தமிழகத் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி பக்கத்தில் உள்ள மல்லச்சந்தரம் சென்றிருந்தேன்,  பள்ளிச் சிறார்களை அழைத்துக் கொண்டு.

இங்கு சில குன்றுகளின் மீது அழகான, மனம் போதை கொள்ளச் செய்யும் பழைய கற்கால கல்கட்டுகளும் , சிதைவுகளும் உள்ளன. மிகவும் அற்புதமான இடம் இது. நான் பல இடங்களில் இம்மாதிரி கற்கட்டுகளைக் கண்டிருக்கிறேன் – ஆனால் ஒரு இடத்திலும், இந்த அளவுக்கு ஒருசேர, பெரும்பாலும் சிதைவடையாத கல்மேஜைகளையும் (dolmens), வட்டச் சிதைவுகளையும் (cairn circles) நான் இதுவரை கண்டதில்லை. (ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் எழுதிய ‘The Circular Ruins’ எனும் சிறுகதையினுடைய – தருமு ‘பிரமிள்’ சிவராமு அவர்களின் ‘வட்டச் சிதைவுகள்; எனும் மகத்தான மொழி பெயர்ப்பினைப் படித்ததுண்டா? ‘கசடதபற’ என்று 1970 களில் வந்த தமிழ் சிற்றிதழில் இது வெளிவந்ததாக ஒரு நினைவு – விமலாதித்த மாமல்லன் தளத்தில் தருமு சிவராமுவின் பல படைப்புகள் உள்ளன.)

எங்கேயோ போய்விட்டேன். மன்னிக்கவும்.

ஒரு இணைப்புச் சாலை வழியாக மல்லச்சந்திரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தோம் – ஹோசூர்-கிருஷ்ணகிரி சாலையை நோக்கி. காலை மணி 11. திடீரென்று அந்தச் சிறு சாலையில் விர் விர்ரென்று SUV வண்டிகள் (மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா சுமோ, டாடா சபாரி இன்னபிற மகாமகோ வாகனங்கள் – மொத்தம் 11 அல்லது 12 இருந்திருக்கலாம்) எங்கள் பள்ளிச் சிறார்கள் நிரம்பிய சிறு வாகனங்களை அபாயகரமாக இடமிருந்தும் வலமிருந்தும் முந்திச் சென்றன – ஒரே புழுதிப் படலம்.

இந்த பிணிவகுப்பில் முதல் வாகனங்கள் திமுகவினுடையவை. பின் காங்கிரஸ். பின் பாமக வண்டிகள். கடைசி இரு வண்டிகள் தொல்(லை) திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்.

இந்தப் படை ஒரு சாலையோர உடம்பொடுங்கின ஏழை தலித் கிராம மக்களின் கூட்டத்தருகில் நின்றது.

ஒரு சுமோவிலிருந்து இறங்கிய ‘ஊர் கவுடர்’ – “அல்லாம் எப்டி இருக்கீங்க? ‘வேணுங்றது’ கிடச்தா? ” என்றபடி இறங்கினார்.

ஒரு குளிரூட்டப்பட்ட வண்டியிலிருந்து வெளியே வராமல் அமைச்சர் முல்லை வேந்தன், இப்பாவப்பட்ட மக்களை நோக்கி கைஅசைத்து, அலுங்காமல், நலுங்காமல் கை விரித்து ‘உதய சூரியன்’ காட்டினார். திமுக வினரால் கூட்டி வரப்பட்ட உதிரிகள் விசிலடித்தனர்.

பின்பு இன்னொரு சுமோவிலிருந்து கட்டு கட்டாக திமுக நிறங்களுடைய மப்ளர்கள் (கருப்பு-சிவப்பு) கூட்டத்தை நோக்கி விட்டெறியப் பட்டன. அத்தலித் மக்கள் ஒருவருடன் ஒருவர் முண்டிக்கொண்டு, அவசரம் அவசரமாக தங்களுக்கு ஒரு துணியாவது கிடைக்குமா என்று அல்லாடினர். ஊர் கவுடர் அவர்களை வெறுப்புடன் பார்த்தார்…

நான் சிறிது தள்ளி வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் ‘தொண்டர்களுடன்’ பேசினேன் – இதை, – மமதையுடன் நாய்களுக்கு விட்டெறியும் ரொட்டித் துண்டுகளைப் போல திமுகவினர் அம்மக்களை அசிங்கப் படுத்துவதை – சுட்டிக் காட்டி, இப்படி உங்கள் மக்களை பிச்சைக் காரர்கள் போல உதாசீனம் செய்கிறார்களே, ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “பெருசு, இந்த ஜனங்க இப்படித்தான், இவங்க தெளுங்கனுங்க, ஆடு ஒட்ரவனுங்க. தமிள் ஆதி திராவிடர் இல்லை – எங்க மக்களை இப்படி செஞ்சா பொறுத்துப்போமா என்ன ? “., என்று சொன்னார்கள். “இருக்கலாம், ஆனால் இவர்களும் தலித்துகள் தானே” என்றேன். அதற்கு அவர்களில் ஒருவர் வண்டி ஓட்டுனரிடம், “வண்டியை எட்றா!” என்றார்…

இச்சமயம் அந்த பாவப்பட்ட கூட்டத்திலிருந்து வந்த ஒரு வேகமான இளைஞர், இவர்களிடம் கை குலுக்கிப் பரவசமாகி “திருமா வாழ்க” என்றார். நான் வி.சி. ‘தொண்டர்களைப்’ பார்த்தேன். அவர்கள் திரும்பி வேறு எங்கோ பார்த்தனர்…

இவர்களா தலித் இயக்கத்தவர்கள்? இவர்களா அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போடுவது? இவர்களா சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்கப் போகிறார்கள்? பதர்கள்.- அவர்களின் வாய்ப்பேச்சு வீரத் தலைவன் எவ்வழி, இத்தொண்டர்கள் அவ்வழி.

நான் ஏழெட்டு வண்டிகள் தாண்டி முல்லை வேந்தனிடம் போய் இதைக் கேட்பதற்குள், வண்டிகள் தூசி தட்டிக்கொண்டு பறந்து விட்டன…

கலவரத்தோடு என்னை தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி வாகன ஓட்டுனர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

* * * * * * * *

சென்னையில், தேர்தல் நாளுக்கு முந்தைய நாளில், அதிகாலையில், ‘குப்பை வண்டிகளில்’ வந்து பணம் கொடுத்திருக்கிறார்கள், திமுகவினர். – அடையாறு பகுதியில். கேழ்வரகு, கீரை விதைகளைத் தெளிப்பார்களே, வயல்களில் – அது போல நம் பணத்தை, நம்மிடமிருந்து திருடிய பணத்தைத் ‘தெளித்து’ இருக்கிறார்கள்.

* * * * * * * *

நான் அதிமுகவினர் பணம் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை, இவர்களும் 50 ரூபாய், 100 ரூபாய் என்று கொடுத்திருக்கிறார்கள்; பாமகவினரும், விடுதலைச் ‘சிறுத்தைகளும்’ கூட (எங்கிருந்து இவர்களுக்குப் இவ்வளவு பணம் இச்செலவுகளுக்கு என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம் – திமுகவினரிடம் பெற்ற பிச்சையோ அல்லது வேறு ஏதாவது சட்ட விரோத செயல்களிலிருந்தோ இப்பணம் வந்திருக்கக் கூடும்).

ஆனால் அதிமுகவினர் கொடுக்கும், கொடுத்திருக்கும் அளவை விட பல மடங்கு, பல விதங்களில் திமுகவினர் (+ காங்கிரஸ்) கொடுத்திருக்கிறார்கள். அதுவும் விட்டெறியக் கூடிய அளவிற்கு, தெளிக்கக்கூடிய அளவு இவர்களிடம் பணம் தலை விரித்தாடுகிறது…

மகிழ்ச்சிகரமான விஷயம்: CPI, CPM, BJP போன்ற கட்சிகள் தமிழக தேர்தலில் இப்படி மக்களுக்குப் பணம் கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. வைகோவின் மதிமுக கூட இப்படிப்பட்ட கட்சி தான். தொண்டர்களின் பலத்தில், கொள்கைப் பிடிப்பில், ஈடுபாட்டில், கட்டுப்பாட்டில் எழுச்சி பெரும் கட்சிகள் இவை.

* * * * * * * *

மிகுந்த அனுபவமும், நேர்மையும் மிக்க ஒய்வு பெற்ற IAS அதிகாரி ஒருவருடன் அளவளாவியதில் தெரிந்தது – முன்னமே அனுமானித்ததுதான் – ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் இந்தத் தேர்தலில் பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது – ஆனால் நம் தமிழகத்தில் இருக்கும் ராட்சத அளவில் இவை இல்லை. கேரளா, குஜராத்,திரிபுரா, ஏன் பிஹார் போன்ற மாநிலங்களில் இது அறவே இல்லை.

நாம் எங்கே தவறு செய்தோம்?

**********

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகின்றனவோ தெரியவில்லை.

வரலாறு காணாத வாக்குப் பதிவு அளவுகள் என்னை யோசிக்க வைக்கின்றன. திமுக + காங்கிரஸ் உதிரிகள், தேர்தல் ஆணையத்தை மீறி மக்களுக்கு பண அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.

நம் மக்களும் ‘வாக்குக் கொடுத்தால், கை நீட்டிப் பணம் வாங்கி விட்டதால், தங்கள் சத்தியத்துக்கும், தருமத்துக்கும் கட்டுப் பட்டு’ உதிரிகளுக்கே வாக்குப் போடுவார்களோ என்னமோ?

மக்களுக்குத் தெரியுமா – தங்கள் வரிப் பணம் – அவர்கள் ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும், அவர்கள் அரசுக்குக் கொடுக்கும் மறைமுக வரி தான் அவர்களுக்கு, மிகவும் நீர்த்துப் போய் வந்து சேர்கிறது என்று?

*******

எனக்கு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை தான்… பார்க்கலாம்…

கனிமொழி அவர்களா சொன்னார் இதனை?

சகோதர-சகோதரி யுத்தங்கள், தாய்-மகள் கலகங்கள், படு பயங்கர பகிரங்க குடுமிப்பிடிச் சண்டைகள் ஆரம்பித்து விட்டனவா என்ன? அதுவும் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே…அப்படியானால் தமிழகத்துக்கு விமோசனம் உண்மையிலேயே வந்து கொண்டிருக்கிறதா??


அவளா சொன்னாள்? (ட ட டாங்…)
இருக்காது! (ட ட டாய்ங்…) 

அது நடக்கவும் கூடாது…
நம்ப முடியவில்லை, வில்லை   இல்லை, இல்லை….

ஆம், ஆம், ஆம்! அவர் சொல்லியிருக்கிறார் இதனை. நாம்தான் நம்முடைய தேர்தல் ஜுரத்தில், இதனைக் கவனிக்க மறந்துவிட்டோம்… உண்மையாலுமே!

வெறும் கனிமொழியாக இருந்த போதே கொள்ளையடிப்பில் உயர்கல்வி (‘நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம்’ அன்றோ?) பெற்றவருக்கு, தற்போது  கனிமொழி  எம்.பி   ஆக மாறி விட்டதனால், எம்பி எம்பி  வேறு பணப்பணி செய்ய வேண்டியிருக்கிறது, பாவம்! உதிரிக்கவிஞர் வான்கவிப்பேரரசர் வைரமுத்து சொல்லக்கூடியது போல,  வானமும் எட்டி உதைக்கும் தூரம்தான் அல்லவா? எவ்வளவு பணப் பிணிகள் (எ.கா: 2G)! எவ்வளவு பிணப் பணிகள் (எ.கா: சாதிக் பாட்சா)!!

இவற்றுக்கிடையில்,, கனிமொழி அவர்கள் – அறிவுரைகளை, அறம் சார்ந்த  அரிப்புகளை, ஊருக்கு உபதேசங்களை வேறு அளிக்க வேண்டும், இல்லையெனில் மெல்லத் தமிழம் இனிச் சாகுமன்றோ?

அவருக்கு இருக்கும் பலதரப் பட்ட வேலைகளில் – திருட்டு மணல் அள்ளுவது, அடுத்த நாட்டின் ஆழ்கடலில் அயோக்கியத்தனமாக மீன் பிடிப்பது, துறைமுகத்தை தடுத்தாட்கொள்வது, அண்ணாசாலை மாளிகைகளை, ஊட்டி தேயிலைத் தோட்டங்களை வாங்குவது, போதாக்குறைக்கு கிவிதை எழுதுவது போல கணக்கற்றவை, எல்லையில்லாதவை அவருடைய பணிகள் – பொன்மொழிகளை உதிர்க்கவும்  இவருக்கு நேரம் இருக்கிறது – இவற்றில் சில கீழே:

 • நம் சமூகத்தில் பெண்களை நாம் சரியாக நடத்த வேண்டும்
 • அரசியலில் நாம் கண்ணியமாக இருக்க வேண்டும்
 • நேர்மை மிக முக்கியம்
 • பதவிகளை விட கட்சிப் பணியே முக்கியம்
 • கட்சி என்ன சொல்கிறதோ, என் தலைவர் என்ன சொல்கிறாரோ அதை சிரமேற்கொண்டு நடக்க வேண்டும்

அவர் மேற்கண்டவை  போன்று சொல்லிக்கொண்டிருந்தால் அது  பரவாயில்லை – எப்படியும் அவர் சும்மா, ஒரு நகைச்சுவைக்காகத் தான் இப்படியெல்லாம் சொல்லியிருப்பார். நமக்குத் தெரியாதா, நம் கனிமொழி அம்மணியைப் பற்றி!

ஆனால், தம் குடும்பத்தினரைப் பற்றியே பகிரங்கமாக வைக்கும் இந்த விமரிசனங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன… தன் குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மீறி  தமிழக  மக்களின்  மேலுள்ள அவருடைய கரிசனம், நம்மை மனம் நெகிழச் செய்கிறது.

“சென்னை, பிப். 27- சென்னை மெரினா கடற்கரையில் உடல் பருமனைக் குறைக்க வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு நடைப் பயணத்தை கனிமொழி எம்.பி. நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.”

