கருணாநிதியின் திடீர், திடுக்கிடும் அறிக்கை!

07/05/2011

தினமலர் பத்திரிகையில், கருணாநிதியின் அறிக்கை பற்றிய ஒரு செய்தி, தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு: கருணாநிதி” என்ற தலைப்பில் மே 04,2011 அன்று வந்துள்ளது.

ஐயோ, இது என்னடா புது குடமுருட்டி குண்டு என்று நான் திடுக்கிட்டு, விக்கித்துப் போய், கொஞ்சம் இந்த மனிதர் சொன்னதற்கு ஏதாகிலும் ஆதாரம் இருக்கிறதா என்று பார்த்தேன்…

கருணாநிதிக்கும் நகைச்சுவை உணர்ச்சி மிக, மிக, மிக அதிகம் என்பதை உடனடியாக உணர்ந்தேன்…

நிற்க, என்னுடைய நீண்ட நெடுநாள் எண்ணம் என்ன என்றால், கருணாநிதி அவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் உண்மை பேசத் தெரியாது என்பதாகும். இவர் என்ன, எப்போது, எதைப் பற்றிப் பேசினாலும், எழுதினாலும், அதில் பொய்களும், தமிழ் இலக்கணப் பிழைகளும், மலிந்து இருக்காமல் இருக்க சாத்தியக் கூறுகளே இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்…

ஏனெனில் கண்ணதாசன் ஒரு சமயம் எழுதாதது போல: “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கலைஞர், கோமானே” ஆனாலும் ஒரு வீண் நப்பாசை – இந்த மனிதர் சரியாகியிருப்பார், தன்னுடைய இலையுதிர் காலத்திலாவது என்று…

ஆனால், ஊஹூம் – இல்லவே இல்லை. இவர் ஒரு ‘பொய் அடிப்படைவாதி‘யாகத்தான் இன்னமும் இருக்கிறார்! என்ன சோகம் இது!!

இப்போது ஒவ்வொன்றாக இந்த மனிதரால் சகட்டு மேனிக்கு உதிர்க்கப்பட்டஅறிக்கைப் பொய்களைப் பார்க்கலாம்…

முதலில், இந்தத் தலைப்பு: ‘தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு” இதுதான் முதல் பொய்… இவருடைய அறிக்கையிலேயே ஒரே ஒரு பத்திரிக்கையைத் தான் – வால்ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) தினசரியைத் தான் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நானும் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு தேடித் தேடிப் பார்த்தேன் – WSJ-வைத் தவிர ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையும் இந்த இழவெடுத்த மனிதருக்கு ‘பாராட்டு’ தெரிவிக்கவே இல்லை…

முத்தமிழ் வித்தகராக தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் – வான்கவிப்பேரரசு வைரமுத்து, மற்றும் ”வாலி’ல்லாமல் இருந்தாலும் குழைபவர்களினால் நாக்கூச, செவிகூச புகழப்படும் மனிதர் எப்படி ஒருமை விஷயத்தை ஊதிப் பன்மை பலூனாக்குகிறார் என்பது ஆச்சரியப் படத்தக்க ஒன்று!

உயர்வு நவிற்சி அணியைத், தமிழில் இந்த அளவுக்குத் தரம் தாழ்த்தியது, தாழ்த்துவது இந்த மாண்புமிகு கருணாநிதியாகத்தான் இருக்கவேண்டும்.

“கடந்த மாதம் கோவையில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையை குறிப்பிட்டுள்ள அவர், “முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்கள், தமிழகத்தை பல வழிகளிலும் குறிப்பாக, ஊரக வளர்ச்சி, வேளாண்மை சீரமைப்பு ஆகியற்றில் மாதிரி மாநிலமாக மாற்றியிருக்கிறது’ என, பிரதமர் பாராட்டியுள்ளதை குறிப்பிட்டு உள்ளார். “

நமக்குத் தெரியும் நமது நாட்டின் சாபக்கேடான மதிப்புக்குரிய மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களைப் பற்றி. ஆனால் இவருக்குக் கூட ஒரு நகைச்சுவை உணர்ச்சி இருக்குமோ என்னவோ… இதில் அவர் வைத்திருக்கும் பொடியை யூகிப்பதை, ஒத்திசைவு வாசகர்களுக்கு விட்டு விடுகிறேன்…

“மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இந்தியாவில் நிதி ஒழுங்கும், நிலைத் தன்மையும் திருப்திகரமாக கடைபிடித்து வரும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும்’ என சுட்டிக் காட்டியிருப்பதைக் கூறியுள்ளார். “

நிதி ஒழுங்கு = கருணா’நிதி’ கும்பலின் நிதி ஒழுங்கு?

பிரணாப் அவர்களின் இந்தப் பேச்சைப் படித்தவுடன், சிரித்து சிரித்து எனக்கு மூத்திரமே வந்து விட்டது… என்ன மாதிரி புத்திசாலி மனிதர், கருணாநிதியின் துர்சகவாசத்தால் எப்படி உளறுகிறார்! ச்சே! இவர் கணிதத்தின் அடிப்படை கூட்டல் கழித்தல்களைக் கூட மறந்து விட்டார் போலும்!

“வறுமை ஒழிப்பு மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய செயல்படுத்தி வரும், “வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை’ உலக வங்கியின் முன்னாள் செயலாக்கத் தலைவர் மீனா முன்ஷி பாராட்டி உள்ளார் என்றும், “

ஆஹா! சோழியன் குடுமி வைத்துக்கொண்ட உலக வங்கிக்காரர்களே பாராட்டுகின்றனரே என்று கொஞ்சம் தேடினேன் – இந்த உலகவங்கி பக்கத்துக்கு வந்தேன்…

இதில் நிறைய சொல்லியிருக்கிறார்கள் – தட்டியும் குட்டியும். தட்டுவதை மட்டும் கருணாநிதிச் சோழன் குறிப்பிட்டதால், நான் அவர் சொல்லாமல் விட்ட சிலவற்றையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியதாக இருக்கிறது. ஒரு விஷயம் – நாம் இம்மாதிரி செய்திகள் படிக்கும்போது, கூடவே ஒரு வண்டி உப்பினை வைத்துக் கொள்வது நல்லது…

கடந்த பதினைந்து வருடங்களாக, தமிழ்நாடு முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது.

அதாவது கருணாநிதி மட்டுமல்லாமல் மற்ற ஆட்சியாளர்களுக்கும் – அதாவது ஜெயலலிதா உட்பட – இந்த வளர்ச்சியில் பங்கு உள்ளது.

இருப்பினும் தமிழ் நாட்டில் 120 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இன்னமும் இருக்கிறார்கள்.

இது ஒரு சாதனையா?

சமூக முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றமாக மாறவே இல்லை.

எப்படி மாறும்? இலவசங்களையும் கள்ளையும் ஊற்றிக் கொடுத்தால் எப்படி வாழ்வாதாரங்கள் வளரும்?

இந்த அரசு வருவாயில் 30 சதவிகிதத்தை ‘மக்கள் நலத் திட்டங்களுக்குச்’ செலவிடுகிறது.

பாவம், இந்த உலகவங்கிக்கு, இந்த திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஒரு கவைக்கும் உதவாத, காயடிக்கும் விஷயங்கள் தான் நடக்கின்றன என்பது தெரியாது: உதாரணங்கள் –

 • ஒரு ரூபாய் அரிசி (புழுத்துப் போன, விஷம் பல கலந்த, மாபெரும் அளவுக்குக் கடத்தப்படும் உண்பொருள்),
 • இலவச டிவி (மக்களை முட்டாள் அடிப்பது),
 • சுமங்கலி திட்டம் (இளம் பெண்களைக் கொத்தடிமைகளாக ஆக்குவது, மறைமுகமாக வரதட்சிணையை, பெண்ணடிமைத் தனத்தை தூக்கிப் பிடிப்பது) – இன்னபிற…
 • ஓஒ மன்னிக்கவும் – நான் முக்கியமான மாக்கள் நலத் திட்டமான டாஸ்மாக் பெருங்குடித் திட்டத்தை விட்டுவிட்டேன்…

“மேலும், வாகன உற்பத்தி தொழிலுக்கு உதவும் வகையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு வசதிகள் குறித்து, “வால் ஸ்டீரிட் ஜர்னல்’ என்ற வெளிநாட்டு பத்திரிகை பாராட்டியுள்ளதாகவும், அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.”

இப்போது WSJ செய்திக்கு வருவோம். கருணாநிதியின் மீது சந்தேகம் வந்து, சிறிது WSJ இணையதளத்தைப் பார்த்தால் – எரிக் பெல்மன் என்கிற நிருபர் சென்னையை வந்தடைந்து எண்ணி இரண்டே பேர்களைப் பார்த்துப் பேசி மேலெழுந்தவாரியாக எழுதிய(?) இந்த பக்கம் கிடைத்தது:

A New Detroit Rises in India’s South

இதைப் படித்து விட்டுத் தான், நம் தானைத் தலீவர் – என்னமோ WSJ-வே அமெரிக்கா போலவும், வசிஷ்டர் வாயால் இவர் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போலவும் சொல்லியிருக்கிறார்…  என்ன இருந்தாலும், இந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளுக்கு, வெள்ளைக்காரர்கள் என்றாலே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்றும், அவர்கள் வாக்கே வேதவாக்கு என்று தானே எண்ணத் தோன்றும்?

இந்த எரிக் பெல்மன் எழுதியவற்றில் சில கீழ்:

சென்னை, பல விதங்களில் 1910 வாக்கில் இருந்த டெட்ராயிட் நகரம் போல இருக்கிறது.

அடப்பாவிகளா, கடந்த ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தை 100 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளி விட்டீர்களே!

2006-ல் தமிழக அரசு அதிமுக விலிருந்து திமுக விற்கு மாறியபோது, வாகன உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அரசு அணுகியதில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆகவே, ஜெயலலிதா அரசு ஆரம்பித்து வைத்த போக்கைத் தான், கருணாநிதி அரசு தொடர்ந்தது – இதில் கருணாநிதி எப்படி ‘எங்களால் தான்’ என்று மார் தாட்ட முடியும்? என்ன நகைச் சுவை இது??

=-=-=-=

இப்போது அதே WSJ வலைத் தளத்தில் ஏப்ரல்  11, 2011 அன்று  வந்திருக்கும் அமோல் ஷர்மா என்ற WSJ  நிருபர் எழுதியுள்ளதைப் பார்க்கலாமா?

It’s Not the Economy, Stupid, It’s the Free Blenders and Sheep

Tamil Nadu Freebies Cost Taxpayers Dearly

ஏன் இந்த WSJ பக்கங்களில் இருந்து, இந்த கருணாநிதி அரசு மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கியிருப்பதை பற்றி எழுதியிருப்பதை நம் தானைத் தலீவர் ஒன்றும் சொல்லவேயில்லை?

கீபெல்ஸ் யார்? கருணாநிதியா? அல்லது கீபெல்ஸேவா? ? கயமையும், செய்திகளைத் திரித்துச் சொல்லும் வழக்கம் ரத்தத்தினுள்ளே ஊறிப்  போயிருப்பதால் தான் இந்த மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு இப்படிப் பொத்தாம்பொதுவாக உளற முடிகிறது.

=-=-=-=

இந்த வயதில், இப்படி புளுகுணி மாங்கொட்டையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இம்மனிதருக்கு?

வெட்கக்கேடு…

Advertisements

One Response to “கருணாநிதியின் திடீர், திடுக்கிடும் அறிக்கை!”

 1. M.S.Vasan Says:

  பொய்மையும், வ‌ஞ்ச‌னையும் முக‌ வின் தொட்டில் ப‌ழ‌க்க‌ம்,
  அது ….. வ‌ரை தொட‌ரும் தான். ஒரே ஒரு நல்ல‌ மாற்ற‌ம்
  ம‌க்க‌ள் (திமுகவின‌ரும்) இப்போது இவ‌ரின் “அண்ணா த‌ந்த‌ மோதிர மோச‌டி” முத‌ல் நீங்க‌ள் எழுதியிருக்கும் ‘நேற்றைய‌ பொய்வ‌ரை” அவரது க‌ய‌மையை தெரிந்து வைத்திருக்கிறார்க‌ள்.
  அதிக‌மாக் உழைத்திருக்கிறீர்க‌ள் இந்த‌ ப‌திவுக்காக. வாழ்த்துக்க‌ள். ‌


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: