கருணாநிதியின் ‘முந்திரிகுமாரன்’ : பகுதி – 3

06/05/2011

திமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 1 , பின்  ‘முந்திரி குமாரன்’ – திமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 2 படித்தீர்களா?

சரி.

MVR, கருணாநிதி வகையறாக்கள் மீது உங்களுக்கு மரியாதையும் பிரமிப்பும் அதிகமாகிக் கொண்டே போவதை என்னால் உணர முடிகிறது …

இந்த முந்திரிகுமாரன் MVR மற்றும், முந்திரித் தாத்தா கருணாநிதி கதையை இந்த இடுகையோடு முடித்து விடுகிறேன்.

ஊழல் விஞ்ஞானி MVR அவர்களின் தப்பித்தல் திட்டம்
(அல்லது)
கலைஞரின் திரைக்கதை வசனத்தில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்களில் தயாரிக்கப் பட்ட உண்மைத் திகில் படம்
‘முந்திரிகுமாரன் – பாகம் 2’ 

(அல்லது)

சிபிஐ-க்கு  டாட்டா காண்பிப்பது எப்படி?
(அல்லது)
விடுதலைப் புலிகளுக்கு ஹல்வா கொடுப்பது எப்படி?

… இந்த MVR மேதை, மாய்ந்து மாய்ந்து தனக்காகவும், தன் தலைவனுக்காகவும் அடித்த பணம் – மாமலையாக வளர்ந்தது, இந்த மானுடப் பதர் வாங்கிய மாபெரும் கடன்களும், செய்த அயோக்கியத் தனங்களும் பல்கிப் பெருகி அரசல் புரசலாக விஷயங்கள் வெளியே வந்தன.

இந்தியன் வங்கியிலும் அதன் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆயிரம் பிரச்சினைகள். ஊழல்கள், RBI மற்றும் சிபிஐ நெருக்கடிகள், வங்கியின் மோசமான நிலைமை… அவர் ‘கடன்’ கொடுத்த அரசியல் சார்புடைய அல்லது அரசியல் சார்பற்ற உதிரிகள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் அவரை கை விட்டனர்…

… இப்போது, சிபிஐ மேதகு MVR அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. ஏனென்றால், இந்தியன் வங்கியின் கடலூர் கிளை சிபிஐ அதிகாரிகளுடன் 1996-இல் தொடர்பு கொண்டது.

ஆனால், கலைஞர் கருணாநிதியின் மதிநுட்பத்தால், கிரிமினல் மூளையால், யாருமே அவரை நோக்கி சுண்டு விரலைக் கூட நீட்டவில்லை. இதற்கு ஒரு படி மேல் போய், MVR-இன் சூத்திரதாரி என்று பெரும்பாலோர் GK மூப்பனாரைத்தான் சொல்லிக் கொண்டிருந்தனர்! (இங்கு தான் கனிமொழி போன்ற விடலைத் திருடர்கள், மாமலைகளை விழுங்குவதற்கு அவசரப் படுபவர்கள் – தங்கள் ‘கருணாநிதித்துவ‘   தந்தையர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – எப்படித் திருடோ திருடு என்று திருடினாலும், சாமர்த்தியமாக இன்னொருவரை மாட்டிவிட்டு, குழப்பம் ஏற்படுத்தி, புலனாய்வு முயற்சிகளைத் சுலபமாகத் திசை திருப்பி விடுவது என்று!)

நிற்க, MVR இந்திய சட்டங்களின் கெடுபிடிகளால் 1997-இல், நம் நாட்டை விட்டு ஓடிப்போய் சிங்கப்பூரில் ஒளிந்து கொண்டார். நமக்குத் தான் சிங்கப்பூர் அரசின் இரட்டை வேடங்களைப் பற்றித் தெரியுமே. அவர்கள் MVR பற்றிய வங்கிக் கணக்குகளைக் கூட சிபிஐ-க்குக் காட்ட மறுத்துவிட்டனர். சிங்கப்பூர் அரசானது, தம் நாட்டிற்கு ஏதாவது பணம் வருமென்றால், உபயோகம் இருக்குமென்றால், ஆதாயம் அடைய முடியும் என்றால், குற்றவாளிகளையும் அரவணைத்துச் செல்லும். (சிங்கப்பூர் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஒரு சுத்தமான இடமாகவும், அதன் அடிப்படைக் கட்டுமானங்களில் ஊழலின்மையும், போதை மருந்து விவகாரங்களில் கடுமையாகவும் இருப்பதாகத் தோற்றம் அளிக்கலாம்.  ஆனால், இந்த சர்வாதிகார சிங்கப்பூர் அரசு செய்யும் அயோக்கியத் தனங்கள், புரட்டுக்கள், தார்மிக நெறிமுறை தவறல்கள், ஊழல்கள், ஊருக்கு உபதேசங்கள் பற்றி முழம் முழமாக எழுதிக் கொண்டே போகலாம் – ஆனால் இது அதற்கான தருணமல்ல)

நல்ல வேளை – ஆனால், மற்ற நாடுகள் அப்படியல்ல – எப்போது அந்நாடுகளில் இந்த MVR இருப்பதாகத் தெரிந்தாலும், தெரிய வந்தாலும்,  அவை இந்தியாவுடன் ஒத்துழைத்தன. சிபிஐ-யும் தனக்குரிய தொடர்புகளைப் பயன்படுத்தி, இந்த ஆளைப் பிடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டது. ஆகவே, இந்த MVR – மாறுவேடங்களில், மாற்றுப் பெயர்களில், மாற்று, போலி பாஸ்போர்ட்டுகளுடன் – ஓடோடி அலைந்து, தாய்லாந்த்,  மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், கொஸ்தாரிக்கா, நைஜீரியா ,  ஹாங்காங், ஸ்வீடன், வியட்நாம், ஹால்லந்து, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்த், ஐவரி கோஸ்ட், இந்தோனேசியா போன்ற பல நாடுகளில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு, சிபிஐ-யுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார். இந்த விளையாட்டு 2001 வரை நீடித்தது. அச்சமயம், இவர் பிரான்சில் ஒளிந்துகொண்டு தனக்குத் தெரிந்த வியாபாரத் தந்திரங்களைத் தொடர்ந்தார்!

ஆனால் அவர் மிகவும் வருந்தத் தக்க விதத்தில், சிபிஐ விடாக் கண்டர்களால், இன்டர்போல் மூலமாக ‘சிவப்பு மூலை’ அறிவிப்பு வெளியிடப்பட்டு – சிபிஐ கொடுத்த உளவுத் தகவலால்,  2001 ஜூலை ஐந்தாம் தேதி, பிராtன்ஸ் காவல் துறையினரால் இவர் பிடிக்கப்பட்டார்.

அப்போது அவர் தனக்கு வைத்துக்கொண்டிருந்த பெயர் லூயி ழாலு. (Louis Jalu). இச்சமயம் இவர் பாண்டிச்சேரியில் பிறந்த சந்திரலேகா என்ற பிரான்ஸ் குடியுரிமை பெற்ற பெண்ணை ‘காதும் காதும் வைத்தது போல்’ திருமணம் செய்து கொண்டிருந்தார்.  (‘திருடா திருடா’ என்கிற ஒரு மணி ரத்னம் படத்தில் ‘சந்திரலேகா’ என்ற பாட்டு வந்ததே, ஞாபகம் இருக்கிறதா? என்ன பொருத்தம் இது! மணி ரத்னம் ஒரு தீர்க்க தரிசியோ என்ன இழவோ!)

… அவசரம் அவசரமாக சிபிஐ ஒரு குழுவினை அனுப்பியது, பிரான்ஸ் நாட்டிற்கு. பிரான்சும் இந்த ஆளை நாட்டை விட்டு இந்தியாவுக்கு வெளியேற்ற சம்மதித்தது. ஆனால் குள்ளநரித்தனம் மிகுந்த இந்த MVR (இவர் உலகத்தின் மாபெரும் குள்ளநரியான கருணாநிதியின் பினாமி அல்லவா?)  – பிரான்ஸ் நீதித் துறையிடம், “நான் ஒரு பிரான்ஸ் நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். ஆகவே நானும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவன் தான்!” என்று ஒரு போடு போட்டார். இதில் சுவையான, ஆனால் மிக மிக வருந்தத் தக்க விஷயம்: பிரான்ஸ் தன் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களை எக்காரணம் கொண்டும் நாடு கடத்தாது.

லால்கிஷன் அத்வானி அப்போது பிரான்ஸ் சென்றிருந்தபோது கூட இவ்விஷயத்தில் பிரான்ஸ் அரசுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தினார். பிரான்ஸ் மசியவில்லை. சிபிஐ வேறு வழியில்லாமல் பிரான்ஸ் நீதித் துறையை அணுகியது… அந்நீதி மன்றமும் பிரெஞ்சு விதிகளின், சட்டங்களின்படி ‘மன்னிக்கவும்’ என்று சொல்லி விட்டது…

சிபிஐ குழு சோர்ந்தது போய் திரும்பி வந்தது. ஆனால் தக்க தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர் சிபிஐ-இனர்…

ஒரு கிளைக் கதையில், இந்த MVR, அவர் சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் (மக்களின் பேராதரவு பெற்று கோபால் பல்பொடி விற்காமல்) கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, ஆயுதக் கடத்தல்களுக்கும் ‘உதவி’ செய்து வந்தார் – எல்லாம் பணம் கையில் வாங்கிக் கொண்டுதான்.

எப்படி என்றால், இவர் இந்தியாவிலிருந்த தன் நிறுவனங்களிலிருந்து, தன் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு  முந்திரி இறக்குமதி செய்வார் – அந்த சரக்குகளை அப்படியே மாயஜாலமாக காகிதத்தில் தளவாடங்களாக மாற்றி ‘இயந்திரங்கள்,’ அல்லது ‘அவற்றின் பாகங்கள்’ அல்லது அவற்றின் ‘spare-கள்’ என்று மாற்றி தாய்லாந்த் அனுப்பி  அங்கோ அல்லது போகும் வழியிலோ, கிழக்கு ஐரோப்பிய / சீன யுத்த தளவாடங்களை ஏற்றி பின் ஈழம் அனுப்பும் வேலை..  முதலில் சிறியதாகத் தான் ஆரம்பித்தார்…

பின்னர். இக்கிளைக்கதையின் தொடர்ச்சியாக, இந்த ஜெகஜ்ஜால MVR தன்னுடைய ஊழல் நிறுவனங்கள் மூலம், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத விற்பனை / கொள்முதல் செய்வதாகக் கூறி, அவர்களையும் இந்தப் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர் போல பண விஷயத்தில் அயோக்கியத்தனமாக ஏமாற்றியது வேறு ஒரு கதை… வேறு வழியில்லாமல் விடுதலைப் புலிகளும், இந்த MVR பின் யார் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டு, ‘விட்டுக்’ கொடுத்தனர்.

… இப்படியாகத்தானே, MVR அவர்கள் திரைகடலோடியும் திரவியம் திருடிக் கொண்டிருந்தார், தானைத் தலைவனின் ஆசிகளுடன்…

ஆனால் MVR தன்னை யாரும் பிடிக்க முடியாது என்றும், தன்னை மறந்திருப்பார்கள் என்றும்  நினைத்து, பிரான்சை விட்டு 2004 டிசம்பரில் துபாய் சென்றார். தகவலறிந்த சிபிஐ, அந்நாட்டில் இருந்த இந்திய தூதர் மூலம் UAE அரசாங்கத்தை அணுகி, இன்டர்போல் கொடுத்த MVR மீது இருந்த ‘சிவப்பு மூலை அறிவிப்பு’ பற்றிச் சொல்லி,  2005 பிப்ரவரியில்  MVR-ஐக் கைது செய்ய வைத்தது.

பின்னர் சிபிஐ,  UAE அரசாங்கத்தை மீண்டும் அணுகி, MVR ஊழல் சம்பந்தப்பட்ட ஆவணங்களைக்  கொடுத்து, உலகளாவிய விதிகள், அறம் பற்றியெல்லாம் பேசி, போராடி, 2005 ஏப்ரல் மாதத்தில் இந்த MVR கிரிமினலை நம் நாட்டுக்குக் கொணர்ந்தது, கைது செய்தது…

