திடுக்கிடும் ‘தினகரன்’ கேள்வி: கருணாநிதி குரங்கா அல்லது நாயா?

24/06/2011

இவ்விடுகையின் தலைப்பு மிகவும் ரசக்குறைவாக இருப்பதற்கு, முதற்கண், முதற்செவி, முதற்மூக்கு எல்லாம் – தேவரீர்கள் நீங்கள் மன்னிக்க வேண்டுகிறேன்;

ஆகவே, தலைப்பை இப்படி மரியாதையாக  ‘மறு வாசிப்பு’ செய்யவும்:

துணுக்குறச்செய்யும் ‘தினகரன்’ வினவுதல் – முத்தமிழ் வித்தகர், உயிர்காப்புத் திட்டத்தோன், 108 ஆம்புலன்சோன், வண்ணத் தொலைக்காட்சியோன், செம்மொழி கொண்டோன், திஹார் கண்டான், கொள்ளை கொண்டான் டாக்டர் கலைஞர் கருணாநிதி வான்கவியா அல்லது ஞமலியா?

உங்களுக்குத் திருப்திதானே?

இப்படிச் சொன்னால் ஒரு உடனடி ஆபத்து என்னவென்றால் திண்டுக்கல் லியோனிகளும், சாலமன் பாப்பையாக்களும், துரைமுருகன்களும், வீரமணிகளும் உடனே ஓடிவந்து, உண்மையாகவே ஒரு பட்டி மன்றம் நடத்தி விடுவார்… நமக்கு இது தேவையா?

=-=-=-=-=

ஆனாலும் பாருங்கள், இந்த மாறன்களுக்கும், தினகரனுக்கும் என்ன துடுக்குத்தனம்!!

=-=-=-=-=

சில வருடங்கள் முன்பு கருணாநிதிகளுக்கும், மாறன்களுக்கும் குடுமிப் பிடிச் சண்டைகள் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் முக்கியமான காரணம் மாறன்கள் கருணாநிதிகளுக்குக்  கொடுக்க வேண்டிய கப்பத்தை ஒழுகாகக் கொடுக்கவில்லை – பங்குகளை வாங்கியதற்கு சுமார் 1500 கோடி ரூபாய்களை, கொடுக்காமல் சுமார் நூறு கோடி மட்டுமே கொடுத்து மாறன்கள், கருணாநிதிகளை ஏமாற்றினர்.

அதாவது, ஏமாற்றுவதையே தர்மமாக, வாழ்க்கைக் கடமையாகக் கொண்டிருப்பவரையே  ஏமாற்றினர்.

பின்னர் ஏதோ அற்ப காரணங்களுக்காக (தினகரன் வெளியிட்ட ஒரு குப்பைச்செய்தி – ஒரு கருத்துக் கணிப்பு – என்று காரணம் சொல்கிறார்கள்)  ஊழலுட்பூசலை, சண்டையைப் கருணாநிதிகள் பெரிது படுத்தி இதன் விளைவாக, அழகிரியின் ஆசியுடன்,  மாறன்களை மிரட்டுவதற்காக  – தினகரன்  ஊழியர்கள் மூன்று பேர் உயிருடன் எரிக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

பின்னர் கருணாநிதிகள்  அரசு கேபிள் நிறுவனம்  ஆரம்பித்து பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து (அரசுப் பணம், அதாவது, நம் பணம்)  பின் அது, ‘இதயம் இனித்து, கண்கள் பனித்து’ ஊத்தி மூடப் பட்டது – இப்படி கருணாநிதி இனித்து, பனிக்கக் காரணம், மாறன்கள் தயாளு அம்மாள் அவர்களுக்கு கொடுத்த ‘அன்பளிப்பான’ 600 கோடி ரூபாய்கள்… (இதனைப் பற்றி மாதரசி நீரா ராடியா பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம்)

நிற்க, மாறன்கள்-கருணாநிதிகள் தொடரும் ஊடல்-ஊழல்-கூடல் சமயத்தில், தினகரன் திடுதிப்பென்று ஒருநாள் (அந்நாள் சுமார் 60 வயதே ஆன  திமுக இளைஞர் அணித்  தளபதி ஸ்டாலின் பிறந்த நாள்)  ‘குரங்குக்குப் பிறந்த நாள் – ‘குரங்கு பர்த் டே!’ என்று முதல் பக்கத்தில் செய்தி (28 மே, 2007 அன்று) வெளியிட்டது. (விடலை மாறன்களின் ‘லெவல்’ அவ்வளவு  தான்  – உதிரிகள்…)

தினகரன்: இளைஞர் ஸ்டாலின் பிறந்த நாள் - 28 மே, 2007

கருணாநிதியார்களுக்கு இதனால் ஏகப்பட்ட கோபம்.

பின், இதெல்லாம் ‘கணக்குத்’ தீர்க்கப் பட்டது வேறு விஷயம்…

நிற்க.

அண்மையில் தேர்தல் தோல்விக்குப் பின், கருணாநிதி ‘கூடா நட்பு’ பற்றி அழுது புலம்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம். (“கூடா நட்பு கேடாய் முடியும்’: கருணாநிதி பிறந்தநாள் செய்தி)

மேலும் மாறன்கள் செய்த திடுக்கிட வைக்கும், மலைப்புக்குரிய ஊழல் தாண்டவங்கள் அடுத்தடுத்து வெளி வந்து அவர்கள் நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்திலும், கருணாநிதிகள்  அவர்களின் உதவிக்குப் போகாமல் இருப்பதையும் நீங்கள் அறியலாம். (ஏனெனில் கருணாநிதிகளுக்கு, மாறன்கள் செய்த துரோகத்தினால் தான் ‘கைய வெச்ச’ ராசாவும்,  இளவரசி கனிமொழியும் பிடிபட்டதாக ஒரு எண்ணம் – உதிரிகளாகிய  மாறன்களும்  அப்படி செய்யக் கூடியவர்கள் தான்).

மாமா-தாத்தாவால் கைவிடப்பட்ட மாறன்களின் கோபம் புரிந்து கொள்ளக் கூடியதே! அதற்காக, அவர்கள் முன்னர் ஸ்டாலினுக்குச் செய்ததைப் போல இவ்வயதான முதியவர், அதுவும் அவர்கள் சொந்த மாமா-தாத்தாவுக்கா இப்படிச் செய்வார்கள்? எவ்வளவு உதவிகள் பெற்றிருக்கிறார்கள் மாறன்கள், கருணாநிதிகளிடமிருந்து?

ஏது எப்படியோ – ஆக தினகரன் செய்தித்தாள் நேற்று ஒரு செய்தியைப் பிரசுரிக்கிறது. இது ஒரு ‘கூடா நட்பு’ என்று உதிரி மாறன்களும் அவர்களின் அடிப்பொடிகள் கருதியிருக்கலாம் தானே?  (குரங்கு – நாய் பிரெண்ட்ஷிப்)

தினகரன்: கருணாநிதியின் 'கூடா நட்பு' - - 23 ஜூன், 2011

இது ஒரு ஒராங்க்யுட்டானும், நாயும் நட்புடன் இருப்பதைப் பற்றி ஒரு ‘தினகரன் பாணி’ வெட்டிச் செய்தி  – – 23 ஜூன், 2011 அன்று வந்துள்ளது.

“உராங்குட்டான் ஒருபடி மேலே சென்று புத்தகங்களில் கையெழுத்து (கிறுக்கல்தான்) போட்டு புத்தகங்களை வழங்கியது.

“பொதுவாக, குரங்குக்கும் நாய்க்கும் ஆகாது. ஆனால், நாயை பார்த்ததும் பாசத்துடன் குரங்கு நெருங்கி வந்தது. அதன் பின்னர்,..

“அப்போது தொடங்கிய நட்பு, 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

“ராஸ்கோ நாயும் ‘சூரியா’ என்ற பெயரிடப்பட்ட உராங்குட்டானும் தோள் மீது கை போட்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதும், ஒருவரை ஒருவர் பாசத்தால் தடவிக் கொடுப்பதும் சரணாலயத்தில் அடிக்கடி காணக் கிடைக்கும் காட்சிகள்.

இப்போது, ‘நமக்கு நாமே’  இஜ்ஜோடியில் அவிழ்க்க வேண்டிய புதிர் / முடிச்சு என்னவென்றால் – இதில் யார் குரங்கு யார் நாய் என்பது தான். ( நாய்களும், குரங்குகளும், நானாவிதமான உயிர்களும் – சோனியா , ராமதாஸ் -வீரமணி  உட்பட – அவைகளை கருணாநிதிகளோடு இணைத்து எழுதுவதற்கு, மிகத் தயவு செய்து என்னை மிக மிக மன்னிக்கவும். உண்மையாகவே!)

கீழ்க்கண்டவை – உங்களுக்கு ஒரு மாதிரிக்காக (அல்லது ஒரு மாதிரியாக) கொடுக்கப் பட்டுள்ளன, இந்தப் புதிரை அவிழ்ப்பதில், நீங்கள்  கவனத்தில்  கொள்ள  வேண்டியது  என்னவென்றால் குரங்கானது  புத்தகத்தில்  கையெழுத்துப் போட்டுத் தருகிறது…

 • கருணாநிதி-சோனியா
 • கருணாநிதி – ராமதாஸ்
 • கருணாநிதி – வீரமணி
 • திமுக – காங்கிரஸ்

இப்படியும் இருக்கலாமோ?

 • ஸ்டாலின் – தயாநிதி
 • கனிமொழி – நீரா ராடியா
 • கனிமொழி – ராசா
 • கனிமொழி – ஜெகத் கஸ்பர்

என்ன? நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லையா?

சரிதான்.  பின், இதில் யார் குரங்கு யார் நாய் (சபாஷ், சரியான போட்டி!) என்பதை தயாநிதிக்கு, அவர் திருடிய ஐநூற்றி சொச்சம் தொலைபேசி இணைப்புகளில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொண்டு தெளிவடையவும்.

எனக்கும் முடிந்தால் தெரிவிக்கவும்…

பின் குறிப்பு: ஆக, இப்போதும் ஒரு ஊடல் கருணாநிதிகளுக்கும், மாறன்களுக்கும். (பின்னர் பணப்-பரிவர்த்தனைகளுக்குப் பிறகு இது சரியாகி விடும், கவலை வேண்டாம்!)

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

5 Responses to “திடுக்கிடும் ‘தினகரன்’ கேள்வி: கருணாநிதி குரங்கா அல்லது நாயா?”

 1. Narasimhan Says:

  “பொதுவாக, குரங்குக்கும் நாய்க்கும் ஆகாது. ஆனால், நாயை பார்த்ததும் பாசத்துடன் குரங்கு நெருங்கி வந்தது.
  “அப்போது தொடங்கிய நட்பு, 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது”

  காலையில் வெட்டி ஆபீச‌ரான நான் ஆஹா மூளைக்கு ஒரு வேலை கிடைத்த‌து என்று ஆரம்பித்தேன்.இதில் முக்கியமான தடயம் “நட்பு, 4 ஆண்டுகள்”.அதனால் என்னுடைய தேர்வு “•ஸ்டாலின் – தயாநிதி மற்றும்
  •கனிமொழி – நீரா ராடியா”.இரு ஜோடிகளுக்களுக்கும் நட்பு பொதுவானது.ஆனால் தன்னைத் தானே குரங்கு,நாய் என்று எழுதிக்கொள்ள மாட்டார்கள். எனவே “கனிமொழி – நீரா ராடியா” ஜோடிதான் சரியான விடை.4 ஆண்டு என்பதும் பொருந்துகிறது.ஆனால் யார் குரங்கு,நாய் என்பது கண்டுபிடிப்பதுற்குள் தலை சுற்றி விட்டது.போதுமடா சாமி.

  • ramasami Says:

   மன்னிக்கவும், நரசிம்ஹன் அவர்களே!

   உங்களுக்கு நிறைய வேலை கொடுத்து விட்டேன்.
   :-)

 2. Venkatraman Says:

  “‘சூரியா’ என்ற பெயரிடப்பட்ட உராங்குட்டானும்”… அதான் பெயரே இருக்கே… அப்புறம் என்ன confusion?

  சூரியா -> சூரியன் -> உதய சூரியன்…

  ராஸ்கோ??? – ஒரு வேல இத்தாலி நாட்டு நாயா இருக்குமோ?

 3. Balasubramani Says:

  1. குரங்கு வயோதிக குரங்காக இருக்கிறது.

  2. பின்னால் செம்மொழி நூல்கள் உள்ளதால்
  கண்டிப்பாக தமிழ்க் குரங்குதான்.

  3. சமீபத்தில் எதையோ பறிகொடுத்த சோகம்
  முகத்தில் இருக்கிறது.(பதவி/மகள்)

  4. கடிதம் எழுதும் பழக்கமுள்ள குரங்கு.
  (உடன்பிறப்பிற்கு/ சொக்கத்தங்கத்துக்கு)

  5. நாய், கண்டிப்பாக ‘கரு’நாய் தான்.

  6. குரங்குக்கு துனையாக இருப்பதால்,துநாய்வி ஆக
  இருக்கலாம்.

  7. அல்லது குரங்கின் மகளின் தாயாகவும் இருக்கலாம்.

  8. இந்தியாவில் சி ஐ டி நகரிலும், டெல்லி, திகார்
  பகுதியிலும் காணப்படுகின்றன.

  9. படத்தின் பின்னால் உள்ள படத்தில் அதே நாய்
  இருப்பதால், படம் நாயின் வீட்டில் எடுக்கப்பட்டு
  இருக்க வேண்டும்.

  10. வீட்டில் குரங்கின் படம் இல்லாததால் இது குரங்கு
  வந்து போகிற வீடாக இருக்கலாம்.

  வந்த இடத்திலும் குரங்கு என்ன செய்கிறது
  பார்த்தீர்களா? மேலாடாயை விலக்கி, பாவாடை
  நாடாவை அவிழ்த்து, உள்ளாடையை அவிழ்த்துப்
  பார்த்துக்கொண்டு இருக்கிறது.(ஹா! ஹா! ஃபைல்
  பாக்குதாமாம்)

  • ramasami Says:

   ‘பாலசுப்ரமணி’ அவர்களே, உங்கள் புலனாய்வு மெச்சப் படுகிறது.

   மேலும், 1960-களில், சட்டமன்றத்தில் கால்நடைகளைப் பற்றிய வாக்குவாதங்களின் போது, அண்ணாதுரை ‘பாவாடை – நாடா என படுகேவலமாகவும் விரசமாகவும் பேசியதும் நினைவுக்கு வருகிறது!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s