மக்களும் ஊடகங்களும் தமிழகத்தில் கருணாநிதி அவர்கள் கட்டிய புசக குட்டிச்சுவரைப் பற்றியும் (புதிய சட்டசபை கட்டிடத்தைத் தான் சொல்கிறேன்!), அதனை ஜெயலலிதா அவர்கள் வேண்டாமென்று ஒதுக்கி விட்டதையும், அதற்காக ஒப்பாரி வைத்து அழுத ‘விடாத தலை’ வீரமணி முதல் தொல்லைத் திருமாவளவன் வழியாக மருத்துவர் ராமதாஸ் வரை – அனைவரும் சலித்துப் போய் வேறு இடங்களுக்குத் தாவி விட்டதையும் அறிவோம்.

ஸ்டாலின், அழகிரி சகோதரர்களுக்கு இறுகிய முகத்துடன் சிறை சிறையாக அலைந்து தங்கள் சகோதரிக்கும் , அடிவருடிப் பொறுக்கிகளுக்கும் ஆறுதல் கூறவே நேரம் போதவில்லை.  இந்த அழகில், இவர்கள் மேலேயே நிறைய விவகாரங்கள், கைது வரை போக மிகுந்த சாத்தியக் கூறுகள் கிளறப் பட்டு வருகின்றன. (இவர்கள் செய்த வன்புணர்ச்சி-கொலை-கொள்ளைகளில் – ஒரு 5 சதவிகிதம் தொடர்பான துப்புகள், சாட்சியங்கள் சரியாக கவனிக்கப் பட்டாலே, இந்தச் சகோதரர்களுக்கு பலப்பல ஆயுள் தண்டனைகள் நிச்சயம்)

இறும்பூதடையுங்கள்! !  கனிமொழிக்கு அவர் சிறையறையில், அவரால் இந்திய (அல்லது, திராவிட) பாணி மலம் கழிப்பானை உபயோகிக்க அவர்தம் சுயமரியாதை இடம் தரவில்லை!  உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்பதெல்லாம் போய்,  அவர்தம் பின்புறத்துக்குக் கூட சாதாரண கழிப்பான் ஒப்பவில்லை. ஆக, மேல்நாட்டு பாணி கழிப்பான் கிடைத்துவிட்டது. ஆஹா!  ஆகவே, அவர் மனமகிழ்ந்து கவிதைகளும், கட்டுரைகளும் என்று அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார். (எச்சரிக்கை அல்லது பொச்சரிக்கை: இவைகளைப் படிப்பதை விடுங்கள், இவை நம் கண்ணில் பட்டுவிட்டாலே, நமக்கும் இரத்த பேதி வரலாம்)

கலாநிதி-தயாநிதி கும்பல், கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு விகிதத்தைத் திரும்பக் கொடுத்து (இதற்குப் பெயர்: ‘Out of Court Settlement’) தங்கள் மேல் போடப்பட்ட சில வழக்குகளை திரும்ப வாங்கச் செய்து, தங்கள் வேசைத் தொழிலை (சன் டிவி) தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நக்கீரன் போன்ற அடிப்படையில் அயோக்கியத்தனமான ஈனத்தொழில்களும் நக்குவதற்கு வேறு இடங்கள், அடுத்தவரின் படுக்கையறை ரகசியங்கள், பரபரப்புகள் தேடிச் சென்று கொண்டிருக்கின்றன.

கருணாநிதி அவர்களோ நாளொன்றுக்கு இரண்டொரு ஒப்பாரி மூலம், உடனிறப்புகளுக்கு சீத பேதி வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.

திருமாவளவளவளவனுக்கு ஐம்பது வயதாகி விட்டதாம்! ஆகத்து 17-ஆம் தேதி (ஆகஸ்ட் மாதம் பிறக்காமல் ஆகத்து மாதத்தில் பிறந்ததால் தான், இவர் ஆ கத்து கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறாரோ என்னவோ!!)  ‘தமிழர் எழுச்சி நாள்’ என்று ஒரே ப்ளெக்ஸ் அட்டைகள். ஆக: ஆகஸ்ட் 16 – தமிழர் குறட்டை நாள்? குமட்டிக் கொண்டு வருகிறது.  கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு சுவர் அ-சித்திரம் இவரை ‘தமிழரை உசுப்பும் ஆயுதமே’ என்கிறது. உண்மைதான் – இம்மனிதர், தமிழரை உசுப்பேற்றும் காரியத்தைத் தான் கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்…  வேறு வேலை இல்லாத காரணத்தால் மறுபடியும் மருத்துவர் ராமதாசுடன் குலாவல்.

இம்மாமனிதர் என்ன தான் செய்வார்? சேகுவேரா, சிறுத்தை, அம்பேத்கர் படங்களுடன் தன் ஒட்டு-காஜ் படம் போட்டுக்கொண்டு  புளகாங்கிதம் அடைந்தாயிற்று. டால்டா தடவி மீசையை கூர்மையாக்கிக் கொண்டாயிற்று. ராஜபக்ஷவைப் பார்த்து அசடு வழிந்து பின் இந்திய வந்து வேண்டிய அளவு எச்சில்-தெறிக்க வீரமாகப் பேசியாயிற்று. இலங்கை பிரச்சினை தீர்த்தாயிற்று. பிரபாகரனை சாவிலிருந்து (அவர் தான் இறக்கவே இல்லையே!) மீட்டாயிற்று. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு படு பயங்கர சவால் பல விட்டாகிவிட்டது.  தமிழர்களை எழுச்சி செய்தாகி விட்டது. அராஜக ஆட்சியுடன் கூட்டு வைத்து அதனையும் ஒழித்தாகி விட்டது. வக்காளொளி, தமிழொளி, தாயோளி போன்ற தூய தமிழ்ப் பட்டங்களைப் பொறுக்கிகளுக்குக் கொடுத்தாகி விட்டது.  வேறு என்ன தான் இவர் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

மருத்துவர் ராமதாஸ் மறுபடியும் திராவிட கட்சிகளுடன் கூட்டே இல்லை என்கிறார். 2016 -ல் பாமக ஆட்சிதான் என்கிறார். தீக் குளிக்கத் தயார் என்கிறார். அதே நாள் அவர் மகன் அன்புமணி, “நாங்கள் போயஸ் தோட்டத்திற்கோ, கோபாலபுரத்துக்கோ இனிப் போக மாட்டோம்; கூட்டணி வேண்டுமானால் அவர்கள் தாம் தைலாபுரம் வரவேண்டும்” என்கிறார். மொத்தத்தில் தந்தைக்கும் மகனுக்கும் நடுவில் கூட ஒத்த கருத்து இல்லாமல், திக்குத் தெரியாதா காட்டில் இருக்கிறது பாமக.

எது எப்படியோ, எங்கள் தலித்களும், வன்னியரும் அடிதடிகளில் ஈடுபடாமல் இந்த இரண்டு அட்டை ஜந்துக்களும் விளம்பர  அட்டைகள்  வைத்துக் கொண்டிருந்து வட தமிழகப் பகுதிகளில் சாந்தி நிலவச் செய்தால் அது சரிதான்…

நம் தமிழக மக்களும் தங்கள் பங்கிற்கு  பங்குச் சந்தை சரிவு முதல் சமச்சீர் கல்விச் சரிவு வழியாக ‘அன்னா’ ஹசாரே ஈறாக பல செய்திகளுக்கு வால் பிடிக்கச் சென்று விட்டனர் – நமக்கு என்ன, அடுத்த பரபரப்பு எவ்விடமோ அவ்விடம் நாம்!

அடுத்த செய்தி எங்கே?

சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சி – பற்றிய பதிவு தொடரும்…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

 

என்ன விரக்தியோ, பாவம் நம் விடுதலைவர் வீரமணியார் அவர்களுக்கு…

…திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமது பாராட்டு உரையில் கூறியதாவது: வாழ்க்கையில் கடைசி வரை வருவது, பணம், பதவி கிடையாது. சந்தோஷம் மட்டும்தான்.

வீரமணியானந்தா அவர்தம் மணியம்மை-பெரியார் தொடர்பான அனைத்து வணிக முயற்சிகளையும் விட்டு விடப் போகிறார் என நினைக்கிறேன்… ஆம்!  கூடு விட்டிங்கு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்…

… பெரியார் உறுப்புக்கு வயது 95 இருக்கும்போது, உணர்வால் 25 வயதாகவே தெரிந்தார்.

என்ன விரசம்! அய்யோ! இவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லையே…

கடவுள் இவரிடமிருந்து தமிழையும், முக்கியமாக, ஈவேரா-வையும் காப்பாற்றினால் கொஞ்சம் நமக்கு நிம்மதியாக இருக்கும்…

[ ஈ வெ ராமசாமி, யானாகிய ஒத்திசைவு ராமசாமியிடம் சொல்வார்: மடையா!  என் சிஷ்ய கேடியைப் பற்றிப் பேச நீ யார்? நீ என்ன ஸ்ரீலஸ்ரீ பெரியார் மடத்தைச் சார்ந்தவனா? என்ன உயிரியல் ரீதியான புளகாங்கிதம் அவர் தம் பகர்வின் பின் உள்ளது என்பதை யோசித்துப் பார்த்தாயா? ஆறியராக  இல்லா விட்டாலும் அவர்தம் சூடான சமற்கிருத அறிவை – நீ அறிய வில்லை. நீ வெங்காயம் அரிய தான் லாயக்கு! நீ ஆரிய மாயையைக் கண்டாயா அல்லது ஆறாத மாயையைக் கண்டாயா… அற்பக் காட்டுமிராண்டித் தமிழ்ப் பதரே!!

நான்: சுவாமி ஈவேரா அவர்களே! என் தவறை நான் உணர்ந்தேன். என்னே சுவாமி வீரமணியானந்தா அவர்களின் அறிவு கூர்மை! என்னே அவரின், சமஸ்கிருதத்தை வெறுத்தாலும் அதனை உபயோகிக்கும் பாங்கு. எனக்கு சந்தோஷமாகவே இருக்கிறது.  என்னை தேவரீர் நீங்கள் தயை கூர்ந்து மன்னிக்க… ]

மேலும் இறும்பூதடைய –  மனிதனுக்கு கடைசிவரை வருவது பணம்-பதவி அல்ல சந்தோசம் மட்டுமே! 

மனிதனுக்கு கடைசிவரை வருவது பணம்-பதவி அல்ல சந்தோசம் மட்டுமே!

‘சமச்சீர்’ கல்வி, ஜாதி… இடுகையின்  தொடர்ச்சி.

பொதுப் படையாகப் பேசாமல், இந்த திமுக வகையறா கும்பல் செய்யும், செய்த கலாச்சார வன்புணர்ச்சிகளுக்கு ஏதாவதொரு எடுத்துக்காட்டு கொடுக்க முடியுமா?

நல்ல வேளை – நீங்கள் ஒன்று என்று கேட்டீர்கள் – ஏனெனில் இந்த உதிரிகள் தங்கள் வாழ் நாளில் செய்தது,,செய்வது வன்புணர்ச்சிகள் மட்டும் தானே…

பாருங்கள், நம் திருவள்ளுவருக்கே என்ன செய்திருக்கிறார்கள் இந்தப் பாவிகள்!

முதலில் ஒரு குப்பைத் தனமான திருக்குறள்  விளக்கம் – இது நம் சிறுமைக்குரிய தலைவர் கருணாநிதி அவர்கள் எழுதியது – சரி போகட்டும், மன்னித்து விடலாம்.

பின்னர்  கோடம்பாக்கத்தில் அழுக்கான திருவள்ளுவர் கோட்டம் அமைத்த இந்த திமுக கோட்டான்கள், அவர் வீச்சை, அற உணர்ச்சியை, மனிதத் தன்மையை அடக்கி, அதாவது வள்ளுவர் கொட்டத்தை அடக்கியதைக் கூட மன்னித்து விடலாம்.

அண்ணா நாமம் வாழ்க என்று வலக்கையாலும் – மேலும் அதனை மூன்று விரல்களால் நமக்குப் போடும் பண்பாலும் , இடக்கையால் சில ஓலைச் சுவடிகளை ஏந்தி (அவை சர்க்காரியா அறிக்கைகளோ என்னவோ) வெட்கி நெளியும் , பரிதாபத்துக்குரிய அய்யோ திருவள்ளுவர் நிலை…

ஆனால், காமத்துப் பாலை நக்கி, அறத்துப் பாலை அறுத்து, பொருட்பாலைத் அவர்தம் தொந்தி நிறையக்  குடித்து  வள்ளுவரை அவமதித்தது  போதாது என்று இந்த உதிரிகள் – கன்யாகுமரியில் குண்டி நெளிந்த ஓர் திருவள்ளுவரையே சமைத்து விட்டனர்!  அவரைக் கல்லாக்கி விட்டனர். (ஒருவேளை இப்பொறுக்கிகளால் தம் சிலை வைக்கப் பட்டதால்தான், வள்ளுவரே நெளிகிறாரோ என்னவோ!)

அழகான கடற்கரையில், ஆழிகள் சந்திக்குமிடத்தில், ஆபாசமாக, அருவருப்புத் தரும், அழகுணர்ச்சி அற்ற ஆணுறுப்பு வெடித்தெழுந்தது போல உள்ள இச்சிலையைக் காணச் சகிக்கவில்லை.

கண்கள் கூடச் சரியாக இல்லை – ஏதோ கிரேக்க சிலை பார்ப்பது போல் ஒளியில்லாமல்,  வெறித்துப் பார்க்கும் பார்வை.

எங்கே போயிற்று இவர் கண்களில் காட்டப் பட வேண்டிய கருணை? ஏன் வந்தது இவருக்குப் போடப்பட்ட மேல்துணி  – ஒரு புடவைத் தலைப்புப் போல்? ஒரு தோளில் அது  போடப் பட்டால் அது பின் பக்கம் இறங்க வேண்டாமா? இல்லை இன்னொரு தோளின் வழியாக அது முன் பக்கம்  கீழிறங்க வேண்டாமா? எனன  அவசியம் வள்ளுவருக்கு தாவணி போடுவதற்கு?

நல்லவேளை, –  ஒரு பேருந்து   நடத்துனர் போன்று கையில் பயணச்சீட்டுகளும், விரலிடுக்கில் ரூபாய் நோட்டுகளும் கொடுத்து அவரை ஓகே ரைய் ரைய்’ என்று சொல்ல வைக்கவில்லை, அவ்வளவுதான்!

சிலையின் முன் புறம் அழகுணர்ச்சி அசிங்கமாக இருக்கிறது, சரி பின்புறம் பார்க்கலாம், அங்காவது கணபதி அவர்கள் அவர்கள் சிற்ப வேலையைக் காட்டியிருப்பார் என்றால், அங்கும் அவர் புறமுதுகிட்டு விட்டார். அவர் என்ன செய்வார் பாவம். நமக்குத் தான் தெரியுமே, வள்ளுவர் சிலை திட்டம், வடிவம், உருவாக்கம், அனைத்துக்கும் பின்னால் இருந்தது, நம் முத்தமிழ் வித்த கருணாநிதியார் அல்லவா! எப்படி நாம் எந்தவொரு விதத்திலும் தரம் எதிர்பார்கக முடியும்?

… சரி, நாம் பின்புறம் சுற்றிப் போய்ப் பார்த்தால், சீராக இல்லாமல், அடுக்கி வைத்த பாறாங்கற்கள், எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் நம்மைப் பார்த்துப் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன… மேலும் முன் பக்கத்தில் இருந்து பார்த்த போது இருந்தமாதிரி இருந்த  குண்டி கூட இல்லை. வெறும் கற்கள் தான்!

இதற்கு மேல் சோகம்: இவ்வளவு உயரமாக (!) சிலை இருப்பதினால், அதனைப் பராமரிப்பு செய்வது கடினமாக இருப்பது போலும். கடற்பறவைகள் புகுந்து விளையாடி எச்சமிட்டு, வள்ளுவரை அவமானப் படுத்துவதில், கருணாநிதி போன்ற உதிரிகளுக்கு உதவி செய்கின்றன…

எங்கே போயிற்று இம்மாதிரி சிலைகளுக்கு இருக்க வேண்டிய இயல்பான கம்பீரம்?  நம் பண்பாட்டை பிரகடனப் படுத்துபவதா இது? நமது கலை உணர்ச்சியின் உச்சங்களைக் காண்பிப்பதா? ஏதாவது புது மாதிரி சிற்பக் கலை முயற்சிக்கு வித்தாவதா? அல்லது நம் தொழில் நுட்ப  உச்சிகளைக் கோடி காண்பிப்பதா  இது? அல்லது பறவைகள் அடாது விடாது எச்சமிட ஏதுவாக இருப்பதால் இது எச்சக் கலையா?

இது சிற்பக் கலையா அல்லது அற்பர்களால் அற்பர்களுக்கு அளிக்கப் பட்ட அற்பக் கலையா?

நான். அண்மையில் குமரி முனைக்கு எம்பள்ளிச் சிறார்களைக் கூட்டிக் கொண்டு போனபோது, மிகுந்த வருத்தத்தினாலும், பதற்றத்தினாலும், முக்கியமாகக் கோபத்தினாலும், அவர்களை திருவள்ளுவர் சிலை  அமைந்த பாறைக்கு இட்டுச் செல்லவில்லை. குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் அழகுணர்ச்சியால், நேர்மையால் – அவர்கள் புரிந்து கொண்டார்கள், சொன்னார்கள் – நீங்கள் எங்களுக்கு, அசிங்கமாக இருக்கும் ஒரு சிலையை கிட்டே கொண்டு காண்பிக்க வேண்டாம் என்றுதானே எங்களை அங்கு அழைத்துச் செல்லவில்லை?  (பின்பு நாங்கள் வள்ளுவர் பற்றியும், குறள் பற்றியும், அப்போஸ்தலரான புனித தாமஸ் அவருடன் தொடர்பில் இருந்ததாக உள்ள கட்டுக் கதைகளையும் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருந்தோம் என்பது வேறு விஷயம்…)

இந்தக் குப்பை வடிவத்துக்கு, வள்ளுவருக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு, நம் தமிழகத்துக்கு போட்ட நாமத்துக்கு, பல கோடி ரூபாய் தண்டம். எல்லாம் நம் வரிப் பணம்…

இதைத் தவிர, கன்யாகுமரிமுனைக்குச் செல்பவர்களுக்கு, திடுக்கிடும் திகைப்பும், இனம் புரியாத பீதியும், ஓக்காள வாந்தியும், ஒரு ஊக்கத் தொகை, ஒரு போனஸ்!!

இப்போது சொல்லுங்கள் – இது ஒரு மாபாதகமான செயல் இல்லையா? நம் கலாச்சாரத்தையே வன்புணர்ச்சி செய்வது போன்றதில்லையா இது?

(அய்யன் திருவள்ளுவன் சிலை சமைத்த கணபதி ஸ்தபதி அவர்கள் என்னை மிகவும் மன்னிக்க வேண்டும். அவர் அம்பு தான், ஒப்புக் கொள்கிறேன். எனக்குப் பிணக்கு அய்யய்யோன் அயோக்கியோன் கருணாநிதி மேல் தான்)

— சமச்சீர் கல்வி பதிவுகள் தொடரும்…

->>>> ‘கல்வி’ பற்றி…

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இன்னமும் மக்கள் குரலுக்கு மதிப்பிருக்கும் நாடு. முடிந்தவரையில் வன்முறையில் ஆழும் எண்ணப் போக்குகளின் வீச்சு குறைவு செய்யப் பட்டு, சமூக சமரசத்துக்கு இயல்பாகவே முயற்சி செய்யும் நாடு. உலகத்தின் எந்த நாட்டையும் விட சுதந்திரங்கள் மிக்க ஒரு நாடு – போராட்டக் காரர்கள், கோழைவாதிகள் (அதாவது ‘தீவிர’ வாதிகள் என்று தவறாக  அழைக்கப் படுபவர்கள்), வன்முறையாளர்கள் இதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றாலும்…

ஆனால், இந்த சுதந்திரங்கள்  வெகு விமரிசையாக நம் அனைவராலும் வன்புணர்ச்சி செய்யப் படுகின்றன.

இங்கு யார் வேண்டுமானாலும் (நான் உட்பட) தங்கள் பேச்சினை உரக்கப் பேசலாம். தங்களுடைய பார்வையே சரி என்று வாதாடலாம். கணினி முன் அமர்ந்த வெட்டி அரட்டை குமாஸ்தாவானாலும், கிணற்றுத் தவளையானாலும், ஆழ்ந்த/விரிந்த படிப்பு இல்லாவிட்டாலும்,  எவ்விதமான அனுபவமோ, ஈடுபாடோ இல்லாவிட்டாலும், – – உலகத்தின் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் முடிவுகளை, ஐயம் திரிபு பற்றிய சுய சந்தேகங்கள் – போன்ற குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கும் எண்ணப் போக்குகளைத்  தவிர்த்து , ஆனந்தமாக வாய் வலிக்கும் வரை பேத்தலாம் – அல்லது கை விரல்கள் வலிக்கும் வரை எண்ணவயிற்றுப் போக்குகளைப் பதிவு செய்யலாம், இணையத் தளங்களில்.

நாம் பிடித்த முயலுக்கு நான்கே கால் என்று அடம் பிடிக்கலாம்! ஏனெனில் நம்மிடம் தான் ‘ஒருக்கால்’ அப்படி இருக்குமா அல்லது இப்படி இருக்குமோ என்கிற சந்தேகங்களே இருப்பதில்லையே, எதைப் பற்றியும்! வெகு விரைவில் உண்மை/இருண்மை போன்ற முடிவுகளுக்கு, ஒரு வித முகாந்திரமுமில்லாமல் வந்து விடுகிறோமே!

நிற்க, எப்படியோ… நாம் ‘சமச்சீர் கல்வி’ என்கிற விஷயத்தை இப்போது பார்க்கலாம்…இதனை நாம் நம் ‘சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சித்’ தலைவர், கருணாநிதி [கட்டாய ஒய்வு] அவர்கள் பாணி – நானே கேள்வி நானே பதில் (நானே படிப்பவனும் கூட!) என்கிற பாணியில் எழுதுகிறேன்…

=-=-=-=

கேள்வி: உங்களுக்கு என்ன தகுதி, ‘சமச்சீர் கல்வி’ பற்றி வள வளவென்று எழுதுவதற்கு?

பதில்: உம்ம்ம். நான் முன்னமே சொன்னது போல, என்னிடம் ஒரு கணிப்பொறி இருக்கிறது. இன்டர்நெட் தொடர்பும் உள்ளது. புரிந்ததோ புரியவில்லையோ, எதைப் பற்றியும் ஒரு அபிப்ராயம் இருக்கிறது. விரல் நுனிகளில் ஒரு அரிப்பு வேறு, ஒரே தொல்லை… ஆக, நான் எழுதுவதற்குக் கேட்பானேன்!

சுருக்கமாகச் சொல்லப் போனால், உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை(!) எனக்கும் உள்ளது.

