அஞ்சும்நெஞ்சன் கதை (முற்றும், சீக்கிரம்)

03/04/2011

(அல்லது) மதுரைக்கோழை கதை…

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நான் மதுரைக்குச் சென்றிருந்தபோது பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். இதில் சில ‘மனித உரிமை’ ஆர்வலர்களும் (உண்மையான நேர்மையாளர்கள் – இவர்கள் துட்டு வாங்கிக்கொள்ளும் ரகமோ அல்லது பொறுப்பற்ற விதத்தில் உளறிக் கொட்டுபவர்களோ, மைக்கினைப் பார்த்தால் மயங்குபவர்களோ, எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையோ, காவல் துறையையோ  ஏசுபவர்களோ அல்ல) அடங்குவர். நாட்டு நடப்புக்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம், மற்றும் என்ன செய்யலாம் என்றும் யோசித்தோம். எவ்வளவோ விஷயங்கள்…

நாம் தினகரன் அலுவலகம் எரிப்பு+கொலைகள், தா கிருஷ்ணன் கொலை, ‘வீச்சரிவாள்’ பஞ்சாயத்து இன்னபிற அயோக்கியத்தனங்களை அறிவோம். இவற்றின் பின் இருந்த, இருக்கும் சூத்திரதாரியான அழகிரி என்கிற நபரையும் அறிவோம்.

ஆனால் மதுரையில் (மற்றும், திமுகவின்  ‘தென் மண்டல நாயகரின்’ ஆட்சி கோலோச்சப் படும் இடங்களிலெல்லாம்), என்ன கேடு, என்ன ஊழல், என்ன கொலை, என்ன கொள்ளை – எது நடந்தாலும் அதன் பின்னணியில் அழகிரி இருக்கிறார் என்பது (திடமான, எதையும் தாங்கும் இருதயம் கொண்ட எனக்கே) நம்ப முடியாமல் இருக்கிறது.

ஆக, நான் இத்தனை நாட்கள் வரை சந்தேகித்தது எவ்வளவு உண்மை என்று உணர்ந்தேன். ஒரு சாதாரண திருட்டு வீடியோ வாடகைக்கடை நடத்தியவர், எப்படி  இப்போது தென் தமிழகத்தையே கயமையுடன் சுரண்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியம். (சசிகலா அம்மணியும் இதே மாதிரி, வீடியோ கடை வைத்து மாமேதையானவர் தான்!)

மறைந்திருந்து, நிராயுதபாணியாக உள்ள மக்களைத் தள்ளிச் சாய்ப்பதும், எரித்து மாய்ப்பதும், திமிரெடுத்து பகிரங்கமாக ஊழல் செய்வதும், தனக்குத் தானே குண்டரடிப்பொடிகளை வைத்து ஆபாச வர்ண ப்ளெக்ஸ் பலகைகள் வைத்துக்கொண்டு அவற்றின் பின்னால் பாதுகாப்பாக வளையவருவதும்,  அவர் தந்தையுடன் பிணக்கு வந்த போதெல்லாம் அழுவாச்சியா வந்து மதுரையில் குமுறுவதும், கேவலம் இந்தக் குப்பைமொழி ஆங்கிலம் பேசமுடியாத காரணத்தால் பயந்துகொண்டு நாடாளுமன்றமே போகாமல் இருப்பதும், மக்களுக்கு லஞ்சம் கொடுத்தாத்தான் காரியம் நடக்கும் என்கிற தைரியம் அற்ற கோழை மனப்பான்மையும், நீதிமன்ற நடவடிக்கைகளை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் ஓடுவதும் – எல்லாம் வெறுப்புக்கும் நகைப்புக்கும், மாபெரும் தண்டனைகளுக்கும் ஏற்றவை.

ஆனால், நாம் உருண்டு உருண்டு சிரிக்க வேண்டிய விஷயம் இதில் என்னவென்றால், இந்த உதிரியின் பட்டப் பெயர்: ‘அஞ்சாநெஞ்சன்…’ – ‘ஆண்மையின்’ உச்சகட்ட ஆளுமை! என்ன கேவலம், என்ன நகைச்சுவை உணர்ச்சி!

இந்த அஞ்சும்நெஞ்சனின் ஆட்சி(!) எப்படி என்பதற்கு ஒரு கோரமான எடுத்துக்காட்டு, கீழே…

தோழர் லீலாவதியை நாம் மறக்க முடியுமா?

அவரது நினைவு தினம்: 23 ஏப்ரல்.

தோழர் லீலாவதி

இந்த குண்டர் தலைவர் அவர்களால் ‘பாதுகாக்கப்படும்’ தொழில்களில் ஒன்று ‘மதுரைக்கு குடிநீர் வழங்குதல்’ – சார், எல்லாம் துட்டுக்குத்தான். எதையும் இலவசமா கொடுத்துருவான்களா, இந்த உதிரிகள்?

முதலில் மதுரையை வற்ற வைப்பார்கள். பின்பு ஆழ்துளைக் கிணறுகள் நோண்டுவதற்கும்,குழாய்கள் இடுவதற்கும் மக்கள் பணத்தைத் திருடுவார்கள். பின் இந்த குடிநீர் திட்டத்தை பணி செய்யமுடியாமல் தடுப்பார்கள். அடக்கமாக இருக்க வைப்பார்கள். அதற்குப் பிறகு வண்டிகளில் நீர் கொடுக்கும் ‘தொழில்’ செய்து சம்பாதிப்பார்கள். (நண்பர்களே, இதற்கும் அரசே அடக்கமாக நடத்தும் கேபிள் தொழிலுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள்!)

இதைத் தட்டிக்கேட்ட சிபிஎம் கட்சியைச் சார்ந்த கவுன்சிலரான (வார்டு 59, மதுரை மாநரகாட்சி) லீலாவதியை, தம் மக்களுக்கு உண்மையாலுமே உழைத்தவரை, 23 ஏப்ரல் 1997 அன்று பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்தார்கள்.

இந்தக் கொலையின் முன்னணியில் இருந்தவர்களின் பின்னணியில், இருந்தது, இருப்பது, இயக்கியது தென்மண்டலத் தானைத் தலைவர். அவர் தானே தென்னாட்டு திமுகவின் சூத்திரதாரி?

கீழ்கண்ட சுட்டிகளில் மேலும் விவரங்கள் இருக்கின்றன:

Com Leelavathi : Valiant Fighter of Toiling Mass
http://hastalavictoriasiambre.blogspot.com/2009/04/comrade-k-leelavathi-fighter-who-laid.htm
l

K. Muthuramalingam And Others vs The State on 19 June, 1997
http://www.indiankanoon.org/doc/762402/

=-=-=-=-=-=

முடிந்தால், சில நாட்கள் கழித்து, தா கிருட்டிணன் கொலை வழக்கில் இருந்து எவ்வளவு கயமையுடன் (ஆனால் மெச்சத் தகுந்த ‘புத்திசாலி’த்தனத்துடன்) இந்த அழகிரி தப்பித்தார் (அதாவது கருணாநிதி தப்பிக்க வைத்தார் என்பதை) என்பதைக் காணலாம்.

இந்த அயோக்கியத்தலைவரிடமிருந்து மதுரையை மீட்க திரும்பி சுந்தரபாண்டியன் தான் வரவேண்டுமோ என்னமோ. அல்லது சுந்தரபாண்டியனின் வாரிசு ஜெயலலிதா தான் வரவேண்டுமா?

அல்லது கனிமொழியே உட்குடும்பச் சண்டைகளின் காரணமாக, அழகிரியை அமுக்கி,  நமக்கு உதவி புரிவாரா? மணல் வாரி அம்மனே போற்றி! உங்கள் உதவி தேவை, போற்றி போற்றி!!

=-=-=-=-=-=

மீண்டும் மீண்டும் நாம் இப்போது நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி:

இத்தேர்தலில் நாம் அழித்தொழிக்கப் போவது எதனை?

6 Responses to “அஞ்சும்நெஞ்சன் கதை (முற்றும், சீக்கிரம்)”


 1. ஒத்திசைவின் தமிழும் அருமையான இலக்கிய சுத்தமான பதிவும் என்னை கவர்ந்தவை.

  அதே நேரம் நானும் சராசரி மனிதன் ஆசாபாசங்கள் உண்டு. அந்தவகையில் என்னை தப்பாக நினைக்கவேண்டாம் வெள்ளாந்தியிமில்லை, மணல்வாரி அம்மன்மீது சமூகம் சார்ந்து வெறுப்பிருந்தாலும் அவர்மீது எனக்கு ஒரு மயக்கமும் உண்டு!

  • ramasami Says:

   எனக்கும் தான் அம்மயக்கம் உண்டு, நண்பர் ‘நந்தன்’ அவர்களே! கனிமொழி ஒரு புத்திசாலி என்பதிலோ, முன்னொரு காலத்தில் அவர் தானுண்டு, தன் தாயுண்டு என்று இருந்திருக்கலாம் என்பதிலோ எனக்கு சந்தேகமில்லை.

   ஆனால் இப்போது அவர் தமிழகத்தையே, ஏன் இந்தியாவையே ‘உண்டு’கொண்டிருப்பதுதான் பிரச்சினையே!

 2. sruthi Says:

  உங்களின் சமீபத்திய பதிவுகள் அத்தனையும் படித்தேன்…பெருமூச்சு விடுவதை தவிர என்ன செய்ய..நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.


 3. […] துறையானது என்றறிக. (இதற்கும் லீலாவதி, தாகிருஷ்ணன், ஆலடிஅருணா, அண்ணாநகர் […]


 4. […] ஆட்சி வந்த பின்னர், கம்யூனிஸ்ட் லீலாவதியை (இவராவது நன்மை செய்ய முயன்றார், […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s