கருணாநிதி: “நான் இந்தியாவுக்கு அபாயகரமானவன்”

03/06/2011

எனக்குத் தெரிந்து, இந்த 88 வயது வாழ்க்கையில் கருணாநிதி பேசிய உண்மை இது மட்டும் தான் – இவ்வளவேதான்.

இம்மாதிரி  இவர்  இருப்பது, ஒரு அருவருக்கத்தக்க அதிசயம் – ஆனால் உண்மை. ஆகவேதான், வாழ் நாளில் ஒரு முறையாவது உண்மை பேசியிருக்கிறாரே என்று இம்மனிதரை உற்சாகப் படுத்தும் நோக்கத்தில், இப்பதிவு.

“என் பெயர் கருணாநிதி. நான் ஒரு தேச-விரோதி… நான் இந்நாட்டுக்கு அபாயகரமானவன்.”

(“My name is Karunanidhi. I am anti-national… I am a dangerous person to this country.”)

கருணாநிதியின் இந்நேர்மைக்கு நாம் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.

குறிப்பு:

இது மெய்யாலுமே மார்ச் 18, 1991 அன்று கருணாநிதி பட்னாவில் (பிஹார் ) ஒரு பொதுக் கூட்டத்தில் ‘ஆங்கிலத்தில்’ பேசியது – நேர்மையாளரான ராஜ்மோகன் காந்தியால் (இவருக்கு ஏன் இந்த வேலையற்ற வேலை?) உடனுக்குடன் ஹிந்தியில் மொழி பெயர்க்கப் பட்டது.

ராஜீவ் காந்தி, இந்த மனிதரைப் பற்றி இம்மாதிரி சொன்னதைத்தான், கிண்டலாக-நாடகத்தனமாக  தன்னுடைய அறிமுகமாகப் பகர்ந்தார், இந்தக் கருணாநிதி – இவர் ஒரு கதை-வசனகர்த்தா அல்லவா?

இதற்கு சில காலம் முன்பு (ஜனவரி 30, 1991) மத்திய அரசால் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப் பட்டது, நம்மில் பலருக்கு ஞாபகமிருக்கலாம். ஏன் பிரதமர் சந்திரசேகர் அப்படிச் செய்தாரென்றால், கருணாநிதி அதற்கு சிலகாலம் முன்பு, விடுதலைப் புலிகளிடம் இந்தியாவின் நிலை/அமைப்புகள்/செயல்கள் பற்றிய பல முக்கியமான ரகசியங்களைக் கொடுத்திருந்தார் –  இப்படி கருணாநிதி இந்தியாவுக்குத் துரோகம் செய்தது, ஏதாவது பொதுநன்மைக்காகவோ, பளிச்சிடும் நேர்மைக்காகவோ, மனச்சாட்சியின் உந்துதலாலோ அல்லது இனமான உணர்விலோ (!) அல்லது குருட்டாம் போக்கில் ஈழத்து மக்களுக்கு உதவி செய்வதற்காகவோ அல்லவே அல்ல!

பின் ஏன் கொடுத்தார் என்றால், புலிகளிடம் கருணாநிதி, தன் உயிருக்காகப் பயப்பட்டார்.  ஏன்? அதற்கு சில காலங்கள் முன்பு வரை, பல வகைகளிலும் புலிகளை ஏமாற்றி இருந்தார் – பெரும் பண விஷயங்களும், தொடர்ந்த நம்பிக்கைத் துரோகங்களும் இதில் அடக்கம்.  முந்திரி குமாரன் பதிவுகளில் இவற்றில் சில உள்ளன.

=-=-=-=-=

நிற்க. பிரபாகரனுக்கும் (அவர் தோழர்களுக்கும்) மத்தியப் பிரதேசக் காடுகளில RAW சார்பாக ஆயுதம், போர், strategy, tactics, நிதி, அரசாங்கம் போன்ற அனைத்திலும் நுண்மான் நுழைபுலம் தெளியவைத்து, மாய்ந்து மாய்ந்து படிப்பித்த உயர் ராணுவ அதிகாரிகள் சொல்வதைக் கேட்டால் நாம் ஆச்சரியப் பட வேண்டும் – காங்கிரசும்,  ராஜீவும், நமது MGR-ம்  நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எவ்வளவு மகத்தான உதவிகள் புரிந்திருக்கிறார்கள் என்று.

ஏன், பிற்காலத்தில், IPKF மூன்று முறை பிரபாகரனைச் சுற்றி வளைத்துப் பிடிக்க இருந்தனர் – அங்கு IPKF-LTTE சண்டைகள் உச்ச கட்டத்தினை அடைந்தபோது. ஆனால், இந்திய (காங்கிரஸ்) அரசு, அனுமதி IPKF வீரர்களுக்குக் கிடைக்கவில்லை – ஆகவே அவர்கள் பிரபாகரனைக் கைது செய்யவில்லை  – பிரபாகரன் தப்பினார், மறுபடியும், மறுபடியும். இதைப் பற்றித்தான் அன்றைய இந்திய ராணுவ அதிகாரி AS கல்கட் சொன்னார் – IPKF போரிடும் போது அவர்களின் ஒரு கை பின்னால் கட்டப் பட்டிருந்தது என்று… ஆகவே IPKF பலத்த சேதாரத்துக்குப் பின் திரும்பி வந்தது. (பிறிதொரு சமயம், நேரம் கிடைக்கும்போது, நான் காங்கிரஸ் – ராஜீவ் – ஈழம் – கருணாநிதி – இந்த மனிதர் சதி பற்றியெல்லாம் எழுதுவேன் என நினைக்கிறேன்)

=-=-=-=-=

காங்கிரசுடன் பேரம் பேசுவதற்காக – அவர்களை மிரட்டுவதற்காக , புலிகளைக் குழப்பி – அவர்களை ஏமாற்றி, அவர்களை தாம் தான் காப்பாற்றமுடியும், ஈழத்தின் பாதுகாவலன் நான் தான் என்று சொல்லி – ஆனால் ஒரு துரும்பையும் அசைக்காத கயமை நிதி தான் நம் தலைவர்…

ஆனால் புலிகள், ஜெகத் கஸ்பர், கருணாநிதி போன்ற நம்பிக்கைத் துரோகம் செய்யும் நயவஞ்சக உதிரிகளைக் கணக்கு தீர்க்காமல், சந்தி சிரிக்க வைக்காமல் – அவர்களுக்கும், ஈழத்துக்கும் உண்மையாகவே பல வழிகளில் உதவி செய்த ராஜீவைக் கொன்றனர்; இந்த ராஜீவ் கொலையும், துரோகநிதியின் – அவரது ‘கண்டும் காணாத’ தன்மையினால்,  சுயநலத்தால், பொச்சரிப்பினால், உயிர் பயத்தினால் தான் நடந்தது.

ஈழத் தமிழர்கள் , அழியாப் பழியையும், காங்கிரசின் வெறுப்பையும் இதன் மூலம் சம்பாதித்தனர்.

அவர்கள் நம்பிய கருணாநிதி, நிதி சுருட்டுவதிலேயே காரிய கவனமாக இருந்தார். நேரம் இருந்தால் திரைக் கதை வசனம் எழுதி தமிழகத்தில் பீதி உண்டாக்கினார். ஈழத் தமிழர்களின் நிலை பற்றி நினைக்க அவருக்கு ஏது நேரம்?

தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்கள் காப்பதாகச் சொல்லிக் கொண்ட ஈழத் தமிழர்களும் – கருணாநிதியை நம்பி காங்கிரசை விட்ட கதையால் – இதற்காக நம்பவே முடியாத விலையும் கொடுத்தனர். தொடர்ந்த சண்டைகளில் மாபெரும் அழிவுகளைச் சந்தித்தனர். பரிதாபம்.

கருணாநிதியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார் – இனி புலிகள் தம்மை ஒன்றும் மிரட்ட முடியாது என்று.

=-=-=-=-=

இந்த மனிதர் உண்மையாகவே நம் தமிழகத்தின் துயரம்.

இம்மனிதரும் அவரது மாபெரும் பேராசைக் குடும்பமும், இந்தியாவின், ஏன், நம் உலகத்திற்கே கூட ஆபத்தானவர்கள் என்றால் அது மிகையாகாது…

=-=-=-=-=

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

பின் குறிப்பு: அனாமதேயங்களும், இனி பின்னூட்டங்களிடலாம் – விருப்பப்பட்டால்.

3 Responses to “கருணாநிதி: “நான் இந்தியாவுக்கு அபாயகரமானவன்””

 1. sruthi Says:

  அருமை தொடராடும் உங்கள் பணி.உங்கள் இடுகைகளை Facebook ல் இன்னைக்க வழி செய்தால் மகிழ்ச்சி.

 2. ramasami Says:

  நன்றி ‘ஸ்ருதி’ அவர்களே.

  எனக்கும், facebook-twitter போன்ற இணையவிஷயங்களுக்கும் வெகு தூரம் – இவற்றைப் பற்றிய என் எண்ணங்கள் என்னை அங்கு செல்ல விடாமல் தடுக்கின்றன. இவற்றில் முக்கியமானது – அவைகளுக்குள் செல்வதற்கு, படிப்பதற்குக் கூடஒருவருக்கு பயனர் விவரங்கள் அளிக்க வேண்டியிருக்கிறது.

  எனக்கு Open source, Open Access என்றால், கொஞ்சம் பிடிக்கும் – உதாரணத்துக்கு FreeBSD (இது லினக்ஸ் அல்ல!). போன்றவைகளின் மேல் எனக்கு காதலுண்டு – நான் கொஞ்சம் வயதானவன் கூட! ;-)

  மேலும், facebook போன்றவைகளுக்கு செல்லக் கூடிய ஒருவர், wordpress இணையதளத்துக்கு, அதன் வலைப் பூக்களுக்கு வருவது மிகவும் எளிது. ஆகவே, facebook உபயோகிப்போர் ஒரு லிங்க் கொடுத்தாலே போதுமானது அல்லவா?.

  என்ன நினைக்கிறீர்கள்?

 3. sathi62 Says:

  நலத்திட்டங்களென்கிற பெயரில் பணம் சுருட்டும் கலை வேர்விட்டு வெகு தூரம் பரவி விட்டது.


Leave a Reply to ramasami Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s