந்தால்… யோசியுங்கள் நண்பர்களே…வரலாறே மாறி இருக்கும் அன்றோ…

மனிதன் தவறு செய்பவன்தான். சில சமயம் அயோக்கியத்தனம் செய்பவன் தான். ஆனால் அவற்றை உணர்ந்து திருந்தி, மறுபடியும் அப்படிப்பட்ட தவறைச் செய்யாமல் இருந்தால் தான் அவன் ஒரு மனிதன். ஆனால், நான் மனிதர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நம் தமிழகம் மிகுந்த பாவம் செய்திருக்கிறது. மறுபடியும் மறுபடியும் அயோக்கியர்களையே அரியணையில் அமர்த்துகிறது. இம்முறையும் தற்கொலை முயற்சி நடக்கக் கூடாது. இந்த முறை இந்த திமுக கும்பல் வெற்றி பெற்றால், அது தமிழர்களின் திரும்பி எழ முடியாத வீழ்ச்சியாக இருக்கும். ஆனால் வை கோபால்சாமி போன்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நமக்கு வக்கில்லை. காமராஜ் ராஜாஜி கக்கன் என்று ஆரம்பித்து வைகோ வரை நாம் நம்முடைய நல்ல தலைவர்களை இனம் காண மறுத்து வருகிறோம். அவர்களை போஷிக்க மறந்து விடுகிறோம். அவர்களை ஊக்குவிக்கத் தயங்குகிறோம். இது சோகமல்லவா?

அவர்களிடம் சில குறைபாடுகள் இருக்கலாம். அவர்கள் குறிக்கோள்கள், வழிமுறைகள் பற்றி இரண்டு விதமான எண்ணங்கள் / சில அவநம்பிக்கைகள் இருக்கலாம். நம் எவரிடம் தாம் அவை இல்லை? ஆனால் இவர்களின் நேர்மையை நாம் ஒரு போதும் சந்தேகிக்க முடியாது…

இன்னமும் குடி முழுகிடவில்லை. நமக்கு எந்த உதிரிகளைக் களைய வேண்டுமென்று  தெரியும், அல்லவா?

ஆகவே நண்பர்களே – நாம் இந்த தேர்தலில் ஒழிக்கப் போவது எதனை?

8 Responses to “திமுக …பொம்பளைப் பொறுக்கிகள் … பாகம் 2”


 1. மிக நல்ல. , சரியான காலத்தில் வந்திருக்கும் பதிவு… இதையும் பாருங்களேன்…
  http://sagamanithan.blogspot.com/2011/03/election-commission-or-commissined.html

 2. unmai Says:

  Good Article.

 3. அனபாயன் Says:

  ஐயகோ…..தமிழும் தமிழினமும் தொடர்ந்து திமுக போன்ற கயவர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகிகொண்டிருக்கிறது. தடுக்க வேண்டிய தமிழினமோ ஆயிரத்துக்கும், சாராயத்துக்கும், இலவசங்களுக்கும் ஓட்டை விற்று ஒருநாள் சுகம் கண்டு பிச்சைக்காரர்களாகவே செத்து மடிகிறது. உங்களின் இந்த பதிவு மக்களை சென்று சேர்ந்தாலும் தமிழ் மக்கள் திருந்துவார்களா? சுதாரித்துக்கொள்வார்களா? தெரியவில்லை! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! நன்றி

 4. K.RAMESH Says:

  nil

 5. pandiyan Says:

  admk enpathu appa aampilai porukkiyaa…..?????


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s