தேர்தல் நாள் ‘சுற்றுப்பயணம்’ – 1

15/04/2011

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தேர்தல் கமிஷன் மிகவும் ஒழுங்காகவும் முறையாகவும் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது – உதிரிகளின் அடாவடியையும், சில அதிகாரிகளின் நம்பவேமுடியாத ‘கருணாநிதிக்கு கூழைகும்பிடுகளையும்’ எதிர்த்து.

நான் தேர்தல் நாளன்று, கடலூர், சிதம்பரம், திண்டிவனம் சுற்றுவட்டாரங்களில் ‘சுற்றும்’ வாய்ப்புக் கிடைத்தது – என்னுடைய சில எண்ணங்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

நமது போலீஸ் கூட இப்படி ‘தலை நிமிர்ந்து’ வேலை செய்ய முடியுமா என்று தோன்றியது – இளம் ‘தமிழ்நாடு விசேஷ காவல்படையினர்’ – TSP – சிலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததினால். 15 பட்டாலியன்களில் (சுமார் 1000 காவலர்கள் ஒவ்வொன்றிலும்) 3 இளம்பெண்கள் மட்டுமே இருக்கும் அணிகள் – இவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆண்கள்-பெண்கள் கலந்த குழுக்கள் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனவாம் . மாலையில் தில்லை நடராஜன் கோவிலில் தைரியமான, இளைஞர்களுக்கே உரிய பளிச்சிடும் நேர்மையும், அநீதி கண்டு பொங்குதலையும்  – பண்புகளாகக் கொண்டிருந்த இளம் பெண் போலீசார்களைக் (தொப்பை இல்லவே இல்லை, கனவு கலந்த கண்களில் ஒரு குழந்தைத்தனம்) கண்டு. உண்மையிலேயே பெருமையாக இருந்தது. நம் தமிழகத்திற்கு இன்னமும் விடிவு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்மையாலுமே இருக்கின்றன என்ற நினைப்பே உவகை தருகிறது.

சிதம்பரத்தில் தோழர் பாலகிருஷ்ணன் தான் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன். காரணங்கள் சிலவே: 1. வாண்டையார்களின் அயோக்கியத்தனமான பொறுக்கி அரசியல்; 2. பாமக-விசி-திமுக அடிமட்ட உறுப்பினர்களிடையே நிலவும் வெறுப்புகள்; 3. CPI மற்றும் கூட்டணி கட்சிகளின் மகத்தான உழைப்பு; 4. திமுக ‘உழைத்துச்’ சம்பாதித்த மக்கள் வெறுப்பு.

இத்தொகுதிக்குட்பட்ட கிள்ளை (சிதம்பரத்திலிருந்து சுமார் 15 கிமீ) கிராமத்தில் சிறிது நேரம் இருந்தேன். மீனவர்களும், இருளர்களும், தலித்களும், கொஞ்சம் வன்னியர்களும் வசிக்கும் இடமிது. இங்குள்ள மக்களிடமிருந்த திமுக பற்றிய அடிப்படை அறிவு (ஆகவே வெறுப்பு) – வெறும் பணம் மட்டும் லஞ்சம் கொடுத்து அவர்களை வோட்டுப் போட வைக்க முடியாது என எண்ண வைத்தது. வெறும் ரேஷன் கார்டில் பெயர்மாற்றம் செய்ய சிதம்பரம் வரை  (அன்று மீன் பிடித்தால் தான், அவர்கள் வீட்டில் அரிசி பொங்கும் என்றிருக்கும்போது) ஓடி 5000 ரூபாய்  லஞ்சம் கொடுக்க வேண்டுமென்றால் – இவர்கள் அடக்கிக்கொண்டிருக்கும் கோபம், மிக அதிகம். இவர்களில் சிலர் திமுக குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்… கேட்கிறார்கள் “இவனுங்க என்ன அய்யா இவ்வளவு பணம் வச்சுக்கிட்டு பண்ணுவாங்க? ஏதோ ரெண்டுமூணு தலமொரைக்குன்னா  பரவால்லை. ஆனா இவனுங்க அயோக்கியனுங்க – எங்க ஒளிச்சு வெச்சுருப்பாங்க? ஏதோ தீவெல்லாம் வாங்கியிருக்காங்களாம்…”

திருமாவளவனும் ராமதாசும் மேடைகளில் கை கோர்க்கலாம். ஆனால் பல்லாண்டுகளாக இவர்கள் கயமையுடன் ‘உசுப்பு’ ஏற்றி தலித்களையும் வன்னியர்களையும் ஒருவருக்கொருவர் மோத வைத்து, தொடரும் கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் அஸ்திவாரம் போட்டது, அதில் குளிர் காய்ந்தது, காய்வது – அடிமட்டத் தொண்டர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது.

நான் திருமாவளவனின் கட்சிக்காரர்களை, இது வரை விசிலடிச்சான் குஞ்சுகளாக நினைத்து வந்தது தவறு (அதே போன்று பாமக தொண்டர்களையும்தான்) – மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன்….   இது எனக்கு மிகவும் நம்பிக்கையைத் தந்த விஷயம்.

எது என்னவோ, சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில், வாண்டையார்களின் பொறுக்கித்தனம், இதோடு, அடியோடு ஒழிந்தால் சரி…

கடலூரில் கருணாநிதி (வழக்கம் போல) அழுதகதை அடுத்த பதிவில்…

4 Responses to “தேர்தல் நாள் ‘சுற்றுப்பயணம்’ – 1”

 1. raju salem Says:

  very nice.All your postings are very correct and doing justice to the blog name “othisaivu”. But the bracketed comments are over dose,they distract me from the main mood of the article.

  • ramasami Says:

   You are correct – about the brackets, I mean.

   I lovingly hand over a bouquet of parentheses as a token of appreciation: (((((((((())))))))))

   All hail Discordia!

   :-)


 2. //தமிழகத்திற்கு இன்னமும் விடிவு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்மையாலுமே இருக்கின்றன என்ற நினைப்பே உவகை தருகிறது//
  மாறும் என்கிற நம்பிக்கை ஒருபுறம் மாறக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு மறுபுறம்!! ஆனால் நம்பிக்கை வீண்போகாது. என்று பத்திரிக்கையாளர் சுதாங்கனும் (http://sudhanganin.blogspot.com/) எழுதியுள்ளார்.
  நிச்சயம் தமிழகமும் நம் தேசமும் ஒரு மாபெரும் நன்னிலை அடைந்தே தீரும்!! உங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து படிக்க படிக்க, உங்கள் சொற்களின் பின் உள்ள உங்கள் மன நிலையையும் என்னால் படிக்க முடிகிறது.. நீங்கள் சொல்வது போல “நம்மால் முடிந்ததைச் செய்வோம்!!”

 3. M.S.Vasan Says:

  மக்க‌ளின் விழிப்புண‌ர்ச்சி ம‌ட்டுமே இந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் முக‌மூடிக‌ளை கிழித்து தோர‌ண‌மிடும் திண்மை கொண்ட‌து. பாட‌ம் க‌ற்போம், பின் பாட‌ம் புக‌ட்டுவோம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s