சமச்சீர் கல்வியும், குடமுருட்டி குண்டர் கருணாநிதியும்…

29/07/2011

‘விடுதலை’யில், கருணாநிதி அவர்கள் எழுதிய உடனிறப்புகளுக்கான கடிதம் படித்தேன்:

மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் தவித்துப் போயிருக்கிறார்கள் அனைத்துக்கட்சித் தலைவர்களும் – கல்வியாளர்களும் சொல்லி இன்னமும் பிடிவாதமா?

… பல்லாண்டுகளுக்கு முன்பு ‘தேவன்’ என்பவர் ‘துப்பறியும் சாம்பு’ என்று தொடர்கதைகளை(!) எழுதிக்(!!) கொண்டிருந்தார். அதில் அடிக்கடி (என் நினைவில் இருந்து எழுதுகிறேன்) வரும் வசனம் “எனக்கு சிப்பு சிப்பா வர்றது!” இதனை அந்தச் சாம்புவின் மகன், ஒரு சிறுவன், சொல்வதாக ஞாபகம்.

ஆம், இந்த குடமுருட்டி குண்டர் எழுதியதைப் படித்ததும் எனக்கும் சிப்பு சிப்பாகத்தான் வருகிறது. கூடவே, பொய்மைகளை அடுக்குமொழியில், உணர்ச்சிகரமாக எழுதும் இந்தப் பொறுக்கித் தமிழ்நடையைப் பார்த்து, சலித்து, ஒரே வெறுப்பும்…

கருணாநிதிக்கும் கல்விக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏன், இவருக்கும் மானுடத்துக்கும் கூட ஒரு தொடர்பும் இல்லை.

கேவலமான பொறுக்கித்தனத்திற்கும், வன்புணர்ச்சிகளுக்கும், பட்டப் பகற்கொள்ளைகளுக்கும், கொடுமைக் கொலைகளுக்கும், அடிப்படை அயோக்கியத்தனங்களுக்கும், செய்நன்றி மறத்தல்களுக்கும், கயமைகளுக்கும், வாய்ப்பேச்சு வீரத்துக்கும் குப்பைத் தமிழுக்கும் (தமிழ் மொழியில் பலவகை உண்டு – இதில் கருணாநிதிகளின் நடை இது), இன்னபிற உதிரித் தனங்களுக்கும்  –  கருணாநிதிக்கும் தொடர்பு உண்டா?

உண்டு! உண்டு!!

சொல்லப் போனால், காமராஜ், ராஜாஜி, பக்தவத்சலம் (MGR-ஐக் கூட நாம் சேர்த்துக் கொள்ளலாம்!) போன்றோருக்குப் பின், நாம், கல்வி மேல் உண்மையான அக்கறை கொண்ட, தமிழகத் தலைவர்கள் யார் என்றால், நாம் அவர்களை இனம் காண்பது அரிது. (ஆனாலும் பொதுவுடைமை இயக்கங்களிலும், ‘தமிழ் தேசீய’ இயக்கங்களிலும், ‘இந்திய தேசீய’ இயக்கங்களிலும்,  RSS போன்ற அணிகளிலும் ஏராளமானோர், அறிவுடையோர் உள்ளனர். இவர்கள் செயல் வீரர்களும் கூட. ஆனால், தமிழகம் அளாவிய பாதிப்புகளை இவர்களால் ஏற்படுத்த முடியுமா – இவர்கள்  முனைப்பால், உழைப்பால், உதிரிப் போக்குகள் உதிர்ந்து, நேர்மைப் போக்குகள் வெற்றிகொள்ளக் கூடுமா என்பது ஒரு கேள்விக் குறி,)

நம் தமிழக அரசியலில், ஏனோ தானோ என்று கல்வியை ‘அறிந்து’ கொண்டவர்கள், சுயநலமிகள், விளம்பரக்காரர்கள், ‘கல்வி’ வியாபாரிகள், அரைகுறைகள், இரண்டும்கெட்டான்கள் என்று நாம் இனம் காணக் கூடியவர்கள் – மருத்துவர் ‘PMK’ ராமதாசு, வீரமணி, திருமாவளவன் போன்றவர்கள். இவர்களைக் கூட நாம் புரிந்து கொள்ள முடியும். மன்னிக்கக் கூட முடியும்.

கல்வியைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டவர்கள், இப்போதைக்கு ஓரளவு மக்களுக்காகச் சிந்திப்பவர்கள் என்று நாம் கூற முடிவது வை கோபால்சாமி, ஜெயலலிதா போன்றவர்களை. ஆனால் இவர்கள் பார்வைகள் வேறு, உணர்ச்சிகள் வேறு, நடைமுறையில் எண்ணங்களைச் செயல்வடிவமாக்கல்  திறமைகளும், முனைப்புகளும் வேறு. மேலும் இவர்கள், கருணாநிதிகள் என்ற தமிழகம் அளாவிய – தமிழக, இந்திய, அயோக்கிய, மானுடப் பதர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்கள். ஆக, இவர்களுடைய கல்வி குறித்த அக்கறை, மேற்சொல்லப் பட்ட பதர்களால் சுற்றி வளைக்கப் பட்டு நீர்க்கடிக்கப் படுகிறது. இது அறிந்து கொள்ளப் படக் கூடியதே! (விஜயகாந்த் அவர்கள் எப்படி, கல்வி பற்றிய அவர் எண்ணப் போக்குகள் என்ன என்பவை எனக்குப் புரியவில்லை, நான் இன்னமும் முயற்சிக்க வேண்டும் )

ஆனால், கல்வி மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள, மக்களை முட்டாள்களாக்கும் பொறுக்கித்தலைவர்களை (அதாவது, திருவாளர் கருணாநிதி போன்றவர்கள்) நாம் இனம் கண்டுகொண்டு, அருவருத்து ஒதுக்குவது மிக முக்கியமானது.

=-=-=-=-=

கல்வி என்றால் என்ன? சமச்சீர் என்றால் என்ன? சமச்சீர் கல்வி உதவிகரமானதா? கருணாநிதி ஆரம்பித்ததா இந்தச் சமச்சீர்? கருணாநிதியும் கல்வியும் ‘க’ என்று ஆரம்பிப்பதைத் தவிர என்ன இவைகளுக்குத் தொடர்பு? ஏன் இவ்வளவு நாட்கள், இந்தச் சமச்சீர் விவகாரத்திற்கு? 1967-ல் ஆரம்பித்திருக்கலாமே? கல்வி என்றால் புத்தகம் தானா? மாணவன் என்பது யார்? ஆசிரியர் யார்? வாழ்க்கைக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்? கல்வியின் ஊற்றுக்கண்கள் யாவை? கல்வியின் அங்கங்கள் யாவை? கல்வி தொடர்பான முரணியக்கங்களை நாம் எப்படி புரிந்து கொள்வது. கல்வி சார்ந்தது – இந்திய அளவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? உலக அளவில் கல்வி பற்றி எத்தகைய எண்ணப் போக்குகள், கோட்பாடுகள் இருக்கின்றன?  கல்வியின் அரசியல் என்ன? மிஷனரிகளுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்? அரசுக்கும் கல்விக்கும்? சமயங்களுக்கும் கல்விக்கும்? இவை போன்ற  பலப்பல கேள்விகளை நாம் ஆராய வேண்டும், பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்…

தவிர, அரசியல்வாதிகள், பெற்றோர்கள், சிறார்கள், ஆசிரியர்கள், நேர்மையாகப் பள்ளி நடத்துபவர்கள், பள்ளித்’தொழில்’ முனைவோர்  என்ன நினைக்கிறார்கள்? இவற்றின், இவர் எண்ணப் போக்குகளின், ஊற்றுக்கண்கள் என்ன – போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். கருணாநிதிகளுக்கும், பொறுக்கி ஊடகங்களுக்கும் – அவர்கள் சமைக்கும் ஏகபோக எண்ணப்(வயிற்றுப்) போக்குகளுக்கும் எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதையும்…

ஆம். இதில் புல்லரிப்புகளுக்கும், வாயோர நுரை தள்ளல்களுக்கும் இடம் இல்லை.

பார்ப்போம்…

One Response to “சமச்சீர் கல்வியும், குடமுருட்டி குண்டர் கருணாநிதியும்…”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s