கனிமொழி: “அழகிரி, தயாநிதி, ராசாத்தி – மேல் குண்டர் சட்டம் பாய வேண்டும்!”

21/04/2011

கனிமொழி அவர்களா சொன்னார் இதனை?

சகோதர-சகோதரி யுத்தங்கள், தாய்-மகள் கலகங்கள், படு பயங்கர பகிரங்க குடுமிப்பிடிச் சண்டைகள் ஆரம்பித்து விட்டனவா என்ன? அதுவும் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே…அப்படியானால் தமிழகத்துக்கு விமோசனம் உண்மையிலேயே வந்து கொண்டிருக்கிறதா??


அவளா சொன்னாள்? (ட ட டாங்…)
இருக்காது! (ட ட டாய்ங்…) 

அது நடக்கவும் கூடாது…
நம்ப முடியவில்லை, வில்லை   இல்லை, இல்லை….

ஆம், ஆம், ஆம்! அவர் சொல்லியிருக்கிறார் இதனை. நாம்தான் நம்முடைய தேர்தல் ஜுரத்தில், இதனைக் கவனிக்க மறந்துவிட்டோம்… உண்மையாலுமே!

வெறும் கனிமொழியாக இருந்த போதே கொள்ளையடிப்பில் உயர்கல்வி (‘நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம்’ அன்றோ?) பெற்றவருக்கு, தற்போது  கனிமொழி  எம்.பி   ஆக மாறி விட்டதனால், எம்பி எம்பி  வேறு பணப்பணி செய்ய வேண்டியிருக்கிறது, பாவம்! உதிரிக்கவிஞர் வான்கவிப்பேரரசர் வைரமுத்து சொல்லக்கூடியது போல,  வானமும் எட்டி உதைக்கும் தூரம்தான் அல்லவா? எவ்வளவு பணப் பிணிகள் (எ.கா: 2G)! எவ்வளவு பிணப் பணிகள் (எ.கா: சாதிக் பாட்சா)!!

இவற்றுக்கிடையில்,, கனிமொழி அவர்கள் – அறிவுரைகளை, அறம் சார்ந்த  அரிப்புகளை, ஊருக்கு உபதேசங்களை வேறு அளிக்க வேண்டும், இல்லையெனில் மெல்லத் தமிழம் இனிச் சாகுமன்றோ?

அவருக்கு இருக்கும் பலதரப் பட்ட வேலைகளில் – திருட்டு மணல் அள்ளுவது, அடுத்த நாட்டின் ஆழ்கடலில் அயோக்கியத்தனமாக மீன் பிடிப்பது, துறைமுகத்தை தடுத்தாட்கொள்வது, அண்ணாசாலை மாளிகைகளை, ஊட்டி தேயிலைத் தோட்டங்களை வாங்குவது, போதாக்குறைக்கு கிவிதை எழுதுவது போல கணக்கற்றவை, எல்லையில்லாதவை அவருடைய பணிகள் – பொன்மொழிகளை உதிர்க்கவும்  இவருக்கு நேரம் இருக்கிறது – இவற்றில் சில கீழே:

 • நம் சமூகத்தில் பெண்களை நாம் சரியாக நடத்த வேண்டும்
 • அரசியலில் நாம் கண்ணியமாக இருக்க வேண்டும்
 • நேர்மை மிக முக்கியம்
 • பதவிகளை விட கட்சிப் பணியே முக்கியம்
 • கட்சி என்ன சொல்கிறதோ, என் தலைவர் என்ன சொல்கிறாரோ அதை சிரமேற்கொண்டு நடக்க வேண்டும்

அவர் மேற்கண்டவை  போன்று சொல்லிக்கொண்டிருந்தால் அது  பரவாயில்லை – எப்படியும் அவர் சும்மா, ஒரு நகைச்சுவைக்காகத் தான் இப்படியெல்லாம் சொல்லியிருப்பார். நமக்குத் தெரியாதா, நம் கனிமொழி அம்மணியைப் பற்றி!

ஆனால், தம் குடும்பத்தினரைப் பற்றியே பகிரங்கமாக வைக்கும் இந்த விமரிசனங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன… தன் குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மீறி  தமிழக  மக்களின்  மேலுள்ள அவருடைய கரிசனம், நம்மை மனம் நெகிழச் செய்கிறது.

“சென்னை, பிப். 27- சென்னை மெரினா கடற்கரையில் உடல் பருமனைக் குறைக்க வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு நடைப் பயணத்தை கனிமொழி எம்.பி. நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.”

(ஞாயிறு, 27 பிப்ரவரி 2011 – விடுதலை நாளிதழ் – http://viduthalai.in/new/home/tamilnadu/34-tamilnadu-news/4367-2011-02-27-11-22-29.html)

இவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும் நாளும் எந்நாளோ??

எனக்கு என்ன குறை என்றால், சுற்றி வளைத்து கூட்டத்தில் பேசுவதற்கு பதிலாக நேராகவே நமது கனிமொழியாம்பா, தன் உடல் பருமனான, பேராசை வீங்கின உறவினர்களிடம் சொல்லியிருக்கலாம்…

கொழுத்தது போதும், போங்கு அடிக்கும் கோமாளிக் கொலைஞர்களே” என்று…

பின் குறிப்பு:

விஜயகாந்த் ‘திமுகவிற்கு ஆப்பு அடிக்கவேண்டும்’ என்று சொன்னதைத் திரித்து ‘எல்லோரும் ஹாப் (‘half’) அடிக்கவேண்டும்’ என்று சன் டிவி சொன்னதை விட,  இது சரியானது தானே?

One Response to “கனிமொழி: “அழகிரி, தயாநிதி, ராசாத்தி – மேல் குண்டர் சட்டம் பாய வேண்டும்!””

 1. M.S.Vasan Says:

  ‘உண்மை செருப்பை மாட்டுவ‌த‌ற்குள், பொய் ஊர் சுற்றி வ‌ந்துவிடும்’
  என்பார்க‌ள். இன்றோ இவர்க‌ள் டிவியில் உல‌கையே சுற்றி வ‌ந்து விடுகிற‌து.
  உச்ச்நீதி ம‌ன்ற‌ த‌ல‌மையில் திரு நீதிப‌தி எஸ் ஹைச் க‌ப‌டியாவும், திருவாள‌ர்க‌ள் நீதிப‌தி ஜி எஸ் சிங்வி, க‌ங்குலி ஆகியோரின் நாட்டு பற்றும். சுவாமி, பூஷன் போன்றோரின் பொதுநல‌ வ‌ழ‌க்குக‌ளும் தான், சோனியா, ச‌ர‌த்ப‌வார், முக‌ போன்ற‌ அர‌சிய‌ல் ஆதிக்க‌த்தின‌ரின் பிடியில் சிக்கி ம‌க்க‌ளுக்க‌ளிட‌மிருந்து ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌ ப‌ல உண்மைக‌ளை வெளிக் கொண்டுவ‌ந்தது.
  ஜிஏசியின் அறிக்கைதான் இவ‌ர்க‌ளுக்கான சாவு ம‌ணி. அறிக்கை வெளிவ‌ரவில்லையெனில் யுபிஏ இதை (2ஜி) இந்நேர‌ம் புதைத்திருக்கும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s