மேலும் குறிபிட்டுச் சொல்லவேண்டுமானால். கருணாநிதி அவர்கள் போன்ற பொறுக்கி அரசியல் வாதிகளைவிட,  எனக்கு மிக அதிக உரிமை உள்ளது.

கே: நீங்கள் ‘சமச்சீர் கல்வி’  பற்றி எழுதப் போவது கற்பனையான விஷயமா அல்லது உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களின் மீதான உங்கள் எதிர் வினைகளா?

ப: நான் தமிழகத்தில், ஒரு சிறு கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து  வருகிறேன். இது ஒரு தனியார் தொண்டு நிறுவனம் உண்மையாகவே சேவை மனப்பான்மையுடன் நடத்தும் கிராம மக்களுக்கான பள்ளி.  பணம் வசூலிப்பு மிக, மிகக் குறைவு. ஆசஈர்யர்களின் (=ஆசிரியர்கள்)  தரம் ஓரளவு நன்றாகவே உள்ளது. எங்கள் கிராமம் உள்ளடக்கிய பகுதியின் மக்கள் விகிதாசாரத்திற்கேற்ப – எங்கள் பள்ளிச் சிறார்களில் சுமார்  80 சதம் வன்னிய ஜாதியினர்; சுமார் 18 சதம்   ஹரிஜனங்கள். மற்ற ஜாதியினர் இரண்டு சதம்.  அனைத்துக் குழந்தைகளும் மணிகள். 200-க்கு மேல் உள்ள இப்பள்ளிக்  குழந்தைகளில், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் என்னுடைய நேரடித் தொடர்பில் இருப்பது சுமார் 80 குழந்தைகள்.

எங்களுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு இந்த சமச்சீர் கல்வி தேவை இல்லை. ஏனெனில் இதில் சமம் இல்லை. சீர் இல்லை. ஏன், இதில் கல்வியே இல்லை.

எனக்கு மிகவும் நெருக்கமான நேர்மையான, அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கும் இதே எண்ணம் தான். அவர்களின் காரணங்கள் இன்னும் அதிகம்.

இது பற்றி, விரிவாக விவாதிக்கலாம், பின் வரும் பதிவுகளில்…

தேவையில்லாமல் ஏன் ஜாதிகளை இழுக்கிறீர்கள் இங்கு?

எனக்கு, ‘ஜாதி’ என்பது ஒரு கேவலமான, கேட்டவுடன் வெட்கித் தலை குனிய வேண்டிய சமூக அமைப்பு அல்ல.  எவ்வளவோ சமூகவியல் சார்ந்த பரிமாணங்கள் இருக்கின்றன இதற்கு. என்னைப் பொறுத்தவரை, அது ஒரு முறையான, ஒரு பயனுள்ள  சமூகக் கட்டமைப்பே.  உலகில் உள்ள அனைத்துச் சமூக வாழ்க்கைகளிலும் – எறும்புகளில் இருந்து, மனிதன் வரை, இம்மாதிரி கட்டமைப்புகள் உள்ளன.

என்னுடைய ஜாதியைப் பற்றி எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இல்லை. இவ்வளவு நாள் அடக்கி வைத்து விட்டார்களே எம் ஜாதியை, என்கிற வெறுப்பு இல்லை. கற்பிதம் செய்யப் பட்டு, காலம் காலமாகத் தாழ்த்தப் பட்டவன் நான், ஆகவே திருப்பித் தாக்க வேண்டும் என்பது  போன்ற அரிப்புகள் இல்லை.  கற்பிதம் செய்யப் பட்டுக் காலம் காலமாக நான் உயர்ந்த ஜாதி, ஆகவே மற்றவரை ஒதுக்கி வை – என்கிற எண்ணமும் இல்லை. நான் உயர்ந்தவன் மற்றவர் தாழ்ந்தவர் என்கிற அற்ப உணர்வும் இல்லை. என்னுடைய ஜாதியைப் பற்றி எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை.  நான் முழுவதும் நல்லவனும் இல்லை, கடைந்தெடுத்தக் கொடியவனும் இல்லை.  ஆகவே, மேலெழுந்தவாரியாக ஜாதி சார்ந்த பொதுமைப் படுத்துதல்கள், இருமைவாதங்கள் – போன்ற அடிப்படையில் நேர்மையில்லாத எண்ண/வாதப் போக்குகளை நான் வெறுக்கிறேன்.

பிற்காலத்தில், சமூகத் தேவைகளுக்கேற்ப, சுற்றுச் சூழல் மாறுதல்களுக்கேற்ப,  ஜாதி ரீதியான சமூகக் கட்டமைப்பு மாறி, இன்னொன்று வரலாம். ஆனால், அதிலும், சமூக வரிசைக் கிரமங்கள், அமைப்புகள் இருக்கத் தான் செய்யும். .

தீயது என்று நினைத்து, படிப்பிக்கப் பட்டு, இருக்கும் சமூகக் கட்டுமானத்தை உடைத்து, வன்முறைகளில் ஈடுபட்டு, கொலை பல செய்து, கொள்ளைகள் பல புரிந்து சமைக்கப் படும் அ-பரிணாமப் போராட்டங்கள் – நீண்ட கால வெற்றியை எப்போதும் பெற்றதில்லை,  நிலைத்ததும்  இல்லை.. இம்மாதிரிப் போராட்டங்களின் சமரசமில்லாத் தன்மை, பேரழிவுக்கே இட்டுச் சென்றிருக்கிறது, இட்டுச் செல்லும்…

இதற்கு, உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும்  விதி விலக்குகளே இல்லை.

அப்படியென்றால் ஜாதிகளினால் தீமைகள் ஒன்றும் ஏற்படவே இல்லை என்கிறீர்களா?

இல்லை. இதன் தீமைகளும் பல. இவை சரி செய்யப் பட வேண்டியவை தான்.

ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் அல்லது எதன பெயராலும், அநீதிகள் நடப்பது நிச்சயம் தவறு தான். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

ஜாதி என்பது வேறு. ஜாதிப் பற்று என்பது வேறு. ஜாதி  வெறி என்பது வேறு. ஜாதித் துவேஷம் என்பது வேறு. இதில் மூன்றாவது, நான்காவது மனப்பான்மைகள்  அயோக்கியத் தனமானவை என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

தமிழ் பற்றி ஞானக்கூத்தன் அவர்கள் பலகாலம் முன்பு எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது:

எனக்கும் தமிழ் தான் மூச்சு
ஆனால்
பிறர் மேல் அதனை விட மாட்டேன்.

நீதி நெறியில் நின்று பிறர்க்குதவும், நேர்மையர் மேலவர் – கீழவர் மற்றோர். என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. ஆனால், ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்கிற வறட்டு வாதப் போக்கை நான் நிராகரிக்கிறேன்.

உதாரணமாக நம் பசிக்கு, பசிப்பிணிக்கு – காரணம் நம் வயிறு தான், அல்லது நம் எண் சாண் உடம்புதான் என்று தெரிய வருவதால், நாம் வயிற்றையோ அல்லது நம் உடலையோவா ஒழிக்க வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை நாம் சமுதாயத்தின், சமூகத்தின் ஊற்றுக் கண்களைப்  பற்றி சிந்திக்காமல், அவற்றினால்  ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி மட்டும் எண்ணினோமானால், அதன் பயன் ஏதும் இல்லை. அந்த விளைவுகளை வன்முறைப் போராட்டங்கள் மூலமோ, மேடைப் பேச்சுகள் மூலமோ அல்லது புல்லரிப்புகள் மூலமோ களைந்து விட முடியாது. அவை வாய்ப் பேச்சு வீரத்துக்கு மட்டுமே உதவும்.

ஆனால், ஜாதீய நோக்கு சரியா?

இந்தக் கேள்வி என்னைப் பொறுத்தவரை சரியில்லை.

நீங்கள் ‘ஜாதீய நோக்கு’ என்று ஒரு விதமான ஆயாசத்துடன்  சொல்லும் போதே – மெக்காலே (Thomas Babington Macaulay) எண்ணியது பலித்து விட்டது என்பது வெள்ளிடை மலை. இவர் போன்றவர்கள்  1700-1800-களில் எழுதிய, – அக்காலத்து எண்ணங்களை, திட்டங்களைப் பிரதிபலித்த, பிரித்தாளும் சூழ்ச்சியை உட்கொண்டிருந்த – ஆவணங்கள் (+ அவற்றின் அடிப்படையிலான  முயற்சிகள்)  இந்த மனப்பான்மையை உருவாக்குவதற்குத்தான்   முயன்றன. குறிப்பிடத்தக்க அளவு மாவெற்றியையும் பெற்றிருக்கின்றன. இவர்கள் அக்கால காலனி ஆதிக்கவாதிகளைப் போல – தாங்கள் ஆதிக்கம் செய்த இடங்களில் இருந்த அப்பிரதேச மனிதர்களை, சமூகங்களைச்  சிறுமைப் படுத்தினார்கள். மேலும் அவர்களின் கடந்த காலம் பற்றியும், தற்கால இருப்பைப் பற்றியும் மகத்தான  தாழ்மை உணர்ச்சி கொள்ள வைத்தார்கள்.

இப்படி நாம் காலம் காலமாகப்  ‘புகட்டப்’ பட்டு உள்ளதால், நாம் இந்திய ஜாதிகளைப் பற்றி கேவலமாகத்தான் எண்ணுகிறோம். அப்படி எண்ணாவிட்டாலும் கூட, வெளியே ஒரு “ஜாதி சமுதாயத்தை வெறுப்பவன்” என்று காட்டிக் கொள்ள படாத பாடு படுகிறோம்.

நாம் ‘சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரி’ என்று வெளியே காட்டிக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம்! ஆனால், நாம் தான் அறிவாளி, நாம் தான் புரட்சிக் காரர்கள் – மற்றவர் எல்லோரும் முட்டாள்கள், புரட்சிக்கு எதிரிகள் என்ற எண்ண/செயல் பூர்வமான ஏற்றத் தாழ்வு நமக்கு மிகவும் பிடிக்கும்.

கடந்த காலங்களில், சமுதாயப் புரட்சி ரஷ்யாவில், சீனாவில்  இருந்து கப்பல் மூலம், ரேடியோ மூலம் அல்லது புத்தகங்கள்  வழியாகத்தான்  தான் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்பொது இணையம் இருக்கிறதே! புரட்சித் தீ, சமூக நீதி (கவனிக்கவும்: ‘சுமுக நீதி’ இல்லை!) பரவக் கேட்பானேன். .

இந்த வாயோர நுரை தள்ளல்களில் இருந்து விலகி, – நம் வரலாறுகளைப், பாரம்பரியங்களைப் பற்றிக் கொஞ்சம் படித்து, பல நோக்குகளையும் அறிந்து தெளிந்து, நிறைய சிந்தித்து , அதற்கேற்ப நவ நிர்மாணச் செயல்கள் புரிந்து வாழ்வது என்பது, மிகவும் கஷ்டமான விஷயம் தான். ஒப்புக் கொள்கிறேன்.

கடன் வாங்கிய அனுபவங்களும், வெட்டிப் பேச்சு வீரம் காட்டுதலும், இடியாப்பச் சிக்கல்களான சமூகப் பிரச்சனைகளுக்கு  துப்பாக்கிமுனை ‘அதிரடி’ விடைகளும் – ஏன் இவற்றுக்கெல்லாம் போவானேன் – ஆற அமரக் கணினி முன் அமர்ந்து, வினவு வினவு என்று வினவி உலகில் தாங்களில்லாத அனைத்தையும் ஒழிக்கப் பரணி பாடுதல், தாரை தப்பட்டைகளை ஒலித்தல், சங்க நாதம் செய்தல், வெற்றி வாகைசூடல் – இவை இன்னமும் சுலபமன்றோ??

