பல நாட்கள் முன் நான் அஞ்சும்நெஞ்சன் கதை (முற்றும், சீக்கிரம்) என்ற இடுகையில் இம்மாமனிதர் அழகிரி பற்றி எழுதினேன். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விதத்தில் இவர் தொண்டரடிப்பொடிகள் மண்ணைக் கவ்வியுள்ளனர். திருப்தி.

ஆனால் – நாம் தா கிருட்டிணனை மறக்க முடிந்தாலும், எரிந்த தினகரன் பணியாளர்களை அவர்களின் அயோக்கிய மாறன் முதலாளிகள் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லையானாலும்,  தோழர் லீலாவதியின் வீச்சரிவாள் கொலையை நாம் எப்படி மறக்க முடியும்? இந்த ஆளை எப்படியாவது சட்ட ரீதியாகவும் அல்லது வேறெந்த / அனைத்து வழிகளிலும் முழுவதுமாக முடக்க முடியவேண்டும். இம்மாதிரி விஷக் கிருமிகள் மீது தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது. ஏனெனில் ஆங்கிலத்தில் உள்ள ஒரு வசனம் போல: Deep seated cancer can never be cured by the cosmetic skills of dermatology.

ஜெயலலிதா மற்றும் நம் மதுரை மக்கள் இதனைப் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். சித்தூர் நீதிபதி, அழகிரி கும்பலுக்கு அளித்த ‘விடுதலை’யை எதிர்த்து தமிழக அரசு ஒரு அப்பீல் செய்தால், உருளும் சட்டத்தின் சக்கரம். பின் அவரும் அவர் குடும்பமும் குவித்துள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடிந்தால், நம் மக்களுக்கு ஊக்க போனஸ் கிடைத்தார் போல்!

முற்றும், அஞ்சும் நெஞ்சன் கதை – கூடிய சீக்கிரம். மதுரை முருகன் இட்லி கடையிலிருந்து, காலேஜ் ஹவுஸ் வரை – பொதுமக்களிலிருந்து, வியாபாரிகளும் தொழில்முனைவோர் உட்பட அனைவரும் இதனை வரவேற்பார்கள்.

அழகிரி பற்றிய இடுகையும் அனேகமாக இதுதான் கடைசி என நினைக்கிறேன் – உதிரிகளைப் பற்றி எழுதிக் கொண்டே இருப்பது அலுப்பைத் தருகிறது.

ஆகவே, கொஞ்சம் நாம் மகிழ்வதற்காக சில ப்ளெக்ஸ் போர்டு வெற்றிவேல்-வீரவேல் வகை வெட்டிப் புல்லரிப்புகளைப் பற்றியும், அழகிரியின் சில தேர்தல் சமய அறிக்கைகள் பற்றியும் இந்த இடுகை.

Buy Election Suruttal Star

Buy Election அரசர் – இவர்  போலோ  ஆட்டக் காரரா, முஸ்ஸோலினியா  அல்லது சர்ச்சில் போன்று இவர் வேடம்   தரிக்கப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதில் தொக்கியுள்ள நகைச்சுவை உணர்ச்சி நம்மைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது அன்றோ?

இந்த அழகில், ஒரு ரோஜா வேறு! நான் முதலில் இது என்னடா ரத்தச் சிவப்பான வாய் – அக்கால கவுண்டமணி-செந்தில் நகைச்சுவைகளில்(!) இவர்கள் வாயை மிகவும் திறந்து அவர்கள்தம் சிவந்த நாக்குகளைக் காண்பிப்பார்களே, அது போன்றோ என நினைத்து,  எனக்கு ஒன்றுக்கே வந்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

மீண்டும் நகைச்சுவை...

ஏங்க, சும்மா எங்கைங்க  அதிருது?  சும்மாத் தானே சொல்றீங்க? அல்லது, நீங்கள் அழகிரி அவர்கள் தம் குண்டர்-தனத்தைக் குறிப்பிட்டு அவ்வாறு சொல்கிறீர்களா?

என்ன கருணாநிதி, ஸ்டாலின் எல்லாம் பூஜ்யம் தானா?

ஐயகோ! நம் அஞ்சாநெஞ்சரை, இப்படி இவரை ‘இந்தியா காபி ஹவுஸ்’ களில் பரிமாறும் நண்பர்களைப் போல ஆக்கி விட்டார்களே!  இந்த நகைச்சுவையில்,  பின் பக்கம் உற்றுப் பார்த்தால் ஒரு சிங்கம் படம் வேறு! அப்படியானால், பின் பக்கம் சிங்கம் – முன் பக்கம் அ(ழகிரி)சிங்கம் என்கிற கணக்கா என்ன?

நன்றி: தினமணி 1-4-2011

ஏங்க, நீங்க இப்படி தன்னிலை வாக்குமூலம் கொடுக்கறீங்க? நீங்க வெளியிலே சொல்லாம அமுக்கமா, அயோக்கியத்தனமா வேலை பல செய்ததினால்தானே, இப்படி தேர்தல் உங்களை பலி வாங்கி விட்டது?

மேலும் நீங்கள் ஒரு மிக்க மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் வேறு! கவலையே படாமல் நீங்கள் உளறிக் கொட்டினால், அதுவும் ‘உலகில் வேறெந்த மாநிலம்’ போல பேத்தாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது அன்றோ?

நன்றி: தினமணி 1-4-2011

ரொம்பப் பயப்படாதீங்க. மறந்து போயிட்டீங்களா – நீங்கள் தானே அஞ்சாநெஞ்சன்? சும்மா நடமாடலாம், காலைகளில் நடை பழகலாம், தினகரன் அலுவலகத்திற்குக் கூடப் போகலாம்.

என்ன, அவ்வப்போது ‘தா கிருட்டிணன்’ எப்படி கொலை செய்யப் பட்டார்  என்கிற ஞாபகம் வந்து வாட்டும்.

