ஈழத்தைப் பற்றி ஊடகங்களில் செய்திகள் நடு நிலைமையோடு வருவதே இல்லை, என்பது என் எண்ணம்.. ஆனால், பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமான, புல்லரிக்க வைக்கும், மயிர்க் கூச்செறியும் மொழி, இனம், தேசம், தேசியம், வரலாற்றுப் பொருள்முதல் வாதம், முரணியக்கம், என குறுக்கப் பட்ட, குறுகிய நோக்குடன்,  நிறைய எண்ணங்கள் பதிவாகின்றன. போதாக் குறைக்கு இணையத்தின் தயவினால், தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப் படும், கொலை செய்யப் படும் படங்கள் வேறு – இவை, மெய்யாலுமே, மிக வருத்தம் தரக் கூடியவை என்றாலும்…

ஆக, நமது கையறு நிலைமைக்கும், வெறுப்புக்கும், தன்னிலைமறுத்தலுக்கும், மறத்தலுக்கும், நியாய ஆவேசத்துக்கும், அதீத உணர்ச்சிவசப் படுதல்களுக்கும் கேட்பானேன்?

ஆக, சிங்களவர் இவர்கள் மொழியில், மரியாதை கொடுக்கத் தக்கவர்கள் கிடையாது. அனைத்து சிறி லங்கா மக்களும், சிங்களவன் தான். ஒருவன் தேராவாத  பவுத்தன் என்றால் அவன் மத வெறியன். அப்படியென்றால், அம்பேத்கர் பவுத்த மத வெறியரா என்ன?

விடுதலைப் புலிகள் பற்றியோ – அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தான் எழுத வேண்டும் என்கிற எண்ணம் தான் பரவலாக இருக்கிறது. அவர்கள் ‘தலைவர்’ பிரபாகரனோ தமிழினத் தலைவர், தந்திரோபாயங்களில் வல்லவர். அவர் ஒருவர் தான் ஈழத்துக்காகப் பாடு பட்டவர். தியாகி. அஞ்சத் தக்கவர். நேர்மையாளர். தன்னலம் கருதாதவர். மாவீரர் – என்ற பல்வேறு மதிப்பீடுகள், பிம்பங்கள்; ஆக அவர் –  ஒரு ‘கடவுள்’ நிலைக்குத் தள்ளப் பட்டவர் (அவர் கடவுளாக விரும்பியவரும் தான்).

மேலும் மாவீரராக ஒருவரை வரித்து தொண்டை கிழிய, என்ன சொல்கிறோம் என்று புரிந்ததோ இல்லையோ, கத்தோ கத்து என்று உரக்கக் கத்தினால், அல்லது இணையத்தில் வீரவசனங்கள் விளம்பினால் – பெரும்பாலோருக்கு அவர்களே மகா மகோ வீரர்களாகி விட்டது போல ஒரு புல்லரிப்பு… கவசம் அணிந்து வெள்ளைக் குதிரைகளில் ஏறி வாள்கொண்டு வீரிட்டு எதிரிகளை வெட்டி மாய்ப்பது, வெற்றி வாகை சூடுவது போன்ற சுயமைதுன பிம்பங்கள்…

பொதுவாக தமிழகத்தில் பரவலான எண்ணம் என்னவென்றால், பிரபாகரனை ஒருவர் எதிர்மறையாக விமர்சனம் செய்தால், அவர் தமிழரே அல்ல. அவர் தமிழ் துரோகி என்கிற எண்ணம்!

ஏனெனில், நம்மில் பெரும்பாலோர் ஈழ வரலாறை (என், தமிழக வரலாற்றைக் கூட) சரியாக அறியாதவர்கள்.

தமிழர்களாகிய நமக்கு (நமது கழிசடைத் திரைப்படங்கள், திரைப்படக் கலாச்சாரம், பொறுக்கி அரசியல்வாதிகள் காரணமாக) ஒரு வரலாற்று  பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது மிகவும் சோகமானது….

நம்மில் எவ்வளவு பேருக்கு மகத்தான ஈழத் தலைவர்களான சந்ததியார், டாக்டர் ராஜசுந்தரம், சுந்தரம், சபாலிங்கம் போன்றவர்களைத் தெரியும்?

=-=-=-=-=-=

உண்மை என்னவென்றால், பிரபாகரனும் நம்மைப் போல ஒரு மிகச் சாதாரணமான மனிதர் – போல்போட்களும், ஸ்டாலின்களும் அப்படியே. பலவித கல்யாண குணங்கள் இவர்களிடம்; சில ஏற்கத்தக்கவையாக இருக்கலாம், எனக்கு இவற்றில் சில சந்தேகங்கள் இருந்தாலும். ஆனால், மிகப்பல வெறுத்து ஒதுக்கத்தக்கவை.

சிலசமயம் நான் எண்ணுவதுண்டு – இந்த பிரபாகரனுக்கும் கருணாநிதிக்கும் ஏதாகிலும் வித்தியாசங்கள், ஒற்றுமைகள் உள்ளனவா?

யோசித்தால் மிகப் பல உள்ளன. ஆனால் அவற்றிலும் – வேற்றுமையில் ஒற்றுமைகள், சில குறிப்பிடத்தக்க வேற்றுமைகள்….

கொஞ்சம் இவற்றைப் பார்ப்போம்:

 • தம் நன்மைக்காக, சுயநலத்தினால் மக்களைக் கூறு போட்டவர்கள் இவர்கள் இருவரும். என்ன, கருணாநிதி நேரடியாக மக்களை அழித்தொழிக்கவில்லை. அவ்வளவு தான்.
 • பிரபாகரன் லட்சக் கணக்கான மக்களைத் ‘தியாகம்’ செய்தால், கருணாநிதி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்தார், ஒழித்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதி ஒருகால், நேரடியாக கொலை செய்தவராக இல்லாமல் இருக்கலாம் -ஆனால், பல ஆயிரக் கணக்கான கொலைகளுக்கு (அண்ணாமலை பல்கலைக் கழக உதயகுமார் நினைவுக்கு வருகிறார்) காரணமாக நிச்சயம் இருந்திருக்கிறார்.
 • இருவரும், சிறுவயதிலிருந்து செய்நன்றி மறந்தவர்கள். தங்களால், தங்களுடைய போட்டியாளர்கள் என்று கருதப் பட்டவர்களை  ஈவிரக்கம் இல்லாமல் அழித்தனர். தங்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்களையும், வளர்ச்சிக்கு ஏதுவாகப் பணி செய்தவர்களையும் துரோகம் செய்து ஒழித்தவர்கள், இவர்கள்.
 • கருணாநிதிக்கு பிரபாகரனிடம் பயம் (உயிர்ப் பயமே!) இருந்தது – ஏனெனில் கருணாநிதி, – அவரை, இயக்கங்களை ஏமாற்றியதால், பண விஷயங்களில் துரோகம் செய்ததால். ஆனால், பிரபாகரனுக்கு கருணாநிதி மேல் பயம் இல்லை. ஒருகால் அருவருப்பு இருந்திருக்கலாம். (பார்த்தால், எந்த ஒரு மான, ரோஷம் உள்ள உயிரினத்துக்கும் இம்மனிதரிடம் அருவருப்பைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?)
 • கருணாநிதியை  பிரபாகரன் உபயோகித்திருக்கிறார் – கருணாநிதியின் பயத்தினால். பத்மநாபா சம்பந்தப்பட்ட படுகொலைகளுக்கு, ராஜீவ் காந்தி கொலைக்கு, ஆயுத, எரிபொருள், போதைப்பொருள் கடத்துவதற்கு என்று பல உதாரணங்கள்.  பிரபாகரனையும் கருணாநிதி உபயோகித்திருக்கிறார் – அதாவது: பட்டி மன்றங்கள் நடத்துவதற்கு, ஸ்டாலினுக்கு போட்டியாளராகக் கருதப் பட்ட வை கோபால்சாமியைத் துரத்தியதற்கு, மற்றவர்களுக்கு பூச்சாண்டி காட்டுவதற்கு…
 • பிரபாகரன் நேரடியாக பண ஆதாயம் அடையவில்லை கருணாநிதியிடமிருந்து – ஒரு சமயம் கருணாநிதி அளித்த பிச்சைக்காசை வேண்டாமென்று கூட சொல்லியிருக்கிறார். ஆனால், கருணாநிதி பிரபாகரனிடமிருந்து அடைந்த ஆதாயங்கள் (உம்… உண்மையில், செய்த கயமைத் திருட்டுகள்)  அதிகம்…
 • இருவருக்கும் –  தமிழில் புலமையோ, அல்லது தமிழின் மீது உண்மையான மதிப்போ கிடையாது. அவர்களுடைய ‘முன்னேற்றத்திற்கு’ தமிழ் அவர்களுக்கு ஒரு கருவி,  அவ்வளவே. ஒரே வித்தியாசம் என்னவென்றால், பிரபாகரனுக்கு தான் ஒரு தமிழ் இலக்கியவாதி, கவிஞர் என்ற பொய்யான மனப் பிறழ்ச்சிகள் இருந்ததாக எனக்கு நினைவு இல்லை. கருணாநிதி? இவர் ஒரு தனிப் பிறவி. அவர் வாந்திஎடுத்தாலும் அது இலக்கியம்தான் என்று பிடிவாதம் பிடித்து, தமக்குத் தாமே பரிசுகள் (பிறர் செலவில்) கொடுத்துக் கொள்பவர்.
 • இருவருக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கையே இல்லை – அவர்கள் அகராதியில், பிறர் சொல்லுக்கு மரியாதை என்பதே இல்லை. பிரபாகரன் ஒரு குண்டுக்கொலைநாயகம்  கருணாநிதி ஒரு பணநாயகம், குடும்பநாயகம் – மேலும் இவரும் ஒரு (குடமுருட்டி) குண்டுநாயகம்தான்.
 • பெண்களை போகப் பொருளாக மட்டும் பார்க்கும், திருந்தவே திருந்தாத கயமைக் காமுகர் ந்ம்முடைய வக்கிரக் கருணாநிதி. ஆனால் பிரபாகரனை நாம் அப்படிச் சொல்லவே முடியாது.
 • இருவருக்கும் துதிபாடிகள் மிகவும் பிடிக்கும். ஆனால். தனக்குத் தானே துதி பாடி தனக்குத் தானே, தன் பெயரிலேயே பரிசுகள் கொடுத்துக் கொள்வது நம் கருணாநிதியார் மட்டுமே – அல்லது மட்டமே!
 • பணம் பணம், என்று பேயாக அலையும் கயமை மனப்பான்மையுடையவர் கருணாநிதி. அவரது குடும்பத்திற்கு உழையோஉழை என்று இன்னமும் இதற்காக உழைப்பவர். ஆனால், எனக்குத் தெரிந்தவரை, பிரபாகரன் பண விஷயத்தில், சொந்தக் குடும்பத்தை ‘முன்னேற்றுவதில்’ அயோக்கியர் அல்லர்.
 • எனக்குத் தெரிந்து, ஒப்பாரி, அழுகை, மூக்குச் சிந்தல், சுய பச்சாத்தாபம் எல்லாம் பிரபாகரனிடம் இருக்கவில்லை. ஆனால், கருணாநிதியின் அடிப்படை குணாதிசியங்களில், இப்பெட்டைப் புலம்பலும் உண்டு..
 • பிரபாகரன் ஒரு போற்றத் தக்க மாவீரரோ அல்லது மெச்சத்தகுந்த நேர்மையாளரோ அல்ல  (ஈழத்தில் நிறைய பேர்கள் மாவீரர்களாக, நேர்மையாளர்களாக இருந்திருக்கிறார்கள் – சந்ததியார், சபாலிங்கம்  உட்பட – ஏன், நான் ‘தாரகை’ சிவராமைக்கூட அப்படிச் சொல்ல முடியும்). ஆனால் நிச்சயம் பிரபாகரன் ஒரு கோழையுமல்ல. ஆனால், நம் கருணாநிதி நிச்சயம், அடிப்படையில் ஒரு பயந்து நடுங்கும் கோழை – இது ஒரு முக்கிய வித்தியாசம். கருணாநிதியின் மடியில் கனம் மிக மிக அதிகம்.

=-=-=-=-=-=

ஈழம் பற்றிய – முக்கியமாக, விடுதலைப் புலிகள் / பிரபாகரன் பற்றியும் சில  பதிவுகளைத் தொடருவதாக எண்ணம். கவனிக்கவும் – இவை தமிழ்  ஈழம் பற்றியவையாக இருக்க மாட்டா…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

நான் நினைக்கிறேன்… திமுகவில் இருப்பவர்களில் கொஞ்சம் ‘நல்லவர்’ இவராக இருக்கக் கூடும்.

=-=-=-=-=

இம்முறை, 88 வயது ‘பேராசிரியர்’ க அன்பழகன் காஞ்சீபுரத்தில் அண்மையில் (ஜூன் 24) பேசியதை முகாந்திரமாக வைத்து இடுகை.

தி.மு.க. ஆட்சி என்னதான் நல்லது செய்தாலும் திராவிடர் ஆட்சி என்பதால் எதிர்ப்பு! பேராசிரியர் க.அன்பழகன் படப்பிடிப்பு!

வழக்கமான ‘அவர்கள்’ சூழ்ச்சிகள் பற்றிய, ‘ஆரியர்கள்’ பற்றிய, புலம்பலும், வன்மமும் மிக்க பிரச்சாரப் பேச்சு. கொஞ்சம் ‘போர்’ அடிக்கும் எண்ணச் சிதறல்கள் தவிர, இதுவும் புறக்கணிக்கப் பட, வெறுத்து ஒதுக்கப் பட வேண்டியது தான்.

ஆனாலும், திமுகவினருக்கே உரிய குயுக்தி பாணி – இதில் கோர்வையாக வெளிப் படுகிறது – அவர் தரப்பு எண்ணங்கள், அவை கால்வேக்காடோ அல்லது அதிக பட்சம் அரைவேக்காடோ – அனைத்தும் இப்பேச்சில் உள்ளன. அதற்காகவே, இதனைப் படிக்கலாம்.

நிற்க.

கஅன்பழகனைப் பற்றிய இரு உண்மைகளை நான் இங்கு உங்களுக்குத் தர நினைக்கிறேன். உங்களில் 50 வருடங்களைக் கடந்தவர்களுக்கு, இவ்விஷயங்கள் தெரிந்து இருக்கலாம்.

உண்மை ஒன்று:

இவர் படித்தது MA. படிக்காதது PhD. இவர் எக்காலத்திலும் பேராசிரியராக. எக்கல்லூரியிலும் இருந்ததே இல்லை. ஒரு பேராசிரியர் என்றால், அவர் ஒரு PhD பட்டமாவது பெற்றிருக்க வேண்டும்.

இவர் வேலை செய்தது பச்சையப்பன் கல்லூரியில், அதுவும் துணை விரிவுரையாளராக (Assistant Lecturer). இவர் எப்படி திடீரென்று ‘பேராசிரியரா’னார் என்பது எனக்கு இந்நாள் வரை விளங்கவில்லை.

இவரைப் பற்றிய இவரது பாவப்பட்ட அக்கால மாணவர்களின் எண்ணங்கள் பரிதாபமாக இருக்கின்றன.

ஒருக்கால், பேருக்கு ஒரு ஆசிரியராகவும் மற்றபடி அரசியல் வேலைகள், கருணாநிதியின் எடுபிடியாக சுமார் 70 வருடமாகச் செய்து வருவதாலும் தான் இவரை பேராசிரியர் என்று அழைக்கின்றார்களோ தெரியவில்லை.

உண்மை இரண்டு:

இது நடந்து சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் இருக்கலாம் – வருடம் எனக்குச் சரியாக நினைவில் இல்லை.

ஒரு நாள், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த இவர் மகள், தம் வகுப்புத் தோழியை தன் வீட்டிற்கு ‘சேர்ந்து படிப்பதற்காக’ அழைத்து வந்திருக்கிறார்.

பேராசிரியர் அன்பழகன் திராவிட பாரம்பரியத்தில் ஊறியவர் அல்லவா? கருணாநிதியின் நண்பர் அல்லவா? புறங்கையை நக்குபவரின் போர்வாள் அல்லவா? என்ன நடந்தது?

தோழி வன்புணர்ச்சி செய்யப் பட்டார். மகள் திகைத்து வாயடைத்துப் போனார். சோகம். கேவலம்.

காவல் துறை ஒன்றும் செய்யாமலிருக்க நம் தானைத் தலைவர் கருணாநிதி ‘ஆவன’ செய்தார். பத்திரிக்கைகளிலும் இச்செய்தி இடம்பெறாமல் ‘பார்த்துக்’ கொண்டார்!

( தன் பிள்ளை ஸ்டாலினுக்காகவும் – இந்த ஆள் ஒரு வன்புணர்ச்சி விவகாரத்தில் மாட்டிக் கொண்ட போது – இந்த மாதிரியே பிற்காலத்தில் செய்தார், நம் மானங்கெட்ட தமிழர்!)

நன்றி மிக்க பேராசிரியர் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு இன்று வரை கருணாநிதி பஜனை மடம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

=-=-=-=-=-=

பொது வாழ்வில் நேர்மையுடனும், மனத்திடமுடனும் இருந்த
ஈவேராவுக்கு சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளவே இந்த திமுக உதிரிகளுக்கு உரிமையில்லை…

இருப்பினும் சொல்வேன் – திமுகவில் இருப்பவர்களில் கொஞ்சம் ‘நல்லவர்’  இந்த பேராசிரியரில்லாத வெறும் க அன்பழகனாக இருக்கக் கூடும்.

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

இவ்விடுகையின் தலைப்பு மிகவும் ரசக்குறைவாக இருப்பதற்கு, முதற்கண், முதற்செவி, முதற்மூக்கு எல்லாம் – தேவரீர்கள் நீங்கள் மன்னிக்க வேண்டுகிறேன்;

ஆகவே, தலைப்பை இப்படி மரியாதையாக  ‘மறு வாசிப்பு’ செய்யவும்:

துணுக்குறச்செய்யும் ‘தினகரன்’ வினவுதல் – முத்தமிழ் வித்தகர், உயிர்காப்புத் திட்டத்தோன், 108 ஆம்புலன்சோன், வண்ணத் தொலைக்காட்சியோன், செம்மொழி கொண்டோன், திஹார் கண்டான், கொள்ளை கொண்டான் டாக்டர் கலைஞர் கருணாநிதி வான்கவியா அல்லது ஞமலியா?

உங்களுக்குத் திருப்திதானே?

இப்படிச் சொன்னால் ஒரு உடனடி ஆபத்து என்னவென்றால் திண்டுக்கல் லியோனிகளும், சாலமன் பாப்பையாக்களும், துரைமுருகன்களும், வீரமணிகளும் உடனே ஓடிவந்து, உண்மையாகவே ஒரு பட்டி மன்றம் நடத்தி விடுவார்… நமக்கு இது தேவையா?

=-=-=-=-=

ஆனாலும் பாருங்கள், இந்த மாறன்களுக்கும், தினகரனுக்கும் என்ன துடுக்குத்தனம்!!

=-=-=-=-=

சில வருடங்கள் முன்பு கருணாநிதிகளுக்கும், மாறன்களுக்கும் குடுமிப் பிடிச் சண்டைகள் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் முக்கியமான காரணம் மாறன்கள் கருணாநிதிகளுக்குக்  கொடுக்க வேண்டிய கப்பத்தை ஒழுகாகக் கொடுக்கவில்லை – பங்குகளை வாங்கியதற்கு சுமார் 1500 கோடி ரூபாய்களை, கொடுக்காமல் சுமார் நூறு கோடி மட்டுமே கொடுத்து மாறன்கள், கருணாநிதிகளை ஏமாற்றினர்.

அதாவது, ஏமாற்றுவதையே தர்மமாக, வாழ்க்கைக் கடமையாகக் கொண்டிருப்பவரையே  ஏமாற்றினர்.

பின்னர் ஏதோ அற்ப காரணங்களுக்காக (தினகரன் வெளியிட்ட ஒரு குப்பைச்செய்தி – ஒரு கருத்துக் கணிப்பு – என்று காரணம் சொல்கிறார்கள்)  ஊழலுட்பூசலை, சண்டையைப் கருணாநிதிகள் பெரிது படுத்தி இதன் விளைவாக, அழகிரியின் ஆசியுடன்,  மாறன்களை மிரட்டுவதற்காக  – தினகரன்  ஊழியர்கள் மூன்று பேர் உயிருடன் எரிக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

பின்னர் கருணாநிதிகள்  அரசு கேபிள் நிறுவனம்  ஆரம்பித்து பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து (அரசுப் பணம், அதாவது, நம் பணம்)  பின் அது, ‘இதயம் இனித்து, கண்கள் பனித்து’ ஊத்தி மூடப் பட்டது – இப்படி கருணாநிதி இனித்து, பனிக்கக் காரணம், மாறன்கள் தயாளு அம்மாள் அவர்களுக்கு கொடுத்த ‘அன்பளிப்பான’ 600 கோடி ரூபாய்கள்… (இதனைப் பற்றி மாதரசி நீரா ராடியா பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம்)

நிற்க, மாறன்கள்-கருணாநிதிகள் தொடரும் ஊடல்-ஊழல்-கூடல் சமயத்தில், தினகரன் திடுதிப்பென்று ஒருநாள் (அந்நாள் சுமார் 60 வயதே ஆன  திமுக இளைஞர் அணித்  தளபதி ஸ்டாலின் பிறந்த நாள்)  ‘குரங்குக்குப் பிறந்த நாள் – ‘குரங்கு பர்த் டே!’ என்று முதல் பக்கத்தில் செய்தி (28 மே, 2007 அன்று) வெளியிட்டது. (விடலை மாறன்களின் ‘லெவல்’ அவ்வளவு  தான்  – உதிரிகள்…)

தினகரன்: இளைஞர் ஸ்டாலின் பிறந்த நாள் - 28 மே, 2007

கருணாநிதியார்களுக்கு இதனால் ஏகப்பட்ட கோபம்.

பின், இதெல்லாம் ‘கணக்குத்’ தீர்க்கப் பட்டது வேறு விஷயம்…

நிற்க.

அண்மையில் தேர்தல் தோல்விக்குப் பின், கருணாநிதி ‘கூடா நட்பு’ பற்றி அழுது புலம்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம். (“கூடா நட்பு கேடாய் முடியும்’: கருணாநிதி பிறந்தநாள் செய்தி)

மேலும் மாறன்கள் செய்த திடுக்கிட வைக்கும், மலைப்புக்குரிய ஊழல் தாண்டவங்கள் அடுத்தடுத்து வெளி வந்து அவர்கள் நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்திலும், கருணாநிதிகள்  அவர்களின் உதவிக்குப் போகாமல் இருப்பதையும் நீங்கள் அறியலாம். (ஏனெனில் கருணாநிதிகளுக்கு, மாறன்கள் செய்த துரோகத்தினால் தான் ‘கைய வெச்ச’ ராசாவும்,  இளவரசி கனிமொழியும் பிடிபட்டதாக ஒரு எண்ணம் – உதிரிகளாகிய  மாறன்களும்  அப்படி செய்யக் கூடியவர்கள் தான்).

மாமா-தாத்தாவால் கைவிடப்பட்ட மாறன்களின் கோபம் புரிந்து கொள்ளக் கூடியதே! அதற்காக, அவர்கள் முன்னர் ஸ்டாலினுக்குச் செய்ததைப் போல இவ்வயதான முதியவர், அதுவும் அவர்கள் சொந்த மாமா-தாத்தாவுக்கா இப்படிச் செய்வார்கள்? எவ்வளவு உதவிகள் பெற்றிருக்கிறார்கள் மாறன்கள், கருணாநிதிகளிடமிருந்து?

ஏது எப்படியோ – ஆக தினகரன் செய்தித்தாள் நேற்று ஒரு செய்தியைப் பிரசுரிக்கிறது. இது ஒரு ‘கூடா நட்பு’ என்று உதிரி மாறன்களும் அவர்களின் அடிப்பொடிகள் கருதியிருக்கலாம் தானே?  (குரங்கு – நாய் பிரெண்ட்ஷிப்)

தினகரன்: கருணாநிதியின் 'கூடா நட்பு' - - 23 ஜூன், 2011

இது ஒரு ஒராங்க்யுட்டானும், நாயும் நட்புடன் இருப்பதைப் பற்றி ஒரு ‘தினகரன் பாணி’ வெட்டிச் செய்தி  – – 23 ஜூன், 2011 அன்று வந்துள்ளது.

“உராங்குட்டான் ஒருபடி மேலே சென்று புத்தகங்களில் கையெழுத்து (கிறுக்கல்தான்) போட்டு புத்தகங்களை வழங்கியது.

“பொதுவாக, குரங்குக்கும் நாய்க்கும் ஆகாது. ஆனால், நாயை பார்த்ததும் பாசத்துடன் குரங்கு நெருங்கி வந்தது. அதன் பின்னர்,..

“அப்போது தொடங்கிய நட்பு, 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

“ராஸ்கோ நாயும் ‘சூரியா’ என்ற பெயரிடப்பட்ட உராங்குட்டானும் தோள் மீது கை போட்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதும், ஒருவரை ஒருவர் பாசத்தால் தடவிக் கொடுப்பதும் சரணாலயத்தில் அடிக்கடி காணக் கிடைக்கும் காட்சிகள்.

இப்போது, ‘நமக்கு நாமே’  இஜ்ஜோடியில் அவிழ்க்க வேண்டிய புதிர் / முடிச்சு என்னவென்றால் – இதில் யார் குரங்கு யார் நாய் என்பது தான். ( நாய்களும், குரங்குகளும், நானாவிதமான உயிர்களும் – சோனியா , ராமதாஸ் -வீரமணி  உட்பட – அவைகளை கருணாநிதிகளோடு இணைத்து எழுதுவதற்கு, மிகத் தயவு செய்து என்னை மிக மிக மன்னிக்கவும். உண்மையாகவே!)

கீழ்க்கண்டவை – உங்களுக்கு ஒரு மாதிரிக்காக (அல்லது ஒரு மாதிரியாக) கொடுக்கப் பட்டுள்ளன, இந்தப் புதிரை அவிழ்ப்பதில், நீங்கள்  கவனத்தில்  கொள்ள  வேண்டியது  என்னவென்றால் குரங்கானது  புத்தகத்தில்  கையெழுத்துப் போட்டுத் தருகிறது…

 • கருணாநிதி-சோனியா
 • கருணாநிதி – ராமதாஸ்
 • கருணாநிதி – வீரமணி
 • திமுக – காங்கிரஸ்

இப்படியும் இருக்கலாமோ?

 • ஸ்டாலின் – தயாநிதி
 • கனிமொழி – நீரா ராடியா
 • கனிமொழி – ராசா
 • கனிமொழி – ஜெகத் கஸ்பர்

என்ன? நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லையா?

சரிதான்.  பின், இதில் யார் குரங்கு யார் நாய் (சபாஷ், சரியான போட்டி!) என்பதை தயாநிதிக்கு, அவர் திருடிய ஐநூற்றி சொச்சம் தொலைபேசி இணைப்புகளில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொண்டு தெளிவடையவும்.

எனக்கும் முடிந்தால் தெரிவிக்கவும்…

பின் குறிப்பு: ஆக, இப்போதும் ஒரு ஊடல் கருணாநிதிகளுக்கும், மாறன்களுக்கும். (பின்னர் பணப்-பரிவர்த்தனைகளுக்குப் பிறகு இது சரியாகி விடும், கவலை வேண்டாம்!)

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

(விடுதலை பாணியில் எழுதவேண்டும் என்றால்)

பரிதி இளம்வழுதி பகர்ந்தாரே!

இந்த தேர்தலில் புதிதாக ஓட்டு போட்டவர்கள் விளையாட்டு தனமாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதாக சொல்லப்படுகிறது. புதிய வாக்காளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் தான்.

முழுவதும் படிப்பதற்கு: தேர்தலில் வேண்டுமானால் தி.மு.க. தோற்றிருக்கலாமே தவிர தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பதில்லை

அழிவு கொலை கொள்ளை  தீமை – இன்னபிற வகைகள் என்றைக்குமே தோற்காதவைகளோ?? ஆக,  தமிழகத்துக்கு மோட்சமே இல்லையா! அட இயற்கையே!!

எது எப்படியோ, வேறு வழியில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கும்   நன்றி தெரிவித்து  விடுவோம்!

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

…இதனை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை என்று எனக்குத் தெரிந்தாலும்.

வரவர, எனக்குச் சகிக்கவில்லை.

இம்மனிதருக்கு, ஏதாவது ஒரு ஒலிபெருக்கி கிடைத்தால் போதும், அல்லது ஒரு துண்டு காகிதம் கிடைத்தால் போதும் – இவருடைய உளறல் தொழிற்சாலை பணி புரிய ஆரம்பித்து விடுகிறது. வயதான காலத்தில் ‘இயற்கையே’ என்று தன் கொள்ளு+எள்ளுப் பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்காமல் என்ன இது பைத்தியக் காரத்தனம் என்றும் தோன்றுகிறது.

இவருக்கு, தன் நெடுநாள் வாழ்க்கையில், உற்ற நண்பர்களே கிடையாது என நினைக்கிறேன் – ஏனெனில் இவருக்கு, இவர் அருகில் வந்த அனைவரையும், முதுகில் குத்தியும் அல்லது அவர்கள் கோமணத்தையும் கூட உருவிக் கொண்டு ஓடியும் தான் பழக்கம்.

ஏன் இப்படி நினைக்கிறேன்என்றால், இவருக்கு உண்மையாலுமே நண்பர்கள் என்று இருந்தால், அவர்கள் இம்மனிதரிடம் கொஞ்சம் வாயை மட்டும் அல்ல, உடலில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் மூடிக் கொண்டு, கொஞ்சம் அமைதி காக்கும்படி சொல்லியிருப்பர்…

ஆனால், நமக்குத் தான் விதி இப்படி இருக்கிறது – இவரது பினாத்தல்களை நாம் இவர் இயற்கை எய்தும் வரை (அல்லது நாம் இறைவனடி சேரும் வரை) பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்…

சரி – ஒரு ‘மற்றுமொரு’ எடுத்துக் காட்டாக, நம் ‘கரகரத் தமிழ்மொழி வித்தவர்‘ அண்மையில் பகர்ந்ததைச் சிறிது, சிரித்துப் பார்ப்போம்…

ஒரு குழுவில் நண்பர்கள் மத்தியில் ஜோக்கர்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில ஜோக்கர்கள் அரசியலிலும், கலைத்துறையிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.

நீங்கள் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள், கருணாநிதி அவர்களே? உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தில் உள்ள எண்ணிறந்த ஸ்டாலின்கள், கனிமொழிகள், பற்பல ‘நிதி’களைப் பற்றியா? அல்லது குஷ்பூ, வடிவேலு போன்றவர்களைப் பற்றியா?

உங்கள் கட்சியின் துரை முருகன் அவர்களாவது உண்மையாலுமே மற்றவர்களுக்கு சிரிப்பு வரும்படி பேசக்கூடியவர், உண்மையாலுமே கோமாளி வேடம் போடத் தக்கவர். கோமாளி வேடம் போடுவதற்கு மிகுந்த தகுதியும், குவிந்த உழைப்பும் வேண்டும், அவருக்கு அது நிறையவே இருக்கிறது – ஆனால், உங்கள் ‘உண்டு கொழுத்த’ குடும்பச் சோம்பேறி கும்பலோ, அதிக பட்சம் நகைப்புக்கிடமாகத்தான் பேச முடியும்…

…இவ்வளவு முதிர்ந்த வயதில், நீங்கள் இப்படி விஜயகாந்த் போன்றவர்களைப் பற்றி காழ்ப்பு உணர்ச்சி கொண்டு பேசுவது அருவருப்பை வரவழைக்கிறது…

மேலும் உங்களின் இம்மாதிரிப் பொச்சரிப்புகள், விஜயகாந்த் போன்றோரின் மீதான உங்கள் பயத்தையும், உங்கள் கட்சி உங்கள் குடும்பத்தை விட்டு விலகிப் போய்விடுமோ என்கிற பதற்றத்தையும் காண்பிக்கிறது…

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழ் என்று சொல்லவே பல பேர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அப்படியா என்ன? உங்கள் மற்றும் உங்கள் மகளாரின் எழுத்துக்களை, மேலும் உங்கள் கயமைக்குடும்ப கும்பலின் திரைப் படங்களையும் பார்த்து மக்களுக்கு தமிழின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விட்டதா என்ன? ஐயோ இயற்கையே!

நீங்கள் முதல் காரியமாக, ஏன் உங்கள் அறிக்கைப்-புழுக்கைகளையும், மேடைப் பேத்தல்களையும் குறைத்து கொள்ளக் கூடாது?

ஏனென்றால் தமிழ் வாழ்ந்தால், இங்கே தம்பி செல்வம் குறிப்பிட்டதைப் போல, தமிழ் இன உணர்வு வளரும். தமிழ் இன உணர்வு வளர்ந்தால், திராவிட உணர்வு செழிக்கும்.

தமிழ் எப்படி வாழும், உங்கள் அறிக்கைகளையும், ‘தமிளைக் கொள்ளும்‘ உங்கள் குடும்பத்தினர் போடும் திரைப்பட, தொலைக் காட்சிக் கும்மாளக் கழிவுகளையும், தொடர்ச்சியாக எங்கள் மேல் இடப் படச் செய்தால்?

உங்களுக்கு அடிப்படை தமிழ், தமிழக வரலாறு பற்றிய விவரங்கள் தெரிந்தால், நீங்கள் இப்படி உளற மாட்டீர்கள். உங்களுக்குத் தெரியுமா தமிழுக்கும் திராவிடத்துக்குமான மொழியியல் இணைப்பு பற்றி? தமிழ் – த்ரமிள் – த்ரமிளம் – த்ராவிடம் – திராவிடம் என்று உருமாறியிருக்க மிகுந்த, தகுந்த சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதையாவது நீங்கள் அறிவீர்களா? ஆக, மொழியியல் ரீதியாக தமிழகம் என்பது தான் திராவிடம் என்று அறிவீர்களா?

அல்லது கால்டுவெல், வீரமாமுனிவர், போப் போன்ற எதேச்சாதிகார, காலனி ஆதிக்க, மேற்கைய அடிப்படைவாத சக்திகள், போலிஅறிவு பூர்வமான தளத்தில் ‘உலா’ வந்து ஏற்படுத்திய திராவிடம் என்ற செயற்கையான புவியியல் குறியீட்டைச் சொல்கிறீர்களா? அதாவது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் தான் திராவிடம் என்ற கட்டுக் கதையைத்தான் சொல்கிறேன்.

இப்படியே இருந்தாலும் கூட, உங்கள் உதிரிக் கும்பல் தான் இந்த வறட்டுவாத ‘திராவிடநாடு’ என்பதை விட்டு புறமுதுகிட்டு பயந்தோடி ஒளிந்து வெகுநாட்களாகி விட்டனவே?

அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று சொல்லிச் சொல்லி, திராவிட நாட்டினை அடைய முடியாத காரணத்தால், தமிழ்நாட்டையே சுடுகாடு ஆக்கி விட்ட அயோக்கியர் கும்பலின் தலைவரல்லவா நீங்கள்?

எது எப்படியோ, உங்களுக்கும், உங்களின் முட்டாள் அடிப்பொடிகளுக்கும், தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பது (அல்லது இவை இரு வேறு உணர்வுகள் என்பது) சுத்த பம்மாத்து என்று புரியுமா, அல்லது புரிந்துகொள்ள உங்கள் கயமை மனம் இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே…

ஆனால், பாவம் உங்களுக்கு கோபாலபுரத்திற்கும் சி ஐ டி காலனிக்கும் போய் வரவே நேரம் சரியாக இருக்கும். இதில் உங்களுக்கு உண்மையான, நுண்மான் நுழைபுலம், ஆராய்ச்சி, கீராய்ச்சி என்பதெற்கெல்லாம் ஏது நேரம்…

இந்த இரண்டு உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லாமல் செய்ய வேண்டுமென்று ஒருசாரார் முயன்று வருகின்ற நேரத்தில் ஆத்திகத்திலே பற்று கொண்டவர்கள் கூட, நாத்திகராக தங்களைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் கூட, தமிழ் வாழவும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரம் இவைகள் வென்றிடவும், பாடுபட வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றது.

கருணாநிதி அவர்களே, இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு ஒரு முடியும் புரியவில்லை. நீங்கள் வர வர பினாத்தல்-அடிப்படைத் தீவிர வாதியாகி வருகிறீர்!

தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய கலாச்சாரம் வாழும். தமிழர்களுடைய கலாச்சாரம் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய தன்மானம் வாழும். தன்மானம் பாதுகாக்கப்படும்.

நீங்கள் தமிழைத் தொடாமல், அதன் அருகில் வராமல் இருந்தாலே தமிழ் பிழைத்துக் கொள்ளும். வாழ ஆரம்பிக்கும். இது கூட உங்களுக்குப் புரியவில்லியா?

தன்மானம் என்றால் என்ன அய்யா? டெல்லிக்குப் போய் சோனியா காலடியில் விழுந்து, புரண்டு, விக்கி அழுது, பிலாக்கணம் வைத்து,உங்கள் மாக்களுக்கு மந்திரி பதவி கேட்பதா? அல்லது உருண்டோடிப் போய் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இளித்தபடி அவருக்குப் பூச்செண்டு கொடுப்பதா? அல்லது பிலிம் கமல், பிலிம் ரஜினி போன்ற பிலிம் தொழிலாளிகளை வைத்து, அரசுப் பணத்தில் விழாக்கள் பல நடத்தி நீங்கள் உங்களுக்கு விருதாத் தனமான விருதுகள் கொடுத்துக் கொள்வதா?

நீங்கள் தன்மானம் பற்றிப் பேசுவது, இவ்வாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை!

புராணத்தில், ராமாயணத்தில் கூட 14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலோ இல்லை, அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஏன் கருணாநிதி அவர்களே, உங்களுக்கு ஒரு புராணத்துக்கும், இதிஹாசத்திற்கும் கூடவா வித்தியாசம் தெரியவில்லை? என்ன உளறல் இது?? நாம் கவிதைகளை உரைநடை என்று சொன்னால் அது தவறா இல்லையா? (ஆனால், என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்: உங்கள் ‘கவிதைகளும்’ கவிதை இல்லை. உரைநடையும் ஒழுங்கில்லை. சொல்லப் போனால், சில சமயம் எந்த புண்ணாக்கிற்கு எழுதுகிறீர் என்றே புரிய மாட்டேன் என்கிறது!)

சரி, இதனை விடுவோம். ராமாயணத்திற்கு வருவோம்.

ராமாயணத்தையாவது ஒழுங்காகப் படித்திருக்கிறீர்களா? ராமன், தன் திருமணத்திற்கு முன் தாடகையைக் கொன்றான். பின் திருமணம் நடந்த பிறகு தான் 14 ஆண்டுகள் வனவாசம் எல்லாம்! உங்களுடைய அறிவு, படிப்பு இருக்கும் அழகில், தேவை இல்லாமல் ராமனைக் குடிகாரன், திருடன் என்றெல்லாம் வேறு ஊடகங்களில் வாந்தி எடுத்து, உளறிக் கொட்டுகிறீர்கள், இது தேவையா?

நல்ல வேளை. ஜெயலலிதா தாடகையோ இல்லையோ, நீங்கள் (அல்லது உங்கள் உதிரி அடிப்பொடிகள்) புத்தி கற்பிக்கும் நிலையில் இல்லை. தேவை ஏற்பட்டால், தமிழக மக்கள் அதனை நிச்சயம் செய்வார்கள்.

நீங்கள் நிம்மதியாக (அதாவது, எங்களுக்கு) ஒய்வு எடுங்கள். அல்லது வடக்கிருங்கள். (சோனியா காலில் விழுவதாகப் பொருள் காண்க)

ஆகவே ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக்களையவும், தடுத்து நிறுத்தவும் நாம் முயல வேண்டும் நம்மால் முடியும்.

நன்றி.

ஆக, நீங்கள் கனிமொழியையும், ஸ்டாலினையும் அழகிரியும், மாறன்களையும், நிதிகளையும், அவர்கள் செய்த கேட்டையும், நாட்டையே குட்டிச் சுவராக்கியதையும் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முயலப் போகிறீர்கள்.

ஏனிந்த மனமாற்றம், கருணாநிதி அவர்களே?

குடும்பம் நடத்துவதிலே சிக்கல்கள் தோன்றலாம். இங்கே நம்முடைய குஷ்பு சொன்னதைப் போல சிறு சிறு ஊடல்கள், சிறு சிறு தகராறுகள், பிரச்சினைகள் இவைகள் எல்லாம் குடும்பத்தின் பலத்தை வலுப்படுத்தக் கூடியதாகத் தான் இருக்கும்,

எங்களுக்குப் புரிகிறது

2G, கேபிள் டிவி, தினகரன் சம்பவங்கள் எல்லாம் உங்கள் இரு பெரிய குடும்பங்களைச் சார்ந்த சிறு சிறு ஊடல்கள் தான். அவை சரியாகி விடும். என்ன, தயாளு அவர்களுக்கு மாறன் 600 கோடி ரூபாய் கொடுத்தது போலத்தான்… இவை குடும்பங்களைப் பலப் படுத்துவதற்கு உதவியாக இருக்கும். கவலை வேண்டாம்.

=-=-=-=-=-=-=

பின் குறிப்பு:

முழு பேத்தல் இங்கிருக்கிருக்கிறது: ஆட்சியில் இல்லாவிட்டாலும் தவறுகளை சுட்டி காட்டுவோம்: கலைஞர் பேச்சு

‘கோவை ராம்குமாரின் மகள் பத்மப்ரிதிகா-திருப்பூர் சம்பத்குமார் மகன் சஞ்சய்குமார்’ அவர்களுடைய திருமணம் ஒரு அசாதாரணமான நிலைமையில், படுபயங்கரமான கஷ்டங்களுக்கிடையில், அயோக்கியர்கள் நடுவில், பொம்பளைப் பொறுக்கிகள் தலைமையில் நடந்திருக்கிறது.

புதுமணத் தம்பதிகளுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக!

கூட, இனிமேலாவது அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துக்களும்…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

நீங்கள் கீழ்கண்ட இடுகைகளைப் படித்தீர்களா?

‘பாண்டியன்’ என்றொரு நண்பர் சவுக்கு தளத்தில் சொன்னார் – இந்த அறிக்கைகளை ஒரு pdf ஆவணமாக மாற்றி அதனை இணைய தளத்தில் ஏற்றலாம் என்று. இது ஒரு நல்ல ‘ஐடியா’ தான்! ஒரே ஆவணத்தில் / சொடுக்கலில் முழு அறிக்கையும் தரவிறக்கம் செய்யப்பட வேண்டியதுதான் – இது ஒரு சுலபமான விஷயமும் கூட. நன்றி ‘பாண்டியன்’ அவர்களே!

ஆனால், பல பத்தாண்டுகளாக நான், pdf ஒரு தேவையே இல்லாத குழப்படி தொகுப்பு முறை என நினைப்பவன். மேலும் pdf ஃபைல்கள், அவைகளின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப சிறியதாக இல்லாமல் பொதுவாக மிகப் பெரியவை எனவும் நினைப்பவன்.

ஆகவே நான் pdf ஃபைல்களுக்குப் பதிலாக இந்தப் பக்கங்களைத் தொகுத்து மூன்று மைக்ரோசாஃ ப்ட் வோர்ட் ஆவணங்களாகக் கொடுக்கிறேன்.

 1. சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976) [பக்கங்கள் 1 – 14] – corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976 – pp1-14
 2. சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976) [பக்கங்கள்  15- 29] – corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976 – pp15-29
 3. சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976) [பக்கங்கள்  30 – 38; + இவ்வறிக்கை வெளிவந்த புத்தகத்தின் இரு பக்கங்கள்] – corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976 – pp30-38 + 2 pages

உங்களுக்கு இதனைப் பெறுவதில், படிப்பதில் ஏதாவது பிரச்சினை  இருக்குமென்றால் எனக்கு  ஒரு  மின்னஞ்சல்  அனுப்பவும்  – othisaivuபுள்ளிramasami@gmailபுள்ளிcom என்கிற முகவரிக்கு  – நான் இந்த முழு அறிக்கையின் பக்கங்களை ஒரு  zip ஆவணமாக (corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976.zip, அளவு: 2715 KB தான்!) அனுப்புகிறேன்.

அவசியம் இவ்வறிக்கையைப் படியுங்கள்.

நன்றி.

பின்குறிப்பு: என்னிடம் உள்ள இவ்வறிக்கையுள்ள புத்தகத்தில், பல பக்கங்கள் அடிக்கோடிடப்பட்டும், துணுக்குச் செய்திகள் எழுதப்பட்டும் உள்ளன. ஆகவே, இப்பக்கங்கள் books.google.com இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டுள்ளன. நன்றி: books.google.com

(மகத்தான காரியங்கள் பல செய்த ‘ஒரிஜினல்’ ராஜராஜ சோழன் என்னை மன்னிப்பாராக!)

நம் தானைத் தலைவர் கருணாநிதி அண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு ‘அளித்த’ பேட்டி – விடுதலை ( தி.மு.க. தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்!  ), இட்லிவடை (தமிழ் நாடு பார்ப்பனர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது! ) இணையதளங்களில் மறுபிரசுரம் செய்யப் பட்டுள்ளது.

நக்கலும், கயமையும், எல்லாவற்றுக்கும் மேலாக திகட்ட வைக்கும் நகைச்சுவையும் கொண்டுள்ள இதனை, நீங்கள் படித்து இறும்பூதடைய வேண்டுகிறேன்…

=-=-=-=-=-=

மேலும் சில பேட்டித் துளிகள்…

சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று கேட்டிருக்கிறீர்களே?

கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?

சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டி ராமர் குடித்தார் என்று கூறினீர்கள்.

கலைஞர்: ஆமாம். நான் வால்மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங்கள். எங்களுக்கு அந்தத் திட்டம் [சேது சமுத்திரம்] வேண்டும்! நான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக்காரன்! நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! பெரியாரின் மாணவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?

கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.

சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?

கலைஞர்: எனது மனச்சாட்சியை.

(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சராக கருணாநிதி அளித்த பேட்டியிலிருந்து எடுத்து, திராவிடர் கழகம் பதிப்பித்த 130ஆம் ஆண்டு ‘தந்தை பெரியார் பிறந்த நாள்’ மலரிலிருந்து)

இப்படியே போகிறது… இம்மனிதரின் ஆற்று வெள்ளம் போன்ற நகைச்சுவை உணர்ச்சி!

=-=-=-=-=-=-=

கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர். இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?

கலைஞர்: இந்த இரண்டையும் விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகின்றவன் நான்.

(தினகரன் பேட்டி 6-5-2006)

பின் ஏனய்யா, நீங்கள் மாணவராகவும், தம்பியாகவும், நாட்களைக் கழிப்பதற்குப் பதிலாக அரசியல் தகிடுதத்தங்களிலும் தமிழ்க் கொலைகளிலும் இறங்குகிறீர்? எம் மக்கள் உங்களுக்குக் கட்டாய ‘நல்ல ஒய்வு’ கொடுத்த பின்னும் என் இப்படி பதவி மோகம் பிடித்து அலைகிறீர்??

=-=-=-=-=-=

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது – இந்த மனிதர் இம்முறையும் முதலமைச்சராக ஆகி இருந்தால், நமக்கு இன்னும் எவ்வளவு நகைச்சுவை செய்திகள் கிடைத்திருக்கும்…

எல்லாம், நம் போறிய வேளை… (நல்ல காலம், தப்பித்தோம்!)