கலைஞர் ‘எதிர்நீச்சல்’ வீரர்! (ஐயோ!!)

05/06/2011

வீரமணி அவர்களின் ஜூன் 3, 2011 தேதியிட்ட அறிக்கை: எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர் நமது கலைஞர்

“உழைப்பதில் இவருக்கு இணை எவரும் உண்டோ என்று அவரிடம் மாறுபட்டவர்கள்கூட மாறுபட முடியாது கூறும் ஒருமித்த கருத்து இது!”

திரு வீரமணி அவர்களே – நான் இந்த உதிரியிடமிருந்து மாறுபட்டவன். ஆனாலும்/ஆகவே உங்கள் கருத்தை மறுதலிக்கிறேன். தன்னளவில் உழைப்பினை மட்டும் உயர்த்துவது, என்னைப் பொருத்தமட்டில் மடமையானது. அதிலும், நீங்கள் கேவலமானவைகளுக்காக ‘உழைத்த’ இந்தக் கருணாநிதி விஷயத்தில் இதனைச் செய்தால், அது கயமையானதும் கூட!

மேலும், ‘ஜே ஜே சில குறிப்புகள்’ என்கிற புதினத்தில், சுந்தர ராமசாமி எழுதிய மிக அழகான, தருக்கமும் நேர்மையும் சார்ந்த வரிகளை, உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்: (இப்புதினம், தமிழின் 100 குறிப்பிடத்தக்க புத்தகங்களில் முக்கியமான ஒன்றாக பல வருடங்கள் இருக்கும் என்பது என் எண்ணம்)

“27.10.1953
எனக்கும் கவி கோவிந்த குருப்புக்கும் நேற்று வாய்ச் சண்டை. கம்பம் நட்டு மின்சாரக் கம்பிகளை இழுத்துத் தெரு விளக்குப் போடும் குஞ்சுண்ணியைப் பற்றி நீளமாகப் பாடி இருக்கிறான். குறுங்காவியம் என்றான் குருப். நான் நீண்ட பாட்டு என்றேன். இந்த இடத்திலேயே கிறீச்சிட்டுவிட்டது. ‘உழைப்பு உன்னதமானது என்று சொல்ல மாக்ஸிம் கார்க்கியை ஏன் இழுத்தாய்? உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டேன். ‘நீ மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்கிறவன் தானே?’ என்று கேட்டேன். அவன் முகம் சிவந்தது. ‘உழைப்பு உன்னதமானது என்று எண்ணற்ற தடவைகள் நீ சொல்லும்போது இது பற்றி உனக்கே சந்தேகம் இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றிவிடுகிறது’ என்றேன். ‘மேலான உறவுகளை நாம் பறை சாற்றுவது உண்டா?’ என்று கேட்டேன். ‘தாய்  மீது கொண்டிருக்கும் பாசம், மனைவி மீது கொண்டிருக்கும் அன்பு, காதலியின் மீது கொண்டிருக்கும் பிரியம், குழந்தைகளின் மீது கொண்டிருக்கும் கவலை, நண்பர்களின் மீது கொள்ளும் பாராட்டுணர்வு இவை பறைசாற்றப் படுவதுண்டா? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவன் யார் என்பது தெரியுமா?’ என்று கேட்டேன். அவனுக்குத் தெரியாது. ‘தெருவில் விளக்குப் போடுபவன்தான் எனக்கு முக்கியம்’ என்றான். ‘மின்சாரத்தை ஒருவன் கண்டுபிடிக்கவில்லை என்றால் குஞ்சுண்ணி எப்படி விளக்கு போடுவான்?’ என்று கேட்டேன். ‘குஞ்சுண்ணிகள் தான் ஒளியைப் பரப்பினார்கள். அதுதான் எனக்கு முக்கியம்’ என்றான். ‘குஞ்சுண்ணி அதிகச் சம்பளம் கிடைத்தால் மிலிட்டரியில் சேர்ந்து விடுவானே’ என்றேன். ‘ விஞ்ஞானிகளும் தங்களை விற்றுக் கொண்டுதானே இருக்கிறார்கள்’ என்றான். ‘ஆக, மிகையான நிலைகள் வேண்டாம். உழைப்பைத் தன்னளவில் போற்றிப் பேசுவது தவறானது. உழைப்பின்றிக் கற்பழிப்பு இல்லை. போற்றப்பட வேண்டியது உழைப்பின் பின்னுள்ள பிரக்ஞை. உடல் உழைப்பு ஆயினும் சரி. மன உழைப்பு ஆயினும் சரி’ என்றேன்.”

=-=-=-=-=

“இந்த 88 வயதில் அவரது பொதுவாழ்க்கை 75 ஆண்டுகள் என்பது வரலாற்றில் எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்று அல்லவா!”

கருணாநிதி பேசினால் மட்டும் அல்ல – கருணாநிதியைப் பற்றி வீரமணி பேசினாலும் உண்மை வெளிவராது.

இந்த வீரமணிக்கு, ஃபிடெல் காஸ்ட்ரோ  என்ற மனிதர் இருப்பதே தெரியாது போலும். காஸ்ட்ரோவின் பொது வாழ்க்கை நம் உதிரித் தமிழ்த் தலைவரைவிட நிறைய! மேலும் காஸ்ட்ரோவின் நேர்மையும், வீரமும் எங்கே, நம் கருணாநிதியின் ஊழலும், கோழைத்தனமும் எங்கே!

“பதற்றம் கொள்ளவேண்டிய தருணம் அல்ல இது. பரிகாரம் காணவேண்டிய முக்கிய கட்டம் இது என்பதை நன்கு உணர்ந்த அத்தலைவரின் பயணம், சீரிய செயல்திட்டத்தால் ஒரு திருப்பமாக அமையட்டும்!”

ஒ! பரிகாரம் காண வேண்டுமானால், ஏதோ பெரும் குற்றம் அல்லது தவறு நடந்திருக்கிறது என்று சொல்கிறீர்களா, வீரமணி அவர்களே!

நீங்கள் கருணாநிதியின் உதவிக்கு வருகிறீர்களா அல்லது “திட்டமிட்டு இன எதிரிகளும், அரசியல் கண்கொத்திப் பாம்புகளும் ஏற்படுத்திடும் அசாதாரண அவலங்களில்” நீங்களும் உங்கள் பங்கை ஆற்று ஆற்று என்று ஆற்றுகின்றீர்களா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

“எதிர்நீச்சல் அவருக்குப் புதிதல்ல – பழக்கமான தொன்றுதான்!”

ஒ! அப்படியா? நாம் இதனை, இந்த குபீர் சிரிப்பை,  விரிவாகப்  பார்க்கலாம்.

வீரமணி அவர்களே! நீங்கள் எதிர்நீச்சல் திரைப்படத்தை பலமுறை கருணாநிதி பார்த்திருக்கக் கூடும் என்று சொன்னால் அது நம்மால் ஒப்புக் கொள்ளமுடியலாம். ஆனால் நீங்கள் அவர் “எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்” என்று சொன்னால் அது எனக்கு மிகவும் சிரிப்பு வரவழைத்து, மாரடைப்பே வந்துவிடும் போல இருக்கிறது…

நிற்க, வாசகர்களின் நினைவிற்கு, சில செய்திகள்:  எதிர்நீச்சல் என்றொரு படம் 1968-ல் வெளிவந்தது. K பாலச்சந்தர் இயக்கிய இத் திரைப்படத்தில், சீர்காழி கோவிந்தராஜன் அவருடைய கணீர்க் குரலில் ஒரு பாட்டு பாடியிருப்பார்: “வெற்றி  வேண்டுமா  போட்டு  பாரடா எதிர்நீச்சல்

யோசித்துப் பார்த்தால், அப்பாட்டில், பலவரிகள் கருணாநிதியின் நிலைமைக்கு சரிவர வருவதைக் காணலாம்.

எதிர்நீச்சல்: மனைவியார், கருணாநிதியார், துணைவியார்

இந்த நீச்சலில், எதிர்நீச்சல், எதிரெதிர்நீச்சல் போன்ற அனைத்தும் அடங்கும். இவர் எப்படித்தான் தன் பல குடும்பங்களை நடத்துகின்றாரோ – இயற்கைக்கே வெளிச்சம்! இதைத் தவிர வெளியில் பரவலாகத் தெரியவராத விஷயங்கள் வேறு. யோசித்துப் பார்த்தால், எப்படி இவர் குடும்பத்தினர் இவருக்கு இன்னமும் மரியாதை கொடுத்து, அடிபணிந்து நடக்கின்றனர் என்பதே, இவர் எதிர்நீச்சலடிக்கும் திறமைக்குச் சான்று…

கண்மூடி வழக்கம் மண் மூடிப் போக கருத்தை சொல்வது எதிர்நீச்சல! (http://ibnlive.in.com/news/atheist-karunanidhi-visits-temple-lauds-guru/59132-3.html?xml)

அவர் உளறிக்கொட்டி, இந்து மதத்தைக் கேலி செய்வதை எல்லாம், அவர் வீட்டில் ஒருவர் கூட மதிப்பதில்லை – அவர்கள் மனைவிகளானாலும் சரி, மக்களானாலும் சரி!

சாய்பாபாவுக்கு கூழைக்கும்பிடு (தினமலரில் வந்திருந்த இப்புகைப்படத்தை அனுப்பிய நண்பர் மணிக்கு நன்றி)

இவர் மாகுடும்பத்தைச் சேர்ந்த மனைவிகள், துணைவிகள், மக்கள், மறுமக்கள் எல்லாம் கோவில் செல்லலாம். கும்பிடலாம். சாமியார்கள் காலில் விழலாம். ஆனால் இவர் கட்சியிலே கூட வேறு யாராவது இவ்விஷயங்கள் செய்தால், அவர்கள் எள்ளி நகையாடப் படுவர்! என்ன இரட்டைக் கபட  வேடதாரி, இக்கயமைநிதி!

பள்ளிக்கு பள்ளிக்கு இடத்துக்கு அலையும் அப்பனுக்கது தான் எதிர்நீச்சல்! (அம்மா, கொஞ்சம் போட்டுக் குடுங்கம்மா, அழகிரியும் கனிமொழியும் அமைச்சர் பதவி வேண்டும்னு ரொம்ப அழுவறாங்க...)

இப்படி டெல்லிக்கு ஓடி ஓடி, துண்டு போட்டு பிச்சையெடுத்து, விசும்பி வெதும்பி அழுது, அமைச்சரவைப் பள்ளியில் அவருடைய சற்று வளர்ந்துவிட்ட விஷமக்காரக் குழந்தைகளுக்கு இடம் வாங்குவதற்கு அவர் போட்ட எதிர் நீச்சல் இருக்கிறதே – அந்த ஒலிம்பிக் நீச்சல் வீரர்கள் தோற்றார்கள் போங்கள்!

பிள்ளைக்கு எப்படி இடங் கிடைச்சாலும் பரீட்சை வந்தால் எதிர் நீச்சல் (பாவம் கனிமொழி)

சிபிஐ வைத்த பரீட்சையில்  ஃபெயில்  ஆன கனிமொழியை, கருணாநிதி மீட்கப் போவதும், அவரது எதிர்நீச்சல் திறமையால் தான்!

வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி, பதவிக்கு வருவது எதிர்நீச்சல்!

ஒன்றா  இரண்டா இவர் தன் அரசியலில் – தமிழகத்துக்கும்,  தமிழகத் தலைவர்களுக்கே எதிராகவும் போட்ட மஹாஊழல் – பதவி – கயமை – குள்ளநரித்தனம் மிகுந்த எதிர்நீச்சல்கள்! இவற்றை வரிசைக் கிரமமாக (ஆனால் தகுதித் தரமாக அல்ல) கொடுக்க முயற்சி செய்கிறேன்:

பெரியார், சம்பத், அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன், காமராஜ், ராஜாஜி, பக்தவத்சலம், கக்கன், MGR, அமிர்தலிங்கம், வாஜ்பாய், ராஜீவ், வை கோபால்சாமி… தொடரத் தொடர நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும் – இது ஒருமுடிவே இல்லாத வரிசை!

பதவிக்காகவும் பணத்துக்காகவும் ஆசைப் பட்டு இவர் செய்த செய்நன்றி கொல்லல்களும், பச்சைத் துரோகங்களும் கணக்கிலடங்கா!

கணக்குக்கு மேலே பிள்ளையை பெத்து காலம் கழிப்பது எதிர்நீச்சல்!

ஐயகோ, எனக்கு அளவுக்கு அதிகமான பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், பத்திகள் எல்லாரும் வேறு உள்ளனரே, நான் என்ன செய்வேன்! எப்படியாவது அனைவருக்கும் சொத்து சேர்க்க வேண்டுமல்லவா? ஐயோ  ஐயோ, என்னுடைய ஆட்சி வேறு போய் விட்டதே இப்போது, நான் என்ன செய்வேன்…!!

=-=-=-=-=-=

வீரமணி சொல்ல நினைத்தது போல, கருணாநிதி   ‘எதிர்நீச்சல்’ நாகேஷை விட நடிப்பில் உயர்ந்தவர்…

=-=-=-=-=-=

எது எப்படியோ, இந்த கருணாநிதிக்கு நம் காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்  (உதிரிக் கழக ஸ்டைலில்):

கலைஞரே! உங்களை வாழ்த்த எனக்கு மனதில்லை – திட்டி மகிழ்கிறேன்!

=-=-=-=-=

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s