ஆனால்அப்போது நீங்கள் உங்கள் தந்தையார் கதை-வசனம் எழுதிய படம் ஒன்று பார்த்தால், உலகமே வெறுத்து, நீங்கள் அனைத்திற்கும் ஆயத்தமாவீர்கள்.  அவர் கதை-வசனத்தையும் மிஞ்சிய கொடுமை உலகில் உண்டா?

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

மெய்யாலுமே, திமுக கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால்,  கயள்விளி அளகிரி சொல்லக் கூடியது போல:

கலைங்கர் காப்பாட்ராவிட்டால் மெள்ளத் தமிள் இனிச் சாவும்.

இம்மாதரசி பேசாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்து, மகிழ்ச்சியுடன் இருந்தால் யாரும் இவரைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

ஆனால், இவர் கிவிதை எழுதுகிறார் (ஆம், அது அவர் அப்பன் வூட்டுச் சொத்துத் தான்) – அதை ‘பகீர‘ங்கமாகப் படிக்கவும் செய்கிறார் (கனிமொழி மட்டும் கிவிதை எழுதலாமா?) – அரசியலில் ஈடுபடுகிறார் – அரங்கத்தில் பேத்துகிறார் – உச்சரிப்புக் கொலைகளால் தமிழ்த்தாயைத் தற்கொலைக்குத் தூண்டுகிறார் – அனைவருக்கும் அரசியல் ஆலோசனை கொடுக்கிறார் – ஆரூடம் சொல்கிறார், ஐயோ!

 

அழகிரியார் மாபெரும் வட்டம்? (அப்பாடா, என்ன நிம்மதி!)

 

நல்ல வேளை, மதுரை மாவட்டம், அழகிரியார் மாவட்டம் ஆகவில்லை. நாம் தப்பித்தோம்.

இல்லையென்றால் கயல்விழி தான் இயல்-இசை-நாடக மன்றத் தலைவராகப் பதவி ஏற்று தொல்காப்பியத்துக்கு உரை ஆங்கிலத்தில் ‘Ancient Xeroxing‘ என்றும் எழுதியிருப்பார்! டாக்டர் பட்டம் கூட விட்டிருப்பார்!

கயல்விழி கடந்த வருடம் தன் பாட்டனார் பிறந்தநாள் விழாவில் (3 ஜூன் 2010) கலந்து கொண்டு வளவளவென்று, தான் எழுதியதாகப் பொய் சொல்லி, ஒரு தமிழ் வாழ்த்துரை (கவிதை என்று சொன்னார்கள், ஆனால் அது ஒரு வெட்டிப் பேச்சுதான்!) படித்தார். ஆனால் அவருக்கு அதை யாரோ எழுதித் தந்திருந்த காரணத்தால், அவர் நிறுத்தி வாசிக்க எதுவாக, ஒவ்வொரு வரிமுடிவிலும், ஸ்டாப் (stop) என்று எழுதிக்கொடுத்ததையும் படித்து, அனைவரையும் இறும்பூதடையச் செய்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அது மட்டுமல்ல – தன்(!) கிவிதையில், தன் தாத்தாவை அவர் கருணாநிதி என்று அழைத்திருக்கலாம் – தமிளர் தலைவர் என்றாவது சொல்லியிருக்கலாம்! உச்சரிப்புக்குக் கொஞ்சம் ஏதுவாக இருந்திருக்கும். ஆனால் அப்பேச்சு முழுவதும் அவர் “கலைங்கர் கலைங்கர்” என்றே கலைஞரைக் (!) குறிப்பிட்டார். மகா நகைச்சுவைதான் போங்கள்!

இம்மாதிரியான திடீர் கிவிதாயினிக்கு, இந்தத் செம்மொழித் தமிழ் மாநாட்டில் வேறு இடம் ஒதுக்கி, கவிதை பல படிக்க வைத்து, வந்திருப்போருக்கு உச்சகட்ட நெருக்கடி கொடுத்து, தமிழையே பழி வாங்கியிருக்கிறார்கள். (இது பற்றி கவிதா முரளீதரன் என்பவர் வெறுத்துப்போய் எழுதியிருக்கிறார்:
ஒலக மாநாடு நடத்தும் கலைங்கர்! )

கருணாநிதி தமிழுக்கு இழைத்த துரோகங்களில் ஒன்று இம்மாதிரி தான்தோன்றி-அரைகுறை வெற்றுக் கன்றுக் குட்டிகளை தமிழரங்கத்தில் மேய மட்டும் விடாமல், வந்திருந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் மேலேயே சாணியையும் போட வைத்தது… என்ன கேவலமான பிறவி, இவர்! ச்சீ!

இந்த மாதரசி தேர்தல் சமயம் அவரது கொளைத்தமிளில் அரசியல் பேத்து வேறு பேத்தியிருக்கிறார் – அவர் கருணாநிதியின் பேத்தி அல்லவா?

கயல்விழி அவர்களின் ஜோதிடம்... (நன்றி: மாலை மலர்: 6-4-2011)

உங்கள் யாருக்காவது ஜெயலலிதா எங்கிருக்கிறார் என்று தெரிந்தால், கயல்விளியிடம் தெரிவிக்கவும். STOP

என்னுடைய பயம் என்னவென்றால் – இப்போது அவருக்கு இருக்கும் அவகாசத்தைக் கொண்டு கயல்விழி முழுமூச்சுடன் ஒரு பினாமி கவிதைத் தொழிற்சாலை ஆரம்பித்து விட்டாரென்றால், நம்மால் தாங்க முடியுமா? STOP

ஆனாலும் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன் – இந்தக் கயமைநிதி கும்பலிலிருந்து, நாம் தப்பித்தோம், நம் தமிழகம் தப்பித்தது அல்லவா!  STOP

தமிள் வால்க!! STOP

:-) STOP

வெந்த புண்ணில் வடிவேலுவைப் பாய்ச்சுவது சரியில்லைதான், இருந்தாலும்…

கவுண்டமணியும் செந்திலும் முறையே வடிவேலுவின் வலது, இடது புறத்தில் இருக்கிறார்கள். நன்றி: மாலைமுரசு (6, ஏப்ரல் 2011)

அவர் சொன்னது போலவே அனைத்துத் தொகுதிகளிலும் திமுக பெற்ற வெற்றிக்கு உழைத்திட்ட வடிவேலுவுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் அன்றோ?