(ஞாயிறு, 27 பிப்ரவரி 2011 – விடுதலை நாளிதழ் – http://viduthalai.in/new/home/tamilnadu/34-tamilnadu-news/4367-2011-02-27-11-22-29.html)

இவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும் நாளும் எந்நாளோ??

எனக்கு என்ன குறை என்றால், சுற்றி வளைத்து கூட்டத்தில் பேசுவதற்கு பதிலாக நேராகவே நமது கனிமொழியாம்பா, தன் உடல் பருமனான, பேராசை வீங்கின உறவினர்களிடம் சொல்லியிருக்கலாம்…

கொழுத்தது போதும், போங்கு அடிக்கும் கோமாளிக் கொலைஞர்களே” என்று…

பின் குறிப்பு:

விஜயகாந்த் ‘திமுகவிற்கு ஆப்பு அடிக்கவேண்டும்’ என்று சொன்னதைத் திரித்து ‘எல்லோரும் ஹாப் (‘half’) அடிக்கவேண்டும்’ என்று சன் டிவி சொன்னதை விட,  இது சரியானது தானே?

தேர்தல் நாள் ‘சுற்றுப்பயணம்’ – 1 படித்தீர்கள் என நினைக்கிறேன்…

… கருணாநிதியின் ‘பெட்டைப் புலம்பல்கள்’ ஒரு தொடர்வதை

இந்த மனிதர் ஏப்ரல் எட்டாம் தேதி கடலூர் வந்திருக்கிறார். அங்கு வசதியாக, ராஜோபசாரத்துடன்,  குளிரூட்டப்பட்ட, ஆடம்பரமான  அவர் கட்சி அலுவலகத்தில் தங்கியிருக்கிறார் – நிறைய சதியாலோசனைகளும் செய்திருக்கக் கூடும்.

ஒருக்கால் அவரது பழைய படத்தின் புத்தம் புதிய நகலாக வரவிருக்கும், ‘ஐயோ! அடிக்கறாங்க, அடிக்கறாங்க…” வின் இரண்டாம் பகுதிக்கான கதை-வசனம் எழுதிக்கொண்டிருந்தாலும் இருக்கலாம் – முன்னாலேயே வசனம் கொடுத்தால்தானே, சன் டிவியின் கிராபிக்ஸ் ஆட்கள் மிச்ச விஷயங்களை தயாராக வைத்திருக்க முடியும்?

இல்லையெனில் உடனிறப்புக்காகக் கடிதமென்று ஒரு ஒப்பாரியை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.  ஏதாவது மனம் போன போக்கில், கிவிதை கூட எழுதியிருக்கலாம்.

என்ன இழவு வேண்டுமானாலும் செய்திருப்பார், இந்த மனிதர்! ஏதோ மக்கள் பணி செய்வோம் எனக் கிளம்பி, நம் பைகளை ஜேப்படி செய்ய புதிதாக ஏதாவது ஏற்பாடு செய்யாமல் இருந்திருந்தால் சரி…

ஆனால், சும்மா இருப்பதில் உள்ள சுகத்தை அறியாத நம் கருணாநிதி அவர்கள் தன் கற்பனைச்சக்தியையும், கழிவிரக்கத்தையும் (நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் இயற்கையே… நான் பஞ்சமன் என்பதால் தானே, இன்ன பிற)  முழுமையாக உபயோகித்து ,ஏதோ அவர் அரசுக்குச் சொந்தமான ‘பயணியர் மாளிகையில்’ (Traveller’s Bungalow) தங்க விருப்பப் பட்டதாகவும், வருந்தத் தக்க வகையில் அவருக்கு ‘தேர்தல் கமிஷன்’ அதை மறுத்துவிட்டதாகவும், பொய் சொல்லி பிலாக்கணம் வைத்து, தொண்டை கரகரத்து, குரல் கம்மி ஒரே விம்மல்கள், விக்கல்கள்… “தேர்தல் கமிஷனைக் குறை சொல்வதாக இதைக் கருதக் கூடாது, ஆனால் இது  நியாயம்தானா? நான் தான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்த வயதில் எனக்கு இப்படியா? தமிழகத்துக்காக நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன்… ”  இன்னபிற…

“நேற்று வரை இந்தக் காவல்துறையினர் என்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர் – ஆனால் இப்போது தேர்தல் ஆணையம் சொல்லுவதால், அல்லது வேறு எவரோ ஆணையிடுவதால் ஆடுகின்றனர்!” என்பது போன்ற விம்மல்கள்… (இவர் போல அனைவரையும் ‘கைநீட்டிப்’ பணம் வாங்குபவர்கள் என நினைத்துவிட்டார் போலும்! மேலும் இவர் என்ன தன் சொந்தப்பணத்தையா கொடுத்தார்?)

ஏனடா இந்த மூக்குச்சளி  ஒழுகும் இந்த வீறிட்ட அழுகையைப் கேட்க வந்தோம் என்றாகி விட்டது…

ஆக, கடலூர் பொதுக்கூட்டத்தில் ஒரே அழுகை… ஒரே கண்ணீர் வெள்ளம், ஒரே நாராசம்… கேட்கச் சகிக்கவில்லை… யாராவது இந்த ஆளை அரவணைத்து ஆறுதல் சொன்னால் தேவலை…

தேர்தல் கமிஷனை அடிக்கிறதுபோல் இருக்க வேண்டும் – ஆனால் அடிக்கக் கூடாது. அழுவது போல இருக்க வேண்டும், ஆனால் கண்ணீர் விட்டு அழக் கூடாது. பயங்கரமாகப் புலம்ப வேண்டும் – ஆனால் வீரமாகவும் இருக்க வேண்டும்… என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது இது…

இந்த அழகில், “இந்த வயதில் எனக்கு இப்படியா…” புலம்பல்கள் வேறு. ஏன், இவர் இந்த கட்சி, கிட்சி அனைத்தையும் விட்டுவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இவருக்கு என்ன பஞ்சம்? என்ன, அமெரிக்காவின் தலைவராகவில்லை, ஜனாதிபதியாகவில்லை, அவ்வளவுதானே…  அதற்கென்ன, அமெரிக்காவையே வாங்கக்கூடிய அளவு உங்களிடம் ‘துட்டு’ உள்ளதே… வரும் காலங்களில் உங்கள் கொள்ளுப் பேரன்களுக்கும் எள்ளுப்பேத்திகளுக்கும் – ஒபாமா, மாசேதுங், ஹில்லரி என்று பெயர் வைத்து அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் ‘மக்களின்’ பேராதரவு பெற்று  திமுக பல்பொடியை விற்க முடியாதா என்ன?

நிற்க, ஐயப்பன் (கடலூரின் இப்போதைய  திமுக MLA) , திமுக டிக்கெட் கிடைக்கவில்லை என்றவுடன் அதிமுகவிற்கு ஓடிப்போய்விட்டார் என்பதால், இது பற்றி பிலாக்கணம் வேறு… “இவர் செய்தது நியாயமா? போன தடவை சீட் கொடுத்தோமே, இந்த தடவையும் வேண்டும் என்று கேட்பது சரியா?’

ஏன், இவர் இதே கதையை இசுடாலினுக்கோ அல்லது தனக்கோ சொல்லிக்கொள்ள வேண்டியதுதானே?

யோசித்தால், கண்மூடித்தனமான, சிந்திக்க மறுக்கும், நெடுநாள் தொண்டர்கள் தான் திமுகவின் அடிப்படைத்தளம் என்று தோன்றுகிறது.

கடலூர் நண்பர் ஒருவர் (இவர் MLA ஐயப்பன் அனுதாபி – நெடுநாள் திமுக உறுப்பினர்) ஒருவர் வெறுத்துப் போய் தேர்தல் நாளன்று  இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திமுகவின் நெடுநாள் ‘பணம் பண்ணாத’ உறுப்பினர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள்.

கடலூரில் புகழேந்தி கரையேறுவது, கொஞ்சம் கஷ்டம்  தான் எனத் தோன்றுகிறது. (பணம் பலவிதமாகக் கொடுக்கப் பட்டாலும்)

* * * * * * *
முந்தைய இடுகையில் சிதம்பரம் தொகுதியைப்பற்றியும், வாண்டையார்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். இத்தொகுதி பற்றி ‘இன்பா’ என்பவர் இட்லிவடை தளத்தில் எழுதியுள்ளது இங்கே:

சிதம்பரம் – தொகுதி ரவுண்ட் அப் – இன்பா

(என்னுடைய சில நண்பர்கள் – நான் வாண்டையார்களைப் பற்றி எழுதியது நம்பும்படியாக இல்லை என்றார்கள் – அவர்கள் அனைவரும் இந்த இடுகையைப் படிக்கவேண்டும்…)

* * * * * * *

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தேர்தல் கமிஷன் மிகவும் ஒழுங்காகவும் முறையாகவும் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது – உதிரிகளின் அடாவடியையும், சில அதிகாரிகளின் நம்பவேமுடியாத ‘கருணாநிதிக்கு கூழைகும்பிடுகளையும்’ எதிர்த்து.

நான் தேர்தல் நாளன்று, கடலூர், சிதம்பரம், திண்டிவனம் சுற்றுவட்டாரங்களில் ‘சுற்றும்’ வாய்ப்புக் கிடைத்தது – என்னுடைய சில எண்ணங்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

நமது போலீஸ் கூட இப்படி ‘தலை நிமிர்ந்து’ வேலை செய்ய முடியுமா என்று தோன்றியது – இளம் ‘தமிழ்நாடு விசேஷ காவல்படையினர்’ – TSP – சிலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததினால். 15 பட்டாலியன்களில் (சுமார் 1000 காவலர்கள் ஒவ்வொன்றிலும்) 3 இளம்பெண்கள் மட்டுமே இருக்கும் அணிகள் – இவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆண்கள்-பெண்கள் கலந்த குழுக்கள் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனவாம் . மாலையில் தில்லை நடராஜன் கோவிலில் தைரியமான, இளைஞர்களுக்கே உரிய பளிச்சிடும் நேர்மையும், அநீதி கண்டு பொங்குதலையும்  – பண்புகளாகக் கொண்டிருந்த இளம் பெண் போலீசார்களைக் (தொப்பை இல்லவே இல்லை, கனவு கலந்த கண்களில் ஒரு குழந்தைத்தனம்) கண்டு. உண்மையிலேயே பெருமையாக இருந்தது. நம் தமிழகத்திற்கு இன்னமும் விடிவு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்மையாலுமே இருக்கின்றன என்ற நினைப்பே உவகை தருகிறது.

சிதம்பரத்தில் தோழர் பாலகிருஷ்ணன் தான் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன். காரணங்கள் சிலவே: 1. வாண்டையார்களின் அயோக்கியத்தனமான பொறுக்கி அரசியல்; 2. பாமக-விசி-திமுக அடிமட்ட உறுப்பினர்களிடையே நிலவும் வெறுப்புகள்; 3. CPI மற்றும் கூட்டணி கட்சிகளின் மகத்தான உழைப்பு; 4. திமுக ‘உழைத்துச்’ சம்பாதித்த மக்கள் வெறுப்பு.

இத்தொகுதிக்குட்பட்ட கிள்ளை (சிதம்பரத்திலிருந்து சுமார் 15 கிமீ) கிராமத்தில் சிறிது நேரம் இருந்தேன். மீனவர்களும், இருளர்களும், தலித்களும், கொஞ்சம் வன்னியர்களும் வசிக்கும் இடமிது. இங்குள்ள மக்களிடமிருந்த திமுக பற்றிய அடிப்படை அறிவு (ஆகவே வெறுப்பு) – வெறும் பணம் மட்டும் லஞ்சம் கொடுத்து அவர்களை வோட்டுப் போட வைக்க முடியாது என எண்ண வைத்தது. வெறும் ரேஷன் கார்டில் பெயர்மாற்றம் செய்ய சிதம்பரம் வரை  (அன்று மீன் பிடித்தால் தான், அவர்கள் வீட்டில் அரிசி பொங்கும் என்றிருக்கும்போது) ஓடி 5000 ரூபாய்  லஞ்சம் கொடுக்க வேண்டுமென்றால் – இவர்கள் அடக்கிக்கொண்டிருக்கும் கோபம், மிக அதிகம். இவர்களில் சிலர் திமுக குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்… கேட்கிறார்கள் “இவனுங்க என்ன அய்யா இவ்வளவு பணம் வச்சுக்கிட்டு பண்ணுவாங்க? ஏதோ ரெண்டுமூணு தலமொரைக்குன்னா  பரவால்லை. ஆனா இவனுங்க அயோக்கியனுங்க – எங்க ஒளிச்சு வெச்சுருப்பாங்க? ஏதோ தீவெல்லாம் வாங்கியிருக்காங்களாம்…”

திருமாவளவனும் ராமதாசும் மேடைகளில் கை கோர்க்கலாம். ஆனால் பல்லாண்டுகளாக இவர்கள் கயமையுடன் ‘உசுப்பு’ ஏற்றி தலித்களையும் வன்னியர்களையும் ஒருவருக்கொருவர் மோத வைத்து, தொடரும் கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் அஸ்திவாரம் போட்டது, அதில் குளிர் காய்ந்தது, காய்வது – அடிமட்டத் தொண்டர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது.

நான் திருமாவளவனின் கட்சிக்காரர்களை, இது வரை விசிலடிச்சான் குஞ்சுகளாக நினைத்து வந்தது தவறு (அதே போன்று பாமக தொண்டர்களையும்தான்) – மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன்….   இது எனக்கு மிகவும் நம்பிக்கையைத் தந்த விஷயம்.

எது என்னவோ, சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில், வாண்டையார்களின் பொறுக்கித்தனம், இதோடு, அடியோடு ஒழிந்தால் சரி…

கடலூரில் கருணாநிதி (வழக்கம் போல) அழுதகதை அடுத்த பதிவில்…

சில நண்பர்கள், மிகுந்த வருத்தத்துடன் என்னிடம் கேட்கிறார்கள், ஏன் இந்த திமுக மட்டும் தான் பாவம் செய்ததா? மற்ற கட்சிகளெல்லாம் ‘குழந்தை மனதுடன்’ இருக்கின்றனவா? அவைகளெல்லாம் ரொம்ப நேர்மையா?

என் பதில்  – என் முன்பதிவுகளைப் படிக்கவும் (முடிந்தால் – மொத்தமே 17-18 பதிவுகள் தான் இருக்கின்றன, இச்சமயம்… ). பின்பு – Franz Kafka வின் சிறுகதையான ‘இங்கிருந்து வெளியே’ வைப் படிக்கவும்.

என்னைப் பொறுத்தவரை, இந்த கேடுகெட்ட கும்பலிடமிருந்து, தமிழை, தமிழகத்தை (ஆட்சியை மட்டும் அல்ல) மீட்க வேண்டியது என்பது மிக, மிக முக்கியமான விஷயம்…

இருப்பினும், நான் திமுக மீது மிகவும் கடுமையாக இருக்கிறேன் என்பதும் சரியே… சில சமயம் சிறிது ரசக் குறைவாகக் கூட இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன். (ஆனால் எல்லாவற்றுக்கும் கருணாநிதிதான் காரணம், அன்றோ?)

உண்மைதான்.

திமுக 5 ஆண்டுகள் தற்சமயம் ஆண்டிருக்கிறது. மத்திய மந்திரி சபையிலும் குறைந்த பட்சம் 10 வருடமாகத் தொடர்ந்து இருக்கிறார்கள். மிக நிறைய முடிவுகள் எடுத்திருக்கிறார்கள். இம்முடிவுகளில், இத்தனை வருடங்களில் – ஒன்றிரண்டு நற்செயல்கள் கூட இவர்கள் செய்ய வில்லையா என்றால், மிகவும் யோசித்துத் தான் சொல்கிறேன் – இவர்கள் ஒரு நல்ல விஷயம் கூடச் செய்ய வில்லை.

இதுதான் உண்மையெனில், நீங்கள், இவ்வளவுநாள் திமுகவினர் முடியைத் தான் பிடுங்கிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டால் – மீண்டும் யோசித்து, மிக ‘மதிப்புக்குரிய மாண்புமிகு கலைஞர் டாக்டர் ராஜராஜசோழன் கருணாநிதி’ அவர்களின் தலையைப் பார்த்துச் சொல்கிறேன் – இருக்கலாம்

அக்கால நெடுமுடிக்கிள்ளியும், இக்கால முடிசூடாச் சோழனும்...

நான் பண ஊழல் மட்டுமே கருத்தில் கொண்டு இந்த கும்பலின் ஆட்சியை வெறுக்கவில்லை (இந்த மகமாகோ ஊழல்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே இவர்கள் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள் என்றாலும் கூட) – நேரடியாகக் கண்ணுக்குப் புலப்படாத, நம் பண்பாட்டையே வன்புணர்ச்சி செய்யும், காயடிக்கும், மிகப்பல காரணங்கள் உள்ளன…

நாம் ‘திமுகவை வெறுத்து ஒதுக்குவதற்கான’ நம்முடைய காரணங்களை, பல காரணிகளாகப் பிரித்து, கொஞ்சம் அலசி, ஒரு அவசரப்-பார்வை பார்க்கலாம்.

 • அடிப்படைக் கட்டுமானங்கள்
 • வாழ்வாதாரங்கள்
 • குழந்தைகள், பெண்கள், ஆண்கள் (சுந்தர ராமசாமி நாவல் அல்ல)
 • திட்டமிடல்
 • வருவாய்துறை – வரவு-செலவு மேலாண்மை
 • தொழில் வளர்ச்சி
 • விவசாயம்
 • உணவு
 • உடை
 • உறையுள்
 • சுற்றுச்சூழல்
 • நிர்வாகம்
 • சட்டம், நீதி
 • பத்திரிக்கைகள்
 • உட்கட்சி ஜனநாயகம்
 • மற்ற கட்சிகளுடன் உறவு
 • மற்ற மாநிலங்களுடன் உறவு
 • மத்திய அரசுடன் உறவு
 • தமிழ் பண்பாடு
 • பொழுதுபோக்கு, கேளிக்கை, கடத்தல்கள் இன்னபிற

மேற்கண்டவற்றை, சிறிது விவரமாக, பின் வரும் இடுகைகளில் பார்க்கலாம்…

சவுக்கு தளத்தில் – மிக நல்ல பதிவு. நம் தமிழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலைகள் உள்ள அனைவரும் படிக்க வேண்டியது:

கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ?

அதில் நான் இட்டிருந்த பின்னூட்டம் இங்கு விரிவாக்கப்பட்டு பிரசுரிக்கப் படுகிறது.

தயாநிதி + கலாநிதிகளின் லீலைகளைப் பற்றி எழுதுவதென்றால் ஹாரி பாட்டர் புதினங்களைப் போல அல்லது நம்முடைய தந்தி ‘சிந்துபாத்’ போல எழுதிக்கொண்டே போகலாம். (நேரமோ, சக்தியோ தான் இல்லை!)

இவர்கள், தங்களுடைய திறமைகளை, ‘mercenary’ போன்று உபயோகப்படுத்தி சுரண்டோ சுரண்டு என்று (நம் பணத்தை மட்டும் அல்ல, நம் வாழ்வாதாரங்களையும், ஏன், நம் பண்பாட்டையுமே) சூறையாடுகின்றனர் – பணம் கூட, நமக்கு இன்று வரும், நாளை போகும். ஊழல்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப் படலாம். ஆனால், நம் மானுடம், பண்பாடு அப்படியல்ல. காயடிக்கப் பட்டால், அவ்வளவுதான்…

நமது ஓரிரு தலைமுறைகளுக்கு சன் குழுமம் தான் கலாச்சாரத்தின் ஊற்றுக்கண் என்றால், பிற்காலத்தில், தமிழாவது, கிமிழாவது…

“அல்லாம் தமில் பேசிக்னு இர்க்கின்கலா, வோட் போட் போறீங்லா? தமில் ரோம்ப் பிட்கிமா? ஓங்க்ளுக்கு என்ன பாட் போட்னும்னு சொல்ங்க, என்கு புட்ச சூப்ப்பர் ஸ்டார் ரஜினி என்ட்ரன் பாட் போடலாமா? சும்மா நம்ளை மாத்ரி சென்தமில் பெச்ங்க, தமில் நம் செம்மொளி, அது வால்க!” என்ற ‘தமிழ் எங்கள் உயிர்’ மூச்சாதான்! அயோக்கியர்கள்!!

நமது ரசனைக்குறைவிற்கும், முட்டாள்தனங்களுக்கும், (ஊழல்களைப் பொறுத்தவரை) அசாத்திய பொறுமைக்கும் திமுக காரணமாக இருந்தால், இவற்றைப் புதிய உச்சத்திற்கு எழுப்பிசென்றவர்கள், செல்பவர்கள். இந்த கேடி சகோதரர்கள்.

ஆங்கிலத்தில் ‘Addressing the Minimum Common Denominator (MCD)’ என்ற ஒரு பதம் உண்டு – ஊடகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில். இதன்படி, சன் குழுமக் குறுமதியாளர்கள், குறைந்த பட்ச மானுட அறிவுக்கே, பின்புலத்துக்கே தீனி போட்டுப்போட்டு, கழிசடைப் படங்களையும், குத்துக் கூத்துக்களையும், நடிகை ரகசியங்களையும், அழுவாச்சித் தொடர்களையும் (ஐயோ, அடிக்காறாங்க, அடிக்காறாங்க!) தொடர்ந்து ஒட்டி ஒட்டி, இந்திரன் மூத்திரன் என்று விடலைப்படங்களை விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக எடுத்து எடுத்து தமிழர் மூளைகளே இயங்காமல் ஆக்கி விட்டார்கள்.

என்ன, இன்னொரு பாவப்பட்ட தேசமாகிய இத்தாலியின் பெர்லுஸ்கோனி போல இன்னமும் ‘அடல்ட்’ சானல்களும், நேரிடை வன்புணர்ச்சி ஒளிபரப்புகளும் ஆரம்பிக்கவில்லை – மிக்க நன்றி மாறன்களே! (அங்கே மக்களுக்கு நல்லாட்சி தேவையா அல்லது பெண்ணை போகப்பொருளாக மட்டும் காண்பிக்கும் தொலைக்காட்சி தேவையா என்று கேட்டால், “எங்களுக்கு ஆட்சியும் வேண்டாம், கீட்சியும் வேண்டாம், பொழுதொரு மேனிக்கும் குடித்துவிட்டு ஜாலியாக பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்போம்” என்று சொல்லவைக்கும்படி அங்கு MCD-களைத் தயார் பண்ணியிருக்கிறார்கள்.)

ஆனால், இப்படியே போனால், சன் குழுமம் இப்படியும் செய்யும் – ஏனெனில், அவர்களுக்கு கேடுகெட்ட காமத்தையும், வாந்தி எடுக்க வைக்கும் நகைச்சுவையையும் காண்பிப்பதற்கு, கருணாநிதியின் மாபெரும் குடும்பத்திலேயே, வேண்டுமளவு நடிகர்களும் கதைகளும் உண்டே!

சவுக்கு பதிவில் (‘பாண்டியன்’ என்ற பின்னூட்டமிட்டவரும் கூட) விலாவாரியாக எழுதியிருக்கின்றனர். அதில் விட்டுப்போன இரு விஷயங்களைப் பற்றி இங்கு நான் எழுதுகிறேன்.

ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற ‘அன்பளிப்பு:’

நெடுநாள்முன் நான் தொலைத்தொடர்புத் துறையுடன் தொடர்புள்ளவனாக இருந்தேன். அப்போது தயாநிதி மத்திய அமைச்சர். ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய நாடெங்கும், குறுக்கிலும் நெடுக்கிலும் ஒளி இழை வடங்களை சாலைகளில், நிலத்தின் கீழ் பதித்துக் கொண்டிருந்தது. அதற்கு, ரிலையன்சிற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவையாக இருந்தது.

இச்சமயம், நம் உதிரி, ரிலையன்சுடன் ஒரு ஊழல் (மகத்தானது! தகத்தகாயது!!) ‘ஒப்பந்தம்’ போட்டார் – அதன் படி, தமிழகத்தில் ரிலையன்ஸ் ஒளி இழை வடங்களைப் போடும்போது (கிட்டத்தட்ட 20,000 கிலோமீட்டர் என நினைக்கிறேன்), SCV-க்காக ஒரு ஜோடி வடக் கற்றைகளை ‘இலவசமாகப்’ போட்டுத் தரவேண்டும். எப்படி இருக்கு கதை. (இதற்கான ‘செலவு’ அச்சமயம், குறைந்த பட்சம் 3௦௦ கோடி ரூபாய் இருந்திருக்கும்! எல்லாம் நம் பணம்!)

இதன்மூலம், SCV-இன் வலிமையும், வீச்சும், அதிவிரைவு இணைய / தொலைபேசி இணைப்புகளும் பலமடங்கு அதிகரிக்கும். இதனை வைத்து இந்த கேடிகள் இன்னும் பல மடங்கு தங்கள் ‘தமிழ்’ வியாபாரத்தை நடத்த முடியும்.

நண்பர்களே, யோசியுங்கள் – நீங்கள் தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சாலையிலும், அவற்றின் கீழ், கேடி சகோதரர்களின் ஊழலாறு ஓடிக்கொண்டிருக்கிறது! தலைக்குமேல் தாறுமாறாக ஊழல் டிவி வடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறன – சீர்கேடுகளை, ஆபாசங்களைச் சுமந்துகொண்டு! இவற்றையெல்லாம் மீறி கண்ணுக்குத் தெரியாமல் ஜேப்படி செய்யும், செயற்கைக்கோள் தொடர்புகள் வேறு…

ரதன் டாடாவிடம் நேரடியாக துட்டு கேட்ட காதை:

தயாநிதியார் அவர்கள் மத்திய மந்திரியாக இருந்த காலம்; சில ஒப்புதல்களுக்காக (TATA Sky) ரதன் டாடா நம் ஆளைப் பார்க்க வேண்டிஇருந்தது. அந்த சந்திப்புக்குப்பின் டாட்டா அவர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். பிரதம மந்திரியுடனும் அது பற்றிப் பேசினார். அவர் ஆட்கள் கயமை நிதியுடனும் பேசினர்.

விஷயம் இதுதான்:

டாடா மிகவும் வருத்தப்பட்ட விஷயம் என்னவென்றால் – மற்ற அமைச்சர்கள், கையூட்டு வேண்டுமென்றால், சிறிது சங்கடத்துடன், சிறிது வெட்கத்துடன் – “என்னிடம் கொடுக்க வேண்டாம், என்னுடைய உதவியாளர்களிடமோ அல்லது வீட்டிலோ, காதும்-காதும் வைத்ததுபோல் கொடுத்துவிடுங்கள், தயவுசெய்து” என்பார்கள்.

டாடாவுக்கும் தெரியும் – இந்தக் கையூட்டுப் பணத்தில் மிகப் பெரும் பகுதி, அந்த அமைச்சரின் கட்சி நிதிக்குப் போய் விடும் என்பதும், நம் பாணி கட்சி வளர்ப்பிலும், ‘ஜனநாயகத் தேர்தல்’ அமைப்பிலும்,இம்மாதிரி பணம் புரட்ட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதும்… டாடாவுடைய புரிந்துகொள்ளலை நாம் மதிக்கலாம்.

ஆனால், நம் தயாநிதி மாறன் – இம்மாதிரி வெட்கமோ, கூச்சமோ படாமல் நேரடியாக எவ்வளவு பணம் தருவீர்கள் – “ஹொவ் மச் கேன் யு கிவ்” என்று கேட்டது மட்டுமல்லாமல், “என் அலுவலகத்திலேயே தாருங்கள் ‘ என்று சொல்லி, ‘இப்போதே தாருங்கள்” என்று முரண்டு பிடித்தார். மேலும், “எனக்கு உங்கள் தொழிலில் எவ்வளவு பங்கு தருவீர்கள்? நீங்கள் குறைந்த பட்சம் 30% கொடுத்தால்தான், நான் உங்கள் கோப்பைப் பார்ப்பேன்!” என்ற பேரம் வேறு.

வெறுத்துப்போன டாட்டா நீயும் வேண்டாம், உன் அனுமதியும் வேண்டாமென வெளியே வந்தார். (அவருக்குத் தெரியாது, இந்த நிதிகளே தீவட்டிக் கொள்ளைக்கார அயோக்கிய கும்பல் என்பது)

பின்னாளில் டாடா நாசூக்காக இந்த சம்பவத்தை: “தயாநிதி மாறனுடன் எனக்கு ‘சரி வரவில்லை’  என்று குறிப்பிட்டார். (Tata said he did not share good “chemistry” with Maran)

இதன்பற்றிய தகவல் வெளியே கசிந்து பின்பு தயாநிதியால், கருணாநிதியால் அமுக்கப் பட்டது. இந்த நிகழ்வால் தான், டாட்டா, தயாநிதி எக்காரணம் கொண்டும் மறுபடியும் ‘தொலைத்தொடர்புத் துறை’ அமைச்சராக வரக் கூடாது என்ற முயற்சி எடுத்தார். (நீரா ராடியா அம்மாளும் உதவி புரிந்தார்; இதனால் தான், கனிமொழி உதவியுடன். ராசா ‘கைய வைக்க’ முடிந்தது…)

*** டாடா நிறுவன TAS (டாடா அட்மினிஸ்ட்ரேடேடிவ் சர்வீஸ் – IAS போன்றதொரு முக்கிய அமைப்பு , டாட்டா குழும உயர்நிலை மேலாண்மைக்காக ஏற்படுத்தப்பட்டது) அதிகாரி, ஒருவர் சொன்ன தமிழகத்திற்கே வெட்கக்கேடான நிகழ்ச்சிகள் இவை ***

Scylla, Charybdis என்று கிரேக்க இலக்கியத்தில் இரண்டு படுபயங்கரமான பூதங்கள் பேசப்படுகின்றன. இதில் ஒன்று பலதலை கொண்டது, இன்னொன்று ஒரு கடறாழ்சுழி – ஒரு கடற்சந்தியின் இரண்டு பக்கமும் இவை இருக்கும், அப்பக்கம் போகும் எதனையும் விட்டு வைக்காது. ஆனால் அவ்வழியாகப் போகாமலும் மக்களுக்கு இருக்க முடியாது. இந்த கேடி சகோதரர்களை ஆக்டோபஸ் என்று சொல்வதைவிட Scylla & Charybdis என்று சொல்லலாமோ என்னவோ!

=-=-=-=-=

மீண்டும் உங்களைச் சிந்திக்க நான் வேண்டுவது என்னவென்றால்… இத்தேர்தலில் நாம் உதிர்க்கப்போவது எதனை?

(மன்னிக்கவும், இது உதிரிகளும், தொண்டரடிப்பொடிகளும் பங்குபெறும் பட்டிமன்றம் அல்ல)

சும்மா ஆடாத  கனிமொழி அம்மையார் அவர்கள் குடுமி ஆடினால் என்ன அர்த்தம்? அவருக்கு என்னமோ ஆதாயம் இருக்கிறது என்று தான்! அதுவும் மிகப் பெரிய பண ஆதாயம் இருக்க வேண்டும்.

‘Moneyமொழி, நீ என்னை மறந்துவிடு’ என்று மீனவ நண்பன் கதறினாலும்,  கேட்பாரா அவர்? பெரிய தமிழ்வாணி அல்லவோ இவர்! மீனவர்களுக்காகக் குரல் கொடுக்கும் இவரை கயமையோடு சந்தேகிக்கலாமா? மணல்வாரி அம்மனை மீனம்மன் என்று கூறல் தகுமோ?

அச்சச்சோ! என்ன வெற்றிக் களிப்புப் பாருங்கள்! (அடுத்தக் கால்ஷீட் எங்கே?)

நம் ஊடகங்கள் கனிமொழியின் மீனவநண்பத்தனத்திற்கு, திடீர் போராட்டத்துக்கு, கைதுக்கு என்ன காரணம் என ஆய் ஆய் என்று ஆராய்ந்து கீழ்கண்டவற்றை பலமாதிரி எழுதின.

 1. அவருக்கு, மீனவர்கள், தமிழ்நாடு, தமிழம், நமது கலாச்சாரம் என்பதிலெல்லாம் ஆர்வம் உண்டு. அவர் தம்மை, தமிழுக்காக, தமிழர்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்.
 2. ராசா கைய வெச்சு ராங்கா போன ஸ்பெக்ட்ரம் ஊழலினால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி கட்டிக்கொண்டிருக்கிறார். சிபிஐ – வலை நெருங்க நெருங்க அவர்களுக்கு மக்களை, மக்கள் கவனத்தை, அதிலிருந்து திருப்பி விட வேண்டியிருக்கிறது.
 3. தமிழ்நாட்டில் இது தேர்தல் காலம். ஆகவே இந்த ஒரு நாள் போராட்டம், இழவு எல்லாம்! அவர்களுக்கு உண்மையாகவே இப்பிரச்சினைகளிலேல்லாம் ஆர்வம் இல்லை.
 4. சில சமயம் முன்பு தமிழக மீனவர்கள் இருவரை சிறிலங்கா கடற்படையினர் கொன்ற பொது, திமுக ஒன்றும் சொல்லவில்லை. அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தமாகத்தான் கனிமொழி இப்போது போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்.

இதில், இந்த புதிரான சூழலில், பிலிம் விஜய் (புலவர் உதிரிப்பெருமகனார் பாவி ஜய் அல்ல!) கூட உளறித் தள்ளி, ராஜபக்ஷவிடம் “டேய்! நான் அடிச்சா நீ தாங்கமாட்டே!!” – என்று தமிழகத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தோள் புடைத்து, தினவு எடுத்து, மயிர்க்கூச்செரிக்கும் கீச்சுக் குரலில் படுபயங்கர வீர சவால் விட முடிகிறது. என்ன இழவெடுத்த உதிரிகள் இவர்கள்!  இட்லிவடை  வலைப்பூவில் ‘முழுமையான அரைகுறை’ என்ற தலைப்பில் இவர் பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது.

நான் மீனவசமுதாயத்தைச் சார்ந்தவன் அல்ல. சென்னையில் வசித்த காலத்தில், நொச்சிக்குப்பத்திலும், டொம்மிங்குப்பத்திலும் சில நண்பர்கள் இருந்தனர். அவர்களுடைய கட்டுமரங்களில் ‘நிலா அது வானத்து மேலே’ (ஆனால் ‘பலானது’ ஓடத்தில் இல்லாமல்) பயணங்கள் சென்றிருக்கிறேன். எனக்கு மீன் பிடி தொழில் ஓரளவுக்குத்தான் அறிமுகம்.

ஆனால், நான்  கடந்த சில மாதங்களில், தமிழகக் கடற்கரையோரம் பயணம் செய்து,  கரையோர மீனவர்களுடன் அளவளாவும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன – அருமையான தருணங்கள் அவை.. (உங்களில் எவ்வளவு பேர் வண்ணநிலவனின் ‘கடல் புரத்தில்  ….’ என்கிற அழகான நாவலைப் படித்திருப்பீர்களோ தெரியாது. இதுவரைப் படிக்காவிட்டால், அவசியம் படிக்க வேண்டும் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும்).

அவர்கள் ‘வெள்ளந்தி’ மனப்பான்மையும், படும் கஷ்டங்களும், திமுக ஆட்சியின் கயமையும், இலங்கைத் தமிழ்/சிங்கள மீனவர்களை (நம் தமிழகம்) ஏமாற்றுதல்களும், நம் தமிழகத்தைச் சார்ந்த சிறு மீனவர்களை ஒடுக்கல்களும், விஜய் போன்ற அறிவுத்திறன் குறைந்த அரைகுறைகளின் ஆரவாரங்களும், கனிமொழி, திருமாவளவன் போன்றோரின் சுயலாபம் கருதிய கயமை வேடங்களும்… இன்னபிற தொடரத் தொடர வேதனை மிகும் விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.

நிற்க , மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன் நான், அம்மையாரின் ஒரே கல்லில் மறையக் கூடிய மாபணப்பானை பற்றி…

நண்பர்களே – உங்களுக்குத் தெரியும் – கனிமொழிதான் கருணாநிதியின் நேரடியான உண்மை வாரிசு என்பது! ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கயமைத் தகப்பனார் அவர்களால், பாவம்,  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தான் அடிக்க முடியும். ஆனால், ஒரே கல்லில் ஒரு மா-மாமரத்தையே அடித்து வீழ்த்தும் தன்மையும், வன்மையும், கயமையும் படைத்தவர் கனிமொழி அவர்கள்.

கனிமொழி மீனவநண்பரான காரணம் தெரியவேண்டுமானால், நாம் சிறிது மீன், கடல், ரெட்டைமடி வலை (இன்னும் seine, purse seine, wade netting, trawler நெட் போன்ற பலவகையான, தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் பிடிமுறைகள்) , ட்ராவ்லர்  படகு, தமிழக மீனவர், ஈழ மீனவர்,  சிறிலங்கா கடற்படை, மனிதர், பேராசை, ஊழல் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகளாவிய உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகிவரும் இக்காலத்தில்,  மீன்கள் (கடலிலும், உள்நாட்டு நீர்நிலைகளிலும்) கிடைப்பது அரிதாகி வருவதும் அடங்கும். இதற்கான காரணங்களில் முதன்மையானது – வழக்கம் போல, மனிதனின் பேராசை தான்.

நிற்க, நான் கனிமொழி அவர்களின் (இன்னொரு) கபட வேடத்தைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து இந்த மீன் கொள்ளையைப் பற்றி ஆரம்பித்தேன்.  பின்பு, இதுபற்றி இணையத் தளங்களில் ஏதாவது தமிழில் எழுதப் பட்டிருக்கிறதா என்று பார்த்தால், ‘தேனீ’ என்கிற (ஜெர்மனியில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது என நினைக்கிறேன்)  பத்திரிக்கையில் மிகவும் விரிவாக இந்தப் பிரச்சினையைப் பற்றி அலசியிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. அதன் சுட்டி இதோ – நீங்கள் இதனை அவசியம் படிக்க வேண்டும்.

கனிமொழி கைதும், திமுக போராட்டமும் யாருக்காக..? – ஒருவிரிவான பார்வை
http://www.thenee.com/html/170211-2.html
(மிக்க நன்றி ‘தேனீ’ – உங்கள் பணி தொடரட்டும்.)

மேற்கண்ட சுட்டியைப் படித்துவிட்டீர்களா? படித்த பின் தான் கீழ்கண்ட விஷயங்கள் புரியும். ‘மணி’ என்கிற மீன்வளத்தொழிலில் ஈடுபட்டு, விஷயமும் தெரிந்துள்ள ஒருவர், அழகான தமிழில், இந்த விவகாரத்தைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்…

இப்போது, தேனீ ரீங்கரிக்காத விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்.

இந்த சென்னை திருவொற்றியூரைச்  சார்ந்த மேதகு KPP சாமி அவர்கள், நமது தமிழகத்தின் மீன் வளத்துறை அமைச்சர், இவர்  ‘மீன் ஆட்சியின்’ (மன்னிக்கவும், Moneyமொழியின் ) வளத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மீன்வளத்தைப் பற்றி ஒரு புண்ணாக்கும் அறியாத கோலம் வேறு. பதவிக் காலத்திற்குள் சுருட்ட வேண்டியதை சுருட்ட வேண்டும். மீன் சுருட்டிக்கும் மற்றவர்களுக்கும், அள்ளிக் கொடுக்க வேண்டும். (மாதம் 1 கோடி ரூபாய் என்கிறார்கள். சிலர் 75 லட்சம் ரூபாய் தான்(!) என்கிறார்கள்) – இதைத் தவிர அடிக்கட்டுமானப் பணிகளில், பணிகள் சரிவர அல்லது நடக்காமலேயே கையூட்டு வேறு… மேலும் கயமையுடன், கிறிஸ்தவ நிறுவனங்களையும் உபயோகித்துக் கொள்ள வேண்டும் பதிலுக்கு பதில் உதவியான கண்டுகொள்ளாமையையும் செய்ய வேண்டும். எவ்வளவு பணிகள் KPP சாமி அவர்களுக்கு…

எது எப்படியோ, கனிமொழிக்கு – கடலோ, மீன்களோ, அப்பாவி மீனவர்களோ (அவர்கள் தமிழ்த் தமிழர்களோ, ஈழத் தமிழர்களோ, சிங்களவர்களோ – யாராயிருந்தாலும் சரி) எக்கேடு கெட்டால் என்ன? தாம் ‘கவனிக்கப்பட்டால்’ சரி.

ஆகவே தான், மீனவர்களுக்கு ஆதராவாக ‘போராடி,’ கைது செய்யப்படவேண்டிய நாடகமெல்லாம்! என்ன, ஒரு கோடி ரூபாய் மாதாமாதம் வருகிறதென்றால், சில மணிநேரங்கள் (அதுவும் 5 வருடங்களுக்கு ஒரு முறை தான்!)  நடிக்க முடியாதா? இதில் கொசுறு அனுகூலம், கனிமொழி ‘போராடுகிறார்’ என்ற பிம்பம்! ஆனால் மக்களுக்குத் தெரியும், அவர் கயமை…

கனிமொழி பகர்ந்தது அங்கே:

“Poetry is a continuous dialogue with my own self. People find themselves in so many ways. It’s kind of discovering myself…a conversation with myself.”

கனிமொழி  கிவிதை இங்கே:

“அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருக்கிறேன்”

=-=-=-=-=

மீண்டும் உங்களைச் சிந்திக்க நான் வேண்டுவது என்னவென்றால்… இத்தேர்தலில் நாம் உதிர்க்கப்போவது எதனை?

( நான் சிறுவயதில் ‘முத்து காமிக்ஸ்’ புத்தகங்களை படித்திருக்கிறேன்.  அப்புத்தகங்களில்  அகொதீக என்றொரு கயமை இயக்கம் இருக்கும் – இதற்கு விரிவு ‘அழிவு, கொலை, கொள்ளை, தீமை கழகம்.’ – இக்கழகத்தை எதிர்த்துத் தான் பல்வேறு சாகச வீரர்கள் போராடுவார்கள். இப்போது நினைத்தால் என்னை மட்டுமல்ல, நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக தான் அகொதீக என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.)

நண்பர்களே! உங்கள் ஆதரவிற்கு (ஏகோபித்த பேராதரவிற்கு என்றேல்லாம் பொய் சொல்ல மாட்டேன்) நன்றி. பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், யோசனைகள்  கொடுத்தவர்களுக்கும், ஏன்,  மிரட்டியவர்களுக்கும், மிரட்டுபவர்களுக்கும் கூட நன்றி.

என்னை சில முகம் தெரிந்த நண்பர்கள் ‘நடுநிலைமையற்றவன்’ என்கிறார்கள். உண்மைதான். என்னுடைய நிலை – கடுநிலைமை. எதை  ஒழிக்க வேண்டுமோ, அதற்கு முகாந்திரங்கள் இருந்தால் அது ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு மாற்றாக ஜெயலலிதா ஆட்சி எப்படி நன்றாக இருக்க முடியும் – ஏன்  நீ  அவர்களைத்  தாக்குவதில்லை என்று கேட்டால் – நாம் விதண்டாவாதம் பேசும்படியாகத்தான் இருக்கும்.

ஏனெனில், என்னைப் பொறுத்தவரை, இந்த திமுக ஆட்சியை விட, உலகத்தில் கேடுகெட்ட எந்த ஆட்சியும் (காங்கோ-வின் லாரன் கபிலா, மன்மோகன் ‘சோனியா காந்தி’ சிங், இத்தாலி-யின் பெர்லுஸ்கோனி – போன்ற அயோக்கியர்களின் அரசுகள்) விட மிக நல்லதாகவே இருக்கும். இப்படிப்பட்ட கயமை நிறைந்த நிதிகளின் ஆட்சியை, உலகில் எவருமே கண்டிருக்க மாட்டார். என்ன, இந்த போல்பாட், ஸ்டாலின், ஹிட்லர் போல இந்த திமுக, எமது மக்களைக் கூண்டோடு ஒழிக்கவில்லை (ஆனால் அக்காரியத்தை ஈழத்தில் செய்தனர், செய்துகொண்டிருக்கின்றனர்)- அவ்வளவு தான். ஆனால் மற்றபடி எல்லா விதங்களிலும் தமிழ் மக்களை காயடிக்கின்றனர்.

நான் 2G  பற்றியோ, அல்லது டிவி ஊழல்கள் பற்றியோ இன்னபிற ‘பரவலாக அறியப்பட்ட’ ஊழல்கள் பற்றியோ  எழுதவில்லை. மற்றவை பற்றி, அதுவும் ஒரு எடுத்துக்காட்டாகத் தான், சில விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். உண்மையிலேயே இந்த திருட்டுக் கழகத்தின் ஊழல்களை (அதுவும் எனக்குத் தெரிந்த அளவில்) எழுதவேண்டுமேன்றாலும் கூட என்னிடம் சுமார் 340 விதமான (மிக அயர்ச்சி + அவநம்பிக்கை தரும்) குறிப்புகள் உள்ளன.  இவற்றை விவரித்து எழுதவேண்டுமேன்றாலும் கூட சுமார் 400 பதிவுகள் இட வேண்டும். எழுதுவது ஒருபுறம், மன உளைச்சல்கள் ஒரு புறம், அதற்கான நேரத்தேவை மற்றொரு புறம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை நாம் எண்ண வேண்டியது மற்றும் செயல்படுத்த வேண்டியது என்ன?:

 • ஜெயலலிதாவின் கொசுக்கடியைப்பற்றி பயந்து நாம் கருணாநிதிப் புற்றுநோயை ஆரத் தழுவலாமா?
 • வை கோபால்சாமி, ராஜா (ராசா ‘கைய வெச்சா’ அல்ல), EVKS இளங்கோவன், இல கணேசன், ராமகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற பெரும்பாலும் ஊழலற்ற, நேர்மையான, மக்களுக்காக  உழைக்கும், தமிழகத்தைப் பற்றியும், மானுடகுலம் பற்றியும் எண்ணும், செயலாற்றும் தலைவர்கள் இன்னமும் (பல கட்சிகளில் சிதறி) உள்ளனர்  – ஆனால், இவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறதா? (இவர்கள்  அனைவரும்  ஒன்றேபோல் சிந்திப்பவர்கள் என்றோ, வடிகட்டின நேர்மையாளர்கள் என்றோ சொல்லவில்லை (‘each unto his own’). ஆனால் இவர்கள் போன்றவர்கள், மனதாரப் பொய் சொல்ல மாட்டார்களென்றும், அடிப்படை மனித நேயம் மற்றும் நியாய உணர்வு மிக்கவர்கள் என்பதிலும் இரு கருத்துக்கள் இருக்க  இடமில்லை.)

உங்களிடம், நான் சில  விண்ணப்பங்களை  வைக்கிறேன்:முடிந்தால்  செய்யவும்.

 • தேர்தல் மிகக் குறைந்த நாட்களில் நடக்கப் போகிறது. நீங்கள் நேரடியாக என்ன செய்யமுடியுமோ எதைச் செய்யவேண்டுமோ, அதைச் செய்யவேண்டும். நம் தமிழகத்தை, ஏன் தமிழத்தை ஒழித்துக் கட்ட, கருணாநிதி கும்பலுக்கு இன்னொரு முறை அனுமதியளிக்கக் கூடாது. (நான் நேரடியாக சில விஷயங்கள் செய்து வருகிறேன். மேலும் தேர்தல் தினத்தன்று சிதம்பரம், கடலூர், தஞ்சை (முடிந்தால் புதுச்சேரி) போன்ற இடங்களில், சில தைரியம் வாய்ந்த நண்பர்களுடன், தேர்தல் பார்வையாளர்களுக்கு என்ன உதவி செய்யமுடியுமோ அதைச் செய்யலாம் என்று எண்ணம். பார்க்கலாம்)
 • உங்கள் ஓட்டை வாக்குச் சாவடி ஆரம்பித்த உடனேயே வரிசையில் நின்று போடுவது நன்று. மதியம் தான் வரிசைநீளம்  குறைவாக இருக்கும் என்று போனீர்களானால் உங்கள் ஓட்டை அந்த கருணாநிதி கும்பல் போட்டுவிடும். அவர்கள் இதில் மிக்க திறமைசாலிகள் – நெடுங்கால அனுபவமும் இருக்கிறது, இப்பதர்களுக்கு.
 • ஓட்டுப் போடாதவர்களை, விரக்தியில் இருப்பவர்களை, ஊக்கப் படுத்தி (அல்லது கருணாநிதி கும்பல் பூச்சாண்டிகளைக் காட்டி) ஓட்டுப் போட வைக்கலாம்.
 • கண்மூடித்தனமாக திமுகவை (அல்லது அதனுடைய உதிரிக் கூட்டணிக் கட்சிகளை) ஆதரிப்பவர்களும் நம் மக்களே. கெட்டாலும் நம் மக்கள் மேல் மக்களே! ஆகவே, நம் மக்களுடன்  பேசி, அவர்களுக்கு உண்மையான நிலவரங்களைப் பற்றிச் சொல்லலாம்.
 • இளைஞர்களிடம் பேசி ‘எல்லாருமே, அனைத்து அரசியல் வாதிகளும் அயோக்கியர்கள் தான், ஆகவே நான் ஓட்டுப் போட்டு என்ன புண்ணியம்’ என்ற அவர்களின் எண்ணங்களை மற்ற முயற்சிக்கலாம். ஒவ்வொரு ஓட்டும், நமது தலைவிதியை மாற்றக்கூடியது என்ற எண்ணம் வர உதவலாம்.
 • இணையத்தில் மிகக் குறைந்த தளங்களே, கயமைநிதி குடும்பத்தைப் பற்றி (http://idlyvadai.blogspot.com, http://www.savukku.net/ போன்றவை) விலாவாரியாக எழுதுகின்றன. இவைகளை நீங்கள் ஊக்கப் படுத்த வேண்டும். அவைகளை இன்னும் பரவலாக அறியப்படச் செய்ய வேண்டும். (உங்களுக்கு இதுபோன்ற தளங்கள் பற்றித் தெரியுமானால், அவைகளைப்பற்றி நீங்கள் எழுதலாம், ஒத்திசைவில் கூட பின்னூட்டங்களிட்டுத் தெரிவிக்கலாம்) நீங்கள் வலைப்-பதிவராக இருந்தால், நீங்கள் இவற்றைப் பற்றி எழுதலாம். பின்னூட்டங்கள் இடலாம். உங்கள் எண்ணங்கள் இணையத்துக்கு, அதன் வலைப்பூக்களுக்குத் தேவை.
 • எனக்கு facebook, ட்விட்டர், sms போன்றவற்றில் அனுபவம் இல்லை. ஆனால், இம்மாதிரி தளங்களை/ஊடகக் கருவிகளை உபயோகிக்கும் நண்பர்கள், அவற்றை திமுகவை ஒழிக்கப் பயன் படுத்தலாம்.

ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு – ‘do whatever it takes.’  – நாம் பணி செய்ய வேண்டும், நண்பர்களே!. நமக்காக, நம் தமிழகத்திற்காக, நம் குழந்தைகளுக்காக, மானுடத்துக்காக…

மீண்டும், மீண்டும் உங்களைச் சிந்திக்க நான் வேண்டுவது என்னவென்றால்… நாம் உதிர்க்கப்போவது எதனை?

… ‘அல்லது ‘சந்தனக் கொள்ளை ஸ்டாலின்’ என்று தலைப்புக் கொடுத்திருக்க வேண்டும், இவ்விடுகைக்கு…

இவ்விடுகையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள்  இதனைப் படித்திருக்க வேண்டும்:   ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1

திருப்பத்தூர் சந்தனமரக் கிடங்கு எரிப்பு சம்பவம் என்கிற தீவட்டிக் கொள்ளையர்கள் மகாத்மியம்

வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மற்றும் புதூர்நாடு மலைகள்,  சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 25 கிமீ அகலமும் உள்ள பிரதேசத்தில் உள்ளவை. திருப்பத்தூர், வாணியம்பாடி, செங்கம், போளூர், வேலூர் தாலுக்காக்களில் உள்ளடங்கியவை. கடலுயரத்தில் இருந்து சராசரியாக சுமார் 2300 அடி உயரத்தில் உள்ள இப்பிரதேசம் சுமார் 2500 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. பொதுவாக மலையாளிகள் என சொல்லப்படும் மலைவாசி மக்கள் இங்கு வாழ்கிறார்கள். அவர்களை ‘முன்னேற்ற’ வேண்டுமல்லவா? நமது அரசாங்கமும், மிஷனரிகளும் அவரவர் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர் இங்கு – முறையே, குடிப்பழக்கத்தையும், ப்ரோடெஸ்டன்ட் கிறிஸ்தவத்தையும்.

இம்மலைகளில் சுமார் 225,000 ஹெக்டேர் பரப்பளவில் (சுமார் 450 ,000 ஏக்கர்) வனத்துறையின்  பாதுகாப்பில் உள்ள ‘ரிசெர்வ்’ காடுகளாகும். ஆனால் இவை அடர்ந்த, பசுமை போர்த்திய காடுகள் அல்ல. இருப்பினும் இவை மிக அழகானவை. இக்காடுகளின் மண் தரமும், மழை அளவும், ஈரப் பதமும், தட்பவெப்ப நிலைகளும் ஒரு தனிவிதமான சுற்றுச்சூழலை உருவாக்கி இருக்கின்றன. இச்சூழலில் குறிப்பிட்ட சிலவகை மூலிகைகளும், மரங்களும் வளர்கின்றன.

ஜவ்வாது மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைத்தொடர்கள், தரமான சந்தனமரங்கள்  அற்புதமாக வளரும் இடங்கள். இம்மரங்களில் உள்ள சேகு என்று நாம் அழைக்கும் sap (மரச் சாறு) உலர்ந்தபின் ஒரு நுணுக்கமான மணத்தை இம்மரங்களின் ஹார்ட்வுட் (heartwood) எனப்படும் நடுப்பகுதிக்குக் கொடுக்கிறது, இதன் காரணமாக ஜவ்வாது மலையில் வளர்ந்த சந்தனமரங்களுக்கு உலகளாவிய (விலை)மதிப்பும், மரியாதையும் உண்டு.

எப்படிப்பட்ட மரியாதை என்றால், 100 கிராம் மரம் (branchwood), சுமார் 1100 ரூபாய். ஹார்ட்வுட், சுமார் 80 லட்சம் ரூபாய், ஒரு டன்னுக்கு! இது அரசு ஏலத்தில் கிடைத்தால். ஆனால், எல்லா ஏலங்களிலும் (குறிப்பாக நம் தங்கத் தமிழ் நாட்டில்) அரசியல் உதிர்களின் சார்புள்ள குழுமங்களுண்டு (cartels) –  இவர்கள் நிர்ணயிக்கும் விலை தான் ஓடும். ஆகவே மொத்த விற்பனை விலை இச்சந்தனத்துக்கு சுமார் ஒரு டன்னுக்கு ரூபாய் 1 கோடிக்கும் அதிகம்! ஆனால் நல்லவேளை, பெரும்பாலும் நேர்மையான அதிகாரிகள் இருப்பதால், அரசாங்கத்துக்கு மிகப்பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதில்லை…

ஆனால் (=ஆகவே), பெரும் பணம் புரளும் இத்தொழிலில், திருட்டுத்தனமாக மரம் வெட்டல், கடத்துதல், பொறுக்கி அரசியல்வாதிகளின் மிகமிக நீளக்கைகள்,  மிகப்பெரிய அளவு கையூட்டுகள், ஊழல்கள், கொலைகள் எல்லாம் உண்டு.

வன அதிகாரிகளுக்கு சரியான சம்பளமோ, மரியாதையோ, தளவாடங்களோ – பொதுவாகக் கொடுக்கப் படுவதில்லை. உதாரணமாக கொள்ளையர்கள் யந்திரத் துப்பாக்கி  வைத்திருந்தால், அதிகாரிகள் பழைய ‘முதல் சுதந்திரப்போர்’ காலத்து ரைபிள்கள் வைத்திருப்பர்! இவர்களின் வேளையில் இருக்கும் கஷ்டங்களை எவரும் உணர்வதில்லை. பாவம் –

ஆனாலும், வன அதிகாரிகளும், எவ்வளவு தான் அட்டூழியங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அல்லது கயமைநிதி சொன்னது போல ‘அடக்கமாக’ இருக்க முடியும்? ஆகவே, அவ்வப்போது, கொள்ளையர்களைப் பிடிப்பதும், துப்பாக்கிச் சண்டைகளும், பறிமுதல்களும்  எல்லாம் நடக்கும் – ஒரு சில நேர்மையான அதிகாரிகளால். பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள் வன இலாக்காவின் கிடங்குகளுக்குச் செல்லும். மேலும் அறிவியல் பூர்வமாக, அரசாணை பெற்று வெட்டப்படும் / அறுவடை செய்யப்படும் மரங்களும் இக்கிடங்குகளில் சேமிக்கப் படும். ஏல முறையில், வருடத்திற்கு ஒருமுறை இவை விற்கப் படும்.

