தமிழகத்தின் துரதிர்ஷ்டம்: கயல்விழி ‘அழகிரி’ வெங்கடேஷ்

28/05/2011

மெய்யாலுமே, திமுக கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால்,  கயள்விளி அளகிரி சொல்லக் கூடியது போல:

கலைங்கர் காப்பாட்ராவிட்டால் மெள்ளத் தமிள் இனிச் சாவும்.

இம்மாதரசி பேசாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்து, மகிழ்ச்சியுடன் இருந்தால் யாரும் இவரைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

ஆனால், இவர் கிவிதை எழுதுகிறார் (ஆம், அது அவர் அப்பன் வூட்டுச் சொத்துத் தான்) – அதை ‘பகீர‘ங்கமாகப் படிக்கவும் செய்கிறார் (கனிமொழி மட்டும் கிவிதை எழுதலாமா?) – அரசியலில் ஈடுபடுகிறார் – அரங்கத்தில் பேத்துகிறார் – உச்சரிப்புக் கொலைகளால் தமிழ்த்தாயைத் தற்கொலைக்குத் தூண்டுகிறார் – அனைவருக்கும் அரசியல் ஆலோசனை கொடுக்கிறார் – ஆரூடம் சொல்கிறார், ஐயோ!

 

அழகிரியார் மாபெரும் வட்டம்? (அப்பாடா, என்ன நிம்மதி!)

 

நல்ல வேளை, மதுரை மாவட்டம், அழகிரியார் மாவட்டம் ஆகவில்லை. நாம் தப்பித்தோம்.

இல்லையென்றால் கயல்விழி தான் இயல்-இசை-நாடக மன்றத் தலைவராகப் பதவி ஏற்று தொல்காப்பியத்துக்கு உரை ஆங்கிலத்தில் ‘Ancient Xeroxing‘ என்றும் எழுதியிருப்பார்! டாக்டர் பட்டம் கூட விட்டிருப்பார்!

கயல்விழி கடந்த வருடம் தன் பாட்டனார் பிறந்தநாள் விழாவில் (3 ஜூன் 2010) கலந்து கொண்டு வளவளவென்று, தான் எழுதியதாகப் பொய் சொல்லி, ஒரு தமிழ் வாழ்த்துரை (கவிதை என்று சொன்னார்கள், ஆனால் அது ஒரு வெட்டிப் பேச்சுதான்!) படித்தார். ஆனால் அவருக்கு அதை யாரோ எழுதித் தந்திருந்த காரணத்தால், அவர் நிறுத்தி வாசிக்க எதுவாக, ஒவ்வொரு வரிமுடிவிலும், ஸ்டாப் (stop) என்று எழுதிக்கொடுத்ததையும் படித்து, அனைவரையும் இறும்பூதடையச் செய்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அது மட்டுமல்ல – தன்(!) கிவிதையில், தன் தாத்தாவை அவர் கருணாநிதி என்று அழைத்திருக்கலாம் – தமிளர் தலைவர் என்றாவது சொல்லியிருக்கலாம்! உச்சரிப்புக்குக் கொஞ்சம் ஏதுவாக இருந்திருக்கும். ஆனால் அப்பேச்சு முழுவதும் அவர் “கலைங்கர் கலைங்கர்” என்றே கலைஞரைக் (!) குறிப்பிட்டார். மகா நகைச்சுவைதான் போங்கள்!

இம்மாதிரியான திடீர் கிவிதாயினிக்கு, இந்தத் செம்மொழித் தமிழ் மாநாட்டில் வேறு இடம் ஒதுக்கி, கவிதை பல படிக்க வைத்து, வந்திருப்போருக்கு உச்சகட்ட நெருக்கடி கொடுத்து, தமிழையே பழி வாங்கியிருக்கிறார்கள். (இது பற்றி கவிதா முரளீதரன் என்பவர் வெறுத்துப்போய் எழுதியிருக்கிறார்:
ஒலக மாநாடு நடத்தும் கலைங்கர்! )

கருணாநிதி தமிழுக்கு இழைத்த துரோகங்களில் ஒன்று இம்மாதிரி தான்தோன்றி-அரைகுறை வெற்றுக் கன்றுக் குட்டிகளை தமிழரங்கத்தில் மேய மட்டும் விடாமல், வந்திருந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் மேலேயே சாணியையும் போட வைத்தது… என்ன கேவலமான பிறவி, இவர்! ச்சீ!

இந்த மாதரசி தேர்தல் சமயம் அவரது கொளைத்தமிளில் அரசியல் பேத்து வேறு பேத்தியிருக்கிறார் – அவர் கருணாநிதியின் பேத்தி அல்லவா?

கயல்விழி அவர்களின் ஜோதிடம்... (நன்றி: மாலை மலர்: 6-4-2011)

உங்கள் யாருக்காவது ஜெயலலிதா எங்கிருக்கிறார் என்று தெரிந்தால், கயல்விளியிடம் தெரிவிக்கவும். STOP

என்னுடைய பயம் என்னவென்றால் – இப்போது அவருக்கு இருக்கும் அவகாசத்தைக் கொண்டு கயல்விழி முழுமூச்சுடன் ஒரு பினாமி கவிதைத் தொழிற்சாலை ஆரம்பித்து விட்டாரென்றால், நம்மால் தாங்க முடியுமா? STOP

ஆனாலும் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன் – இந்தக் கயமைநிதி கும்பலிலிருந்து, நாம் தப்பித்தோம், நம் தமிழகம் தப்பித்தது அல்லவா!  STOP

தமிள் வால்க!! STOP

:-) STOP

2 Responses to “தமிழகத்தின் துரதிர்ஷ்டம்: கயல்விழி ‘அழகிரி’ வெங்கடேஷ்”

 1. Venkatraman Says:

  அது என்ன சார் இவங்க எல்லார் பெயரும் ஒரே மாதிரி இருக்கு?
  இவங்களோட குடும்பத்துல நிதி இல்லாத பெயரும் இல்ல, நபரும் இல்ல. ஆனா மக்கள் கிட்ட, பெயருக்கு கூட நிதி இல்ல. STOP

 2. ramasami Says:

  :-)
  START
  கருணாநிதியின் குடும்பம் பெரிதாகப் பெரிதாக – கட்டுக்கடங்காமல் வீங்க வீங்க, விழிகள்-நிதிகள்-அரசிகள்-மொழிகள் போன்ற பெயர்கள் தேய்ந்துபோய் பல்லிளித்து, இப்போது ஆதித்யா, தன்மயா என்று புது ‘ஆரிய’ வட்டம் வருகின்றன.

  நமக்கெல்லாம் தெரியாதா என்ன, இந்த தமிழ்வழிக் கல்வியும், பெயர்களும், ‘நெற்றியில் பொட்டு’ போன்ற சின்னங்கள் தாக்கப்படலும், கோவில்களுக்குச் செல்பவர்கள் கிண்டல் செய்யப்படுதலும், அகருணாநிதிகளுக்குத் தானே! அயோக்கியர்கள்!
  STOP


Leave a Reply to ramasami Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s