கனிமொழி – Anatomy of a Lumpen Politician
01/04/2011
கனிமொழி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள என்னுடைய முயற்சியே இது… நீங்கள் கேட்கலாம் – ஏன் இவருடைய சொந்த விஷயங்களைப் பற்றி எழுதுகிறேனென்று.
நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நான் அவரைக் கிவிதை எழுதச் சொல்லவில்லை. மெட்ராஸ் மங்கமம் நடத்தச் சொல்லவில்லை. ஊழல் செய்யச் சொல்லவில்லை. அவரே தான் அனைத்தையும் செய்தார். அந்த செய்கைகள் என்னை பாதிக்கின்றன. தவிர அவர், தமிழர்களின் தலைவர்களில் ஒன்றாக மினுக்கிக் கொண்டு பவனி வருகிறார்… தமிழனாகிய என்னிடமோ, உங்களிடமோ ஒரு வார்த்தை கேட்கவில்லை. நாம் அவரை தேர்ந்தெடுக்கவே இல்லை.
இந்த சீர்கெட்ட , மானங்கெட்ட, நேர்மையற்ற அரசியலின் குறியீடு பற்றி, அதாவது இவரைப் பற்றி – இவர் அரசியலைப் (!) பற்றி அறிந்து கொள்ள, நீங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்… ஏனெனில், என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு கேடுகெட்ட செயலுக்கும் பின்னால் ஒரு நல்ல எண்ணம் இருக்கக் கூடும். ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அதற்கு ஏதாவது ‘positive intention’ இருக்கலாம். நாம் அந்த ஆளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவனுடைய எண்ணக் கோர்வைகளையும், உந்துதல்களையும், ‘அறம்’ பற்றிய அவனுடைய எண்ணங்களையும் அறிய முயற்சிக்க வேண்டும்.
ஆகவே – கீழ்காண்க:
கனிமொழி = fn (வரலாறு, மனோதத்துவம், ஊழல் நிறைந்த தற்காலம்)
பாவம். குழந்தை கனிமொழிக்கு என்ன கஷ்டங்கள் இருந்தனவோ தெரியவில்லை. ஏனெனில் தகப்பனார், அவர் இளமையிலும், நடுத்தர வயதிலும், ஜவுளிக் கடைகளில் இருக்கும் பெண் பொம்மைகளைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்… அவர் பணியில் அவ்வளவு ஈடுபாடுடன் இருந்தவர். உழை உழைஎன்று உழைத்தவர். இப்படி உழைக்காத நேரம் சதியிலும், ஊழலிலும் ஈடுபட்டவர். இது குழந்தையின் மனதில் தீரா வடுக்களை ஏற்படுத்தி இருக்கலாம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் குழந்தைகளுக்குத் தெரியும், தங்கள் பெற்றோர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று. ஆகையால் அவர்கள் நிஜத்திற்கும், பிம்பத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து, அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல் இருந்தால், அவர் மனதளவில் நொறுங்கிப் போவர்…
மேலும் கனிமொழி அன்புக்கு ஏங்கிய உள்ளமாகவும் இருந்திருக்கக் கூடும். தகப்பனாரின் வேலைப்பளுவும் (என்ன வேலை என்று கேட்காதீர்கள்), அவருடைய மற்ற குடும்பங்களும், சொந்தக் குடும்பச் சூழ்நிலைகளும் – எல்லாம் சேர்ந்து கனிமொழிக்குத் தேவையான அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் போயிருக்கலாம். ஒரு பாதுகாப்பற்ற சூழல் இருந்திருக்கலாம்.
இப்போது இவரின் வரலாற்றையும் பார்க்கலாம்…
சிறுவயதில் ஏதோ சர்ச் பார்க் என்கிற பள்ளியில் படித்தார், இதை ‘சேச் பக்’ என்று நீங்கள் உச்சரிக்காவிட்டால் உங்களுக்கு ‘வெள்ளைக்கார ஆங்கிலம்’ தெரியாது, ஆகவே நீங்கள் கடைந்தெடுத்த முட்டாள் எனவும் சுத்தமாக சுயமரியாதை இல்லை எனவும் அர்த்தம். இது ஒரு கத்தோலிக்க நிறுவனம், பிரேசெண்டஷன் கான்வென்ட் கன்னிமார்களுடையது – மேலும் எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்று, அதிலும் ‘வெள்ளைக்கார ஆங்கிலம்’ தான் கொம்பு முளைத்தது என்றும் நம்பும் பள்ளி, பள்ளி மாணவியர்.
இதில் தான் – எங்கும் தமிழ், எதிலும் தமிழ், தமிழ் தான் செம்மொழி, தமிழைக் காப்பாற்றவேண்டும், ஐயகோ தெற்கு தேய்கிறதே, தமிழே பயிற்று மொழி, தாய் மொழிக்கல்வி – என்று மாய்மாலம் செய்தும், ஓநாய்க் கண்ணீர் விட்டும் அரசியல் நாடகமாடும் கருணாநிதி, தன் பெண்ணைச் சேர்த்தார். அவ்வளவு தமிழ் மேல் காதலும் பற்றும் பிடிப்பும் இருந்தால் ஏன், தன் பெண்ணை ஒரு மாநகராட்சித் துவக்கப் பள்ளியில் சேர்த்திருக்கலாமே! ஊருக்கு உபதேசம் செய்வது இந்த உதிரிகளுக்கு எவ்வளவு சுலபம்! குப்பனுக்கும் சுப்பனுக்கும் தான் இப்பரிதாப அரசு தமிழ்வழிப் பள்ளிகள் – இல்லையா?
ஆக, இந்த தமிழ் ஆர்வம் (மக்களுக்காக) ஆனால் ஆங்கில மோகம் (நமக்காக) என்கிற இரட்டை வேடம் – இளமையில் கனிமொழிக்குத் தாங்க முடியாததாக இருந்திருக்க வேண்டும்… ஆகவே அவர் எப்படியாவது தமிழில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருக்கலாம்.
ஆகவே அவர் ‘பிடிறா கிவிதையை’ என்று தமிழ்க்கவிதையை ஓட ஓடப் பிடித்து அதன் மண்டையில் பொளேர் என அடித்து, சம்மட்டியால் நொறுக்கி, இலக்கியப் பணி செய்ய வந்தாரோ என்னமோ… பாவம், கவிதை என்ன குற்றம் செய்தது? இவர் உரை நடையை முயற்சித்திருக்கலாமே…
… பின்னர் அவர் எதிராஜ் கல்லூரியில் என்னமோ ஒரு பட்டதாரி படிப்புப் படித்தார். அவரின் இளமையில், ‘தி ஹிந்து’ வில் என்னவோ ஏதோ ஒரு குட்டி உதவி ஆசிரியர் வேலை பார்த்தார். அச்சமயம் சென்னையில் நல்ல வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்ட சில தருணங்களில் நான் இவரைப் பார்த்திருக்கிறேன். எளிமையாகத்தான் இருந்தார் அப்போது, என்று ஞாபகம்.
என்ன உந்துதலோ, என்ன இழவோ, தேவையே இல்லாமல் கவிதை கிவிதை என்று ஏனோ தானோ புழுக்கைகள் தொடர்ந்து வெளியிட்டார். அடிப்பொடிகளை வைத்து ஆராவாரங்களுக்கும் ஏற்பாடு செய்தார்.
நடுவில் திருமணம் செய்து கொண்டார் – 1989 -ல் அதிபன் போஸ் என்கிற நபருடன். (இதை பற்றிய ஒரு இடுகை – கனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல் ) ஆனால் இது விவகாரத்தில் (விவாகரத்தில்) முடிந்தது. இந்த அதிபன் சிவகாசியைச் சார்ந்த ஒரு மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
நான் அண்மையில் அதிபனுடைய ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் சிறுவயதில் ஊட்டியில் lovedale பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர் சொன்னார் – கருணாநிதி குடும்பம், திருமணத்திற்குப் பின் மோசமான, ஈனமான வகையில் போஸ் குடும்பத்தின் சொத்துக்களை அபகரிக்கப் பார்த்தது. எண்ணிறந்த நேரடியான / மறைமுகமான உருட்டல்கள் மிரட்டல்கள் போஸ் குடும்பத்திற்கு. பாவம் அதிபன் போஸ், மனம் நொந்து போய், வாழ்க்கையை வெறுத்து அமெரிக்கா சென்று விட்டார். இப்போது அவர் சந்தோஷமாக இருப்பதாகக் கேள்வி. (அப்போ அதிபன், நீங்க இந்தியன் வங்கியிலிருந்து வாங்கிய கடனைத் திரும்பிக் கொடுத்துடுவீங்க இல்லையா?)
கனிமொழிக்கு இது சம்பந்தமாக ஒரு குற்ற உணர்ச்சி இருக்கலாமோ என்னமோ, பாவம்.
பின் இந்த அம்மையார் தொடர்ந்து கிவிதை எழுதிக் கொண்டிருந்தார். ஜால்ராக்களும் இவரைக் கண்டு கொண்டனர், ‘உதவிகளும்’ அவர்களுக்குக் கிடைத்தன. பின் கவிஞர் என்று சில அரைகுறைகளால் பாராட்டப் பட்ட பிம்பங்களோடு வளைய வந்து கொண்டிருந்தார். தன்னை ஒரு மகத்தான பெண்ணிய வாதியாகவும் கருதிக் கொண்டார்.
பின் இன்னொரு திருமணம்.
ஆனால், கனிமொழிக்கு சிறு வயதில் என்ன பணப் பிரச்சினைகள் இருந்தனவோ – என்ன காரணமோ தெரியவில்லை. அவருக்கு அப்படி ஒரு ‘பஞ்ச’ கால மனப்பான்மை. ஐயோ, இவ்வளவு நாள் ‘அள்ளாமல்’ அநியாயமாக விட்டு விட்டேனே, ஐயகோ என்ற கையறு நிலை. நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது. மேலும், பணத்துக்கும், பதவிக்கும் – போட்டியும் பொறாமையும் அவர் தகப்பனாரின் எண்ணிறந்த வழித்தோன்றல்களில் அதிகம் – இந்தப் போட்டியும், பஞ்சமும் சேர்ந்து அவரை எது கிடைத்தாலும் லபக் லபக் என்று, தேவையோ இல்லையோ – முழுங்கி விடப் பாடாய்ப் படுத்துகின்றன என நினைக்கிறேன்.
சில காலம் முன்பு கார்த்தி (இவர் ப சிதம்பரம் அவர்களின் பெருஞ்செல்வப் புதல்வர்) யுடன் சேர்ந்து கொண்டு இணைய தளம் இணையாத குளம் என்று ஒரு சுற்றும் வந்தார். விடுதலைப் புலிகளையே ஏமாற்றி ‘ஆட்டையைப் போட்ட’ ஜெகத் கஸ்பருடன் சேர்ந்து மெட்ராஸ் மங்கமமும் நடாத்திப் பார்த்திட்டார்.
பின்பு திடீரென்று அரசியலில், படுகேவலமான பங்காளிச் சண்டை காரணமாக குதித்தார்.
“என்மேல் சில எதிர்பார்ப்புகள் இருந்தன, அப்போது நான் தயாராக இருந்தேன்” என்றார், அமுக்கலாக.
‘தயார்‘ என்றால் என்ன என்று அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது.
தயார் = இமயமே மயங்கும் அளவுக்கு, மானம், மரியாதையை, சூடு, சொரணை அற்று ஊழல் செய்யும் மனப்பான்மை, புளுகு மூட்டைகளைப் பேச்சாக மாற்றுதல்.
—
ஆக, கனிமொழியின் வளர்ச்சிக்கும், உருமாற்றங்களுக்கும் காரணங்களாக நான் நினைப்பது: கயமைநிதி (முதற்கண்), சிறுவயதில் அன்பும் அரவணைப்பும் இல்லாமை, ‘பஞ்ச’ மனப்பான்மை, அதனால் விளைந்த பேராசை, குற்ற உணர்ச்சி, பாதுகாப்பின்மை உணர்வு இன்ன பிற…
ஆனால், என்ன இருந்தாலும் ஊழல் ஊழல்தான். அயோக்கியத்தனம் தண்டிக்கப் பட வேண்டியதுதான்…
அடுத்த இடுகை: கனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ (துயரம் தொடரும்…)
02/04/2011 at 11:48
Wow. Good Article and Exhaustive Research which others cannot do it. Keep Rock. I belive U must be close person to Kanimozhzi
04/04/2011 at 20:00
இல்லை நண்பரே, கனிமொழிக்கும் கவிதைக்கும் எவ்வளவு தூரமோ, அந்த அளவுக்கு கனிமொழியும் நானும் நெருக்கம். 8-)
02/04/2011 at 23:18
very good analysis