“அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம!”

14/05/2011

நண்பர்களே,

கடந்த சில நாட்களாக நான் கொடைக்கானல்  சுற்று  வட்டாரத்தில் உள்ள  ஒரு  சிறு கிராமத்தில்  இருந்தேன். ஒரு நண்பருக்கு அவர் வீட்டில் சில மராமத்து வேலைகள் செய்ய வேண்டியிருந்தது, உதவி செய்து கொண்டிருந்தேன் – அயர்வாக இருந்தது – மேலும் முழு நிறைமாத கர்ப்பிணிப் பெண் போல, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்பது  குறித்து குழப்பமான, கலங்கிய, போதை கொண்ட எண்ணங்கள் எனக்கு; இணையத் தொடர்பும் ‘தொண்டையில் அடைத்துக் கொண்டது போல்’ இருந்தது…  . ஆகவே தான் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை பற்றிய இடுகைகள் இட முடியவில்லை. மன்னிக்கவும்.

=-=-=-=

சோலை என்றொரு கிராமம் – பள்ளங்கி அருகில், பழனி தொகுதியில் உள்ளது.  சிறிலங்காவிலிருந்து (சிறிமாவோ-இந்திரா உடன்படிக்கையின்படி) திரும்பி வந்த மலையகத் தமிழர்கள் இங்கு அதிகம்.  200 குடும்பங்கள்  இருக்கலாம், இவர்களில் பெரும்பாலோர் அன்றாடம் காய்ச்சிகள், ஆனால் கம்பீரம் மிக்கவர்கள். இவர்கள் ஒரு முருகன் கோவில் கட்ட ஆரம்பித்து பணத் தட்டுப்பாடு காரணமாக கடந்த  நான்கு ஆண்டுகளாக அதனை முடிக்க முடியவில்லை.

இங்கு  சுமார் 40 நாட்கள் முன்பு, IPS என்று அழைக்கப்படும் திமுக உதிரியும், அழகிரியின் அடிமையும் ஆன  ‘ஐ பெரியசாமி’ என்கிறவரின் ஆட்கள், பணம் கொடுக்க வந்தனர் – ஐநூறு ரூபாய் ஒரு ஓட்டுக்கு!  ஆனால் இம்மக்கள், அதிலும் இளைஞர்கள், இந்த குண்டர்களை விரட்டி அடித்தனர்.

மறுபடியும் இக்குண்டர்கள் வந்து இரவு ஒரு மணி வரை இம்மக்களோடு பேசி, “உங்களுக்கு வேண்டாமென்றால் பரவாயில்லை. உங்கள் கோவிலுக்கு திருப்பணிக்காக ஒரு லட்சம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று நைச்சியமாகப் பேசியிருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் இந்தப் புதிய கொக்கிக்கு வீழ இருக்கும்போது, மறுபடியும் இளைஞர்கள் “கோவில் கட்ட, இந்த ஊழல் பணம் வாங்கினால், சாமிக்குத்தம் வந்திடும்'” என்ற வகையில் பேசி, மறுபடியும் அம்பாசடர் குண்டர்களை விரட்டி இருக்கின்றனர்.

IPS மகன் இந்தத் தொகுதியில் தோற்றார்.

எனக்கு நம் மக்களை, இவ்விளைஞர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது!

=-=-=-=

இதற்கு முன் இந்திரா காந்தியின் ‘எமர்ஜென்சி’யும் ஆட்சியும் முடிவுக்கு வந்த போது தான்,  1977ல் நான் கடைசியாக மக்களின் மனமார்ந்த, ஆனந்த, ஏகோபித்த, எழுச்சியைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் நிம்மதிப் பெருமூச்சை உணர்ந்து கொண்டிருக்கிறேன்…

அதற்குப் பின், இப்போதுதான்…

… தேர்தல் முடிவுகள் வரும்போது வில்பட்டி என்கிற கிராமத்தில் இருந்தேன் – இது நேற்று முளைத்த கொடைக்கானல் போல அல்லாமல், பல நூற்றாண்டு வரலாறுடைய கிராமம்.

அங்கு தேர்தல் முடிவுகள் வர வர, திமுக தோல்வியைப் பற்றிய மக்களின் மகிழ்ச்சியை, எழுச்சியை, கோலாகலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தப்பட்டைகள், பறைகள், சரவெடிகள்  இனிப்புப் பரிமாற்றங்கள் – கடைக் காரர்களே, தங்கள் கடைகளில் இருந்து இனிப்புகளை, போவோர் வருவோர்க்குத் தருதல்… மிக நெகிழ்ச்சியாக இருந்தது எனக்கு, இம்மக்கள் திரளில் இருந்தது.

ஒரு டிவி, ஒரு காமெரா இல்லை – செல்போன் காமெரா கூட எவரும் உபயோகிக்க வில்லை – எதுவும் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை…அவர்கள் தன்னிலை மறந்து, தம்முள் ஆழ்ந்து  கொண்டாட்டத்தில் இருந்தனர்..

ஒரு மிகச் சரிவான சாலையில், மேலிருந்து கீழே இருந்த கடைகள் இருந்த பகுதிக்கு (village square)  டன்  டணக்கா, டணக்கு நக்கா  என்று தள்ளாடி, ஆடிக்கொண்டே, இரட்டை இலை சின்னத்தைக் . காண்பித்துக் கொண்டு வந்தார் – ஒரு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்….  என்னருகில் வந்தார், பொங்கி எழுந்த கண்ணீருடன் சொன்னார்: “அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம!

ஆம்.

மழைத் தூறல் ஆரம்பித்தது.

பி கு: இரண்டாண்டுகளுக்கு முன்னால், இப் பெரியவரின் ஒரு சிறு கடை வைத்திருந்த 50 வயது மகனை, ஏதோ சில்லறைச் சச்சரவில், ‘பாடம் புகட்டுவதற்காக’ காலை வெட்டி முடமாக்கி  விட்டிருக்கிறார்கள், அழகிரி+பெரியசாமி சார்புள்ள குண்டர்கள்.

Advertisements

2 Responses to ““அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம!””

 1. Pradeep Says:

  Dear Mr. Ramasami.

  That was a wonderful post. Surely this is a great moment. A moment to rejoice and celebrate. But please be there to point-out mistakes in the forth-coming regime too.

  Great efforts.. keep it up. u r rocking.

 2. ramasami Says:

  Thanks Pradeep, for your considered comments.

  I am not a political commentator per se – am more an angered observer of the goings-on, nothing more, nothing less. The fact that I have access to some relevant background information, does help Othisaivu, I suppose.

  Of course there will be mistakes and blunders in the forthcoming Jayalalitha regime too (such is the effect of parliamentary democracy, the avoidable alternative being absolute chaos and anarchy, death and mayhem) and there will be many critics who would be more capable than I, to point them out. And, it is my fervent hope that, being a good meta-learner that Jayalalitha is, she will respond positively to them and factor in suitable course-corrections.

  But it is my considered and firm opinion that Jayalalitha’s current regime would be a ZILLION times better than that of Karunanidhi – and, I have written bytes and megabyates to this effect in the blog.

  Thanks again, Pradeep.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: