கருணாநிதியின் பின் தொடரும் கரிய நிழல்…

08/06/2011

இக் கேலிப்படம்  விடுதலை  இணைய  தளத்தில்  வந்துள்ளது. இதைக் கருத்துப் படம் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

வீரமணியின் 'விடுதலை': கருணாநிதியைக் கிண்டல் செய்யும், அறிவியல் மறந்த கேலிச் சித்திரம்... (http://viduthalai.in/new/index.php?option=com_content&view=article&id=10956)

ஏன்?

இதிலுள்ள கருணாநிதி, தள்ளுவண்டிப் பயணம் செல்லாமல், ஜாலியாக கை வீசிக் கொண்டு நடப்பதைக் கூட நாம் பொறுத்துக் கொள்ளலாம் – அதற்கு artistic license என்றெல்லாம் காரணங்கள் சொல்ல முடியலாம். அதாவது அவர் 88 ஆண்டுகள் தாண்டி பீடு (பீடை?) நடை போட்டுக் கொண்டிருப்பதாக இன்ன பிற – அது ஒப்புக் கொள்ளக் கூடியது தான்.

ஆனால், இதிலுள்ள குயுக்தி தான், நமக்கு நகைப்பை வரவழைக்கிறது – எனக்கு  மூன்று  கேள்விகள்   கேட்கத்  தோன்றுகின்றது:

  1. இவர்  பின்னால்  தொடரும்  கரும்  நிழல்  தான் இவருடைய  பொதுவாழ்க்கையாம் – ஜால்ரா ‘விடுதலை’ தானா இப்படிச் சொல்கிறது? வீரமணிக்கு எப்படி இவ்வளவு உண்மையைப் பேசுமளவிற்கு தைரியம்?
  2. பொதுவாக சூரியனுக்கு எதிர்த் திசையில் தான் நிழல் விழும் அல்லவா? இதனை சிறு குழந்தைகள் கூட அறியுமல்லவா? ஆனால், ‘விடுதலை’ மட்டும் சூரியனுக்கு வலது பக்கத்தில் நிழல் போல இப்படம் வரைந்திருக்கிறது. அடிப்படை அறிவு இல்லை. விஞ்ஞான பூர்வமான எண்ணப் போக்குகளும் இல்லை. கோட்பாடுகளைப் பகுக்கும் திறனோ அறவே இல்லை!  இந்த மா-மாக்களுக்கு (மாமா-க்கள் என்று சொல்லவில்லை. தயவு  செய்து கவனிக்கவும்!) என்ன கேடு பகுத்தறிவு பற்றி பினாத்துவதற்கு? சிரிப்பு சிரிப்பாகத்தான் வருகிறது எனக்கு!
  3. நிழல் என்பதும் கருணாநிதிக்குத் தான், ஒருக்கால் அவர் ‘நிழலான‘ ஆசாமி என்பதாலோ என்னமோ! பனை மரங்களும், மைல் கல்லும் என்ன புண்ணியம் செய்தனவோ, அவைகளுக்கு நிழலே இல்லை! ஏன் இப்படி, ‘விடுதலை’யாளர்களே?

எது எப்படியோ, கருணாநிதி அஸ்தமனச் சூரியனை நோக்கி நடப்பதாக, ‘விடுதலை’ சித்தரிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கருணாநிதியின்  முடிவைப் பற்றி கேலிச்சித்திரம் வரைந்த ‘விடுதலை’க்கு நன்றி.

கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கிறது.

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s