இப்படியாக திருப்பத்தூர் கிடங்கு (சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவு), திருப்பத்தூர் வன சரகத்தால் பாதுகாக்கப் படுகிறது. இக்கிடங்கின் கொள்ளளவு சுமார் 600 டன் சந்தன மரங்களும், ரெட்சேன்டர்  மரங்களும். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தனமரக் கிடங்கு கூட!

1997ஆம்  வருடம். மார்ச் 13ஆம் தேதி இரவு. திடீரென்று ஒரு மாபெரும் தீ ‘விபத்தில்’ முழு கிடங்கும் எரிந்து சாம்பலாகியது. வன அதிகாரிகள் (DFO) கொடுத்த தகவலின் பேரில், காவல் துறை ஒரு கிரிமினல் வழக்கைப் பதிவு செய்தது…

எவ்வளவு சந்தனமரங்கள், என்ன மதிப்பு என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஏனெனில் அனைத்து ஆவணங்களும் இத்தீயில் எரிந்து போயின. ஏறக்குறைய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இருப்புகள் இதில் நஷ்டப்பட்டதாக தமிழக அரசு சொல்லியது.

எந்த அரசு? தமாகா + ஜெயலலிதா எதிர்ப்பு வோட்டுக்களால் ஆட்சிக்கு 1996ல்  வந்த கருணாநிதி அரசு. ‘தளபதி’  ஸ்டாலின் இடம் பெற்ற அரசு.

அரசல் புரசலாக, குழப்பமான செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஜெயலலிதாவும் இதை பெரிய அளவில் சாடிப் போராடிக் கொண்டிருந்தார்.

ஆகவே கருணாநிதி, தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவரான நீதிபதி எ ராமன், என்பவற்றின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்தார். கயமைநிதி எதிர்பார்த்தது போலவே இந்த கமிஷன், நடந்த விவகாரம் ஒரு தீ விபத்தே என்று கூறி, அப்பகுதி திமுக MLA வுக்கும் இந்த விபத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றும் பகர்ந்தது. இந்த நீதிபதி பரிந்துரைத்தபடி இன்னமும் விசாரிக்கும்படிக்கு இந்த விஷயம், மாநிலத்தின் CB -CIDக்கு  மாற்றப் பட்டது. பிறகு அவர்களால் ஊற்றி மூடப் பட்டது.

ஆனால் நடந்தது என்ன?

அக்கிடங்கில் சுமார் 500 டன் அளவிற்கு சந்தனம் இருந்திருக்கிறது. இதன் மதிப்பு பற்றி அந்த ஊர் MLA வுக்குத் தெரியும். ஸ்டாலின்
உபாசகரும் பினாமியுமான இவருக்கு அதன் மேல் ஒரு கண்.

நமக்குத்தான் தெரியுமே,  நம்முடைய இசுடாலின் அவர்களின் தொழில்நுட்ப மேதமைப் பற்றி. இதில் சம்பந்தப் பட்ட பணம் சுமார் ரூபாய் 450 கோடி வேறு! கை துறுதுறுக்க ஸ்டாலினும் அவர் சகாக்களும் உடனடியாக ஒரு கயமைத் திட்டத்தில் இறங்கினர். சில வன அலுவலர்களையும் மிரட்டி, கொலை செய்து விடுவோம் என்று பயமுறுத்தி – தங்களுடன் ஒத்துழைக்கும்படி செய்தனர். சந்தனமர போக்குவரத்துக்கான போக்குவரத்துப் பதிவேட்டையும் (movement register), இருப்புப் பதிவேட்டையும (stock register)  எடுத்துக் கொண்டனர். புகுந்து விளையாடினர்.

ஒரு இரவோடுஇரவாக மிகுந்த திருட்டுத்தனத்துடன், லாரிகளில் சொத்தை மரங்களை ஏற்றிக்கொண்டு கிடங்கில் கொண்டு போட்டுவிட்டு, அங்கிருந்து சந்தனத்தை அள்ளிச் சென்றனர். இப்படி 500 டன்களையும் அபேஸ் செய்தபின், அக்கிடங்கை தீயிட்டுக் கொளுத்தினர்.

1997 ஆம்  ஆண்டில் இவ்வளவு ரூபாய் (450 கோடி!!) கொள்ளையடிக்கப் பட்டது! ஒரு புண்ணாக்கு  உழைப்பும் இல்லாமல், மிகுந்த கயமையுடன்.

இதனுடன் ஸ்டாலின் லீலைகள் முடிவு பெறவில்லை. விசாரணைக் கமிஷன் சாம்பலையும் ஆய்வு செய்யும் என்ற காரணத்தால், சாம்பல் மாதிரிகளையும் மாற்றினர். ஆக சாதாரண மரசாம்பல், சந்தனமர சாம்பலாக வலம் வந்தது.

நண்பர்களே, கொஞ்சம்  யோசியுங்கள்!

சந்தனக்கட்டை வீரப்பன், தன் வாழ்நாளில் இவ்வளவு கொள்ளை அடித்திருக்க மாட்டான் – மொத்தமே  50 கோடி ரூபாய் அடித்திருந்தால் அதிகம். கொலைகளும் செய்திருக்கிறான். ஆனால் தண்டனையை அனுபவித்தான்.

ராஜீவ் காந்தியின் போபோர்ஸ் ஊழல் கேவலம் ரூபாய் 54 கோடிதான்! அதுவும், அப்பணத்தில் பெரிய பாகம் அவர் கட்சிக்குப் போய் சேர்ந்தது. இந்த ஊழலால் அவர் ஆட்சியை இழந்தார். பின் உயிரையும் இழந்தார், பாவம்.

ஆனால் பாருங்கள் – நம் தளபதி ஸ்டாலின் அவர்களை. எவ்வளவு மிடுக்காக உலா வருகிறார்! பார்த்தால் சொல்ல முடியுமா – அவர் பல்லாயிரக் கணக்கான கோடிகளில், ஊழல் பணத்தில் புரளுபவர் என்று? இந்தக் கேடுகட்ட எண்ணங்களையும் செயல்களையும் சுமந்துகொண்டு வெள்ளைஉடை அரிதாரம் தரித்து ‘குறிஞ்சிமலரில்’ அரவிந்தனாக வேறு உலா வந்தாயிற்று! 

மேலும் புன்சிரிப்புடன் ‘உதவி முதல்வராக’ வேறு ஊருக்கு உபதேசம்…

ஸ்டாலின் மேற்கண்டவர்களுக்கு மேல் கொள்ளை அடித்திருக்கிறார். (இவரை விடவும் ஊழலின் உன்னத நிலைக்கு வந்தது கனிமொழியாகத்தான் இருக்கும்). மேலும் ஸ்டாலின், பல பேர் விசனத்திற்கும், மரணத்திற்கும், தற்கொலைகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார் – ஜூலை 2001 சமயம் ‘அண்ணா நகர்’ ரமேஷ் (இவர் பல ஸ்டாலின் பினாமிகளில் ஒருவர்) ஸ்டாலினுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் அப்ரூவர் ஆக முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, மர்மமான முறையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது நினைவில் இருக்கிறதா?  அண்மையில் ராசாவின் ‘பினாமி பாட்சா எப்படி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று தோன்றுகிறதா?

இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை ஒழிப்பது எப்போது??

குறிப்பு 1:

ஸ்டாலின் கொள்ளைக்காக லாரி ஓட்டியவர்களில் ஒருவரை எனக்குத் தெரியும். இவருக்கு வண்டி ஒட்டியதற்கு கூலி கூட ஒழுங்காகக் கொடுக்கவில்லை. மிரட்டித் துரத்தி விட்டார்கள். இத்தனைக்கும் அவர் ஒரு திமுக அனுதாபி, கார்ட் கூட வைத்திருந்தார்  – கருணாநிதியை கலைன்ஜர் என்று குறிப்பிடுவார்; இவர் கோபம் கொண்டு ‘உண்மை விளம்ப’ ஆரம்பிக்கும்போது, இவர் பேரில் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்தனர். அவருடைய ஜமாத்திடமிருந்தும் அவருக்கு ஒரு ஆதரவுமில்லை. (பாவம், அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை, எல்லாருக்கும் பயம் தானே, பொறுக்கிகளிடம்; ஆனால் இந்த திமுக கழிசடைகள் தான் ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர்! என்ன கொடுமை!) இவர் பின், வெறுத்து திமுகவிலிருந்து விலகி தற்போது நன்றாக மாங்கனி வியாபாரம் செய்து வருகிறார் – மன்னிக்கவும், இவர் ராமதாஸ் கட்சியில் இல்லை. 

மேலும், உதிரி திமுகவினர் போலல்லாமல், இவருக்குத் தமிழில் உண்மையான ஈடுபாடும், பாண்டித்யமும் உண்டு – இவர் மற்றும் சில IAS அதிகாரி  நண்பர்களின் இன்னமும் வேலை செய்து கொண்டிருக்கும் மனச்சாட்சிகள் மூலம் தான்  எனக்கு மேற்கண்ட விவரங்கள் கிடைத்தன.

குறிப்பு 2:

இந்த சந்தனக்கிடங்கு தீ விபத்து பற்றி சில செய்திகளைக், கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம். இது ஒரு வழக்கு விவகாரம் பற்றியது – இந்த ஊழலுடன் தொடர்புடையது.

M.G.Singaravelu vs The State on 25 November, 2003 – http://www.indiankanoon.org/doc/946249

குறிப்பு 3:

‘அண்ணா நகர்’ ரமேஷ் பற்றி ஒரு பழைய செய்தி.

I’am innocent, Ramesh tells police – http://www.hinduonnet.com/2001/07/19/stories/04192234.htm

….

மறக்காதீர்கள் நண்பர்களேஇத்தேர்தலில் நாம் அழித்தொழிக்கப் போவது எதனை?


“Because, see, what people say outside and what actually they mean is very different and all of us know that in politics. You can always call somebody your friend and then come and have a discussion and say, see, I don’t want this person. That is for public appearances, we do a lot of things.”
— May 22, 2009, 20:04:19   (கனிமொழி அவர்கள் நீரா ராடியா அம்மையாருடன் பேசியதன் தட்டச்சாக்கம்)

மேற்கண்டதின் கரடுமுரடான அவசர தமிழாக்கம் கீழே:

“… ஏனெனில் பாருங்கள், மனிதர்கள் வெளியே என்ன சொல்கிறார்கள் என்பதற்கும், உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறார்கள / நினைக்கிறார்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன – இது அரசியலில் உள்ள  நம் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஒருவரை உங்கள் நண்பர் என்று சொல்லிவிட்டு பின்பு வேறு இடத்தில் – இங்கே பாருங்கள், எனக்கு அந்த நபர் வேண்டாம் எனச் சொல்லலாம். அதாவது, வெளிப்பார்வைக்காக, நாம் நிறைய விஷயங்கள் செய்கிறோம்…”

கனிமொழியின் (அரசியல்) வாழ்க்கை விதிகள்: (ஒரு சுருக்க விளக்கம்)

1. நாங்கள் அரசியல்வாதிகள்.  உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம்.
2. நாங்கள் ஒருவரை நண்பர் என்று சொன்னால், அதற்கு ஒரு அர்த்தமும் இல்லை.
3 . நாங்கள் மக்களை, மற்றவர்களை ஏமாற்றுவதற்காக நிறைய விஷயங்கள் செய்கிறோம்.

கனிமொழி அவர்களின் புரட்டுகர நேர்மையை மெச்சும் அதே நேரத்தில், அவருடைய நேர்காணலைப் படிக்கின்றேன்.

Kanimozhi on 2G Scam, Batcha suicide: Full Transcript
http://www.ndtv.com/article/india/kanimozhi-on-2g-scam-batcha-suicide-full-transcript-94649

இந்த நேர்காணலுக்கு கனிமொழி விதிகளை ஏற்றினால்…

வருத்தமாக இருக்கிறது. அம்மணி கனிமொழிக்கு வெட்கமே இல்லை…

எனக்குத் 4 ஸ்டாலின்களைப் பற்றித் தெரியும்.

முதலாவது ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரிஜினல் அக்மார்க் ஸ்டாலின். (சொல்வதற்கு சிறிது வெட்கமாக இருக்கிறது. அரைகுறையாக இவர் பற்றிப் படித்துவிட்டு, நான் சிற்றிளம் வயதில் இவருக்காக வாதித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன் – ஒரு நீண்ட, மிக நீண்ட சுற்று சுற்றி அலெக்சாண்டர் சோல்ழெநிட்சின் மற்றும் ‘The God that Failed‘ வரும் வரை ஒரே ‘ஆகாசம் வரே ந்யங்கள செங்கொடி உயரட்டே’ தான்!)

இரண்டாவது – மதிப்புக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். என்ன உழைப்பு, என்ன திறமை!

மூன்றாவது ஸ்டாலின் அய்யங்கார் – இது ஒரு சோகக் கதை. பாவம், இவர் தந்தை இளைஞராக இருந்தபோது   பொதுவுடமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தன் மகனுக்கு இப்படியொரு பெயர் வைத்து, எங்கு சென்றாலும் பையனை மற்றவர்கள் கிண்டல் செய்யக் காரணமானார்; அவன் நிலைகுலைந்து அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தால், அவனுக்கு புரட்சிகர தியாகம் பண்ண வேண்டியது ஒரு கம்யூனிஸ்டின் கடமை என்று போதித்தார்.

அவர் சமூகத்தில் பையனுக்கு பூணூல் போடும் வயதில் கையில் தாஸ் கபிடல் கொடுத்தார், பையன் மிரண்டதைப் பொருட்படுத்தாமல்

பொருள் முதல்வாத சிந்தனையை ஊட்டினார், பையன் திமிறிக்கொண்டு போனாலும்

வீட்டில் ஏதாவது சிரிக்கவேண்டும் என்றாலும், அவன் தகப்பனார் இப்படி  ஒருமொக்கை நகைச்சுவையை உதிர்த்திருக்கலாம்: கம்யூனிசத்திற்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன தொடர்பு?  (கால் மார்க்ஸ், ஹ ஹா!).

ஸ்டாலின் பாவம், தகப்பனின் தொல்லை  தாங்காமல், அவரை எதிர்த்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் புத்தி பேதலித்து, குடுமி வைத்த, திருமண்ணிட்ட  வைதீக அய்யங்காராக மாறினார் (தன் தந்தை வழிப் பாட்டனார் உதவியுடன்). ஒருமுறை வெறி கொண்டு ஒரு சிபிஐ மாநாடு ஒன்றுக்குப் (ஐயோ, இது வேறு ஒன்றுக்கு!) போய் – உரக்க ‘ஸ்டாலின் ஒழிக’ என்று கத்தி, தோழர்களிடம் அன்பளிப்பு வாங்கினார்.   இவை நடந்தது 40 வருடங்களுக்கு முன்னர்.

ஆனால் இவ்விடுகையின் கதாநாயகர் நான்காம் ஸ்டாலின் – ‘தளபதி’ ஸ்டாலின். – ‘தள பதி’ = ‘படைத்  தலைவர்’ – மன்னிக்கவும் – ‘படைத்தலைவர்’ சுடாலின் அல்லது படையப்பா சுடாலின் – அல்லது பசு?

இது என்ன படைத்தலைவர் சொறித்தலைவர் சிரங்குத்தலைவர் என்று நீங்கள் குமுறாதீர்கள். இதுதான் தமிழர் பண்பாடு. அப்படித்தான் நாங்கள் சொல்லுவோம். இவையெல்லாம் – நகைப்புக்கிடமாக மிகைப்படுத்துதல், அடுக்காதமொழி நடை, புல்லரிப்பு, உளறல் போல உங்களுக்குத் தோன்றினால் எங்களுக்கு நட்டமில்லை!

எந்த நாட்டுடன் போர் புரிகிறார் இந்தத் தளபதி என்று வெள்ளந்தியாகக் கேட்காதீர்கள். அது ஒரு ரகசியம். கிட்டே வாருங்கள் சொல்கிறேன்… உம்ம்ம்ம் – அது, அது… நம் தமிழ்நாடுதான்! தமிழகம் படும் பாட்டைப் பார்த்தாலே இது உங்களுக்குத் தெரியவில்லையா?

பச்சைத் மஞ்சள் தமிழர் ஏன் ஸ்டாலின் அவர்களுக்கு சுடாலின் என்று பெயர் வைக்கவில்லை என்று தெரியவில்லை. பரவாயில்லை – அது அவர் உரிமை. மற்றவர்கள் இப்பச்சோந்தித் தலைவரின் பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் கேட்டுக் கொள்வது, அவர்கள் கடமை!

ஸ்டாலின்! (!)

இவர் திமுகவிற்காக உழைத்திருப்பது உண்மையே. அதுபோலவே இவர் ஒரு மக்கள் தலைவர் என்பதும். (அந்த மக்களுக்கு மூளையையே காயடித்திருக்கிரார்கள் என்பது வேறு விஷயம்) ஆனால், மிக்க வருத்தத்துடன் சொல்கிறேன். தகப்பன் எட்டடி பாய்ந்தால்,பிள்ளையும் கூடவே பாய வேண்டும். ஏனெனில் இந்தப் பிள்ளை தகப்பன்மேல் தான் எப்போதும் சவாரி செய்துகொண்டிருக்கிறது. ஆகவே, தவிர்க்க இயலாமல் கருணாநிதியின் அரசியல் ஜீன்ஸ் (மன்னிக்கவும், திமுக கறை படிந்த வேட்டி) ஸ்டாலினையும் வந்தடைந்துவிட்டது.

இவர்,  தந்தையாரைப் போல தமிழ் கிமிழ் திரைச்சதை வசனம் என்று நேரத்தை விரயம் செய்யவில்லை. கருணாநிதி போல அடுக்காத மொழி பேச்சுக்களோ, சுத்தமாகத் தெரியாத விஷயங்களைப் பற்றி முற்றும் உணர்ந்த ஞானி போன்று முத்துக்களை உதிர்க்கும் காட்சிகளோ காண்பிப்பதில்லை. (மதிப்புக்குரிய கோவை ஞானியும், பரீக்க்ஷா ஞாநியும் என்னை மன்னிக்க வேண்டும்).

இவர், கருமமே கண்ணாயினார் – இது என்ன கருமமோ! சுருட்டுவது, திருட்டில் பங்கு கொடுத்து ஆதரவு வட்டங்களைப் பெருக்கிக் கொள்வது (அண்ணன் அஞ்சும்நெஞ்சன் போலவேதான்), அமைதியாகவும், கமுக்கமாகவும், கயமையுடனும் ‘காரியங்களை’ முடித்துக்  கொள்வது (இதில் அண்ணனைப் போலல்லாமல் – வெளிப்பார்வைக்கு அடாவடியே இல்லை). திமுகவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு(!) மாறாக, ஒளிந்து ஒளிந்து  கோவில் குளம் செல்லவேண்டுமா, சாய்பாபா காலில் விழவேண்டுமா, ப்ரத்யங்கிரா அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டுமா – அனைத்தையும் செய்வார் அல்லது இவர் குடும்பத்துக்கு இதனை விட்டுவிடுவார். இவர் மெய்யாலுமே கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி – அடுத்த தளம் நோக்கி விரையும் வேகம்! ‘விஞ்ஞான பூர்வமாக’ ஊழல் செய்த தந்தைக்கு அப்பால் – ஊழலின் உன்னதத்தையே  நோக்கி வளர்ச்சி…

ஆகவே, கருணாநிதி குடும்பத்தில், அனைவரைக் காட்டிலும், தமிழகத்தின் பிரதான எதிரி ஸ்டாலின் அவர்கள் தான்.

இவர் வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம்: பிறந்தது 1953-ல். பதினான்காம் வயதில் இருந்து திமுகவில் பணி செய்கிறார் என்று சொல்கிறார்கள். 1975-ல் MISA வின் கீழ் சிறையில் போடப்பட்டார். ஒரு வருடம் போல சிறையில் இருந்தார். இவர் அடிக்கப்பட்டார், சித்திரவதைபட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இவருடன் அக்காலத்தில் சிறையில் இருந்து, இன்று வரை மனம் வெதும்பிய தொண்டனாக  இருக்கும் ஒரு நேர்மையான ‘தனித்தமிழ்’ திமுகக் காரர் (இப்படியும் சில சோப்ளாங்கிகள்  திமுகவில் இருக்கின்றனர், இன்னமும்! இப்படிக் கண்மூடித்தனமாக கருணாநிதியை பூஜிக்கும் ஆட்கள் இருக்கும்வரை, தமிழகத்தை அந்த பிலிம் ரஜினியே வந்தால் கூட காப்பாற்ற முடியாது)  சொன்னார்: இரண்டு மூன்று முறை அப்படியும் இப்படியும் தள்ளப் பட்டார் ஸ்டாலின், அவ்வளவுதான் – அதுவும் முரண்டு பிடித்ததால் என்று! அதற்கு, என்னமோ இவரை சித்திரவதை செய்ததாக கதை பரவியுள்ளது!

குடமுருட்டி குண்டரின் மகனார் அல்லவோ ஸ்டாலின்! ‘ஐயையோ அடிக்கறாங்க’ வின் அடுத்த தலைமுறை அல்லவா நம் தளபதி!

வை கோபால்சாமி  வசீகரம் கொண்ட வளர்ந்துவரும் நேர்மையான இளம் திமுக தலைவராக அடையாளம் காணப் பட்டபோது, சூழ்ச்சி செய்து தகப்பனார் மூலம் ஒரு பொய்யைக் கசிய விட்டு ஸ்டாலின், வைகோவை அவமானம் செய்து திமுகவை விட்டுத் துரத்தினார். (நெடுஞ்செழியன், மதியழகன், சம்பத், எம்ஜிஆர் போன்ற உண்மையான தலைவர்களை சதி செய்து  திமுகவை விட்டு விரட்டியவரின் மகனார் அல்லவா ஸ்டாலின்?)

ஸ்டாலின் மீது அரசால் புரசலாக – பெண்கள், வன்புணர்ச்சி போன்ற மிகப்பல குற்றச்சாட்டுகள் இருந்தன, இருக்கின்றன. எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி நேரடியாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார், காவல் துறையிடமும் போனார் – ஆனால் விஷயம் அமுக்கப் பட்டது. (இதைப்பற்றி மேலும் எழுதினால் பெயர்களைக் குறிப்பிட வேண்டும், எனக்கு அது தேவையில்லை எனத் தோன்றுகிறது – மேலும், ஒருவர் கருணாநிதிக்கு அருகாமையில் உள்ளவர் என்றாலே, அவர் ஸ்திரீலோலராகத்தான் இருக்க வேண்டும்  என்பது வெள்ளிடை மலை; சோகமாக, இதற்கு ஆராய்ச்சி எதுவும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.)

இந்தியன் வங்கியிலிருந்து தன் மனைவி துர்கா பெயரில் பெரிய அளவில்  ‘கடன்’ வாங்கி (திருப்பிக் கொடுக்கவே இல்லை, என்ன கேவலம்!) “ரெயின்போ ஒப்செட்’ (rainbow offset) என்ற பிரிண்டிங் தொழிலை ஆரம்பித்தார். இதற்கு முரசொலி, திமுக மற்றும் கழகக் கண்மணிகள் கொடுத்த வேலைகளே ஏராளம். இது திமுக கட்சியையே சுரண்டுவது போல் தானே? (இது எப்படி இருக்கு?)

பின்பு ஊழல், மேலும் ஊழல், தொட்டுக்கொள்வதற்கு உதிரிப் படங்கள், டிவி சீரியல்கள் என உலா வந்தார், வேலையற்று.

இவருக்கும் எம்ஜிஆர் போலவே நடிப்பு சுட்டுப் பொசுக்கிப் போட்டாலும் வராது. ஆனால் எம்ஜிஆர்-இடம் இருந்த மிக நல்ல பண்புகளும், ஏன், வசீகரமும் கூட ஸ்டாலினுக்கு இல்லவே இல்லை. (நிற்க, ஸ்டாலின், நா பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாவலின் டிவி நாடகமாக்கத்தில் அரவிந்தனாக ‘நடித்திருந்தார்’ – எனக்கு இந்த சீரியலின் ஒரு பகுதியை ஒரு நாள் பார்த்துவிட்டு வயிறு கலங்கி சிரித்ததில் ரத்த பேதியே வந்துவிட்டது, விலா எலும்புகள் நோக, ஸ்டாலின் அப்படியொரு காமெடி இதில்!)

இப்போது இவர் கதை திடுக்கிடும் செய்திகளை வெளியிடப்போகிறது:

1996-ல் திமுக (தமாகா வின் உதவியினால், ஜெயலலிதா எதிர்ப்பாளர்களினால்) திமுக பதவிக்கு வந்தது ஞாபகம் இருக்கலாம். அப்பொழுது ஸ்டாலின் செய்த ஊழல்களில் இருந்து, எப்படிப்பட்ட மாமேதை அவர் என்பது தெரியும். இச்சமயம் அறிவியல் பூர்வமான ஊழல் என்பதிலிருந்து அடுத்த கட்டமாக அதிதொழில்நுட்பம் சார்ந்த ஊழல்களுக்கு உயர்வு பெற்றார் என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் ஒரு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கும் என்பது திண்ணம்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் பதின்மூன்று கோடிக்கு மேல் ஊழலை எவ்வளவு தொழில்நுட்பத்துடன் செய்தார் என்று தெரியுமா? நினைத்தாலே என் மனம் உவகையால் நிரம்பி உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

மேலும் என்னதான் ஊழல் செய்தாலும், இவருடைய தேர்ந்த ‘மக்கள் தொடர்பு’ சாதுர்யங்களால், இவர் பெயர் எந்தப் பெரிய ஊழலுடனும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்காது. ஆனால் இவர்தான் அவ்வூழல்களுக்குக் காரணகர்த்தாவாக இருப்பார். பெருமளவில் பணமும் பண்ணியிருப்பார்! ஸ்டாலினின் இந்தத் திறமையையும் மெச்ச வேண்டும்… (ஸ்டாலினிடம் உண்மையிலேயே மெச்ச வேண்டிய விஷயம் – அவர் தன் உடலை, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் விதம்…)

நான், நடந்த எவ்வளவோ இழிநிகழ்வுகளில்,  ஸ்டாலின் சூத்திரதாரியாக இருந்த ஊழல்களில், நல்ல வாசனை கொண்ட ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்… (அடுத்த பதிவு…)

மறக்காதீர்கள் நண்பர்களேஇத்தேர்தலில் நாம் அழித்தொழிக்கப் போவது எதனை?

பயப்படாதீங்க. இப்படி இக்குடும்பத்தின் கொள்ளைக் கதைகளைப் படித்துக் கொண்டே இருந்தால் ரொம்ப மனசு இறுக்கம் அடைஞ்சிடும்னுட்டு.

எனக்கும் அது தெரிகிறது. ஆகவே, இக்குடும்பம் இப்படியே வளர்ந்தால்  என்ன ஆகும் என்பதை ஒரு நகைச்சுவை(!) உணர்ச்சியோடு இப்பதிவின்  கீழ்ப்பகுதியில் எழுதியுள்ளேன். நீங்கள் இறும்பூது அடைய வேண்டுகிறேன்..

இதன் முதல் பாகம் படித்தீர்களா?

எப்படி கனிமொழி மணலை ‘அள்ளுகிறார்?’

கீழ்க்கண்ட செய்திகள், நான் சேகரித்த விவரங்களின் ஒரு பகுதி. (பலருடன் பேசினேன்; ஒரு மணலைக் கடல் போல் குவித்து வைத்த கோடவுன் மாதிரியான அமைப்புக்கும் சென்று வந்தேன். மன்னிக்கவும். நான் எடுக்க முடிந்த ஒன்றிரண்டு புகைப்படங்களையும் பிரசுரிக்கப் போவதில்லை. ஏனெனில் இப்படங்களை எடுத்தபோது, பக்கத்திலிருந்த  வாட்ச்மன் கிழவர் கைகூப்பிக் கேட்டுக்கொண்டார் – ‘என் பொழப்புல மண்ண அள்ளிப் போட்டுபிடாதீங்க சாமி.’)

நான், சில வருடங்கள் முன்பு வரை, தமிழகத்தில் மணல் கொள்ளை நடக்கிறது, ஆனால் நாம் தான் அதற்குக் காரணம், ஏனென்றால், நாம்தான் இந்தக் கொள்ளையடித்த மணலை வாங்குகிறோம் என்ற குற்றவுணர்ச்சியுடன் இருந்தேன். ஆனால்…

ஹோசூர், தருமபுரி மாவட்டங்களில் மணல் கொள்ளை (மற்ற இடங்களைப் போல) ஜாம் ஜாமென நடந்து வருகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்து, எதிர்த்து கொள்ளையர்களிடமிருந்து உதையையும் வாங்கிய என் நண்பர் ஒருவரை, இதைப் பற்றிய விவரங்களை அறியச் சொன்னேன். விவரங்கள் தெரிந்த போது, கனிமொழி அவர்களின் ஆட்சியில், நாட்டில் மணலாறு ஓடி, மற்ற மாநிலங்களுக்கும் உதவி செய்வதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்!

மணல் கொள்ளை நம்முடைய அண்டை மாநிலங்களில் மிகுந்த கெடுபிடியால், ‘வேண்டிய’ அளவு நடப்பதில்லை. அங்கு ஆற்று மணல் தட்டுப்பாடு மிகவும் அதிகம். ஆஹா, அதனால் என்ன, நாம் தான் இருக்கிறோமே – அவர்களுக்கு உதவி செய்வதற்கு…

நம்முடைய ஆற்றுப் படுகைகளில் பெரிய இயந்திரங்களை வைத்து மணலைச் சுரண்டி, எறும்பு போன்று வரிசையாகப் போகும் மாபெரும் டம்பர் லாரிகளில் ஏற்றி, நமது மாநிலத்தின் எல்லையை கடந்து, பிற மாநில எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாபெரும் கிடங்குகளில் சேமிக்கின்றார்கள், இக்கொள்ளையர்கள். அங்கு லாபமோ கொள்ளை லாபம். அவ்வரசுகளும் இதைக் கண்டு கொள்வதில்லை, எப்படியோ அவர்கள் ஆறுகள் வன்புணர்ச்சி செய்யப் படாமல் விடப்படுகின்றனவே! (பாலக்காடு, ஆராமொழிக்கு (திருஆரல்வாய்மொழி) அந்தப் பக்கம், சித்தூர், கர்நாடகாவின் தென் மாவட்டங்கள் என்று பல இடங்களில் இம்மாதிரி கிடங்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.)

ஹோசூர் மாவட்ட எல்லையில் கர்நாடகத்தின் ஆனேகல் தாலுக்காவில் இப்படி ஒரு பெரிய மணல் கிடங்கிற்கு சென்றிருந்தேன், நண்பருடன். இதற்கு மணல் ஹோசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து வருகிறது. சென்னை-பெங்களூர் சாலையில் செல்லாமல், ஹோசூர்-தளி-கும்மளாபுரம்-ஆனேகல் வழியில் திருட்டுத் தனமாகச் செல்கிறார்கள்…

மாண்புமிகு கனிமொழி அவர்களுக்கு, நமது அண்டைய மாநிலங்கள் விழா நடத்தி பரிசில் வழங்க வேண்டும். தேசிய ஒருங்கிணைப்புக்கு இது உதவலாம்! ஹ்ம்ம்.

மணல் கொள்ளைக்காரர்கள் ஒரு கட்டுப்பாடு மிக்க படையைப் போல, ஒரு கார்பரேட் தொழில் போல, நுணுக்கத்துடனும், கமுக்கத்துடனும் செயல் படுகிறார்கள் – இணைய தளம், டை கட்டிக்கொண்ட நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் விற்பனையாளர்கள் போன்றவை மட்டும் தான் இல்லை! எனக்கு வந்த செய்திகளின் படி, மூன்றிலிருந்து எட்டு நபர்கள் தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையை மேற்பார்வை இடுகிறார்கள். இவர்கள், கொள்ளையர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் மாபியா போன்று ஒருங்கிணைக்கிறார்கள்.

ஆனால், இந்த மாபியாவுக்கு அரசியல் உதவிகள் தேவை. சட்டசபை நடவடிக்கைகள், காண்டிராக்டுகள் பெறுதல், அளவுக்கு மிக்க அதிகமாக மணல் வாருதல், ஒப்பந்தத்துக்குப் புறம்பாக ராட்சத வண்டிகள் உபயோகித்தல், திருடிய மணலுக்கு கிடைக்கும் அநியாய லாபம் (யோசியுங்கள் நண்பர்களே, குத்தகைக்கு, எடுத்துக்கொள்ள அளவிற்கு மேல் ‘மணல் கொள்ளையர்களினால்’ எடுத்துக் கொள்ளப்படுவதினால், சென்னையில் மட்டும் அரசுக்கு, ஒவ்வொரு வருடமும் சுமார் 210 கோடி ரூபாய் நஷ்டம்), கொலைகளை அமுக்குதல், எதிர்ப்பவர்களை  மிரட்டுதல், ஆகவே வருவாய்த்துறை-காவல்துறை சமாளிப்புகள்… போன்றவை.

இங்குதான் நம் கழகக் கண்மணி கனிமொழி பிராட்டியார் வருகிறார். பேரம் பேசுகிறார், தன் தலீவருடன் (யாரிவர், எல்லாம் நம்ம நண்பர் கருணாநிதிதான்!) உதவியுடன்.

பேரம் படிந்தபின் ஒப்பந்தம்: ஒவ்வொரு மாதமும் இந்த மணல் மாபியா குழுவிடமிருந்து மூன்று கோடி ரூபாய் பணம் வர வேண்டும். ‘மிச்சத்தை’ நாங்க பாத்துக்கறோம்.

(உண்மையில் பார்த்தால், ‘கமிஷன்’ எப்படி கணக்கிடப் படுகிறது என்று யோசித்தால், இந்த 3 கோடி மிகுந்த குறைவான விகிதமாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புரளும் இந்தத் தொழிலின் கையூட்டு மதிப்பு இவ்வளவு தானா? வருடத்துக்கு பிசாத்து 36 கோடி தானா? ஆனால் இந்த எண்ணிக்கையைத்தான் நண்பர்கள் சொன்னார்கள். இப்போதுதான் தோன்றுகிறது. ஒருக்கால், கையூட்டு ‘குடும்பத்தின்’ அனைத்து உறுப்பினர்களுக்கும் ‘கைச்செலவிற்குப்’ போகிறதோ என்னமோ? (ஆய்ந்து அறிய வேண்டும் இது – ஆனால் நேரமில்லை))

எது எப்படியோ, கனிமொழியின் கவலைகள் பற்றி நமக்குத் தெரியுமாதலால், நாம் அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏதோபாவம், மாசாந்திர கைச்செலவுக்குத்தானே இந்தப் புள்ள அப்படி அலையுது… பரிதாபமா இருக்குது…

கைச்செலவு கொஞ்சம் அதிகமா இருக்குதே என்று பார்க்கிறீர்களா? ஆனால் என்ன – ‘மணல்வாரி அம்மன்’ பலி கேட்கும்போது கொடுக்காமல் இருந்தால், ஆத்தா கோவிச்சிக்கும் இல்லியா…

கோபப்பட்டு சாபம் கொடுத்தால் பரவாயில்லை, ஆனால் கவிதை எழுதிவிட்டால்?? வேண்டாம்டா சாமி, இந்த வம்பு…

மணல் வாரி அம்மனே போற்றி!

உங்கள் உதவி தேவை, போற்றி போற்றி!!

கிவிதை எழுதாமை வரம் வேண்டும், போற்றி போற்றி போற்றி!!!

=-=-=-=-=

என்னை மன்னிக்க வேண்டும் நண்பர்களே… நான் ‘கணக்கு ஆசிரியர்’ போல என்ன முடிவாகச் சொல்ல வருகிறேன் என்றால்:

Moneyமொழி மணல்-money தேற்றம் (theorem ):
நீங்கள் ஏதாவது வீடு அல்லது மற்றைய கட்டுமானப் பணிகளில் கடந்த 5 வருடங்களில் ஈடுபட்டிருந்தால், உங்கள் பணத்தில் ஒரு பகுதி கனிமொழியைப் போய்ச்சேர்ந்திருக்கிறது.

தேற்றத்தின் பின்னூட்டம் (corollary): நீங்கள் தமிழ் நாட்டை ஒட்டிய பகுதிகளில்  கேரளத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திரத்திலோ வீடு (இன்ன பிற) கட்டி இருந்தானாலும் மேற்கண்ட தேற்றம் உண்மையாகத்தான் இருக்கும்.

‘மணல் வாரி அம்மன்’ இருள் தேற்றம்: அடுத்த சில பத்து வருடங்களில் அம்மன் இருளால், நீர்ப் பஞ்சம், பயிர்ப் பஞ்சம், உயிர்ப் பஞ்சம் மிகப் பெரிய அளவில் தமிழகத்தில் ஏற்படும்.

தேற்றத்தின் பின்னூட்டம் (corollary): அப்போது ‘குடும்பத்தினர்’ சீனாவையோ, அமெரிக்காவையோ ‘வாங்கி’ இருப்பார்கள் என்பதால் (சொல்ல முடியாது, இரண்டையுமே வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள்!) அங்கே செங்கோலோச்சுவர். ஆனால் மன்னிக்கவும் (முக்கியமாக ஸ்டாலின்!), அங்கேயும் கருணாநிதி தான் ஜனாதிபதி!

பின்னூட்டத்திற்கு  வீரமணியின் விழா பின்னூட்டம்: கருணாநிதிக்கு ‘அமெரிக்கா ஆண்டான்’ எனப்பட்டம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தால் கபளீகரம் செய்யப்பட MITயால் கொடுக்கப்படும். பின் மற்ற சொத்தைப்பல்கழகங்கள், ‘மெக்ஸிகோ கண்டான்,’  ‘கனடா கொண்டான்,’  ‘இரண்டாம் வாஷிங்டன்’ போன்ற பட்டங்களைப் பறக்க விடும்…

மேற்கண்டதிற்கு ‘விட்டேனா பார்’ பின்னூட்டம்: ஜெகத்ரட்சகன், சற்குணம், பிலிம் ரஜினி, பிலிம் கமல், வைரமுத்து, வாலி, ராமதாஸ், வடிவேலு, தங்கபாலு, பாவி ஜய், திருமாவளவன் போன்றோர் நிச்சயம் வெறி பிடித்து ஏதாவது விழா நடத்துவார்கள் அல்லது இந்தக் கழிசடைகளில் பங்கேற்பார்கள். ஆனால், அந்தக் கோரத்தை இப்பொழுதே நினைப்பானேன்?

சோகப் பின்னூட்டம்: ஸ்டாலின் அமெரிக்க துணை ஜனாதிபதியாகவும், தி முக இளைஞர் அணியின் தலைவராகவும் அவருடைய 98-ஆம் வயதில் தொடர்வார்.

அஞ்சா நெஞ்சனின் முன்னோட்டம்: நாம் TEXAS   போர்முலா மூலம், புஷ்ஷின் வழிகாட்டுதல் மூலமும் அடுத்த தேர்தலையும் வெல்வோம்.அடுத்த நூற்றாண்டிலும் கலைஞர் தான் ஜனாதிபதி! (ஐயோ!)

கனிமொழியின் கிவிதையோட்டம்:
ஒரு கொடுமையான கிவிதை இயற்றி, அமெரிக்காவின் அனைத்து கவிஞர்களையும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் ‘தள்ளி’ விடுவார்.  நோபல் பரிசையும் ‘வாங்கி’ விடுவார்! அப்புறம் என்ன, ஒரே வாஷிங்டன் வங்கமம் அல்லது சிகாகோ சிங்கமம் தான்… வழிச் செலவுக்கு சூரியனின் ‘spectrum ‘ காலி செய்யப்படும். இப்படித்தான் இவ்வகிலத்திற்கே  அம்மன் இருள் ஏற்படும். பின்பு, அன்புத்தந்தை கருணாநிதிக்கு மாத்திரம் இந்த spectrum நிறப்பிரிகையில் மஞ்சள் நிறம் ஒதுக்கப் படும். பச்சை நிறம் குப்பையில் விட்டெறியப் படும்.   ஆமென்.

கனிமொழியின் புதல்வனின் முன்னோட்டம்: சொல்ல முடியாது. இந்த வருடம், கனிமொழியின் செல்லப் பையன் – ‘மணலே மங்கையின் பாக்கியம்‘ என்று அவனுடைய ‘நிறப் பிரிகை’ கம்பெனி சார்பாகப் படம் எடுக்கலாம். அவனுக்கு 10 வயது ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

சினிமா-தொலைக்காட்சி-நிதிகளின் ஓட்டம்: அனைத்து இளைஞர், குழந்தை, சினை நிதிகளும் சேர்ந்து படம் படம் பப்படமாக எடுத்து ‘ஹாலிவுட்’ என்கிறதை ஒழித்து விடுவார்கள். சந்தோஷம் தான். ஆனால் பயமாகவும்  இருக்கிறது, வெள்ளைக்காரர்களின் குத்தாட்டம் சரிவராது என்று தோன்றுகிறது….

ஆஆஆ…  அப்பாடா! என்னுடைய பயங்கரமான கொடுங்கனவு நிறைவு பெறுகிறது.

— பின்னூட்டங்கள் ஒரு தொடர்வதை..என் செய்வது, இந்த கருணாநிதி கும்பலை வைத்துக்கொண்டு…

பின் குறிப்பு: இத்தேர்தலில் நாம் அழித்தொழிக்கப் போவது எதனை?