பிரபாகரனும், கருணாநிதியும்…

29/06/2011

ஈழத்தைப் பற்றி ஊடகங்களில் செய்திகள் நடு நிலைமையோடு வருவதே இல்லை, என்பது என் எண்ணம்.. ஆனால், பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமான, புல்லரிக்க வைக்கும், மயிர்க் கூச்செறியும் மொழி, இனம், தேசம், தேசியம், வரலாற்றுப் பொருள்முதல் வாதம், முரணியக்கம், என குறுக்கப் பட்ட, குறுகிய நோக்குடன்,  நிறைய எண்ணங்கள் பதிவாகின்றன. போதாக் குறைக்கு இணையத்தின் தயவினால், தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப் படும், கொலை செய்யப் படும் படங்கள் வேறு – இவை, மெய்யாலுமே, மிக வருத்தம் தரக் கூடியவை என்றாலும்…

ஆக, நமது கையறு நிலைமைக்கும், வெறுப்புக்கும், தன்னிலைமறுத்தலுக்கும், மறத்தலுக்கும், நியாய ஆவேசத்துக்கும், அதீத உணர்ச்சிவசப் படுதல்களுக்கும் கேட்பானேன்?

ஆக, சிங்களவர் இவர்கள் மொழியில், மரியாதை கொடுக்கத் தக்கவர்கள் கிடையாது. அனைத்து சிறி லங்கா மக்களும், சிங்களவன் தான். ஒருவன் தேராவாத  பவுத்தன் என்றால் அவன் மத வெறியன். அப்படியென்றால், அம்பேத்கர் பவுத்த மத வெறியரா என்ன?

விடுதலைப் புலிகள் பற்றியோ – அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தான் எழுத வேண்டும் என்கிற எண்ணம் தான் பரவலாக இருக்கிறது. அவர்கள் ‘தலைவர்’ பிரபாகரனோ தமிழினத் தலைவர், தந்திரோபாயங்களில் வல்லவர். அவர் ஒருவர் தான் ஈழத்துக்காகப் பாடு பட்டவர். தியாகி. அஞ்சத் தக்கவர். நேர்மையாளர். தன்னலம் கருதாதவர். மாவீரர் – என்ற பல்வேறு மதிப்பீடுகள், பிம்பங்கள்; ஆக அவர் –  ஒரு ‘கடவுள்’ நிலைக்குத் தள்ளப் பட்டவர் (அவர் கடவுளாக விரும்பியவரும் தான்).

மேலும் மாவீரராக ஒருவரை வரித்து தொண்டை கிழிய, என்ன சொல்கிறோம் என்று புரிந்ததோ இல்லையோ, கத்தோ கத்து என்று உரக்கக் கத்தினால், அல்லது இணையத்தில் வீரவசனங்கள் விளம்பினால் – பெரும்பாலோருக்கு அவர்களே மகா மகோ வீரர்களாகி விட்டது போல ஒரு புல்லரிப்பு… கவசம் அணிந்து வெள்ளைக் குதிரைகளில் ஏறி வாள்கொண்டு வீரிட்டு எதிரிகளை வெட்டி மாய்ப்பது, வெற்றி வாகை சூடுவது போன்ற சுயமைதுன பிம்பங்கள்…

பொதுவாக தமிழகத்தில் பரவலான எண்ணம் என்னவென்றால், பிரபாகரனை ஒருவர் எதிர்மறையாக விமர்சனம் செய்தால், அவர் தமிழரே அல்ல. அவர் தமிழ் துரோகி என்கிற எண்ணம்!

ஏனெனில், நம்மில் பெரும்பாலோர் ஈழ வரலாறை (என், தமிழக வரலாற்றைக் கூட) சரியாக அறியாதவர்கள்.

தமிழர்களாகிய நமக்கு (நமது கழிசடைத் திரைப்படங்கள், திரைப்படக் கலாச்சாரம், பொறுக்கி அரசியல்வாதிகள் காரணமாக) ஒரு வரலாற்று  பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது மிகவும் சோகமானது….

நம்மில் எவ்வளவு பேருக்கு மகத்தான ஈழத் தலைவர்களான சந்ததியார், டாக்டர் ராஜசுந்தரம், சுந்தரம், சபாலிங்கம் போன்றவர்களைத் தெரியும்?

=-=-=-=-=-=

உண்மை என்னவென்றால், பிரபாகரனும் நம்மைப் போல ஒரு மிகச் சாதாரணமான மனிதர் – போல்போட்களும், ஸ்டாலின்களும் அப்படியே. பலவித கல்யாண குணங்கள் இவர்களிடம்; சில ஏற்கத்தக்கவையாக இருக்கலாம், எனக்கு இவற்றில் சில சந்தேகங்கள் இருந்தாலும். ஆனால், மிகப்பல வெறுத்து ஒதுக்கத்தக்கவை.

சிலசமயம் நான் எண்ணுவதுண்டு – இந்த பிரபாகரனுக்கும் கருணாநிதிக்கும் ஏதாகிலும் வித்தியாசங்கள், ஒற்றுமைகள் உள்ளனவா?

யோசித்தால் மிகப் பல உள்ளன. ஆனால் அவற்றிலும் – வேற்றுமையில் ஒற்றுமைகள், சில குறிப்பிடத்தக்க வேற்றுமைகள்….

கொஞ்சம் இவற்றைப் பார்ப்போம்:

 • தம் நன்மைக்காக, சுயநலத்தினால் மக்களைக் கூறு போட்டவர்கள் இவர்கள் இருவரும். என்ன, கருணாநிதி நேரடியாக மக்களை அழித்தொழிக்கவில்லை. அவ்வளவு தான்.
 • பிரபாகரன் லட்சக் கணக்கான மக்களைத் ‘தியாகம்’ செய்தால், கருணாநிதி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்தார், ஒழித்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதி ஒருகால், நேரடியாக கொலை செய்தவராக இல்லாமல் இருக்கலாம் -ஆனால், பல ஆயிரக் கணக்கான கொலைகளுக்கு (அண்ணாமலை பல்கலைக் கழக உதயகுமார் நினைவுக்கு வருகிறார்) காரணமாக நிச்சயம் இருந்திருக்கிறார்.
 • இருவரும், சிறுவயதிலிருந்து செய்நன்றி மறந்தவர்கள். தங்களால், தங்களுடைய போட்டியாளர்கள் என்று கருதப் பட்டவர்களை  ஈவிரக்கம் இல்லாமல் அழித்தனர். தங்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்களையும், வளர்ச்சிக்கு ஏதுவாகப் பணி செய்தவர்களையும் துரோகம் செய்து ஒழித்தவர்கள், இவர்கள்.
 • கருணாநிதிக்கு பிரபாகரனிடம் பயம் (உயிர்ப் பயமே!) இருந்தது – ஏனெனில் கருணாநிதி, – அவரை, இயக்கங்களை ஏமாற்றியதால், பண விஷயங்களில் துரோகம் செய்ததால். ஆனால், பிரபாகரனுக்கு கருணாநிதி மேல் பயம் இல்லை. ஒருகால் அருவருப்பு இருந்திருக்கலாம். (பார்த்தால், எந்த ஒரு மான, ரோஷம் உள்ள உயிரினத்துக்கும் இம்மனிதரிடம் அருவருப்பைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?)
 • கருணாநிதியை  பிரபாகரன் உபயோகித்திருக்கிறார் – கருணாநிதியின் பயத்தினால். பத்மநாபா சம்பந்தப்பட்ட படுகொலைகளுக்கு, ராஜீவ் காந்தி கொலைக்கு, ஆயுத, எரிபொருள், போதைப்பொருள் கடத்துவதற்கு என்று பல உதாரணங்கள்.  பிரபாகரனையும் கருணாநிதி உபயோகித்திருக்கிறார் – அதாவது: பட்டி மன்றங்கள் நடத்துவதற்கு, ஸ்டாலினுக்கு போட்டியாளராகக் கருதப் பட்ட வை கோபால்சாமியைத் துரத்தியதற்கு, மற்றவர்களுக்கு பூச்சாண்டி காட்டுவதற்கு…
 • பிரபாகரன் நேரடியாக பண ஆதாயம் அடையவில்லை கருணாநிதியிடமிருந்து – ஒரு சமயம் கருணாநிதி அளித்த பிச்சைக்காசை வேண்டாமென்று கூட சொல்லியிருக்கிறார். ஆனால், கருணாநிதி பிரபாகரனிடமிருந்து அடைந்த ஆதாயங்கள் (உம்… உண்மையில், செய்த கயமைத் திருட்டுகள்)  அதிகம்…
 • இருவருக்கும் –  தமிழில் புலமையோ, அல்லது தமிழின் மீது உண்மையான மதிப்போ கிடையாது. அவர்களுடைய ‘முன்னேற்றத்திற்கு’ தமிழ் அவர்களுக்கு ஒரு கருவி,  அவ்வளவே. ஒரே வித்தியாசம் என்னவென்றால், பிரபாகரனுக்கு தான் ஒரு தமிழ் இலக்கியவாதி, கவிஞர் என்ற பொய்யான மனப் பிறழ்ச்சிகள் இருந்ததாக எனக்கு நினைவு இல்லை. கருணாநிதி? இவர் ஒரு தனிப் பிறவி. அவர் வாந்திஎடுத்தாலும் அது இலக்கியம்தான் என்று பிடிவாதம் பிடித்து, தமக்குத் தாமே பரிசுகள் (பிறர் செலவில்) கொடுத்துக் கொள்பவர்.
 • இருவருக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கையே இல்லை – அவர்கள் அகராதியில், பிறர் சொல்லுக்கு மரியாதை என்பதே இல்லை. பிரபாகரன் ஒரு குண்டுக்கொலைநாயகம்  கருணாநிதி ஒரு பணநாயகம், குடும்பநாயகம் – மேலும் இவரும் ஒரு (குடமுருட்டி) குண்டுநாயகம்தான்.
 • பெண்களை போகப் பொருளாக மட்டும் பார்க்கும், திருந்தவே திருந்தாத கயமைக் காமுகர் ந்ம்முடைய வக்கிரக் கருணாநிதி. ஆனால் பிரபாகரனை நாம் அப்படிச் சொல்லவே முடியாது.
 • இருவருக்கும் துதிபாடிகள் மிகவும் பிடிக்கும். ஆனால். தனக்குத் தானே துதி பாடி தனக்குத் தானே, தன் பெயரிலேயே பரிசுகள் கொடுத்துக் கொள்வது நம் கருணாநிதியார் மட்டுமே – அல்லது மட்டமே!
 • பணம் பணம், என்று பேயாக அலையும் கயமை மனப்பான்மையுடையவர் கருணாநிதி. அவரது குடும்பத்திற்கு உழையோஉழை என்று இன்னமும் இதற்காக உழைப்பவர். ஆனால், எனக்குத் தெரிந்தவரை, பிரபாகரன் பண விஷயத்தில், சொந்தக் குடும்பத்தை ‘முன்னேற்றுவதில்’ அயோக்கியர் அல்லர்.
 • எனக்குத் தெரிந்து, ஒப்பாரி, அழுகை, மூக்குச் சிந்தல், சுய பச்சாத்தாபம் எல்லாம் பிரபாகரனிடம் இருக்கவில்லை. ஆனால், கருணாநிதியின் அடிப்படை குணாதிசியங்களில், இப்பெட்டைப் புலம்பலும் உண்டு..
 • பிரபாகரன் ஒரு போற்றத் தக்க மாவீரரோ அல்லது மெச்சத்தகுந்த நேர்மையாளரோ அல்ல  (ஈழத்தில் நிறைய பேர்கள் மாவீரர்களாக, நேர்மையாளர்களாக இருந்திருக்கிறார்கள் – சந்ததியார், சபாலிங்கம்  உட்பட – ஏன், நான் ‘தாரகை’ சிவராமைக்கூட அப்படிச் சொல்ல முடியும்). ஆனால் நிச்சயம் பிரபாகரன் ஒரு கோழையுமல்ல. ஆனால், நம் கருணாநிதி நிச்சயம், அடிப்படையில் ஒரு பயந்து நடுங்கும் கோழை – இது ஒரு முக்கிய வித்தியாசம். கருணாநிதியின் மடியில் கனம் மிக மிக அதிகம்.

=-=-=-=-=-=

ஈழம் பற்றிய – முக்கியமாக, விடுதலைப் புலிகள் / பிரபாகரன் பற்றியும் சில  பதிவுகளைத் தொடருவதாக எண்ணம். கவனிக்கவும் – இவை தமிழ்  ஈழம் பற்றியவையாக இருக்க மாட்டா…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

2 Responses to “பிரபாகரனும், கருணாநிதியும்…”


 1. சபாலிங்கம் யார்?? எதற்காக ??? எப்படி கொலை செய்ய பட்டார்??
  புலத்தில் மாற்று கருத்தாளர்கள் என்றும் மனிதவுரிமை வாதிகள் சனனாயக வாதிகள் என்னும் பல போர்வைகளை போர்த்துகொண்டவர்கள் அவர்யார் ?எப்படியானவர்? எப்படி இருப்பார் ?என்று கூட தெரியாதவர்களாய் வழைமை போல தங்கள் வசதிக்கேற்றபடி சாபலிங்கம் படு கொலை புலிகளால் என்று சில தளங்களில் இன்றும் எழுதி புலம்பியபடி இருக்கிறார்கள் எனவே அவரை பற்றியும் சுருக்கமாக முடிந்தளவு விபரமாக பார்த்தால் இவர் தமிழ் மாணவர் பேரவையில் மாணவனாக இருந்த போது இணைந்து கொண்டார்.
  அந்த கால கட்டத்தில் தமிழ் மாணவர் பேரவை அமைப்பாளரான சத்திய சீலன் அவர்களால் 1971ம் அண்டு கார்த்திகை மாதம் திருநெல்வேலி சந்திக்கு அருகில் மாமரவளவு என்று அழைக்கபட்ட மாமரங்கள் நிறைந்த காணி ஒன்றினுள் அதன் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு ஒரு இலட்சியத்தை அடைவதற்கான போராட்டத்தில் எப்போதும் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்கிற கோட்பாட்டிற்கு இணங்க ஆயுத விடுதலை போராட்டத்திற்கான தடை கற்களாக இருக்கும் துரோகிகளை ஒழிப்பதற்கானதீர்மானம் நிறைவேற்றபட்டுசில திட்டங்களும் தீட்டப்பட்டு அதற்கான சில வேலைதிட்டங்கள் பலரிற்கும் பகிர்ந்தளிக்கபடுகிறது அதில் சபாலிங்கத்திடமும் சில பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டு அதனை அவர் சரியாக நிறை வெற்றாததாலும் .
  அதை விட சபாலிங்கம் ஆரம்ப காலம் தொட்டேஇன்னொரு நாட்டின் இராணுவ உதவியுடனோ அல்லது இன்னொரு நாடு வந்துதான் எங்களிற்கான விடுதலையை வாங்கி தரமுடியும் என்று கனவு கண்டவர் ஆயுத விடுதலை போராட்டத்தினை எமது இளைஞர்களும் எமது மக்களாலும் சுயமாக நடத்தி வெற்றி பெற முடியாது என்று ஒரு தன்னம்பிகையற்ற போக்கினை அவர் கொண்டிருந்ததாலும் அவரின் முரண்பட்ட கருத்துகளால் தமிழ் மாணவர் பேரவையை விட்டு வெளியேற்றபட்டார். பின்னர் புஸ்பராசாவுடன் சேர்ந்து தமிழ் இளைஞர் பேரவையை தொடங்கி அதுவும் செயலற்று போக அதே புஸ்பராசாவுடன் இணைந்து ரெலோ(T.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் என்கிற அமைப்பை தொடங்க முயற்சித்து அதுவும் பலனளிக்காமல் போக பின்னர் பிரான்ஸ் நாட்டில் வந்து குடியெறினார் பிரான்ஸ்நாட்டில் பின்னர் சபாரட்டணத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ( T.E.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்புடன் தொடர்புகளை எற்படுத்து கொண்டு அந்த அமைப்பிற்காக வேலைகள் செய்யது கொண்டிருந்தவர் அந்த அமைப்பும் ஈழத்தில் புலிகளால் தடை செய்ய பட்டதன் பின்னர்.
  அடுத்ததாய் பிழைப்பிற்கு என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு பிரான்ஸ் நாட்டில் அகதிகள் விண்ணப்பத்திறகான சில நடைமுறை சிக்கல்கள் அவரிற்கு அருமையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பிரான்ஸ் நாட்டில் ( o.f.p.r.a ) என்றழைக்கபடும் நாடற்றவர்களிற்கும் அகதிகளிற்குமான உதவி அமைப்பு. இதுவே பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களிற்கான விண்ணப்பங்களை முதலில் பரிசீலித்து அவர்கள் அகதிகளாக ஏற்று கொள்ள பட கூடியவர்களா இல்லையா என்பதனை முடிவு செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சார்பில் 90 களிற்கு முதல் தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இருக்கவில்லை எனவே பிரான்ஸ் நாட்டிற்கு வரும் தமிழர்கள் தங்கள் அகதிக்கான விண்ணப்பத்தை பிரெஞ்சு மொழியிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயோ தான் எழுத வேண்டிய கட்டாய நிலை . இதில் பிரெஞ்சு மொழி என்பது ஈழதமிழரிற்கு பரிச்சமில்லாத மொழி ஏன் அப்படி ஒரு மொழி இருக்கிறதா என்பது கூட பிரான்ஸ் வரும்வரை பலரிற்கு அந்த நேரங்களில் தெரிந்திருக்காத ஒரு விடயம் .
  எனவே ஆங்கிலத்தில் தான் எழுத வெண்டும் ஆங்கிலத்தை எழத தெரியாத பலரும் அங்கிலம் எழுத தெரிந்தவர்களை நாட பலர் அதை உதவியாகவும் சிலர் தெழிலாகவும் செய்ய தொடங்கினார்கள். அந்த சிலரில் அங்கில அறிவுகொண்ட சபாலிங்கமும் அந்த அகதிகளிற்கான விண்ணப்படிவம் நிரப்பும் பணியை தொழிலாக செய்ய தொடங்கினார் வருவாயும் பெருகதொடங்க காலப்போக்கில் தன்னை ஒரு சட்டஆலோசகராகவே பாவனை செய்து கொள்ள தொடங்கியவர் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்ட தமிழர்களிடம் தான் அவர்களிற்காய் அகதி அந்தஸ்த்து பெற்று தரமுடியும் என்றுகூறி அதிகளவு பணம் கறக்க தொடங்கினார். ஆனால் அவர் செய்தது சாதாரண முத்திரை செலவுடன்அதன் மறுவிண்ணப்பம் மட்டுமே. இப்படி அவரிடம் பணமும் கொடுத்து பயனின்றி வருடகணக்கில் அலைந்தும் முறையான எதுவித வதிவிட அனுமதி பத்திரமும் கிடைக்காத இளைஞர்கள் தங்கள் பணத்தை திருப்பி கெட்டு தெந்தரவு செய்ய தொடங்கியபோதுதான் இவரது மனித நேயமும் சன நாயகமும் புலியெதிர்ப்பும் பீறிட்டு கிழம்பியது.
  தன்னை காப்பாற்றி கொள்ள அவர் வசித்து வந்த கோணெஸ்( gonesse ) என்கிற இடத்தின் காவல் நிலையத்தில் சென்று தான் ஒரு அதி தீவிர இடதுசாரியென்றும் தன்னை தாக்கவும் கொலை செய்யவும் புலிகள் அமைப்பு பலரை ஏவிவிடுவதாகவும் தனக்கு பாது காப்பு தரும்படியும். ஒரு (பெட்டிசத்தை )பதிவை போட்டார்.அதன்பின்னர்இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாராவது இவரிடம் போய் தொந்தரவு குடுத்தால் உடனே அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு தொலைபேசி பறக்கும்.காவல் துறையும் வந்து அந்த நபரை அள்ளிபோட்டுகொண்டு போய்விசாரிக்க அந்தநபரும் அழுதழுது உண்மையை செல்ல காவல் துறையும் சரி சரி பணம் குடுத்ததற்கான எந்தவித ஆதாரமும் உன்னிடம் இல்லாதபடியால் இனி இந்த பக்கம் வந்து தொந்தரவுசெய்ய கூடாது என எச்சரித்து அனுப்பி விடும். ஆனாலும் எவருமே இவரை தாக்க வந்ததற்கானவோ அல்லது கொலை செய்யும் நோக்கோடு சென்றதற்கான ஆதாரங்களுடனோ ஆயுதங்களுடனோ யாரும் கைது செய்ய படவேயில்லை.
  இப்படி இவர் காவல் துறையை கூப்பிடுகிறார் என்று அறிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் விசாவும் இல்லை எதுக்கு வீண்வம்பு காசுதானே போனால் போகட்டும் போடா என்று பாடியபடியே அந்தபக்கமே போகாமல் விட்டு விடவும்.சபாலிங்கமும் தனது அதிரடி ஆலோசனை அற்புதமாய் வேலை செய்கிற அற்ப மகிழ்ச்சியில் ஆட்டம் போட தொடங்கினார்.பொன்னும் பொருளும் சேர்த்தவரிற்கு இப்போ பிடித்து கொண்டது பெண்ணாசை அவரிடம் அகதி அந்தஸ்த்து கோருவதற்கான் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய உதவி கேட்டு போன பெண்ஒருவரை தனியெ அழைத்து அவரிடம் தன் காதல் விண்ணப்ப படிவத்தை நீட்டிஅதை பூர்த்தி செய்யுமாறு விண்ணப்பித்தார் அதை அந்த பெண் நிராகரிக்கவே இவரும் சற்று பலாத்காரமாக தனது கோரிக்கையை மீழ்பரிசீலனை செய்யும் படியும் இல்லாவிட்டால் பிரான்சில் அந்த பெண் வாழ்வதே பரிசோதனையாகி விடும் என்று மிரட்ட.
  மிரண்டுபோன பெண்ணோ அழுதபடி அவர் அண்ணனிடம் போய் அத்தனையையும் ஒப்பிக்க அவள் அண்ணன் எமன்ஆனான். அன்னார் சபாலிங்கம் அகாலமரணமானார். இதுதான் நடந்தது. இவரது மரணம் புலத்தில் புலியெதிர்பு பேசிதிரிந்தவர்களிற்கும் வெறும் வாய்சப்பாமல் வெத்திலை துண்டு கிடைக்காதா என அலைந்த மாற்றுகருத்தாளர்களிற்கும் மசாலா பீடாவே கிடைத்ததுபோல தங்கள்விருப்பத்திற்கு பழியை புலிகள் மீது போட்டு சப்பி துப்பினார்கள்.ஆனால் அந்த கொலை வழக்கை விசாரித்த கோணேஸ் காவல் துறையொ அந்த கொலை தனிப்பட்ட விரோதம் காரணமாகவே நடந்ததாக உறுதிபட கூறிய பின்னரும் இவர்கள் கதைப்படி சபாலிங்கத்தின் கொலையை ஏதோ கொழும்பு கொச்சிக்கடை காவல் துறையினர் விசாரித்தது போலவும் லஞ்சம் வாங்கி கொண்டு கொலையாளிகளை தப்பவிட்டது போலவும் கதை அளக்கின்றனர்.
  பிரன்சில் சபாலிங்கத்தை போலவே ஈழவிடுதலை போராட்டத்தை எதிர்த்து எழதியும் பேசியும் திரிந்த முக்கியமானவர்களில் உமாகாந்தன் புஸ்பராசா மற்றும் கலை செல்வன் போன்றொரும் அடங்குவர்.இங்கு இறந்து போனவர்களின் பெயர்களை மட்டும் தான் எழுதியுள்ளென் காரணம் இன்னமும் பிரான்சில் ஈழவிடுதலை போராட்டத்தை விற்று வயிறுவளர்க்கும் இன்னும் சிலர் இருக்கதான் செய்கின்றனர். ஆனாலும் காலப்போக்கில் அவர்கள் காலத்தின் தேவையறிந்து ஒதுங்கி கொள்ளலாம் அல்லது ஈழபொராட்டத்திறகான் ஆரவு நிலை எடுக்கலாம் என்கிற காரணத்தினாலேயே அவர்களின் பெயர்களை தவிர்த்து இறந்து போனவர்களின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டேன்.மீண்டும் சுற்றிவந்து சுப்பரின் படலையையே தட்டுவோம். ஆம் இந்த தமிழ் இளைஞர் பேரவை பெரும் எடுப்புடன் ஆயுதபோராட்டமே தமிழ் மக்களிற்கான் திர்வு


  • அய்யா கிட்டிணன் தங்கம் பரத்,

   தங்கள் கருத்துகளில் பலவற்றோடு ஒப்புமையில்லை – இந்தியாவின் அவுட்லுக், தெஹெல்கா பத்திரிகைகளைப் படிப்பதுபோல இருக்கின்றன அவை; என் நோக்கில் யாருமே சத்தியசந்தர்கள் அல்லர். ஆனால், பிரபாகரனோடு பொருத்திப் பார்க்கும்போது பல பிழைப்புவாதிகளைக்கூட ஒப்புக்கொள்ளமுடியும் என்பதுதான் என் கருத்து.

   சபாலிங்கம் பற்றிய என் எண்ணங்கள் – என் ஸ்ரீலங்கா தமிழ் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டவைதான். மறுபடியும் நீங்கள் கூறியுள்ள விஷயங்களை பரிசீலனை செய்கிறேன், நன்றி.

   மேலும் “பெரும் எடுப்புடன் ஆயுதபோராட்டமே தமிழ் மக்களிற்கான் திர்வு” என்று முடித்திருக்கிறீர்கள்.

   ஆம் – ஆயுதப் போராட்டத்தால், தமிழ் மக்களே தீர்ந்துபோய்விடுவார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s