=-=-=-=-=

அயோக்கியத்தனமான கொலைகளுக்காக (தா கிருட்டிணன், போற்றுதற்குரிய கவுன்சிலர் லீலாவதி, தினகரன் பணியாளர்கள் மற்றும் பலியான பலர்), மதுரை அழகிரியின் கொட்டையைப் பிடிக்க நேரமாகிக் கொண்டிருக்கிறது, சீக்கிரமையா சீக்கிரம்!

அண்மையில்,  கருணாநிதியால், திமுகவிற்கு ஏற்பட்ட தோல்விக்குப் பின் வெளியிடப்பட்ட  கருணாநிதியின் அறிக்கையில் (பார்க்க: ‘விடுதலை’யில் வெளிவந்த ‘கலைஞர்’ அறிக்கை – “கழகம் தர்ப்பைப் புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று துடிக்கும் சக்திகள்! கலைஞர் தீட்டிய சுயமரியாதைப் புதினம்!” ) அவர், தான் எவ்வளவு ரூபாய்களை, என்னென்ன விதமாக, பலவிதமான பணிகளுக்குக் கொடுத்திருக்கிறேன், எப்படி  பல மனிதர்களுக்கு உதவி செய்திருக்கிறேன் என்று ‘மன ஓலம்’ இட்டு ஓவென்று அழுது ஆகாத்தியம் பண்ணி கண்ணீர்ப் பெருக்கெடுத்து, ஒப்பாரி வைத்து, தான் ஒரு தவறும் செய்யாதவன், கொடுத்துச் சிவந்த கரம் என்பது போல் வளவளவென்று  எழுதியிருக்கிறார்,

ஆனால், அதே ‘விடுதலை’யில், நம் வீரமணியும் அவர்தம் தோழர்களும் என்ன எழுதியிருக்கின்றனர் தெரியுமா?

மோசமான வழிகளில் பொருள் ஈட்டியவர்கள் எல்லாம் கூட அறப்பணி செய்கின்றனர்

அவரது அறப்பணிகளைப் பொறுத்தவரை, மோசமான வழிகளில் தாங்கள் ஈட்டிய செல் வத்தைப் பற்றி தேவையற்ற  கவனத்தை ஈர்ப் பதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு அறப் பணி களில் ஈடுபடுபவர்கள் நாட்டில் எண்ணற்றவர்கள் உள்ளனர். அவரது அளவற்ற செல்வத்தைப் பற்றிய கணக்கு வழக்குகள் பராமரிப்பது எப்போதுமே வெளிப்படையாக இருந்ததில்லை.

அய்யா வீரமணியாரே, ஏனப்பா நீங்கள் கருணாநிதியின் வெந்த புண்ணில் வேலையற்று வேலைப் பாய்ச்சுகிறீர்கள்? இது உங்களுக்கே அடுக்குமா?

சூரியன் வானத்தில் நடத்தும் வருடாந்திர ஜாலங்களான உத்தராயணம் (வடதிசை நோக்கிய பயணம்) தட்சிணாயனம் (தெற்குத் திசை நோக்கிய பயணம்) போல நம் வீரமணியும் சளைக்காமல் அம்மையாருக்கும், கருணாநிதிக்கும் மாற்றி மாற்றி, அரசாங்கம் மாறும்போதெல்லாம் காவடி எடுப்பது தெரிந்ததே.

காண்டாமிருகம், முதலை முதல் பழங்கால டைனோசார்கள் வரை அனைத்தும் வெட்கப் படவேண்டிய அளவுக்கு, தடிமனான புறத்தோல் கொண்ட, தோல்வலி கொண்ட தோழர் இவர் என்பதும் நமக்குத் தெரியும்.

நிற்க, வீரமணியின் ‘விடுதலை’ (நமக்கு எப்போது தான் இம்மனிதரிடமிருந்து  விடுதலையோ!) – இந்து நாளிதழிலிருந்து ஒரு கட்டுரையை தமிழாக்கம் செய்து மறுபிரசுரம் செய்துள்ளது. இது எம் பார்கவா என்கிற அறிவியலாளர் 15-5-2011 அன்று   எழுதியது.

பார்க்க:  தெய்வீக ஆற்றல் கொண்டவரா சாயிபாபா? சுத்த பொய், அவர் வெறும் வித்தைக் காட்டுபவரே!

அரசியல்வாதிகள் மரியாதை செலுத்த படையெடுத்ததுதான் பெரிய தேசிய சோகம்

சாயிபாபாவின் இறப்பு ஒரு தேசிய சோகமல்ல. தேசிய சோகம் என்னவென்றால்,  அரசு மரியாதையுடன் அவர் அடக்கம் செய்யப் பட்டதும், துக்ககாலம் என்று அரசு அறிவித்ததும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி வளர்ப்பது என்ற அரசமைப்புச் சட்டப்படியான கடமையைப் புறம் தள்ளிவிட்டு, கட்சி வேறு பாடின்றி பிரதமர், தேசிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களின் அரிய நேரத்தையும், பொருளையும் செலவழித்து சாயிபாபாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்ததும்தான்.

