திமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 1

02/05/2011

நாம் திருடர் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான ‘அண்ணா அறிவாலயம்’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

அதில் இருந்த ஊழல் மிகு ‘சன் டிவி’ பற்றி அறிவோம். அண்மையில் சிபிஐ -யால் சோதனைக்குட்படுத்தப் பட்ட அங்கிருக்கும் பொறுக்கி கலாச்சாரம் பரப்பும் ‘கலைஞர் டிவி’ பற்றியும் அறிவோம்…

ஆனால் ஏறக் குறைய 20 ஆண்டுகள் முன்பு வரை அங்கிருந்து ‘இயங்கிக்’ கொண்டிருந்த Maxwell Exim, Satyam Foods மற்றும் MVR Exports பற்றி அறிவோமா? (இந்தக் கம்பெனிகளின் அலுவலக முகவரியாக அண்ணா அறிவாலயம் இருந்தது! என்ன தைரியம்!!)

இவற்றின் பின் MV வரதராஜுலு என்பவர் இருந்தார் – இவர் அக்காலங்களில் மிகுந்த சக்தி படைத்தவராக இருந்தார். சக்தி என்றால் அப்படிப்பட்ட சக்தி – வங்கிகளிடமிருந்து பிரமிக்கத்தக்க அளவு கடன் பணம், மாபெரும் ‘ஏற்றுமதி – இறக்குமதி’ சம்பந்தப்பட்ட சந்தேகாஸ்பதமான தொழில்கள் – முந்திரியிலிருந்து யுத்த தளவாடங்கள் வரை; சர்வாதிகார நாடான சிங்கப்பூரில் பலப்பல நிறுவனங்கள். ஐரோப்பாவில் தொழில்கள். அரசியல் வாதிகளிடம் – GK மூப்பனார் உட்பட, உயர்கட்டத் தொடர்புகள்; அதிகார வட்டங்களில் அலட்டல்கள்… ஹவாலா பணப் புழக்கங்கள்…

அடிப்படையில் ‘சாமானியனாக’ இருந்த இந்த MVR, மிகக் குறைந்த காலத்தில் மிகுந்த ‘நிதி’ சேர்த்தது, எதையும் தாங்கும் இதயத்தைப் படைத்த எனக்கே, அப்போது மிகுந்த ஆச்சரியத்தை விளைவித்தது.

இந்த பினாமியால் நம் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் பல ஆயிரம் கொடிகள்.. நேரடி ஊழல்கள் சில ஆயிரம் கொடிகள். இதில் அதிக அளவு குளிர் காய்ந்த மிக முக்கியமான நபரும் நமக்குத் தெரிந்தவரே…

இந்த MV வரதராஜுலு யார்?

இருவார்த்தைகளில் சொல்வதானால்: கருணாநிதியின் பினாமி. (அய்யய்யோ, மன்னிக்கவும் – இவர் கருணாநிதியின், பல பினாமிகளில் ஒருவர்!)

நான் அவனில்லை... ஆனால் அவனின்றி ஓரணுவும் அவனியில் அசையாது...

ஒத்திசைவு படிக்கும் உங்களுக்கு, கருணாநிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளும் அவர்கள் நேரடியாக சுருட்டுவது / சுருட்டியது போதாது என்று, பல தரப் பட்ட மக்களையும் தங்கள் ஊழல் பணிகளில் இணைத்து அன்புடன் அவர்களை ஈடுபடுத்தி, தமிழகத்தினை முன்னேற்றப் பாதையில் முன்னெடுத்துச் செல்வது குறித்து நன்றாகத் தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன். இந்த MVR மனிதரும் இப்படி நம் இரண்டாம் ராஜராஜசோழனால் கொணரப் பட்டவர்தான்…

கருணாநிதி போல, இந்த உதிரி MVR-ம் திருவாரூர் பக்கத் தோன்றல் தான். இவர் தன் இளம் வயதில் என்ன செய்து கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. திடீரென்று வெடித்தெழுந்தார், சுத்த சுயம்புவாக – பணம் பல கோடிகள் பண்ணினார்.

யோசித்துப் பார்த்தால், நம் கருணாநிதியும் இப்படித்தான் – இளம் வயதில் ததிங்கிணத்தோம் போட்டுக்கொண்டு சினிமா கதை வசனம், நாடக வசனம் எழுதிக் கொண்டிருந்தவர் தான். சிறு அளவில் ஜேப்படிக்காரராக இருந்தவர் தான் – இவரும் பிற்காலத்தில் எப்படி பல்லாயிரக் கோடிகளுக்கு அதிபரானார் என்பதும் ஒரு ஆச்சரியம் தான்!

யோசியுங்கள் நண்பர்களே!

 • ராஜீவ் காந்தி பிசாத்து 60 சொச்சம் கோடிகளுக்காக பதவியையும், ஏன் உயிரையும் இழந்தார்.
 • குவாட்ரோக்கி  – பெற்றது கூட இதனை விட மிகவும் குறைவுதான் – முப்பது கோடிகள் தான்!
 • லாலு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் கூட நாற்பது கோடிகள் தான்.
 • ஆனால், இந்த MVR செய்த ஊழல் மொத்தம் பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல். இவருடைய சூத்திரதாரி அதற்கும் மேல் பற்பல மடங்கு. இவர்கள் எல்லோரும் வெளியில் சந்தோஷமாக இருக்கிறார்கள்…

நான் ராஜீவ் காந்தி, லாலு போன்றவர்களை உத்தமர்கள் என்று சொல்லவில்லை…

நாம் திருவாளர் MVR அவர்களிடம் வருவோம். இவர் எப்படி சுயம்பு பலகோடீஸ்வரர் ஆனார்? எப்படி மாட்டிக் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக கிரிமினல் வேலைகளைச் செய்தார்? அது ஒரு நூதனமான முறை. அறிவியல் பூர்வமானது. அயோக்கியத் தனமானது.

அடுத்த பகுதியில் இதனை விரிவாகக் காணலாம்…

Advertisements

4 Responses to “திமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 1”

 1. krishna Says:

  hmmm start the Music…..waiting to hear….


 2. அட இதென்ன புதுக்கதையா இருக்கே!! ஆனால் கொஞ்சம் கூட ஸ்வரசஸ்யத்துக்கு குறைவில்லை… போடுங்க… சூப் வேட்டு!!

  • ramasami Says:

   ‘சகமனிதன்’ அவர்களே,

   ‘முந்திரிகுமாரன்’ பதிவுகள் அனைத்தும் படித்தீர்களா? இதெல்லாம் தொடரும் பழங்கதைகள் தான் – எனக்கு தற்காலக் கருணாநிதிக் கதைகள், அவர் புதுக் கதைகள் அருகில் போகவே பயமாக இருக்கிறது!,

   ஆனால், யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பேருக்கு கருணாநிதி போல சினிமாவுக்கும், சுய தொழில்களுக்கும் திரைக்கதை-வசனம் எழுதும் பாக்கியமும், ‘இயக்கும்’ திறனும் இருக்கும்?

   நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம். ;-)

   நன்றி.

 3. vignaani Says:

  Several banks lost one/two hundred crores in the Cashew import/export business finance; his connection with Muppanar and Indian Bank’s loss was also mentioned; That he (earlier, referred to as “Rajan” is a Tamilian (we had thought it was a Malayalee), that he was a binami of Mu.Ka are new revealations. Eager to know rest of the story.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: