இம்சை அரசர் இக்கால இராஜராஜ சோழன்…

15/06/2011

(மகத்தான காரியங்கள் பல செய்த ‘ஒரிஜினல்’ ராஜராஜ சோழன் என்னை மன்னிப்பாராக!)

நம் தானைத் தலைவர் கருணாநிதி அண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு ‘அளித்த’ பேட்டி – விடுதலை ( தி.மு.க. தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்!  ), இட்லிவடை (தமிழ் நாடு பார்ப்பனர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது! ) இணையதளங்களில் மறுபிரசுரம் செய்யப் பட்டுள்ளது.

நக்கலும், கயமையும், எல்லாவற்றுக்கும் மேலாக திகட்ட வைக்கும் நகைச்சுவையும் கொண்டுள்ள இதனை, நீங்கள் படித்து இறும்பூதடைய வேண்டுகிறேன்…

=-=-=-=-=-=

மேலும் சில பேட்டித் துளிகள்…

சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று கேட்டிருக்கிறீர்களே?

கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?

சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டி ராமர் குடித்தார் என்று கூறினீர்கள்.

கலைஞர்: ஆமாம். நான் வால்மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங்கள். எங்களுக்கு அந்தத் திட்டம் [சேது சமுத்திரம்] வேண்டும்! நான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக்காரன்! நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! பெரியாரின் மாணவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?

கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.

சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?

கலைஞர்: எனது மனச்சாட்சியை.

(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சராக கருணாநிதி அளித்த பேட்டியிலிருந்து எடுத்து, திராவிடர் கழகம் பதிப்பித்த 130ஆம் ஆண்டு ‘தந்தை பெரியார் பிறந்த நாள்’ மலரிலிருந்து)

இப்படியே போகிறது… இம்மனிதரின் ஆற்று வெள்ளம் போன்ற நகைச்சுவை உணர்ச்சி!

=-=-=-=-=-=-=

கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர். இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?

கலைஞர்: இந்த இரண்டையும் விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகின்றவன் நான்.

(தினகரன் பேட்டி 6-5-2006)

பின் ஏனய்யா, நீங்கள் மாணவராகவும், தம்பியாகவும், நாட்களைக் கழிப்பதற்குப் பதிலாக அரசியல் தகிடுதத்தங்களிலும் தமிழ்க் கொலைகளிலும் இறங்குகிறீர்? எம் மக்கள் உங்களுக்குக் கட்டாய ‘நல்ல ஒய்வு’ கொடுத்த பின்னும் என் இப்படி பதவி மோகம் பிடித்து அலைகிறீர்??

=-=-=-=-=-=

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது – இந்த மனிதர் இம்முறையும் முதலமைச்சராக ஆகி இருந்தால், நமக்கு இன்னும் எவ்வளவு நகைச்சுவை செய்திகள் கிடைத்திருக்கும்…

எல்லாம், நம் போறிய வேளை… (நல்ல காலம், தப்பித்தோம்!)

One Response to “இம்சை அரசர் இக்கால இராஜராஜ சோழன்…”

  1. Venkatraman Says:

    நிருபர்: “வெங்காயம் விலை உயைர்வைப்பற்றி ”
    கருணா: “அதை பெரியாரிடம் சென்று கேளுங்கள்”

    இது ஒரு முதல் அமைச்சரின் பதிலா? இதில் நகைச்சுவையும் இல்லை, மக்கள் மீது அக்கறையும் இல்லை, சொல்லப்போனால் ஒரு வெங்காயமும் இல்லை…

    உங்க கனவில் தான் இவங்க எல்லாம் அடிக்கடி வராங்களே, நீங்களே கேட்டு சொல்ல வேண்டியது தானே?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s