நிற்க. ஜாதிக்கும் கூட தீதும் நன்றும் பிறர் தர வாரா – இதனைப் பற்றிய எண்ணப் போக்குகளுக்கும் கூட அவை நன்மை பயப்பவையோ அலது தீமை பயப்பவையோ – – நாம் அதனைப் பார்க்கும் பார்வைகளே காரணம். ஒரு சமூக மானுடவியலாலறாக இருந்தால் தான், நாம்  இதனைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பதில்லை – தர்க்க ரீதியாக நமக்கு யோசிக்க முடிந்தாலே அது போதுமானது. .

நீங்கள் கேட்கிறீர்கள் – ஜாதீய நோக்கு சரியா?

இதற்குப் பதில்: சில சமயங்களில் சரி. சில சமயங்களில் சரியில்லை. பல சமயங்களில் இரண்டுமில்லை.

சரி, சரி, ஏன் குழந்தைகள் பற்றிப் பேசும் போது, ஜாதிகள்?? அதற்குப் பதில் சொல்லும்!

ஜாதி என்பது ஒரு வாழ்வியல் முறையாக இருந்தது, மெதுவாக வழக்கொழிந்து போய், அது இப்போது, சில தலைவர்களால்  சலுகைகளுக்கான சமூக அமைப்பாகவும், பேரங்களுக்காகவும், புல்லரிப்பு உணர்ச்சி ஊட்டல்களுக்காகவும். மற்ற ஜாதியினரை நம்பிக்கையற்றுப் பார்த்தல் போன்ற சமூக சமரசத்திற்கு, இணக்கத்துக்கு  எதிரான போக்காகவும்   உபயோகப் படுத்தப் படுகிறது.

மேலும், ஜாதி-அரசியல் தலைவர்கள் – முக்கியமாக, ஒரு பரந்துபட்ட ஒரு சமூக அமைப்பை, அரசியல் ஆதாயங்களுக்காக மட்டும் பயன் படுத்தும் அற்பர்கள், மக்கள் பகைவர்கள் – ஏன், அவர்கள் சார்ந்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஜாதிக்குமே கூட, துரோகிகள், புல்லுருவிகள் இவர்கள் தாம். அனைத்து ஜாதிகளிலும் இந்த அயோக்கியத் தன்மை படைத்தவர்கள் இருக்கின்றனர். எங்கள் குழந்தைகளைப் பொறுத்தவரை, இவர்கள் மருத்துவர் ராமதாசாகவும் , தொல் திருமாவளவனாகவும் இருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, இந்த எண்ணப் போக்குகளில் இருந்தும், தலைமைகளில் இருந்தும் நம் சிறார்களை மீட்டெடுக்க வேண்டுவது அவசியம்.

இதற்கு, நம் தமிழகக் கல்வி முறை ஒன்றும் செய்யப் போவதில்லை. ‘சமச்சீர் கல்வி’ என்று சொல்லப் படும் விசித்திர ஜந்துவும் அப்படியே.

இப்படிப் பட்ட சூழலில் நாம் என்ன செய்யலாம், எனன  செய்கிறோம் என்பதற்கு, அதனை விவரிப்பதற்கு இந்த செய்தி தேவைப் படுகிறது. ஆகவே தான் நான் இந்த ஜாதிவாரியான எண்ணிக்கையைக் கொடுத்திருக்கிறேன். பின்வரும் பதிவுகளில் இவ்விவரம் உபயோகிக்கப் படும்.

நான் ஜாதி வெறியன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் – உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது – இதனை நான் சொல்லவும் வேண்டுமோ?

திருப்தியா?

நீங்கள் இடதுசாரிகள் மேல் காழ்ப்பு உணர்ச்சியும், வெறுப்பும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இவர்களுக்கும் நீங்கள் மரியாதையும், உரிய இடமும் கொடுக்க வேண்டும் அல்லவா?

ஆம். ஆனால், நான் ஒன்றும் வலதுசாரி இடதுசாரி அல்லது ஏன், என்  துணைவியின் சாரி என்றெல்லாம் பார்க்கவில்லை.

பொதுவாக, இடதுசாரி மனப்பான்மை கொண்டவரகள் என்று நாம் அறிபவர்கள், அதிலும் வெகு தீவிரமாக தாம்  இயங்குவதாக நினைக்கும் பலருக்கு – அவ்விதப் பார்வை, மானுடத்தின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கூடுவதாகத் தோன்றுகிறது. இது எனக்கு அபத்தமாகப் படுகிறது. என்னைப் பொறுத்தவரை, மார்க்ஸ் எழுதிய EPM, Grundrisse படித்தவர்கள், மார்க்ஸ்-ஐ  ஒரு கடவுள் அளவுக்கு அல்லது ஒரு மதத் தலைவர் / ஸ்தாபகர் அளவுக்கு உயர்த்த மாட்டார்கள்.

மேலும் மார்க்ஸ் வகுத்த பாதை ஒரு போதும் சமூக சமரசத்துக்கு, அமைதிக்கு, அன்புக்கு இட்டுச்செல்லாது என்பது என் என் எண்ணம். (ஆனால் என் நேரடி அனுபவத்தில், மார்க்ஸ்வாதிகளில் , கம்யுனிஸ்ட்களில்  பல, மிக மதிக்கத் தக்க மனிதர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்; மேலும் RSS போன்ற இயக்கங்களிலும் இப்படியே என நேரடியாக அறிந்திருக்கிறேன்)

நான் வரலாறுகளை அவற்றின் முழுமையுடனும், வீச்சுடனும், அவற்றின் இடம் -தேச -கால- வர்த்தமானங்களுக்குள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். கடந்த காலங்களின் படிப்பினைகள் எனன, அவற்றை நாம் எப்படி தற்காலத்துடன் இணைத்துக் கொள்வது, எப்படி நாம், நம் மேல் சுய மரியாதையும், பிறர் மேல்  நட்பும், இணக்கமும் கொண்டு, பரந்துபட்ட பல்வேறுபட்ட எண்ணப் போக்குகளுக்கு உரிய மரியாதை கொடுத்து,  அனைத்துத் துறைகளிலும்  உன்னதங்களை நோக்கிய எதிர்காலத்தை அடைவது என்று உங்களில் பல பேர் போல சிந்திக்க முனைபவன்.