ஆனால் இந்த சிந்துபாத் கதை இத்துடன் முடியவில்லை…

நம் தானைத் தலைவரின், அவருடைய கருங்காலிகள் கூட்டத்தின் வழிமுறைகளால், அயோக்கியத் தனங்களால், சிபிஐ கேஸ்களை விசாரித்துக் கொண்டிருந்த ‘விசேஷ நீதிபதி’ 2005 ஆகஸ்டில் இந்த கேடி MVR அவர்களுக்கு பெய்ல் கொடுத்தார்… (காரணங்கள்: MVR-க்கு 67 வயது ஆகி விட்டது. அவர் எங்கே ஒடப்போகிறார்? மேலும் அவருக்குத் தான் பாஸ்போர்ட் இல்லையே, இன்ன பிற)

உடனே சுதாரித்துக் கொண்ட சிபிஐ, சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி – இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரியது. கடைசியில், நீதிபதி ஜே ஜெயபால் அவர்கள் இதனை 2006 பிப்ரவரி 26 அன்று, ரத்து செய்தார்.

இப்போது நாம் 2011-ல் இருக்கிறோம்…

இந்த MVR நபர் இப்போது எங்கு இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஏதாவது சிறையில் இருக்கக் கூடும். அல்லது கோபாலபுரத்தில் தன் முதலாளியுடன் கூட இருக்கலாம். அல்லது மர்மமான முறையில் இறந்து கூட போயிருக்கலாம் – அண்ணா நகர் ரமேஷ் (ஒரு ஸ்டாலின் பினாமி) போலவோ, சாதிக் பாட்சா (கனிமொழி/ராசா பினாமி) போலவோ…

முந்திரி குமாரன் கதை, ‘ஒத்திசைவில்’ இத்துடன் முடிந்தது… ஆனால், கயமைநிதிகளின் ஊழலாட்டம் தொடர்கிறது…

=-=-=-=

சிபிஐ விசேஷ குழுக்களின் நுண்மான் நுழைபுலம் அறியும் தன்மையையும்,  அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் சிபிஐ-இனர் எப்படிதேசத்தின் நன்மைக்காக காரியங்களை சாதிப்பார்கள் என்பதும், ஊழல் மிக மலிந்த, கேடுகெட்ட ஆட்சியாளர்களைக் கொண்ட தற்காலத்திலும் இவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடிகிறது என்பதும், சந்தோஷமான விஷயங்கள்…

உங்களுக்கு இந்த லூயி ழாலு இப்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால், பின்னூட்டமிடவும்.

=-=-=-=

கீழே சில இணைய வழிச் செய்திகள் / சுட்டிகள் உள்ளன. நீங்கள் இவற்றையும் படித்து இறும்பூது அடைய வேண்டுகிறேன்….

MVR + அவரது லீலைகள் பற்றிய  மேலும் சில விவரங்கள் உள்ளன, இங்கு – ‘அறிவியல் பூர்வமான’ கொள்ளைகள் பல நடத்தும் கும்பலின் அபாரமான மூளைத் திறனுக்கு இது ஒரு சான்று.
G.Ganapathisubamanian vs The Chief Enforcement Officer on 29 July, 2009  – http://www.indiankanoon.org/doc/1241704/
http://indiankanoon.org/doc/1189397/

Indian Bank scam main accused arrested in France –http://www.rediff.com/money/2001/jul/06scam.htm

CBI press release – New Delhi,03 April, 2005
Indian Bank Scam Lynchpin deported to India
http://www.watchoutinvestors.com/press_release/cbi/0003.asp   http://cbi.nic.in/pressreleases/PRelease2005/pr3apr5.htm

CBI – History of records pertaining to the case of MVR
http://www.watchoutinvestors.com/history.asp?def_code=C0048702

The Central Bureau of Investigation vs Louis Jalu @ Muthukrishna … on 24 February, 2006
http://www.indiankanoon.org/doc/1034469/

French citizen’s bail cancelled
http://www.hinduonnet.com/2006/02/26/stories/2006022607030800.htm

Advertisements

5 Responses to “கருணாநிதியின் ‘முந்திரிகுமாரன்’ : பகுதி – 3”

  1. Nitamil Says:

    You know so much about singapore… You live there?

  2. M.S.Vasan Says:

    I will read the Part 1 & 2 first and.come back later to this commends.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: