சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…

10/05/2011

1970-களின் பிற்பகுதிகளில் “சர்க்காரியா கமிஷன்” என்று கருணாநிதியைப் (மன்னிக்கவும், ‘அறிவியல் ரீதியான ஊழலாளர்)   பற்றிப் பேசும்போது  சொல்வார்கள்.

ஆனால் இக்காலத்தில் நடுவயதினர் (35-50 வயதுடையவர்கள்) கூட, பெரும்பாலும் இதன் பெயர் மட்டும் தான் கேள்விப்பட்டிருப்பார்கள். நம் இளைஞர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

=-=-=-=-=

நான் சில வருடம்  முன்பு வரை, இம்மாதிரி அக்கறையின்மை இக்காலத்திருக்கே உரியது என நினைத்தேன், சலிப்புடன்… அப்போது தான் என் துணைவியார் (அதாவது, என் மக்களின் தாயார்) எனக்கு இந்த சாக்ரடீஸ் வரிகளை நினைவூட்டினார்.

The children now love luxury; they have bad manners, contempt for authority; they show disrespect for elders and love chatter in place of exercise. Children are now tyrants, not the servants of their households. They no longer rise when elders enter the room. They contradict their parents, chatter before company, gobble up dainties at the table, cross their legs, and tyrannize their teachers.;

– Socrates (470 – 399 BC)

இவருக்குச் செல்லமாக ‘சோக்ரதர்’ என்று பெயர் வைத்து சுமார் 50 60 ஆண்டுகட்கு முன் அக்காலக் கழகச் செம்மல்கள், கூட்ட ஏச்சாளர்கள்,   ஒரு  சாக்ரடீஸ் இழவும் புரியாமல் விலாவாரியாகப் பேசியிருக்கிறார்கள்!

அவற்றைப் படித்த நானும், இந்த சோக்ரதர், மகாபாரதக் காலங்களில் இருந்திருப்பார் என்றும், நன்றாக ரதம் (தேர்) ஓட்டியிருப்பார் என்றும் கற்பனை செய்து கொண்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தேன்…

சோக் என்றால் தான்  எனக்கு  என்ன என்று சரியாகப் புரியவில்லை -அதனால் என்ன,  இந்த ரத ஒட்டி ஒரு ஷோககுப் பேர்வழி போலும், ஆனால், தமிழில் தான் ஷ வரமுடியாத காரணத்தால் சோக்கு ஆகிவிட்டாரோ என்னமோ என்று நினைத்துக் கொண்டேன்.  நல்ல சோக் தானே இது? சோ அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

அச்சச்சோ! எங்கேயோ போய்விட்டேன், வழக்கம் போல். மன்னிக்கவும்.

=-=-=-=-=

நான் யோசித்தேன் – ஒருக்கால், மக்கள் இந்த கமிஷன் ரிப்போர்ட்-ஐ படிக்க நினைத்தாலும் கிடைப்பதில்லையோ என்னமோ? சிறிது முயற்சி செய்து, சுமார் இரண்டு வருடங்கள் முன்பு,  ஒரு நூலக வலம் வந்தேன்…

சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்தில் தான் நான் இதனைப் படித்ததாக நினைவு – அங்கு இது கிடைக்கவில்லை.  எங்கும் கிடைக்கவில்லை.  அலைந்தது தான் மிச்சம்.

சிறிது ‘தெரிந்தவர்கள்’ மூலம் தெரிய வந்தது என்னவென்றால்: ‘வாய்மொழி ஆணை’ (ஓரல் ஆர்டர்) மூலம் கன்னிமாரா நூலகத்திலிருந்தும், சென்னை அரசு செயலக நூலகத்திலிருந்தும், தேவநேயப் பாவாணர் – மற்றும், நம் தங்கத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலிருந்தும் இந்த சர்க்காரியா விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் (பல ஆவணங்களுடன்) எடுக்கப் பட்டு, எரிக்கப் பட்டுவிட்டன! டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகத்திலும் இது இல்லை!

கருணாநிதிகளின்  ‘அறிவியல் பூர்வமான’ குற்றத் தடையங்களை மறைக்கும், ஒழிக்கும் தன்மைக்கு, இதுவும் ஒரு சான்று!

அவர்கள் எண்ணம் என்னவென்றால், சில பத்து ஆண்டுகள் மக்கள் பார்வையில் இந்த ரிப்போர்ட் தெரியும் சாத்தியக் கூறு இல்லை என்றால், மக்கள் இவை பற்றி மறந்து விடுவார்கள் என்பது…

அயோக்கியர்கள் மானுடப் பதர்கள்.

=-=-=-=-=

என்னைப் பொறுத்தவரை இந்த கமிஷன் அறிக்கை – தமிழகத்துக்கு, அதன் நன்மையை விரும்புபவர்களுக்கு மிகுந்த முக்கியமான ஒன்று. ஆகவே, இந்த அறிக்கையைப் படிக்க விரும்புபவர்களுக்கு அது  அவசியம் கிடைக்க வேண்டுமென நினைக்கிறேன்.

என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தில், இந்த விசாரணைக் கமிஷனின் இரு  முழுமையானஅறிக்கைகள் (முன்னோட்டம் + இறுதி) உள்ளன. , இந்த அறிக்கையின் பக்கங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்றலாம் என நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவற்றைப் படிக்கத் தயாரா?

10 Responses to “சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…”

 1. thendral Says:

  இது என்ன அய்யா கேள்வி??? முதலில் அதை வெளியிட்டுவிட்டு வேறு வேலை பாருங்கள்…இத்தகைய அயோக்கிய சிகாமணிகளின் அக்காலத்திய தில்லு முள்ளுகளையும் அறிந்து உலகுக்கு வாய்மொழியாகவும் பரப்புவோம்..

  • ramasami Says:

   ’தென்றல்’ அவர்களே, அடுத்த இரண்டொரு நாட்களில் சர்க்காரியா அறிக்கைகளை பதிவு செய்கிறேன் – வேலைப்பளு அதிகமாகி விட்டது, மன்னிக்கவும்…

 2. K.RAMESH Says:

  Sir
  I need complete report of Srakaria.Pl send xeroxe copy with spiral binding,i will pay all the expenses,please
  K.Ramessh,BA BL

  • ramasami Says:

   Dear Ramesh – I will upload page scans to this weblog, in the next few days; you can print the pages and spiral bind them, okay?

 3. Prabhu Raja Says:

  தங்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது, மிக்க நன்றி, http://interstatecouncil.nic.in/SARCOMM.htm

  • ramasami Says:

   Thanks, PrabhuRaja,

   But, this is not the 1976 report that lambasts DMK. The one that you are citing is about the power distribution between the States and the Central Govt.

   • Prabhu Raja Says:

    Thank you for the clarification, I will wait for your update, by the way hats off to you.

 4. M.S.Vasan Says:

  ச‌க்காரிய‌ க‌மிஷன் அறிக்கையின் தாக்க‌த்தைக் குறைக்க‌ பிர‌த‌ம‌ர் மொரார்ஜி தேசாயிட‌ம் போனார். காரிய‌ம் ஆக‌வில்லை என்றான‌தும், இந்திரா காலைப் பிடித்து‌ பார‌ளும‌ன்ற‌ம் உங்க‌ளுக்கு, ச‌ட்ட‌ம‌ன்ற‌ம் என‌க்கு என ஒப்ப‌ந்த‌ம் போட்டு, இந்திரா காங்கிர‌ஸை த‌மிழ‌க‌த்துக்கு கொண்டு வ‌ந்த‌தே (காமராஜ‌ரின் ஸ்தாப‌ன காங்கிர‌ஸ் 45% ஓட்டு வைத்திருந்த‌ கால‌ம் அது) இந்த‌ ஊழ‌ல் நாய‌க‌ன் தான். அது இன்று ஈழ‌ப் போர் வ‌ரை கொண்டு வ‌ந்து விட்ட‌து. அப்போது வீராண‌ குழாய் கான்ட்ராக்ட் எடுத்த‌வ‌ர் க‌ட்டிக் கொடுத்த‌துதான் ப‌ழைய‌ முர‌சொலி அலுவ‌ல‌க் க‌ட்டிட‌ம். தோண்ட‌ தோண்ட‌ நிறைய‌ ம‌ண்டையோடுக‌ள் சிக்கும்.
  visit:http://en.wikipedia.org/wiki/Sarkaria_Commission


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s