ஸ்டாலின், சாயிபாபா இறந்தபின், அவருக்கு ‘இறுதி மரியாதை’ செலுத்துவதற்காக தமிழக அரசுப் பணத்தைச் செலவு செய்து விசேஷ விமானம் வைத்துக் கொண்டு புட்டபர்த்திக்குப் பறந்து போனதை நாம் அறிவோம் அன்றோ?

பார்க்க:  Stalin leaves for Puttaparthi

இந்த வீரமணி ஏன் திடீரென்று  ஸ்டாலின் மீது பாய்கிறார்? அம்மையாரிடம் செல்வதற்கு என்ன அவசரம் இவருக்கு?

இந்த போட்டோவைப் பார்த்தால் என்ன சொல்வார் இந்த வீரமணி?

பின்குறிப்பு:  எனக்கு ஓரளவு அறிமுகமுள்ள ஒரு நண்பருக்குத் தெரிந்தவர் தான் இந்த வீரமணி. இவர் என்ன சொல்கிறார் என்றால், “வீரமணி நேரிடையில் பழகுவதற்கு இனிமையானவர். அறிக்கைகளில் இருக்கும் வெறுப்பும், கயமைகளும் இவரிடத்தில் உண்மையில் இல்லவே இல்லை. மிகவும் மென்மையாகப் பேசக்கூடியவரும் கூட. இவருடைய பெரியார்-மணியம்மை டிரஸ்ட் சார்ந்தச் சொத்துக்களை, நிறுவனங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் இவர் இம்மாதிரி செயல் படுகிறார்.”

இந்த  வீரமணி விஷயத்தில், என்ன இடக்கரடக்கல் மங்கலமோ, எனக்கு ஒரு ‘முடி’யும் புரியவே இல்லை…

Will the real Veeramani stand up please??

சில நாட்கள் முன், கருணாநிதியின் ஒப்பாரி அறிக்கை பற்றியும் (‘நண்பர்கள் நன்றி மறந்தார்கள்’ என்பது போன்ற) வீரமணியின் அறிக்கையையும் கேலி செய்து ஒரு இடுகை இட்டிருந்தேன்.
வீரமணியின் புதிய அறிக்கையில் பல திடுக்கிடும் பல்டிகள் !!
இப்போது, இன்றைய  தினமணியில் பழ நெடுமாறன் அவர்களின் – மிகத் தெளிவாக, அழகாக, மிகுந்த பண்புடனும், மரியாதையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும்  எழுதப் பட்டுள்ள பதில் அறிக்கை வந்துள்ளது.

கருணாநிதியின் இன்னும் சில சில்லறைத் தனங்களையும், விடலை  மனக்கோட்பாடுகளையும், துரோகங்களையும் – இது மிகக் கோர்வையாகச் சொல்கிறது.

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
பழ. நெடுமாறன்
First Published : 18 May 2011 02:36:51 AM IST

நாம் எப்படி, பழ நெடுமாறன் போன்ற, அரிய தலைவர்களை இனம் கண்டு போஷிக்க மறந்தோம்?

=-=-=-=-=
“மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.
“எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’ என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

“பொடா’ சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா’ நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய “டெசோ’ அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!

கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.

1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?

நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது “மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.

ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, “அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக’ப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? “மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்’ என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

 “”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”

படித்தீர்களா?

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 5-9 பக்கங்கள்

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page10-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page11-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page12-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page13-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page14-of-14

அடுத்த சில நாட்களில் – முழு அறிக்கையும் பிரசுரிக்கப்படும்.

நீங்கள் இந்த அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் இட்டால், அது என்னவாக இருந்தாலும், உபயோக கரமாக இருக்கும்.

நன்றி.

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page5-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page6-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page7-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page8-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page9-of-14

சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 10-14 பக்கங்கள்

நீங்கள் முதலில் கீழ்க்கண்ட இடுகைகளைப்  படிக்க வேண்டும்:

படித்து விட்டீர்களா?

சரி, இப்போது உங்களுக்கு சிறிது, இம்மனிதர் (கருணாநிதி) பற்றி,  அவர்தம் தொடரும் ஊழல் கதை பற்றி அறிமுகமாகியிருக்கும் என நினைக்கிறேன் – அதாவது, உங்களுக்கு முன்னமே இவை பற்றித் தெரியாமலிருந்தால்!

இந்த இடுகையில் இருந்து ஆரம்பித்து, மொத்தம் மூன்று இடுகைகளில், இந்த முன்னோட்ட அறிக்கை பிரசுரிக்கப் படுகிறது.

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page1-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page2-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page3-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page4-of-14

[மன்னிக்கவும் – இந்த அறிக்கைகள், முழுவதும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. மேலும், என்னிடம் உள்ள மென்-புத்தகத்தில்,  இவைகளின் பிற்சேர்க்கைகள் (appendices) மற்றும் துணை ஆதாரங்கள் (supporting evidences) இல்லை. இவைகள்  அனைத்தும்  கன்னிமரா நூலகத்தில் இருந்தன. ஊழல் கொடும் பாவிகள், இவற்றை ஒழித்து விட்டார்கள்]

சர்க்காரியா கமிஷன் பற்றிய முன்னோட்ட இடுகையைப் படித்தீர்களா? இல்லாவிட்டால், முதலில் அதனைப் படித்துவிட்டு வரவும்.

சர்க்காரியா கமிஷன்:  1976-ஆம் ஆண்டு இந்திரா காந்தியினால் – கருணாநிதி பற்றும் அவர் அமைச்சர்கள் மீது அப்போதிருந்த வானளாவிய ஊழல்கள் பற்றி விசாரிக்க – ஒரு அப்பழுக்கற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தான் இது.

நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா (1916 – 2007) - 2003-ல் எடுத்த புகைப்படம்; நன்றி: பிரன்ட்லைன்

இதே சர்க்காரியா அவர்கள், பின்னாளில் (1983) மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆய்ந்தறிந்து, சிபாரிசுகளை முன்வைக்க ஒரு அதே இந்திரா காந்தியினால் கமிஷன் வைக்கப் பட்டு அதன் தலைவராகப் பணியாற்றினார், மிகவும் சிறப்பாக..

