ஐயகோ! நம் கையறு நிலையை எவரும் உணர்ந்திட்டார் இல்லையே! இந்த ஜால்ரா கூட்டம் நடத்தும் கருணாநிதி விழாக்களில் இருந்து நமக்கு முடிவே இல்லையா?

விடுதலையில் வந்திருக்கும் அறிக்கை:

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் கலைஞர் பிறந்த நாளையொட்டி பட்டிமன்றம் – இசையரங்கம்

தி.மு.க. தலைவர் கலைஞரின் 88-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவினை தி.மு.க. தலைமை இலக்கிய அணி மற்றும் தென் சென்னை மாவட்ட இலக்கிய அணி இணைந்து வருகிற 4-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் இசையரங் கம், தமிழவேள் கலைஞர் இலக்கிய பொற்கிழி வழங்கல், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளோடு நடத்தப்படுகிறது.

ஜெகத்ரட் சகன், எ.வ.வேலு, துரை முருகன் மற்றும் பொறுக்கவே முடியாத கழுதைகள் கவிதைகள் எழுதும் ஒரு கொசுக் கும்பலே இதற்காகத் திரள்கிறது.

இந்த வெட்டிமன்றம் “தலைவர் கலைஞர் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அரசியல் ஆற்றலா? இலக்கியத் திறனா?” என்கிற உலகத்தைக் குலுக்கும் பிரச்சினையை ஆய் ஆய் என்று ஆராயப் போகிறது.

கருணாநிதிக்கு இருக்கப் போவது நிலைத்த புகழா அல்லது எள்ளி நகையாடப்படும் இகழா என்ற பிரச்சினைக்குள் கூட நாம் புக வேண்டாம்

நம்மைப் பொறுத்தவரை, இந்த அடிப்பொடிகள் கும்பல் என்ன முடிவுக்கு வந்தாலும் (பட்டிமன்ற நடுவர் துரைமுருகன் இருப்பதால் – அவர் இரண்டுமே என்று தான், சொல்வார்), நம்முடைய எதிர் கொள்ளல் இப்படித் தான் இருக்கும்:

                                    முடிவு                                                    நம் எதிர்வினை

கருணாநிதியின் அரசியல் ஆற்றல்:          ஓக்காள வாந்தி.
கருணாநிதியின் இலக்கியத் திறன்:           சீத பேதி.

ரசக் குறைவிற்கு மன்னிக்கவும்.

ஆனால் நீங்கள் கருணாநிதியின் ‘இலக்கியங்களைப்’ படித்திருந்தால் தான் நான் சொல்வது புரியும் – நான் வயிறெரிந்து (அவர் புழுக்கைகளை விலை கொடுத்து இந்த ஆள் என்ன தான் ‘முடி’ இலக்கியம் எழுதியிருப்பார் என்று வாங்கிப் படித்ததினால்), மண்டை காய்ந்து (படிக்கும்போது மூளையைக் கழற்றி விட்டுப் படிக்க நேர்ந்ததால்) சொல்கிறேன்…

இம்மனிதர் இலக்கியத்துக்கு, திரைப்படத்துக்கு, பண்பாட்டிற்கு ,அரசியலுக்கு, தமிழுக்கு, தமிழகத்துக்கு, ஏன், அவர் குடும்பத்திற்கே கூட ஒரு துரதிர்ஷ்டம் தான்…

http://216.35.68.200/displayStory.cfm?Story_ID=E1_GRSPVD

நன்றி: தி எகனாமிஸ்ட் (Jul 5, 2001)

இப்போது இலையுதிர்காலம், கூடிய சீக்கிரம் விடிவு ஏற்படுமா?

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…