‘கலைஞர்’ என்றால் பொய்யர் என்று அறிக…

07/06/2011

மார்ச் 29, 2011 அன்று தான் கருணாநிதி ‘கலைஞர் டிவிக்கு என் பெயர்தான் வைத்திருக்கிறார்களே தவிர எனக்கும் அதற்கும் துளிக்கூட சம்பந்தமில்லை. அதில் பங்கு தாரர்களாக கனிமொழி, தயாளு, சரத்குமார் ஆகியோர் உள்ளனர். அவ்வளவு தான்!’ என்கிற மாதிரிப் பேசியிருக்கிறார்.

இப்போது திருவாரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை வெற்றி பெற வைத்த (உண்மையிலேயே, நம்பவே முடியாத!) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் , ஜூன் 4, 2011 இரவு நடந்தது. இதில் இப்படி பேசியிருக்கிறார்! (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=252654)

“எதிர்காலத்தில், கனிமொழி வாழ்க்கைக்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக, கலைஞர் “டிவி’யில் பங்குதாரராக ஆக்கினேன்.”

ஏன் கருணாநிதி அவர்களே, நான் தெரியாமல் தான் கேட்கிறேன் – சம்பந்தமே இல்லாமலா நீங்கள் உங்களுக்கு கனிமொழியைப் பங்குதாரராக ஆக்க முடிந்தது?

மேலும், கனிமொழிக்கு வாழ்வாதாரம் ஒன்று கூட இல்லையா என்ன? அவர் என்ன பிச்சைக்காரரா? பட்டினி கிடக்கிறாரா? அல்லது ஒரு நாளுக்குச் சில கோடிகள் தான் சம்பாதிக்க முடிகிறதா?

அல்லது அண்ணன்களுடன் போட்டி போட்டு, அவர்களையும் மீறிச் செல்ல வேண்டுமா?

=-=-=-=-=-=

என்ன அவசியம் கருணாநிதி உங்களுக்கு, இப்படி புளுகுணி மாங்கொட்டையாக இருப்பதற்கு?  உங்கள் அந்திம காலத்தில் கூட  நீங்கள் திருந்துவதாக இல்லையா?

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

2 Responses to “‘கலைஞர்’ என்றால் பொய்யர் என்று அறிக…”

  1. Narasimhan Says:

    “உங்கள் அந்திம காலத்தில் கூட நீங்கள் திருந்துவதாக இல்லையா?” அந்திம‌ கால‌மா?இவ‌ர் அடுத்த முறை முதல்வராவதற்கு (93 வயதில்)சப்பு கொட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்.

  2. நித்தில் Says:

    எனக்கு காது கொஞ்சம் மந்தம். டியூன் வேற பாவமா இருந்ததா ‘ போய் வா தலைவா வணக்கம், நீ போனால் எங்கள் வாழ்வு சிறக்கும்’ னு காதுல விழுந்தது. நீங்க சொன்னமாதிரி 30 வினாடிகளுக்கு மேல் கேக்க முடியல. அதுக்கே காதுல ரத்தம் வந்துடுச்சு….


Leave a Reply to Narasimhan Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s