‘கலைஞர்’ என்றால் சகட்டுமேனிக்கு உளறுபவர் என்று அறிக…

20/06/2011

…இதனை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை என்று எனக்குத் தெரிந்தாலும்.

வரவர, எனக்குச் சகிக்கவில்லை.

இம்மனிதருக்கு, ஏதாவது ஒரு ஒலிபெருக்கி கிடைத்தால் போதும், அல்லது ஒரு துண்டு காகிதம் கிடைத்தால் போதும் – இவருடைய உளறல் தொழிற்சாலை பணி புரிய ஆரம்பித்து விடுகிறது. வயதான காலத்தில் ‘இயற்கையே’ என்று தன் கொள்ளு+எள்ளுப் பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்காமல் என்ன இது பைத்தியக் காரத்தனம் என்றும் தோன்றுகிறது.

இவருக்கு, தன் நெடுநாள் வாழ்க்கையில், உற்ற நண்பர்களே கிடையாது என நினைக்கிறேன் – ஏனெனில் இவருக்கு, இவர் அருகில் வந்த அனைவரையும், முதுகில் குத்தியும் அல்லது அவர்கள் கோமணத்தையும் கூட உருவிக் கொண்டு ஓடியும் தான் பழக்கம்.

ஏன் இப்படி நினைக்கிறேன்என்றால், இவருக்கு உண்மையாலுமே நண்பர்கள் என்று இருந்தால், அவர்கள் இம்மனிதரிடம் கொஞ்சம் வாயை மட்டும் அல்ல, உடலில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் மூடிக் கொண்டு, கொஞ்சம் அமைதி காக்கும்படி சொல்லியிருப்பர்…

ஆனால், நமக்குத் தான் விதி இப்படி இருக்கிறது – இவரது பினாத்தல்களை நாம் இவர் இயற்கை எய்தும் வரை (அல்லது நாம் இறைவனடி சேரும் வரை) பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்…

சரி – ஒரு ‘மற்றுமொரு’ எடுத்துக் காட்டாக, நம் ‘கரகரத் தமிழ்மொழி வித்தவர்‘ அண்மையில் பகர்ந்ததைச் சிறிது, சிரித்துப் பார்ப்போம்…

ஒரு குழுவில் நண்பர்கள் மத்தியில் ஜோக்கர்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில ஜோக்கர்கள் அரசியலிலும், கலைத்துறையிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.

நீங்கள் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள், கருணாநிதி அவர்களே? உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தில் உள்ள எண்ணிறந்த ஸ்டாலின்கள், கனிமொழிகள், பற்பல ‘நிதி’களைப் பற்றியா? அல்லது குஷ்பூ, வடிவேலு போன்றவர்களைப் பற்றியா?

உங்கள் கட்சியின் துரை முருகன் அவர்களாவது உண்மையாலுமே மற்றவர்களுக்கு சிரிப்பு வரும்படி பேசக்கூடியவர், உண்மையாலுமே கோமாளி வேடம் போடத் தக்கவர். கோமாளி வேடம் போடுவதற்கு மிகுந்த தகுதியும், குவிந்த உழைப்பும் வேண்டும், அவருக்கு அது நிறையவே இருக்கிறது – ஆனால், உங்கள் ‘உண்டு கொழுத்த’ குடும்பச் சோம்பேறி கும்பலோ, அதிக பட்சம் நகைப்புக்கிடமாகத்தான் பேச முடியும்…

…இவ்வளவு முதிர்ந்த வயதில், நீங்கள் இப்படி விஜயகாந்த் போன்றவர்களைப் பற்றி காழ்ப்பு உணர்ச்சி கொண்டு பேசுவது அருவருப்பை வரவழைக்கிறது…

மேலும் உங்களின் இம்மாதிரிப் பொச்சரிப்புகள், விஜயகாந்த் போன்றோரின் மீதான உங்கள் பயத்தையும், உங்கள் கட்சி உங்கள் குடும்பத்தை விட்டு விலகிப் போய்விடுமோ என்கிற பதற்றத்தையும் காண்பிக்கிறது…

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழ் என்று சொல்லவே பல பேர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அப்படியா என்ன? உங்கள் மற்றும் உங்கள் மகளாரின் எழுத்துக்களை, மேலும் உங்கள் கயமைக்குடும்ப கும்பலின் திரைப் படங்களையும் பார்த்து மக்களுக்கு தமிழின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விட்டதா என்ன? ஐயோ இயற்கையே!

நீங்கள் முதல் காரியமாக, ஏன் உங்கள் அறிக்கைப்-புழுக்கைகளையும், மேடைப் பேத்தல்களையும் குறைத்து கொள்ளக் கூடாது?

ஏனென்றால் தமிழ் வாழ்ந்தால், இங்கே தம்பி செல்வம் குறிப்பிட்டதைப் போல, தமிழ் இன உணர்வு வளரும். தமிழ் இன உணர்வு வளர்ந்தால், திராவிட உணர்வு செழிக்கும்.

தமிழ் எப்படி வாழும், உங்கள் அறிக்கைகளையும், ‘தமிளைக் கொள்ளும்‘ உங்கள் குடும்பத்தினர் போடும் திரைப்பட, தொலைக் காட்சிக் கும்மாளக் கழிவுகளையும், தொடர்ச்சியாக எங்கள் மேல் இடப் படச் செய்தால்?

உங்களுக்கு அடிப்படை தமிழ், தமிழக வரலாறு பற்றிய விவரங்கள் தெரிந்தால், நீங்கள் இப்படி உளற மாட்டீர்கள். உங்களுக்குத் தெரியுமா தமிழுக்கும் திராவிடத்துக்குமான மொழியியல் இணைப்பு பற்றி? தமிழ் – த்ரமிள் – த்ரமிளம் – த்ராவிடம் – திராவிடம் என்று உருமாறியிருக்க மிகுந்த, தகுந்த சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதையாவது நீங்கள் அறிவீர்களா? ஆக, மொழியியல் ரீதியாக தமிழகம் என்பது தான் திராவிடம் என்று அறிவீர்களா?

அல்லது கால்டுவெல், வீரமாமுனிவர், போப் போன்ற எதேச்சாதிகார, காலனி ஆதிக்க, மேற்கைய அடிப்படைவாத சக்திகள், போலிஅறிவு பூர்வமான தளத்தில் ‘உலா’ வந்து ஏற்படுத்திய திராவிடம் என்ற செயற்கையான புவியியல் குறியீட்டைச் சொல்கிறீர்களா? அதாவது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் தான் திராவிடம் என்ற கட்டுக் கதையைத்தான் சொல்கிறேன்.

இப்படியே இருந்தாலும் கூட, உங்கள் உதிரிக் கும்பல் தான் இந்த வறட்டுவாத ‘திராவிடநாடு’ என்பதை விட்டு புறமுதுகிட்டு பயந்தோடி ஒளிந்து வெகுநாட்களாகி விட்டனவே?

அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று சொல்லிச் சொல்லி, திராவிட நாட்டினை அடைய முடியாத காரணத்தால், தமிழ்நாட்டையே சுடுகாடு ஆக்கி விட்ட அயோக்கியர் கும்பலின் தலைவரல்லவா நீங்கள்?

எது எப்படியோ, உங்களுக்கும், உங்களின் முட்டாள் அடிப்பொடிகளுக்கும், தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பது (அல்லது இவை இரு வேறு உணர்வுகள் என்பது) சுத்த பம்மாத்து என்று புரியுமா, அல்லது புரிந்துகொள்ள உங்கள் கயமை மனம் இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே…

ஆனால், பாவம் உங்களுக்கு கோபாலபுரத்திற்கும் சி ஐ டி காலனிக்கும் போய் வரவே நேரம் சரியாக இருக்கும். இதில் உங்களுக்கு உண்மையான, நுண்மான் நுழைபுலம், ஆராய்ச்சி, கீராய்ச்சி என்பதெற்கெல்லாம் ஏது நேரம்…

இந்த இரண்டு உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லாமல் செய்ய வேண்டுமென்று ஒருசாரார் முயன்று வருகின்ற நேரத்தில் ஆத்திகத்திலே பற்று கொண்டவர்கள் கூட, நாத்திகராக தங்களைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் கூட, தமிழ் வாழவும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரம் இவைகள் வென்றிடவும், பாடுபட வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றது.

கருணாநிதி அவர்களே, இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு ஒரு முடியும் புரியவில்லை. நீங்கள் வர வர பினாத்தல்-அடிப்படைத் தீவிர வாதியாகி வருகிறீர்!

தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய கலாச்சாரம் வாழும். தமிழர்களுடைய கலாச்சாரம் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய தன்மானம் வாழும். தன்மானம் பாதுகாக்கப்படும்.

நீங்கள் தமிழைத் தொடாமல், அதன் அருகில் வராமல் இருந்தாலே தமிழ் பிழைத்துக் கொள்ளும். வாழ ஆரம்பிக்கும். இது கூட உங்களுக்குப் புரியவில்லியா?

தன்மானம் என்றால் என்ன அய்யா? டெல்லிக்குப் போய் சோனியா காலடியில் விழுந்து, புரண்டு, விக்கி அழுது, பிலாக்கணம் வைத்து,உங்கள் மாக்களுக்கு மந்திரி பதவி கேட்பதா? அல்லது உருண்டோடிப் போய் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இளித்தபடி அவருக்குப் பூச்செண்டு கொடுப்பதா? அல்லது பிலிம் கமல், பிலிம் ரஜினி போன்ற பிலிம் தொழிலாளிகளை வைத்து, அரசுப் பணத்தில் விழாக்கள் பல நடத்தி நீங்கள் உங்களுக்கு விருதாத் தனமான விருதுகள் கொடுத்துக் கொள்வதா?

நீங்கள் தன்மானம் பற்றிப் பேசுவது, இவ்வாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை!

புராணத்தில், ராமாயணத்தில் கூட 14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலோ இல்லை, அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஏன் கருணாநிதி அவர்களே, உங்களுக்கு ஒரு புராணத்துக்கும், இதிஹாசத்திற்கும் கூடவா வித்தியாசம் தெரியவில்லை? என்ன உளறல் இது?? நாம் கவிதைகளை உரைநடை என்று சொன்னால் அது தவறா இல்லையா? (ஆனால், என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்: உங்கள் ‘கவிதைகளும்’ கவிதை இல்லை. உரைநடையும் ஒழுங்கில்லை. சொல்லப் போனால், சில சமயம் எந்த புண்ணாக்கிற்கு எழுதுகிறீர் என்றே புரிய மாட்டேன் என்கிறது!)

சரி, இதனை விடுவோம். ராமாயணத்திற்கு வருவோம்.

ராமாயணத்தையாவது ஒழுங்காகப் படித்திருக்கிறீர்களா? ராமன், தன் திருமணத்திற்கு முன் தாடகையைக் கொன்றான். பின் திருமணம் நடந்த பிறகு தான் 14 ஆண்டுகள் வனவாசம் எல்லாம்! உங்களுடைய அறிவு, படிப்பு இருக்கும் அழகில், தேவை இல்லாமல் ராமனைக் குடிகாரன், திருடன் என்றெல்லாம் வேறு ஊடகங்களில் வாந்தி எடுத்து, உளறிக் கொட்டுகிறீர்கள், இது தேவையா?

நல்ல வேளை. ஜெயலலிதா தாடகையோ இல்லையோ, நீங்கள் (அல்லது உங்கள் உதிரி அடிப்பொடிகள்) புத்தி கற்பிக்கும் நிலையில் இல்லை. தேவை ஏற்பட்டால், தமிழக மக்கள் அதனை நிச்சயம் செய்வார்கள்.

நீங்கள் நிம்மதியாக (அதாவது, எங்களுக்கு) ஒய்வு எடுங்கள். அல்லது வடக்கிருங்கள். (சோனியா காலில் விழுவதாகப் பொருள் காண்க)

ஆகவே ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக்களையவும், தடுத்து நிறுத்தவும் நாம் முயல வேண்டும் நம்மால் முடியும்.

நன்றி.

ஆக, நீங்கள் கனிமொழியையும், ஸ்டாலினையும் அழகிரியும், மாறன்களையும், நிதிகளையும், அவர்கள் செய்த கேட்டையும், நாட்டையே குட்டிச் சுவராக்கியதையும் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முயலப் போகிறீர்கள்.

ஏனிந்த மனமாற்றம், கருணாநிதி அவர்களே?

குடும்பம் நடத்துவதிலே சிக்கல்கள் தோன்றலாம். இங்கே நம்முடைய குஷ்பு சொன்னதைப் போல சிறு சிறு ஊடல்கள், சிறு சிறு தகராறுகள், பிரச்சினைகள் இவைகள் எல்லாம் குடும்பத்தின் பலத்தை வலுப்படுத்தக் கூடியதாகத் தான் இருக்கும்,

எங்களுக்குப் புரிகிறது

2G, கேபிள் டிவி, தினகரன் சம்பவங்கள் எல்லாம் உங்கள் இரு பெரிய குடும்பங்களைச் சார்ந்த சிறு சிறு ஊடல்கள் தான். அவை சரியாகி விடும். என்ன, தயாளு அவர்களுக்கு மாறன் 600 கோடி ரூபாய் கொடுத்தது போலத்தான்… இவை குடும்பங்களைப் பலப் படுத்துவதற்கு உதவியாக இருக்கும். கவலை வேண்டாம்.

=-=-=-=-=-=-=

பின் குறிப்பு:

முழு பேத்தல் இங்கிருக்கிருக்கிறது: ஆட்சியில் இல்லாவிட்டாலும் தவறுகளை சுட்டி காட்டுவோம்: கலைஞர் பேச்சு

‘கோவை ராம்குமாரின் மகள் பத்மப்ரிதிகா-திருப்பூர் சம்பத்குமார் மகன் சஞ்சய்குமார்’ அவர்களுடைய திருமணம் ஒரு அசாதாரணமான நிலைமையில், படுபயங்கரமான கஷ்டங்களுக்கிடையில், அயோக்கியர்கள் நடுவில், பொம்பளைப் பொறுக்கிகள் தலைமையில் நடந்திருக்கிறது.

புதுமணத் தம்பதிகளுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக!

கூட, இனிமேலாவது அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துக்களும்…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

One Response to “‘கலைஞர்’ என்றால் சகட்டுமேனிக்கு உளறுபவர் என்று அறிக…”

  1. Anonymous Says:

    பத்திரிகை தமிழ் நடை தன் கட்டை அறுத்துக் கொண்டு வலைப்பூ நடையாக யாருக்கும் தீமை செய்யாமல் தங்கள் மூலம் புது வடிவம் கொண்டுள்ளது. மயக்கத்தைத் தெளிவிக்கிறது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s