ஆனால், நான் சர்க்காரியா கமிஷன் என்று ஒத்திசைவில் எழுதுவது 1976 கமிஷனைப் பற்றி மட்டும் தான்.

ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணி இங்கு நான் கொடுக்க விரும்புகிறேன் – நம் கருணாநிதியின் கயமைப் பின்புலம் புரிவதற்காக மட்டும் – இதனை திமுகவின் வரலாறாகக் கொள்ள முடியாது.

கயமைநிதியின் (சர்க்காரியா கமிஷன் வரையிலான) அவசர வரலாறு

1944-ல் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து, ஈவேரா திராவிடர் கழகத்தைத் துவக்கினார். அப்போது, அதில் ஒரு தொண்டனாக இருந்த கருணாநிதிக்கு வயது இருபது தான்! இவர் அப்போது அண்ணாதுரையின் அடிவருடிகளில் ஒருவராகவும் அவர் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார்.

1947-ல் இந்திய விடுதலை ஈ வே ரா ‘பெரியாரால்’ துக்க தினமாக அனுஷ்டிக்கப் பட்டபோது – அண்ணாதுரை பெரியாரிடமிருந்து கருத்தளவில் மாறு பட்டார். மேலும் அண்ணாதுரை, தன்னை ஒரு சமூகச் சேவை ஆளாக மட்டும் கருதிக் கொள்ளாமல், அரசியல்-பதவிகள் மூலமாகவும் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், ஈவேராவின் ஆளுமை மிகவும் வலியதான ஒன்றான காரணத்தால் அண்ணாதுரையால் அவரை எதிர்கொண்டு, தன் கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை.

இச்சமயம் EVK சம்பத் (பெரியாருடைய மருமகன்) தான் ஈவேராவுடைய அடுத்த தலைமுறை வாரிசாக, பரவலாக அறியப்பட்டார் – அண்ணாதுரையோ அல்லது வேறு எந்த தலைவரோ அல்லவே அல்ல. சம்பத் ஒரு படித்த, பண்பான, சதிமனம் இல்லாத, ஒரு தலைவர்.

தம் பதவி/அதிகார வேட்கையை அடக்கிக் கொள்ளவே முடியாத, அதே சமயம் சரியான நேரத்துக்குக் காத்திருந்த கருணாநிதி, இப்போது அண்ணாவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து திராவிடர் கழகத்திலிருந்து சம்பத்தைப் பிரித்து, ஈவேராவை, பலமிழந்தவராக்கினார். இதற்கான காரணமாக அப்போது அவர்கள் சொன்னது – ஈவேரா தன்னை விட வயதில் மிக இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது…

இப்படி ஒரு உப்பு சப்பில்லாத, இன்னொருவரின் பிரத்யேக வாழ்க்கையில் தலையிட்டு (ஈவேரா ஒளிவு மறைவு கொண்டவரே அல்ல; கருணாநிதிகளைப் போலல்லாமல் – மணியம்மையை அவர் ஏமாற்றியோ, நயவஞ்சகமாகவோ திருமணம் செய்து கொள்ளவில்லை; கண்ட, காணாத பெண்களையும் வன்புணர்ச்சி செய்யவில்லை), கிடைத்தது ஆதாயம் என்று சம்பத்தைப் பிரித்து – 1949-ல் திமுக உதயமாகிறது.

அப்போது திமுகவில் அறியப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள் – நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன், அண்ணாதுரை. இப்போதும் 25 வயதே ஆன கருணாநிதி அண்ணாதுரையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். வசீகரத் தலைவரான அண்ணாதுரை, ஒரு விதத்தில், கருணாநிதியின் வழிமுறைகள், நேர்மையின்மை போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவர் சொல்லை தட்டாமல் கேட்பது, பொறுத்துக் கொள்வது என்கிற வழியை, தன் அரசியல் தன்னலம் கருதிச் செய்து கொண்டிருந்தார்.

அப்போதே கருணாநிதி திரைக்கதை-வசனம் – அதாவது அடுக்குமொழி மொக்கை, ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள், வாய்ப்பேச்சு வீரம் – உள்ளிட்ட குப்பைகளை எழுதி வந்தார். MGR உடன்தொடர்பு ஏற்பட்டு பணி செய்யும்போது, அவருடைய வசீகரம், மற்றும் திரைபிம்பத்தை திமுக (அதாவது, தான்) உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணினார், கருணாநிதி.

1953-ல் MGR சேருகிறார் – திமுகவில். இவருக்கு, கருணாநிதி போலல்லாமல், அண்ணாதுரை மேல் மிகுந்த மரியாதையும் கூட . கட்சிக்கு MGR வருகையினால் ஏகப்பட்ட ஆதரவு மக்களிடையே பெருகுகிறது.

ஆனால் சம்பத்துக்கு இம்மாதிரி கொள்கைப்பிடிப்பில்லாமல் திரைப்பட நடிகர்களைச் சேர்ப்பதில் பிடித்தமில்லை. மேலும் அண்ணாதுரை+கருணாநிதியின் அரைவேக்காட்டு ‘திராவிடநாடு’ போன்ற கோஷங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நிறைய விரிசல்கள் – ஆனால், MGR பிம்பத்தையும், அண்ணாதுரையின் வசீகரத்தையும் மீறி, சம்பத் திமுகவில் ஏகோபித்த ஆதரவு பெற்றவராக விளங்கினார்.

பதவி சுகம் காண அல்லாடும், கருணாநிதிகளுக்கு இது பொறுக்குமா? ஏற்கனேவே இவர் 1957-ல் MLA வேறு ஆகியிருந்தார் – அப்போது இவருக்கு வயது 33.

சம்பத்துக்கு எதிராக சூழ்ச்சிகள் பல செய்து (அடிதடிகள், மிரட்டல்கள், கொலைகள், துரோகங்கள் என்று பலப்பல) – MGR விசுவாசிகளை, அண்ணாதுரையின் வசீகரத்தை – காரிய மவுனத்தை, உபயோகித்து – சம்பத்தையே திமுக விலிருந்து விலக்கினார் கருணாநிதி…

ஆக, 1961-ல் சம்பத் அண்ணாதுரை-கருணாநிதி சகவாசத்தை வெறுத்து ஒதுக்கி, இவர்களிடமிருந்து விலகி பழ நெடுமாறன் (எப்பேர்ப்பட்ட மகத்தான மனிதர், இந்த நெடுமாறன்!), கண்ணதாசன் போன்றோருடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சி என்று ஒன்று ஆரம்பித்தார். பின், வருந்தத் தக்க விதத்தில் வரலாற்றின் பக்கங்களில், ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டார்.

பின் கருணாநிதி, ராஜாஜி அவர்களை வைத்து, அவரை உபயோகித்து, காமராஜ் அவர்களை பலவீனப் படுத்தி கடைசியில் வீழ்த்தினார். பின் ராஜாஜியையும் உதறினார்.

1967-இல் திமுக அண்ணாதுரையின் கீழ், தமிழகத்தில் பதவிக்கு வந்தது. நம் கயமைநிதி அதில் 43 வயது பொதுப் பணித்துறை (PWD) அமைச்சர்!

இங்கு இவர் பயங்கரமாக கமிஷன் மண்டி நடத்தி, அண்ணாவை நொந்து போகச் செய்தார். மெல்லவோ துப்பவோ முடியாமல், அண்ணா அல்லல் பட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த கயமைநிதி துள்ளல் போட்டுத் தமிழகத்தைத் துப்புரவாக சுத்தம் செய்து கொண்டிருந்தார். பொறுக்க முடியாத அண்ணா, பொங்கிஎழ முடியாமல் புற்றுநோய் பெற்று இறந்தார் – 1969-இல்.

இப்போது கருணாநிதிக்கும், தமிழக முதலமைச்சர் பதவிக்கும் நடுவில் ஒரே ஒருவர் தான் இருந்தார் – அவர் படித்தவர், பண்பாளர், மென்மையானவர் – அவர் தான் நெடுஞ்செழியன்.

இந்த தடைக்கல்லை முறியடிக்க கருணாநிதி இச்சமயமும் அணுகியவர் எம்ஜீஆர் – அவர் உதவி பெற்று – அதாவது அவர் காலில் விழுந்து, மன்றாடி உதவி கேட்டு – சூழ்ச்சிகள் பல செய்து நெடுஞ்செழியனையும் ஓரம் கட்டினார், இந்தக் கயமைநிதி.

ஆக, முதலமைச்சரும் ஆனார் 1969-ல், இந்தக் கருணாநிதி, தன்னுடைய 49-ஆம் வயதில் – MGR தயவில்! பின் என்ன 1972 வரை ஒரே கொண்டாட்டம், ஒரே ஊழல், ஒரே ஜல்சா தான்…(விரசத்துக்கு மன்னிக்கவும்)

MGR தான் திமுகவின் போஷகர், அவர் தான் கட்சியின் பொக்கிஷதாரர் – எவ்வளவு சந்தோஷம் பாருங்கள், கருணாநிதிக்கு!

மீண்டும், வெள்ளை மனதினரான MGR அவர்களின் வசீகரத்தைப், பணத்தை உபயோகித்து, குள்ள நரித்தனமாக மற்றத் தலைவர்களை ஓரம் கட்டி 1971-ல் முதலமைச்சரானார்.

ஆனால் இப்போது MGR தெரிந்து கொண்டார், இந்தக் கயமைநிதி ஒரேயடியாக ஊழல் செய்கிறார், தான் திமுகவிற்கு கொடுத்த பணத்தையும் திருடுகிறார். மேகலா படக் கம்பெனி மூலமாகவும் திருடுகிறார் என்பது!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக், கடைசியில் கருணாநிதியிடம் கணக்குக் கேட்டார் – கடைசியில் 1972-ல் திமுகவிலிருந்து விலகினார் MGR! (கணக்கு மட்டும் கிடைக்கவே இல்லை!)

பின் 1976 வரை கருணாநிதிக்கு ஒரே கொண்டாட்டம் தான், அதாவது, அளவு கடந்த ஊழலோதி ஊழல்!

இப்போது சொல்லுங்கள், நான் கருணாநிதியை, கயமைநிதி என்றழைப்பது சரிதானே?

=-=-=-=-=

இதற்குப் பின், 35 வருடங்களில், இம்மனிதர் செய்த விசித்திர வினோதங்கள், ஊழல்கள், பண்ணிய புலம்பல்கள், துரோகங்கள், அழுத அழுகைகள் பற்றியெல்லாம் நான் இப்போது எழுதுவதாக இல்லை.

சர்க்காரியா கமிஷன் குறித்த இவ்விடுகைகளைப் புரிந்து கொள்ள, தெரிந்து தெளிய, நீங்கள் கருணாநிதியில் பின்புலம் இவ்வளவு தெரிந்து கொண்டால் போதுமானது என்று நினைக்கிறேன்.

=-=-=-=-=

நீங்கள் இந்த சர்க்காரியா அறிக்கையைப் படிக்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை:

 1. 1970-களில் – அதுவும் அதன் முன்பாதியில் நடந்த ஊழல்கள் மட்டும் தான் இதில் விசாரிக்கப் பட்டன.
 2. அப்போதைய தொகைகள், இப்போதைய திமுக ஊழல் அளவுகளோடு ஒப்பிடப்படும்போது, லட்சக் கணக்கான கோடிகளாக இல்லை. ஆனாலும், அக்காலத்து மதிப்பில் இவை மிகவும் அதிகம்.
 3. சர்க்காரியா அவர்களுக்கு அளிக்கப்பட கால அளவும் மிகக் குறைவு – இருந்தாலும் அவர் இழுத்தடிக்காமல், நீட்டிப்பு கேட்காமல், கயமைக் கருணாநிதியின் அராஜகங்களையும், ஒத்துழையாமையும், அச்சுறுத்தல்களையும் மீறி ஒரு கச்சிதமான அறிக்கையை அளித்தார்.
 4. சர்க்காரியா அவர்கள் அறிந்தது கடுகளவு – ஆனால், அப்போதே கருணாநிதி ‘அடித்தது’ மாபெரும் திருப்பதி லட்டு அளவு!
 5. அடிப்படையில் சர்க்காரியா அவர்கள், கூர்மையான மதியும், அறியும் திறனும் மிக்கவர் – நல்ல நேர்மையாளர் – ஆனால் அவரே வியக்கும் அளவுக்கு, அறிவியல் (‘விஞ்ஞான’) பூர்வமான ஊழல் செய்தவர், தடயங்களை அழித்தவர், ஆய்ந்தறிய முடியாத, அளவிட இயலாத ஊழல்களை மிகவும் சாமர்த்தியமாகச் செய்தவர் இந்தக் கருணாநிதி.
 6. ஒவ்வொரு இந்தியனும், குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழனும் படித்து, வியந்து, கருணாநிதி மேல் காறித் துப்பவேண்டிய விஷயம் இது…
 7. படிப்பதற்கு கொஞ்சம் கரடு -முரடாக இருக்கலாம் இந்த அறிக்கை – ஆனால் தயவு செய்து இதனைப் படிக்கவும்.

இனி அடுத்த பதிவுகளில் – முதலில் சர்க்காரியாவின் முதல்/முன்னோட்ட அறிக்கையையும், பின்னர் விரித்து எழுதப் பட்ட முழு அறிக்கையையும் காணலாம்…

வீரமணி கொஞ்சம் கொஞ்சமாக அம்மையார் பக்கம் செல்ல ஆரம்பித்து விட்டார் என நினைக்கிறேன்… இந்த மனிதருக்கு, ஏகத்துக்கு குசும்பு அதிகம் என்பதை நான் எழுதித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை, என்றாலும்…

வீரமணி சொல்கிறார்:

 1. “கருணாநிதி சிறுமைக் குணம் படைத்தவர்”
 2. “பெரியார் ஈரோட்டில் ஒரு சனாதன குருகுலம் நடத்தினார்; அதில் கருணாநிதி படித்தார்”
 3. “திமுக கடுகளவுக்குத் தேய்ந்து போய் விட்டது”
 4. “கருணாநிதி வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கவேண்டும், இனிமேல்!”
 5. “பதவி அரசியலுக்காக அலைவதை திமுக நிறுத்த வேண்டும்.”
 6. “திமுகவின் கட்டமைப்பு வலுவிழந்து இருக்கிறது “

மெய்யாலுமா? என்னைச் சந்தேகிக்காதீர்கள், நண்பர்களே…

இவரா  இப்படிச்  சொன்னார் ? அவர் ஓட்டுப்போட்டு விரலில் மை கூட காய்ந்து இருக்காதே! கருணாநிதிக்கு ஜால்ரா அடித்து அடித்துத் தேய்ந்த கரமா, இப்போது கருணாநிதியின் கழுத்தையே நெரிக்கிறது? ஐயகோ!!

“கருணாநிதி சிறுமைக் குணம் படைத்தவர்”

கருணாநிதி, அவருடைய கடைசியாக, மே 13 அன்று வந்த ஒப்பாரியில், ‘நண்பர்களுக்கு நான் உதவி தானே செய்திருக்கிறேன், இப்போது அவர்கள் அம்மையார் பக்கம் போய் என்னை ஏசுகிறார்களே’ என்கிற ரீதியில் புலம்பியிருக்கிறார் …

வீரமணி இதற்குப் பதிலாகவோ வேறு என்ன இழவோ – மே 14 அன்று எழுதியிருக்கிறார்:

பெரியார் 1933-லேயே ‘குடியரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

ஆகவே, வீரமணியின் கூற்றுப் படி:  “கருணாநிதி சிறுமைக் குணம் படைத்தவர்”

“பெரியார் ஈரோட்டில் ஒரு சனாதன குருகுலம் நடத்தினார்; அதில் கருணாநிதி படித்தார்” 

வீரமணி மறுபடியும் – மே 14 அன்று எழுதியிருக்கிறார்:

… எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் [கருணாநிதி] காட்டியுள்ளார்!

“திமுக கடுகளவுக்குத் தேய்ந்து போய் விட்டது”

… குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

“கருணாநிதி வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கவேண்டும், இனிமேல்!”

“திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.”

“பதவி அரசியலுக்காக அலைவதை திமுக நிறுத்த வேண்டும்.”

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

“திமுகவின் கட்டமைப்பு வலுவிழந்து இருக்கிறது”

மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

=-=-=-=-=

உண்மை தானே? :-)

எனக்கு, இந்த ஜால்ரா வீரமணியின் அறிக்கைப் புழுக்கைகளைப் பார்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது!

ஆதாரங்கள் (!):

தினமணி செய்தி: “எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’: கருணாநிதி
13 May 2011

விகடன் செய்தி: அரசியலில் மட்டுமே கருணாநிதிக்கு ஓய்வு: கி.வீரமணி
சென்னை, மே 14,2011

நண்பர்களே,

கடந்த சில நாட்களாக நான் கொடைக்கானல்  சுற்று  வட்டாரத்தில் உள்ள  ஒரு  சிறு கிராமத்தில்  இருந்தேன். ஒரு நண்பருக்கு அவர் வீட்டில் சில மராமத்து வேலைகள் செய்ய வேண்டியிருந்தது, உதவி செய்து கொண்டிருந்தேன் – அயர்வாக இருந்தது – மேலும் முழு நிறைமாத கர்ப்பிணிப் பெண் போல, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்பது  குறித்து குழப்பமான, கலங்கிய, போதை கொண்ட எண்ணங்கள் எனக்கு; இணையத் தொடர்பும் ‘தொண்டையில் அடைத்துக் கொண்டது போல்’ இருந்தது…  . ஆகவே தான் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை பற்றிய இடுகைகள் இட முடியவில்லை. மன்னிக்கவும்.

=-=-=-=

சோலை என்றொரு கிராமம் – பள்ளங்கி அருகில், பழனி தொகுதியில் உள்ளது.  சிறிலங்காவிலிருந்து (சிறிமாவோ-இந்திரா உடன்படிக்கையின்படி) திரும்பி வந்த மலையகத் தமிழர்கள் இங்கு அதிகம்.  200 குடும்பங்கள்  இருக்கலாம், இவர்களில் பெரும்பாலோர் அன்றாடம் காய்ச்சிகள், ஆனால் கம்பீரம் மிக்கவர்கள். இவர்கள் ஒரு முருகன் கோவில் கட்ட ஆரம்பித்து பணத் தட்டுப்பாடு காரணமாக கடந்த  நான்கு ஆண்டுகளாக அதனை முடிக்க முடியவில்லை.

இங்கு  சுமார் 40 நாட்கள் முன்பு, IPS என்று அழைக்கப்படும் திமுக உதிரியும், அழகிரியின் அடிமையும் ஆன  ‘ஐ பெரியசாமி’ என்கிறவரின் ஆட்கள், பணம் கொடுக்க வந்தனர் – ஐநூறு ரூபாய் ஒரு ஓட்டுக்கு!  ஆனால் இம்மக்கள், அதிலும் இளைஞர்கள், இந்த குண்டர்களை விரட்டி அடித்தனர்.

மறுபடியும் இக்குண்டர்கள் வந்து இரவு ஒரு மணி வரை இம்மக்களோடு பேசி, “உங்களுக்கு வேண்டாமென்றால் பரவாயில்லை. உங்கள் கோவிலுக்கு திருப்பணிக்காக ஒரு லட்சம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று நைச்சியமாகப் பேசியிருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் இந்தப் புதிய கொக்கிக்கு வீழ இருக்கும்போது, மறுபடியும் இளைஞர்கள் “கோவில் கட்ட, இந்த ஊழல் பணம் வாங்கினால், சாமிக்குத்தம் வந்திடும்'” என்ற வகையில் பேசி, மறுபடியும் அம்பாசடர் குண்டர்களை விரட்டி இருக்கின்றனர்.

IPS மகன் இந்தத் தொகுதியில் தோற்றார்.

எனக்கு நம் மக்களை, இவ்விளைஞர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது!

=-=-=-=

இதற்கு முன் இந்திரா காந்தியின் ‘எமர்ஜென்சி’யும் ஆட்சியும் முடிவுக்கு வந்த போது தான்,  1977ல் நான் கடைசியாக மக்களின் மனமார்ந்த, ஆனந்த, ஏகோபித்த, எழுச்சியைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் நிம்மதிப் பெருமூச்சை உணர்ந்து கொண்டிருக்கிறேன்…

அதற்குப் பின், இப்போதுதான்…

… தேர்தல் முடிவுகள் வரும்போது வில்பட்டி என்கிற கிராமத்தில் இருந்தேன் – இது நேற்று முளைத்த கொடைக்கானல் போல அல்லாமல், பல நூற்றாண்டு வரலாறுடைய கிராமம்.

அங்கு தேர்தல் முடிவுகள் வர வர, திமுக தோல்வியைப் பற்றிய மக்களின் மகிழ்ச்சியை, எழுச்சியை, கோலாகலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தப்பட்டைகள், பறைகள், சரவெடிகள்  இனிப்புப் பரிமாற்றங்கள் – கடைக் காரர்களே, தங்கள் கடைகளில் இருந்து இனிப்புகளை, போவோர் வருவோர்க்குத் தருதல்… மிக நெகிழ்ச்சியாக இருந்தது எனக்கு, இம்மக்கள் திரளில் இருந்தது.

ஒரு டிவி, ஒரு காமெரா இல்லை – செல்போன் காமெரா கூட எவரும் உபயோகிக்க வில்லை – எதுவும் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை…அவர்கள் தன்னிலை மறந்து, தம்முள் ஆழ்ந்து  கொண்டாட்டத்தில் இருந்தனர்..

ஒரு மிகச் சரிவான சாலையில், மேலிருந்து கீழே இருந்த கடைகள் இருந்த பகுதிக்கு (village square)  டன்  டணக்கா, டணக்கு நக்கா  என்று தள்ளாடி, ஆடிக்கொண்டே, இரட்டை இலை சின்னத்தைக் . காண்பித்துக் கொண்டு வந்தார் – ஒரு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்….  என்னருகில் வந்தார், பொங்கி எழுந்த கண்ணீருடன் சொன்னார்: “அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம!

ஆம்.

மழைத் தூறல் ஆரம்பித்தது.

பி கு: இரண்டாண்டுகளுக்கு முன்னால், இப் பெரியவரின் ஒரு சிறு கடை வைத்திருந்த 50 வயது மகனை, ஏதோ சில்லறைச் சச்சரவில், ‘பாடம் புகட்டுவதற்காக’ காலை வெட்டி முடமாக்கி  விட்டிருக்கிறார்கள், அழகிரி+பெரியசாமி சார்புள்ள குண்டர்கள்.