கனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 2

03/04/2011

பயப்படாதீங்க. இப்படி இக்குடும்பத்தின் கொள்ளைக் கதைகளைப் படித்துக் கொண்டே இருந்தால் ரொம்ப மனசு இறுக்கம் அடைஞ்சிடும்னுட்டு.

எனக்கும் அது தெரிகிறது. ஆகவே, இக்குடும்பம் இப்படியே வளர்ந்தால்  என்ன ஆகும் என்பதை ஒரு நகைச்சுவை(!) உணர்ச்சியோடு இப்பதிவின்  கீழ்ப்பகுதியில் எழுதியுள்ளேன். நீங்கள் இறும்பூது அடைய வேண்டுகிறேன்..

இதன் முதல் பாகம் படித்தீர்களா?

எப்படி கனிமொழி மணலை ‘அள்ளுகிறார்?’

கீழ்க்கண்ட செய்திகள், நான் சேகரித்த விவரங்களின் ஒரு பகுதி. (பலருடன் பேசினேன்; ஒரு மணலைக் கடல் போல் குவித்து வைத்த கோடவுன் மாதிரியான அமைப்புக்கும் சென்று வந்தேன். மன்னிக்கவும். நான் எடுக்க முடிந்த ஒன்றிரண்டு புகைப்படங்களையும் பிரசுரிக்கப் போவதில்லை. ஏனெனில் இப்படங்களை எடுத்தபோது, பக்கத்திலிருந்த  வாட்ச்மன் கிழவர் கைகூப்பிக் கேட்டுக்கொண்டார் – ‘என் பொழப்புல மண்ண அள்ளிப் போட்டுபிடாதீங்க சாமி.’)

நான், சில வருடங்கள் முன்பு வரை, தமிழகத்தில் மணல் கொள்ளை நடக்கிறது, ஆனால் நாம் தான் அதற்குக் காரணம், ஏனென்றால், நாம்தான் இந்தக் கொள்ளையடித்த மணலை வாங்குகிறோம் என்ற குற்றவுணர்ச்சியுடன் இருந்தேன். ஆனால்…

ஹோசூர், தருமபுரி மாவட்டங்களில் மணல் கொள்ளை (மற்ற இடங்களைப் போல) ஜாம் ஜாமென நடந்து வருகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்து, எதிர்த்து கொள்ளையர்களிடமிருந்து உதையையும் வாங்கிய என் நண்பர் ஒருவரை, இதைப் பற்றிய விவரங்களை அறியச் சொன்னேன். விவரங்கள் தெரிந்த போது, கனிமொழி அவர்களின் ஆட்சியில், நாட்டில் மணலாறு ஓடி, மற்ற மாநிலங்களுக்கும் உதவி செய்வதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்!

மணல் கொள்ளை நம்முடைய அண்டை மாநிலங்களில் மிகுந்த கெடுபிடியால், ‘வேண்டிய’ அளவு நடப்பதில்லை. அங்கு ஆற்று மணல் தட்டுப்பாடு மிகவும் அதிகம். ஆஹா, அதனால் என்ன, நாம் தான் இருக்கிறோமே – அவர்களுக்கு உதவி செய்வதற்கு…

நம்முடைய ஆற்றுப் படுகைகளில் பெரிய இயந்திரங்களை வைத்து மணலைச் சுரண்டி, எறும்பு போன்று வரிசையாகப் போகும் மாபெரும் டம்பர் லாரிகளில் ஏற்றி, நமது மாநிலத்தின் எல்லையை கடந்து, பிற மாநில எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாபெரும் கிடங்குகளில் சேமிக்கின்றார்கள், இக்கொள்ளையர்கள். அங்கு லாபமோ கொள்ளை லாபம். அவ்வரசுகளும் இதைக் கண்டு கொள்வதில்லை, எப்படியோ அவர்கள் ஆறுகள் வன்புணர்ச்சி செய்யப் படாமல் விடப்படுகின்றனவே! (பாலக்காடு, ஆராமொழிக்கு (திருஆரல்வாய்மொழி) அந்தப் பக்கம், சித்தூர், கர்நாடகாவின் தென் மாவட்டங்கள் என்று பல இடங்களில் இம்மாதிரி கிடங்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.)

ஹோசூர் மாவட்ட எல்லையில் கர்நாடகத்தின் ஆனேகல் தாலுக்காவில் இப்படி ஒரு பெரிய மணல் கிடங்கிற்கு சென்றிருந்தேன், நண்பருடன். இதற்கு மணல் ஹோசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து வருகிறது. சென்னை-பெங்களூர் சாலையில் செல்லாமல், ஹோசூர்-தளி-கும்மளாபுரம்-ஆனேகல் வழியில் திருட்டுத் தனமாகச் செல்கிறார்கள்…

மாண்புமிகு கனிமொழி அவர்களுக்கு, நமது அண்டைய மாநிலங்கள் விழா நடத்தி பரிசில் வழங்க வேண்டும். தேசிய ஒருங்கிணைப்புக்கு இது உதவலாம்! ஹ்ம்ம்.

மணல் கொள்ளைக்காரர்கள் ஒரு கட்டுப்பாடு மிக்க படையைப் போல, ஒரு கார்பரேட் தொழில் போல, நுணுக்கத்துடனும், கமுக்கத்துடனும் செயல் படுகிறார்கள் – இணைய தளம், டை கட்டிக்கொண்ட நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் விற்பனையாளர்கள் போன்றவை மட்டும் தான் இல்லை! எனக்கு வந்த செய்திகளின் படி, மூன்றிலிருந்து எட்டு நபர்கள் தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையை மேற்பார்வை இடுகிறார்கள். இவர்கள், கொள்ளையர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் மாபியா போன்று ஒருங்கிணைக்கிறார்கள்.

ஆனால், இந்த மாபியாவுக்கு அரசியல் உதவிகள் தேவை. சட்டசபை நடவடிக்கைகள், காண்டிராக்டுகள் பெறுதல், அளவுக்கு மிக்க அதிகமாக மணல் வாருதல், ஒப்பந்தத்துக்குப் புறம்பாக ராட்சத வண்டிகள் உபயோகித்தல், திருடிய மணலுக்கு கிடைக்கும் அநியாய லாபம் (யோசியுங்கள் நண்பர்களே, குத்தகைக்கு, எடுத்துக்கொள்ள அளவிற்கு மேல் ‘மணல் கொள்ளையர்களினால்’ எடுத்துக் கொள்ளப்படுவதினால், சென்னையில் மட்டும் அரசுக்கு, ஒவ்வொரு வருடமும் சுமார் 210 கோடி ரூபாய் நஷ்டம்), கொலைகளை அமுக்குதல், எதிர்ப்பவர்களை  மிரட்டுதல், ஆகவே வருவாய்த்துறை-காவல்துறை சமாளிப்புகள்… போன்றவை.

இங்குதான் நம் கழகக் கண்மணி கனிமொழி பிராட்டியார் வருகிறார். பேரம் பேசுகிறார், தன் தலீவருடன் (யாரிவர், எல்லாம் நம்ம நண்பர் கருணாநிதிதான்!) உதவியுடன்.

பேரம் படிந்தபின் ஒப்பந்தம்: ஒவ்வொரு மாதமும் இந்த மணல் மாபியா குழுவிடமிருந்து மூன்று கோடி ரூபாய் பணம் வர வேண்டும். ‘மிச்சத்தை’ நாங்க பாத்துக்கறோம்.

(உண்மையில் பார்த்தால், ‘கமிஷன்’ எப்படி கணக்கிடப் படுகிறது என்று யோசித்தால், இந்த 3 கோடி மிகுந்த குறைவான விகிதமாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புரளும் இந்தத் தொழிலின் கையூட்டு மதிப்பு இவ்வளவு தானா? வருடத்துக்கு பிசாத்து 36 கோடி தானா? ஆனால் இந்த எண்ணிக்கையைத்தான் நண்பர்கள் சொன்னார்கள். இப்போதுதான் தோன்றுகிறது. ஒருக்கால், கையூட்டு ‘குடும்பத்தின்’ அனைத்து உறுப்பினர்களுக்கும் ‘கைச்செலவிற்குப்’ போகிறதோ என்னமோ? (ஆய்ந்து அறிய வேண்டும் இது – ஆனால் நேரமில்லை))

எது எப்படியோ, கனிமொழியின் கவலைகள் பற்றி நமக்குத் தெரியுமாதலால், நாம் அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏதோபாவம், மாசாந்திர கைச்செலவுக்குத்தானே இந்தப் புள்ள அப்படி அலையுது… பரிதாபமா இருக்குது…

கைச்செலவு கொஞ்சம் அதிகமா இருக்குதே என்று பார்க்கிறீர்களா? ஆனால் என்ன – ‘மணல்வாரி அம்மன்’ பலி கேட்கும்போது கொடுக்காமல் இருந்தால், ஆத்தா கோவிச்சிக்கும் இல்லியா…

கோபப்பட்டு சாபம் கொடுத்தால் பரவாயில்லை, ஆனால் கவிதை எழுதிவிட்டால்?? வேண்டாம்டா சாமி, இந்த வம்பு…

மணல் வாரி அம்மனே போற்றி!

உங்கள் உதவி தேவை, போற்றி போற்றி!!

கிவிதை எழுதாமை வரம் வேண்டும், போற்றி போற்றி போற்றி!!!

=-=-=-=-=

என்னை மன்னிக்க வேண்டும் நண்பர்களே… நான் ‘கணக்கு ஆசிரியர்’ போல என்ன முடிவாகச் சொல்ல வருகிறேன் என்றால்:

Moneyமொழி மணல்-money தேற்றம் (theorem ):
நீங்கள் ஏதாவது வீடு அல்லது மற்றைய கட்டுமானப் பணிகளில் கடந்த 5 வருடங்களில் ஈடுபட்டிருந்தால், உங்கள் பணத்தில் ஒரு பகுதி கனிமொழியைப் போய்ச்சேர்ந்திருக்கிறது.

தேற்றத்தின் பின்னூட்டம் (corollary): நீங்கள் தமிழ் நாட்டை ஒட்டிய பகுதிகளில்  கேரளத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திரத்திலோ வீடு (இன்ன பிற) கட்டி இருந்தானாலும் மேற்கண்ட தேற்றம் உண்மையாகத்தான் இருக்கும்.

‘மணல் வாரி அம்மன்’ இருள் தேற்றம்: அடுத்த சில பத்து வருடங்களில் அம்மன் இருளால், நீர்ப் பஞ்சம், பயிர்ப் பஞ்சம், உயிர்ப் பஞ்சம் மிகப் பெரிய அளவில் தமிழகத்தில் ஏற்படும்.

தேற்றத்தின் பின்னூட்டம் (corollary): அப்போது ‘குடும்பத்தினர்’ சீனாவையோ, அமெரிக்காவையோ ‘வாங்கி’ இருப்பார்கள் என்பதால் (சொல்ல முடியாது, இரண்டையுமே வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள்!) அங்கே செங்கோலோச்சுவர். ஆனால் மன்னிக்கவும் (முக்கியமாக ஸ்டாலின்!), அங்கேயும் கருணாநிதி தான் ஜனாதிபதி!

பின்னூட்டத்திற்கு  வீரமணியின் விழா பின்னூட்டம்: கருணாநிதிக்கு ‘அமெரிக்கா ஆண்டான்’ எனப்பட்டம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தால் கபளீகரம் செய்யப்பட MITயால் கொடுக்கப்படும். பின் மற்ற சொத்தைப்பல்கழகங்கள், ‘மெக்ஸிகோ கண்டான்,’  ‘கனடா கொண்டான்,’  ‘இரண்டாம் வாஷிங்டன்’ போன்ற பட்டங்களைப் பறக்க விடும்…

மேற்கண்டதிற்கு ‘விட்டேனா பார்’ பின்னூட்டம்: ஜெகத்ரட்சகன், சற்குணம், பிலிம் ரஜினி, பிலிம் கமல், வைரமுத்து, வாலி, ராமதாஸ், வடிவேலு, தங்கபாலு, பாவி ஜய், திருமாவளவன் போன்றோர் நிச்சயம் வெறி பிடித்து ஏதாவது விழா நடத்துவார்கள் அல்லது இந்தக் கழிசடைகளில் பங்கேற்பார்கள். ஆனால், அந்தக் கோரத்தை இப்பொழுதே நினைப்பானேன்?

சோகப் பின்னூட்டம்: ஸ்டாலின் அமெரிக்க துணை ஜனாதிபதியாகவும், தி முக இளைஞர் அணியின் தலைவராகவும் அவருடைய 98-ஆம் வயதில் தொடர்வார்.

அஞ்சா நெஞ்சனின் முன்னோட்டம்: நாம் TEXAS   போர்முலா மூலம், புஷ்ஷின் வழிகாட்டுதல் மூலமும் அடுத்த தேர்தலையும் வெல்வோம்.அடுத்த நூற்றாண்டிலும் கலைஞர் தான் ஜனாதிபதி! (ஐயோ!)

கனிமொழியின் கிவிதையோட்டம்:
ஒரு கொடுமையான கிவிதை இயற்றி, அமெரிக்காவின் அனைத்து கவிஞர்களையும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் ‘தள்ளி’ விடுவார்.  நோபல் பரிசையும் ‘வாங்கி’ விடுவார்! அப்புறம் என்ன, ஒரே வாஷிங்டன் வங்கமம் அல்லது சிகாகோ சிங்கமம் தான்… வழிச் செலவுக்கு சூரியனின் ‘spectrum ‘ காலி செய்யப்படும். இப்படித்தான் இவ்வகிலத்திற்கே  அம்மன் இருள் ஏற்படும். பின்பு, அன்புத்தந்தை கருணாநிதிக்கு மாத்திரம் இந்த spectrum நிறப்பிரிகையில் மஞ்சள் நிறம் ஒதுக்கப் படும். பச்சை நிறம் குப்பையில் விட்டெறியப் படும்.   ஆமென்.

கனிமொழியின் புதல்வனின் முன்னோட்டம்: சொல்ல முடியாது. இந்த வருடம், கனிமொழியின் செல்லப் பையன் – ‘மணலே மங்கையின் பாக்கியம்‘ என்று அவனுடைய ‘நிறப் பிரிகை’ கம்பெனி சார்பாகப் படம் எடுக்கலாம். அவனுக்கு 10 வயது ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

சினிமா-தொலைக்காட்சி-நிதிகளின் ஓட்டம்: அனைத்து இளைஞர், குழந்தை, சினை நிதிகளும் சேர்ந்து படம் படம் பப்படமாக எடுத்து ‘ஹாலிவுட்’ என்கிறதை ஒழித்து விடுவார்கள். சந்தோஷம் தான். ஆனால் பயமாகவும்  இருக்கிறது, வெள்ளைக்காரர்களின் குத்தாட்டம் சரிவராது என்று தோன்றுகிறது….

ஆஆஆ…  அப்பாடா! என்னுடைய பயங்கரமான கொடுங்கனவு நிறைவு பெறுகிறது.

— பின்னூட்டங்கள் ஒரு தொடர்வதை..என் செய்வது, இந்த கருணாநிதி கும்பலை வைத்துக்கொண்டு…

பின் குறிப்பு: இத்தேர்தலில் நாம் அழித்தொழிக்கப் போவது எதனை?

4 Responses to “கனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 2”


  1. சவுக்கு தளத்திலிருந்து இங்கு வந்தேன். கருணாநிதியையும், குடும்பத்தையும், குறிப்பாக அலைவரிசை ஊழல் விவகாரம் பூதாகாரமாக கிளம்பும் வரை ஊடகங்களால் ஆழமாக அலசப்படாத கனிமொழியையும் பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். சில சமயம் உங்கள் தாக்குதல்கள் மிகுந்த தனிப்பட்ட ரீதியில் உள்ளன. பொது வாழ்க்கையில் பிரவேசித்து விட்ட ஒரு நபரை மதிப்பிட பல அளவுகோல்கள் தேவையாக உள்ளன. தனி வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அந்த அளவுகோல்களில் ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, தனி வாழ்க்கையின் அடிப்படையில் நீங்கள் செய்யும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம்.

    உங்களது அணுகுமுறையில் எனக்குள்ள வேறுபாடு என்னவென்றால், வேறு வழியில்லை என்று ஜெ.யை முன்னிறுத்துவது. சு. சுவாமி நேர்மையாளர் என்று சொல்கிறீர்கள். அந்த சுவாமிதான் சொல்கிறார் ஜெ. சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்; சுயமாக செயல்படுவதில்லை என்று. இந்தத் தேர்தலின் மூலம் பயனடைவது க குடும்பமாக இருந்தாலும் சரி, ச குடும்பமாக இருந்தாலும் சரி, தமிழகத்திற்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. என்ன செய்யலாம் என்பது சாமான்யர்களான எங்களுக்குத் தெரியவில்லை. உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் இதைப் பற்றி வித்தியாசமாக சிந்தித்து பதிலளித்தால் நல்லது.


  2. I read this article just now. Whatever you mentioned about the after effects of illegal sand mining are happening today. particularly, ‘மணல் வாரி அம்மன்’ இருள் தேற்றம் .

    Superb and continue your work.

    I’ve started reading your articles from past and hopefully within a month I’ll complete it.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s