திமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை?

09/04/2011

( நான் சிறுவயதில் ‘முத்து காமிக்ஸ்’ புத்தகங்களை படித்திருக்கிறேன்.  அப்புத்தகங்களில்  அகொதீக என்றொரு கயமை இயக்கம் இருக்கும் – இதற்கு விரிவு ‘அழிவு, கொலை, கொள்ளை, தீமை கழகம்.’ – இக்கழகத்தை எதிர்த்துத் தான் பல்வேறு சாகச வீரர்கள் போராடுவார்கள். இப்போது நினைத்தால் என்னை மட்டுமல்ல, நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக தான் அகொதீக என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.)

நண்பர்களே! உங்கள் ஆதரவிற்கு (ஏகோபித்த பேராதரவிற்கு என்றேல்லாம் பொய் சொல்ல மாட்டேன்) நன்றி. பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், யோசனைகள்  கொடுத்தவர்களுக்கும், ஏன்,  மிரட்டியவர்களுக்கும், மிரட்டுபவர்களுக்கும் கூட நன்றி.

என்னை சில முகம் தெரிந்த நண்பர்கள் ‘நடுநிலைமையற்றவன்’ என்கிறார்கள். உண்மைதான். என்னுடைய நிலை – கடுநிலைமை. எதை  ஒழிக்க வேண்டுமோ, அதற்கு முகாந்திரங்கள் இருந்தால் அது ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு மாற்றாக ஜெயலலிதா ஆட்சி எப்படி நன்றாக இருக்க முடியும் – ஏன்  நீ  அவர்களைத்  தாக்குவதில்லை என்று கேட்டால் – நாம் விதண்டாவாதம் பேசும்படியாகத்தான் இருக்கும்.

ஏனெனில், என்னைப் பொறுத்தவரை, இந்த திமுக ஆட்சியை விட, உலகத்தில் கேடுகெட்ட எந்த ஆட்சியும் (காங்கோ-வின் லாரன் கபிலா, மன்மோகன் ‘சோனியா காந்தி’ சிங், இத்தாலி-யின் பெர்லுஸ்கோனி – போன்ற அயோக்கியர்களின் அரசுகள்) விட மிக நல்லதாகவே இருக்கும். இப்படிப்பட்ட கயமை நிறைந்த நிதிகளின் ஆட்சியை, உலகில் எவருமே கண்டிருக்க மாட்டார். என்ன, இந்த போல்பாட், ஸ்டாலின், ஹிட்லர் போல இந்த திமுக, எமது மக்களைக் கூண்டோடு ஒழிக்கவில்லை (ஆனால் அக்காரியத்தை ஈழத்தில் செய்தனர், செய்துகொண்டிருக்கின்றனர்)- அவ்வளவு தான். ஆனால் மற்றபடி எல்லா விதங்களிலும் தமிழ் மக்களை காயடிக்கின்றனர்.

நான் 2G  பற்றியோ, அல்லது டிவி ஊழல்கள் பற்றியோ இன்னபிற ‘பரவலாக அறியப்பட்ட’ ஊழல்கள் பற்றியோ  எழுதவில்லை. மற்றவை பற்றி, அதுவும் ஒரு எடுத்துக்காட்டாகத் தான், சில விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். உண்மையிலேயே இந்த திருட்டுக் கழகத்தின் ஊழல்களை (அதுவும் எனக்குத் தெரிந்த அளவில்) எழுதவேண்டுமேன்றாலும் கூட என்னிடம் சுமார் 340 விதமான (மிக அயர்ச்சி + அவநம்பிக்கை தரும்) குறிப்புகள் உள்ளன.  இவற்றை விவரித்து எழுதவேண்டுமேன்றாலும் கூட சுமார் 400 பதிவுகள் இட வேண்டும். எழுதுவது ஒருபுறம், மன உளைச்சல்கள் ஒரு புறம், அதற்கான நேரத்தேவை மற்றொரு புறம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை நாம் எண்ண வேண்டியது மற்றும் செயல்படுத்த வேண்டியது என்ன?:

 • ஜெயலலிதாவின் கொசுக்கடியைப்பற்றி பயந்து நாம் கருணாநிதிப் புற்றுநோயை ஆரத் தழுவலாமா?
 • வை கோபால்சாமி, ராஜா (ராசா ‘கைய வெச்சா’ அல்ல), EVKS இளங்கோவன், இல கணேசன், ராமகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற பெரும்பாலும் ஊழலற்ற, நேர்மையான, மக்களுக்காக  உழைக்கும், தமிழகத்தைப் பற்றியும், மானுடகுலம் பற்றியும் எண்ணும், செயலாற்றும் தலைவர்கள் இன்னமும் (பல கட்சிகளில் சிதறி) உள்ளனர்  – ஆனால், இவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறதா? (இவர்கள்  அனைவரும்  ஒன்றேபோல் சிந்திப்பவர்கள் என்றோ, வடிகட்டின நேர்மையாளர்கள் என்றோ சொல்லவில்லை (‘each unto his own’). ஆனால் இவர்கள் போன்றவர்கள், மனதாரப் பொய் சொல்ல மாட்டார்களென்றும், அடிப்படை மனித நேயம் மற்றும் நியாய உணர்வு மிக்கவர்கள் என்பதிலும் இரு கருத்துக்கள் இருக்க  இடமில்லை.)

உங்களிடம், நான் சில  விண்ணப்பங்களை  வைக்கிறேன்:முடிந்தால்  செய்யவும்.

 • தேர்தல் மிகக் குறைந்த நாட்களில் நடக்கப் போகிறது. நீங்கள் நேரடியாக என்ன செய்யமுடியுமோ எதைச் செய்யவேண்டுமோ, அதைச் செய்யவேண்டும். நம் தமிழகத்தை, ஏன் தமிழத்தை ஒழித்துக் கட்ட, கருணாநிதி கும்பலுக்கு இன்னொரு முறை அனுமதியளிக்கக் கூடாது. (நான் நேரடியாக சில விஷயங்கள் செய்து வருகிறேன். மேலும் தேர்தல் தினத்தன்று சிதம்பரம், கடலூர், தஞ்சை (முடிந்தால் புதுச்சேரி) போன்ற இடங்களில், சில தைரியம் வாய்ந்த நண்பர்களுடன், தேர்தல் பார்வையாளர்களுக்கு என்ன உதவி செய்யமுடியுமோ அதைச் செய்யலாம் என்று எண்ணம். பார்க்கலாம்)
 • உங்கள் ஓட்டை வாக்குச் சாவடி ஆரம்பித்த உடனேயே வரிசையில் நின்று போடுவது நன்று. மதியம் தான் வரிசைநீளம்  குறைவாக இருக்கும் என்று போனீர்களானால் உங்கள் ஓட்டை அந்த கருணாநிதி கும்பல் போட்டுவிடும். அவர்கள் இதில் மிக்க திறமைசாலிகள் – நெடுங்கால அனுபவமும் இருக்கிறது, இப்பதர்களுக்கு.
 • ஓட்டுப் போடாதவர்களை, விரக்தியில் இருப்பவர்களை, ஊக்கப் படுத்தி (அல்லது கருணாநிதி கும்பல் பூச்சாண்டிகளைக் காட்டி) ஓட்டுப் போட வைக்கலாம்.
 • கண்மூடித்தனமாக திமுகவை (அல்லது அதனுடைய உதிரிக் கூட்டணிக் கட்சிகளை) ஆதரிப்பவர்களும் நம் மக்களே. கெட்டாலும் நம் மக்கள் மேல் மக்களே! ஆகவே, நம் மக்களுடன்  பேசி, அவர்களுக்கு உண்மையான நிலவரங்களைப் பற்றிச் சொல்லலாம்.
 • இளைஞர்களிடம் பேசி ‘எல்லாருமே, அனைத்து அரசியல் வாதிகளும் அயோக்கியர்கள் தான், ஆகவே நான் ஓட்டுப் போட்டு என்ன புண்ணியம்’ என்ற அவர்களின் எண்ணங்களை மற்ற முயற்சிக்கலாம். ஒவ்வொரு ஓட்டும், நமது தலைவிதியை மாற்றக்கூடியது என்ற எண்ணம் வர உதவலாம்.
 • இணையத்தில் மிகக் குறைந்த தளங்களே, கயமைநிதி குடும்பத்தைப் பற்றி (http://idlyvadai.blogspot.com, http://www.savukku.net/ போன்றவை) விலாவாரியாக எழுதுகின்றன. இவைகளை நீங்கள் ஊக்கப் படுத்த வேண்டும். அவைகளை இன்னும் பரவலாக அறியப்படச் செய்ய வேண்டும். (உங்களுக்கு இதுபோன்ற தளங்கள் பற்றித் தெரியுமானால், அவைகளைப்பற்றி நீங்கள் எழுதலாம், ஒத்திசைவில் கூட பின்னூட்டங்களிட்டுத் தெரிவிக்கலாம்) நீங்கள் வலைப்-பதிவராக இருந்தால், நீங்கள் இவற்றைப் பற்றி எழுதலாம். பின்னூட்டங்கள் இடலாம். உங்கள் எண்ணங்கள் இணையத்துக்கு, அதன் வலைப்பூக்களுக்குத் தேவை.
 • எனக்கு facebook, ட்விட்டர், sms போன்றவற்றில் அனுபவம் இல்லை. ஆனால், இம்மாதிரி தளங்களை/ஊடகக் கருவிகளை உபயோகிக்கும் நண்பர்கள், அவற்றை திமுகவை ஒழிக்கப் பயன் படுத்தலாம்.

ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு – ‘do whatever it takes.’  – நாம் பணி செய்ய வேண்டும், நண்பர்களே!. நமக்காக, நம் தமிழகத்திற்காக, நம் குழந்தைகளுக்காக, மானுடத்துக்காக…

மீண்டும், மீண்டும் உங்களைச் சிந்திக்க நான் வேண்டுவது என்னவென்றால்… நாம் உதிர்க்கப்போவது எதனை?

8 Responses to “திமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை?”

 1. krishna Says:

  uங்களைபோல நானும் முடிந்தவரை எனக்கு தெரிந்தவர்களுக்கு புரிய வைக்கிறேன்….நல்ல கட்டுரை..

 2. unmai Says:

  என்னைப் பொறுத்தவரை, இந்த திமுக ஆட்சியை விட, உலகத்தில் கேடுகெட்ட எந்த ஆட்சியும் (காங்கோ-வின் லாரன் கபிலா, மன்மோகன் ‘சோனியா காந்தி’ சிங், இத்தாலி-யின் பெர்லுஸ்கோனி – போன்ற அயோக்கியர்களின் அரசுகள்) விட மிக நல்லதாகவே இருக்கும்.

  100% true.

 3. sathish Says:

  its true. i am waiting for the day that this psycho family goes out of the government. the only thing i am afraid of is, what if this kelavan had a last minute trick to turn votes towards him?

 4. viswamitra Says:

  முற்றிலும் உண்மை நண்பரே. என்னால் முடிந்ததைச் செய்கிறேன். மீண்டும் இந்த அ கொ தீ க வந்து விட்டால் ஒட்டு மொத்த தமிழ் நாடும் அழிய நேரும் என்ற அச்சம் இருக்கட்டும். உங்கள் பதிவை பலருக்கும் பரிந்துரைத்திருக்கிறேன்

  • ramasami Says:

   நன்றி ‘விஸ்வாமித்ர’ அவர்களே!

   அ கொ தீ க – இப்போதைக்கு ஒழிந்தது! (அடுத்த காமிக்ஸ் புத்தகம் வராமல் இருந்தால் சரி!)


 5. உங்களையும், இட்லிவடை, குறிப்பாக சவுக்கு பார்த்துதான் எங்கள் இணையப் பக்கத்தைத் துவக்கினோம்!! தேர்தல் முடிந்த பின் உங்களுக்கு எழுத வேண்டும் என்றே இன்று எழுதுகிறோம்!! எங்களையும் மற்றவர்க்கு அறிமுகப் படுத்துங்கள்! இந்தக் கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டம் குளோஸ்!! (எங்கள் வலைப பதிவில் ஒத்திசைவுக்கு லிங்க் கொடுத்துள்ளோம்)
  வருக… பின்னூட்டம் இடுக!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s