அஞ்சும்நெஞ்சனும், நகைச்சுவை ததும்பும் விளம்பரத்தட்டிகளும்…

31/05/2011

பல நாட்கள் முன் நான் அஞ்சும்நெஞ்சன் கதை (முற்றும், சீக்கிரம்) என்ற இடுகையில் இம்மாமனிதர் அழகிரி பற்றி எழுதினேன். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விதத்தில் இவர் தொண்டரடிப்பொடிகள் மண்ணைக் கவ்வியுள்ளனர். திருப்தி.

ஆனால் – நாம் தா கிருட்டிணனை மறக்க முடிந்தாலும், எரிந்த தினகரன் பணியாளர்களை அவர்களின் அயோக்கிய மாறன் முதலாளிகள் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லையானாலும்,  தோழர் லீலாவதியின் வீச்சரிவாள் கொலையை நாம் எப்படி மறக்க முடியும்? இந்த ஆளை எப்படியாவது சட்ட ரீதியாகவும் அல்லது வேறெந்த / அனைத்து வழிகளிலும் முழுவதுமாக முடக்க முடியவேண்டும். இம்மாதிரி விஷக் கிருமிகள் மீது தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது. ஏனெனில் ஆங்கிலத்தில் உள்ள ஒரு வசனம் போல: Deep seated cancer can never be cured by the cosmetic skills of dermatology.

ஜெயலலிதா மற்றும் நம் மதுரை மக்கள் இதனைப் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். சித்தூர் நீதிபதி, அழகிரி கும்பலுக்கு அளித்த ‘விடுதலை’யை எதிர்த்து தமிழக அரசு ஒரு அப்பீல் செய்தால், உருளும் சட்டத்தின் சக்கரம். பின் அவரும் அவர் குடும்பமும் குவித்துள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடிந்தால், நம் மக்களுக்கு ஊக்க போனஸ் கிடைத்தார் போல்!

முற்றும், அஞ்சும் நெஞ்சன் கதை – கூடிய சீக்கிரம். மதுரை முருகன் இட்லி கடையிலிருந்து, காலேஜ் ஹவுஸ் வரை – பொதுமக்களிலிருந்து, வியாபாரிகளும் தொழில்முனைவோர் உட்பட அனைவரும் இதனை வரவேற்பார்கள்.

அழகிரி பற்றிய இடுகையும் அனேகமாக இதுதான் கடைசி என நினைக்கிறேன் – உதிரிகளைப் பற்றி எழுதிக் கொண்டே இருப்பது அலுப்பைத் தருகிறது.

ஆகவே, கொஞ்சம் நாம் மகிழ்வதற்காக சில ப்ளெக்ஸ் போர்டு வெற்றிவேல்-வீரவேல் வகை வெட்டிப் புல்லரிப்புகளைப் பற்றியும், அழகிரியின் சில தேர்தல் சமய அறிக்கைகள் பற்றியும் இந்த இடுகை.

Buy Election Suruttal Star

Buy Election அரசர் – இவர்  போலோ  ஆட்டக் காரரா, முஸ்ஸோலினியா  அல்லது சர்ச்சில் போன்று இவர் வேடம்   தரிக்கப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதில் தொக்கியுள்ள நகைச்சுவை உணர்ச்சி நம்மைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது அன்றோ?

இந்த அழகில், ஒரு ரோஜா வேறு! நான் முதலில் இது என்னடா ரத்தச் சிவப்பான வாய் – அக்கால கவுண்டமணி-செந்தில் நகைச்சுவைகளில்(!) இவர்கள் வாயை மிகவும் திறந்து அவர்கள்தம் சிவந்த நாக்குகளைக் காண்பிப்பார்களே, அது போன்றோ என நினைத்து,  எனக்கு ஒன்றுக்கே வந்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

மீண்டும் நகைச்சுவை...

ஏங்க, சும்மா எங்கைங்க  அதிருது?  சும்மாத் தானே சொல்றீங்க? அல்லது, நீங்கள் அழகிரி அவர்கள் தம் குண்டர்-தனத்தைக் குறிப்பிட்டு அவ்வாறு சொல்கிறீர்களா?

என்ன கருணாநிதி, ஸ்டாலின் எல்லாம் பூஜ்யம் தானா?

ஐயகோ! நம் அஞ்சாநெஞ்சரை, இப்படி இவரை ‘இந்தியா காபி ஹவுஸ்’ களில் பரிமாறும் நண்பர்களைப் போல ஆக்கி விட்டார்களே!  இந்த நகைச்சுவையில்,  பின் பக்கம் உற்றுப் பார்த்தால் ஒரு சிங்கம் படம் வேறு! அப்படியானால், பின் பக்கம் சிங்கம் – முன் பக்கம் அ(ழகிரி)சிங்கம் என்கிற கணக்கா என்ன?

நன்றி: தினமணி 1-4-2011

ஏங்க, நீங்க இப்படி தன்னிலை வாக்குமூலம் கொடுக்கறீங்க? நீங்க வெளியிலே சொல்லாம அமுக்கமா, அயோக்கியத்தனமா வேலை பல செய்ததினால்தானே, இப்படி தேர்தல் உங்களை பலி வாங்கி விட்டது?

மேலும் நீங்கள் ஒரு மிக்க மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் வேறு! கவலையே படாமல் நீங்கள் உளறிக் கொட்டினால், அதுவும் ‘உலகில் வேறெந்த மாநிலம்’ போல பேத்தாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது அன்றோ?

நன்றி: தினமணி 1-4-2011

ரொம்பப் பயப்படாதீங்க. மறந்து போயிட்டீங்களா – நீங்கள் தானே அஞ்சாநெஞ்சன்? சும்மா நடமாடலாம், காலைகளில் நடை பழகலாம், தினகரன் அலுவலகத்திற்குக் கூடப் போகலாம்.

என்ன, அவ்வப்போது ‘தா கிருட்டிணன்’ எப்படி கொலை செய்யப் பட்டார்  என்கிற ஞாபகம் வந்து வாட்டும்.

ஆனால்அப்போது நீங்கள் உங்கள் தந்தையார் கதை-வசனம் எழுதிய படம் ஒன்று பார்த்தால், உலகமே வெறுத்து, நீங்கள் அனைத்திற்கும் ஆயத்தமாவீர்கள்.  அவர் கதை-வசனத்தையும் மிஞ்சிய கொடுமை உலகில் உண்டா?

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

One Response to “அஞ்சும்நெஞ்சனும், நகைச்சுவை ததும்பும் விளம்பரத்தட்டிகளும்…”

  1. Anonymous Says:

    good. I thinking. thanks your opinion


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s