திருமாவளவன் அமெரிக்காவைக் கண்டிக்கிறார்! ஐயகோ!!

04/05/2011

திருமாவளவன் அவர்களின்  நகைச்சுவை  உணர்ச்சியைப் பற்றி நான் மிகமிகக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். நீங்கள் என்னை தயவு செய்து மன்னிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்கப் படை நுழைந்தது அத்துமீறல்: திருமாவளவன்
First Published : 04 May 2011 01:23:49 PM IST

சென்னை, மே 4- அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கொன்றது அத்துமீறிய செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செயல் அமெரிக்காவின் அரசப் பயங்கரவாதம் என்றும், இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிடும் அமெரிக்காவின் இத்தகையப் போக்கை கண்டிப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மே இறுதியில் நடைபெறும் விழாவில், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு “அம்பேத்கர் சுடர்” விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

(நன்றி: தினமணி வலைத்தளம்)

சில கேள்விகள், முன்னொரு காலத்தில் நிஜமாகவே நேர்மையுடனும் தைரியத்துடனும் இருந்த (அது அவர் தவறில்லை என்றாலும்) திருமாவளவனுக்கு:

  • நீங்கள் ‘மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவது’ பற்றிப் பேச அருகதை உண்டா? நீங்கள் தானே இந்தியா, இலங்கையின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட வேண்டும் என்று ஆர்பரித்தது?
  • நீங்களே மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதை (ராஜபக்ஷவுக்கு எதிராக, படு வீரமாக அறைகூவல் விடுவது – அதுவும் அடலேறு போன்று ஆர்ப்பரித்து, பாதுகாப்பாக தமிழகத்திலிருந்தே!) – செய்திருக்கிறீர்களே? ஏன் அமெரிக்க இதனைச் செய்யக் கூடாதா??
  • உங்கள் ஆட்கள் மூலமாக நீங்கள் நடத்தும் ‘கட்டைப் பஞ்சாயத்துகள்’ அத்து மீறல்கள் இல்லையா?
  • அம்பேத்கரை, அவர் கண்ணியத்தை, அவர் மேதைமையை, அவர் கொள்கைகளைச்  ‘சுட்டு,’ அதைக் கவைக்குதவாத உங்கள் உதிரி அரசியல் வளர்ச்சிக்கு உபயோகப் படுத்துவதால் தானே, நீங்கள்  அம்பேத்கரை ‘சுடர’  உங்களின் நண்பருக்கு(!) ‘அம்பேத்கர் சுடர்’ என்ற பட்டம் கொடுக்கிறீர்கள்?

தங்களுக்கு ஒரு விண்ணப்பம். அடுத்த முறை நீங்கள் ராஜபக்ஷவை கும்பிட்டுப் பார்க்கச் செல்லும்போது, அல்லது கோத்தபயவை அரவணைககும்போது, அவசியம் அவர்களிடம், ஏதாவது அமெரிக்க ஒபமா பயந்துபோய் சொன்னாரா என்று கேட்கவும் – உங்கள் கண்டனத்தைக்  கண்டு  மனம்  கலங்கிவிட்டார் அவர், பாவம்.

கடலூர்–சிதம்பரம் சாலையில் வைக்கப் பட்டுள்ள உங்கள் ப்ளெக்ஸ் பேனரைப்  பார்த்தால் அவருக்கு பேதியே வந்துவிடும்… எவ்வளவ் அழகாக நமட்டுச் சிரிப்புடன் வெண்ணை போட்டு முறுக்கிய மீசையுடன், சே குவேரா ஸ்டைல் தொப்பியும், போர்ச் சீருடையும் அணிந்து கொண்டு, உங்கள் பாவப்பட்ட தொண்டர்கள் தலைகள் எல்லாம் முண்டங்களாகக்  கீழே காட்சி தர, திவ்ய தரிசனம் தந்துகொண்டு இருக்கிறீர்கள்! உங்கள் தலைக்குப் பின் ஓர் ஆழ்ந்த ஓளி வட்டம் வேறு… எனக்குப் புல்லரிப்பு நிற்கவே மாட்டேன் என்கிறது… நான் என்ன செய்ய….

நீங்கள் கூடிய சீக்கிரம் ஒரு பிலிம் திருமாவாக வாழ்த்துக்கள். உங்களுக்கு அதற்கேற்ற  அனைத்துக் கல்யாண குணங்களும் இருக்கின்றன…

ஆனால் ஒன்று, இந்தப் பிசாத்து அமெரிக்காவையும், ஒபாமாவையும் தயை  செய்து  விட்டுவிடுங்கள் …. நீங்கள் உங்கள் மீசையை முறுக்கிப் படையெடுத்து சிறிலங்காவின் ராஜபக்ஷவை கதி கலங்க அடித்ததைப் போல தேவரீர் மறுபடியும் செய்ய வேண்டாம்.

அவர்கள் பாவம், பிழைத்துவிட்டுப் போகட்டும்…

ஒழிக, அத்து மீறல்கள்!  ஒழிக (இறை) ஆண்மை!

நன்றி.

Advertisements

2 Responses to “திருமாவளவன் அமெரிக்காவைக் கண்டிக்கிறார்! ஐயகோ!!”

  1. thendral Says:

    நெற்றி அடி…

  2. M.S.Vasan Says:

    தமிழ்நாட்டின் சாப‌ங்க‌ளில் இது ஒரு அங்க‌ம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: