வீரமணியின் புதிய அறிக்கையில் பல திடுக்கிடும் பல்டிகள் !!

14/05/2011

வீரமணி கொஞ்சம் கொஞ்சமாக அம்மையார் பக்கம் செல்ல ஆரம்பித்து விட்டார் என நினைக்கிறேன்… இந்த மனிதருக்கு, ஏகத்துக்கு குசும்பு அதிகம் என்பதை நான் எழுதித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை, என்றாலும்…

வீரமணி சொல்கிறார்:

  1. “கருணாநிதி சிறுமைக் குணம் படைத்தவர்”
  2. “பெரியார் ஈரோட்டில் ஒரு சனாதன குருகுலம் நடத்தினார்; அதில் கருணாநிதி படித்தார்”
  3. “திமுக கடுகளவுக்குத் தேய்ந்து போய் விட்டது”
  4. “கருணாநிதி வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கவேண்டும், இனிமேல்!”
  5. “பதவி அரசியலுக்காக அலைவதை திமுக நிறுத்த வேண்டும்.”
  6. “திமுகவின் கட்டமைப்பு வலுவிழந்து இருக்கிறது “

மெய்யாலுமா? என்னைச் சந்தேகிக்காதீர்கள், நண்பர்களே…

இவரா  இப்படிச்  சொன்னார் ? அவர் ஓட்டுப்போட்டு விரலில் மை கூட காய்ந்து இருக்காதே! கருணாநிதிக்கு ஜால்ரா அடித்து அடித்துத் தேய்ந்த கரமா, இப்போது கருணாநிதியின் கழுத்தையே நெரிக்கிறது? ஐயகோ!!

“கருணாநிதி சிறுமைக் குணம் படைத்தவர்”

கருணாநிதி, அவருடைய கடைசியாக, மே 13 அன்று வந்த ஒப்பாரியில், ‘நண்பர்களுக்கு நான் உதவி தானே செய்திருக்கிறேன், இப்போது அவர்கள் அம்மையார் பக்கம் போய் என்னை ஏசுகிறார்களே’ என்கிற ரீதியில் புலம்பியிருக்கிறார் …

வீரமணி இதற்குப் பதிலாகவோ வேறு என்ன இழவோ – மே 14 அன்று எழுதியிருக்கிறார்:

பெரியார் 1933-லேயே ‘குடியரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

ஆகவே, வீரமணியின் கூற்றுப் படி:  “கருணாநிதி சிறுமைக் குணம் படைத்தவர்”

“பெரியார் ஈரோட்டில் ஒரு சனாதன குருகுலம் நடத்தினார்; அதில் கருணாநிதி படித்தார்” 

வீரமணி மறுபடியும் – மே 14 அன்று எழுதியிருக்கிறார்:

… எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் [கருணாநிதி] காட்டியுள்ளார்!

“திமுக கடுகளவுக்குத் தேய்ந்து போய் விட்டது”

… குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

“கருணாநிதி வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கவேண்டும், இனிமேல்!”

“திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.”

“பதவி அரசியலுக்காக அலைவதை திமுக நிறுத்த வேண்டும்.”

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

“திமுகவின் கட்டமைப்பு வலுவிழந்து இருக்கிறது”

மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

=-=-=-=-=

உண்மை தானே? :-)

எனக்கு, இந்த ஜால்ரா வீரமணியின் அறிக்கைப் புழுக்கைகளைப் பார்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது!

ஆதாரங்கள் (!):

தினமணி செய்தி: “எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’: கருணாநிதி
13 May 2011

விகடன் செய்தி: அரசியலில் மட்டுமே கருணாநிதிக்கு ஓய்வு: கி.வீரமணி
சென்னை, மே 14,2011

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: