அஹிம்சாவழியில் சம்மட்டியால் அடிப்பது எப்படி?

27/07/2011

நம் தமிழ் மக்களை இந்தத் தொல்லைத் திருமாவளவன் மீட்பது எப்போது?

வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதையும் மெல்ல மெல்ல சிங்களமயப்படுத்தி கொடுங்கோன்மை செலுத்தி வரும் இராஜபக்சே கும்பலுக்கு அறவழியில் அரசியல்ரீதியாக சம்மட்டி அடிகொடுத்து பாடம் புகட்டியிருக்கிற ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.

அல்லது, நாம் இம்மனிதரின் தொல்லையில் இருந்து மீள்வது எப்போது??

தேவரீர் நீங்கள் தயை செய்து தொல்(லை) திருமாவளவனின் வேலை வெட்டியற்ற அறிக்கையைப்  பார்த்து, முழுதும் படித்துப் புளகாங்கிதம் அடைவீராக! இதில் இவர் அனைத்துலக நாடுகளுக்கும் ஒரு பயங்கர அறைகூவல் விட்டிருக்கிறார்.

ஏன் அகில பிரபஞ்சத்திற்கும் இந்த அரைகுறைக் கூவல் செல்லவேண்டாமென்று நினைக்கிறாரோ தெரியவில்லை!

அனைத்துலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை!

இவர் பகர்கிறார்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் நல்வாழ்த்துக்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர்.

இது மெய்யாலுமே ஒரு நல்ல நகைச்சுவை தான்!

ஆமாம்! இது எப்படி இருக்கிறதென்றால், தொல்(லை) திருமாவளவன் அவர்கள் நல வாழ்த்துக்களைப் பெற்றுத்தான் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடிந்தது அல்லவா? பாவம் சிபிஎம் – அவர்கள் முன்னமே மாவீரர் திருமாவளவன் அவர்களை சாந்தப் படுத்தி ஒன்றிரண்டு ஃப்ளெக்ஸ் தட்டி விளம்பரங்களை கொல்கொத்தாவில் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த கதி வந்திருக்குமா?

ஏன், தென்னமெரிக்க பெருவில், அண்மையில் நடந்த தேர்தல்களில் ஓய்யான்டா ஹூமலா ( Ollanta Humala), பழம் பெருச்சாளி ஃபூஜிமொரியின்  பெண்ணைத் (கைகோ) தோற்கடித்தது கூட, நம் திருமாவளவனின் தயவில் தானே? நம் திருமாவளவன், சே குவேரா போல உடையணிந்து கொண்டு, ஒரு இதழோர நக்கல் நகைப்புடன், கைகோவை ஆதரிப்பது போல அல்லது கொலைவெறித் தனமான வாயோர நுரை தள்ளும் வீராவேசப் பேச்சுடன், டால்டா தடவிக் கூர்மையாக்கப் பட்ட மீசையுடன்  – ஒன்றிரண்டு ஃ ப்ளெக்ஸ் தட்டிகள் வைத்திருந்தால் போதுமே, லிமாவில்… ஹூமலா தோற்றிருப்பாரே!

பாவம் திருமாவளவன் அவர்கள்! நம் தமிழர்கள் அவரின் ஆழத்தையும் வீச்சையும், இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. (நல்ல வேளை!)

2 Responses to “அஹிம்சாவழியில் சம்மட்டியால் அடிப்பது எப்படி?”

  1. sathi62 Says:

    இலங்கைத் தமிழர் போர் எதனால், குழந்தைகள் அனாதைகளய் தவிப்பது யாரால்? சொல்லொணா துன்னப்ங்களை உண்டாக்கிய சுயநலமிகள் யார்? சுய நலக் கொடூரக் கும்பலின் அறியாமை…

  2. ரவி Says:

    இந்த குருமாவலவன் தொல்லை தாங்களா!!சம்மட்டியடி உங்க கட்டுரை!!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s