ஆனால், வருத்தத்துடன் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால்,  எப்போதும் இப்படிப்பட்ட உணர்வுடனும், உந்துதல்களுடனும் இருக்க என்னால் முடிவதில்லை. இருப்பினும் இம்முயற்சிகளைக் கை விடுவதாக இல்லை.

நீங்கள் அரசுப் பள்ளி ஆசிரியரா?

இல்லை. ஆனால், அரசுப் பணியில், மனச் சாட்சியுடன் ஈடுபடும் சில ஆசிரியர்களைத் தெரியும். இவ்வாறு மேலும் பலர் இருக்கலாம். இவர்கள் மூலமும், என்  பள்ளி, பள்ளிக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் மூலமும் – என்னுடைய முன்னனுபவங்கள் மூலமும், நான் அறிந்து கொண்ட விஷயங்களை எழுதுகிறேன்.

அவ்வளவு தானா? நீங்கள் ஆசிரியர் பணி புரிந்தால் உங்களுக்கு எல்லாம் தெரிந்து விடுமா?

உண்மைதான். எல்லாம் எனக்குத் தெரியா என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாம் தமிழ் வழிக் கல்வி பத்தாம் வகுப்பு வரை படித்தவன். அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும், கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய(!) பள்ளிகளிலும்  படித்தவன். கல்விக்கு, பண்பாட்டுக்கு, முக்கியமாகத் தமிழுக்கு எந்த அளவு மிஷனரிகள், தமிழக அரசுகள் (குறிப்பாக திமுக) மதிப்புக் கொடுக்கின்றன என்பதை அறிந்தவன். – நேரடியாக அனுபவித்தவன்.

அது சரி. நீங்கள் பள்ளிப் படிப்பு படித்து பல மாமாங்கங்கள் ஆகி இருக்குமே! இப்போதும் அப்பழைய நோக்குகள் சரியாக இருக்குமா?

உண்மை தான். நான் பள்ளியில் படித்தது 30 ஆண்டுகட்கு முன்பு. ஆனால் அவ்வப்போது பல விதங்களில் பள்ளிகளுடனும், சிறார்களுடனும் தொடர்பில் இருந்திருக்கிறேன், இருக்கிறேன். பல வருடங்களாக  – பள்ளிகளில், குழந்தைகளுடன் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  ஆகையால் மிகுந்த ஆயாசத்துடனும், வருத்தத்துடனும் நான் சொல்வது என்னவென்றால் – தமிழகத்து கல்விச் சுற்றுச் சூழல் மாறவே இல்லை. ஏன், அது மிக மோசமாக ஆகிக் கொண்டிருக்கிறது – அவ்வப்போது யாராவது அதனை தூக்கி, இழுத்து நிறுத்த முயன்றாலும்…

சரி, அதனை விடுங்கள். ஒரு பேச்சுக்கு தமிழகக் கல்விச் சூழல் கவலை கிடமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். யார் காரணம் இதற்கு?

இதற்குக் காரணம் என்று நான் சொல்வது: திருடர் முன்னேற்றக் கழகத்தின்  பொறுக்கித் தலைவர்களைத் தான்.   இவர்கள் கேவலம் பணத் திருடர்களாக  (கர்நாடகத்தின் தெல்கி போல)  இருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால் இவர்கள் திருடியது, திருடுவது, வன்புணர்ச்சி செய்வது  – தமிழகத்தில் ஆதாரசுருதிகளான –  நம் பண்பாட்டை, பாரம்பரியத்தை, நம் ஒப்பில்லா சொத்துக்களை, நம் சுயமரியாதையை, நம் அறவுணர்ச்சியை, நம் தர்மத்தை…

இன்னொரு வகையில், நாமும் காரணம்தான் – இவ்வகைப் பொறுக்கிகளையும் உதிரிகளையும் காலம் காலமாக தேர்ந்தெடுப்பவர்கள் நாம் தானே?

பொதுப் படையாகப் பேசாமல், இந்த திமுக வகையறா கும்பல் செய்யும், செய்த கலாச்சார வன்புணர்ச்சிகளுக்கு ஏதாவதொரு எடுத்துக்காட்டு கொடுக்க முடியுமா?

நல்ல வேளை – நீங்கள் ஒன்று என்று கேட்டீர்கள் – ஏனெனில் இந்த உதிரிகள் தங்கள் வாழ் நாளில் செய்தது,,செய்வது வன்புணர்ச்சிகள் மட்டும் தானே…

மேலும் படிக்க – வள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்…

->>>> ‘கல்வி’ பற்றி…

எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய முனைவர் திரு ராஜகோபாலன் அவர்கள் நடத்தும் பணிமனை – ‘Exploring a sustainable future.’  செப்டெம்பர் நான்காம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது.

ராஜகோபாலன் அவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் (IIT-சென்னை, IIT-கான்பூர்) பணி புரிந்தவர். சுற்றுப் புறச் சூழலியலில், ஆழிகள் மேன்மைப் படுத்தப்படல், சமூகவியல், காந்திய சிந்தனை, வாழ்வியல், ஹோமியோபதி போன்ற பல தளங்களில் பணியாற்றியவர், பணி ஆற்றுபவரும்  கூட. (இவர் போன்றவர்கள் – நல்லோர்,  கடற்கோள் இந்தியாவைத் தாக்கியபோது செய்த பணிகள், பின்னர் ஊக்கமூட்டிய புனருத்தாரண, சீரமைப்புப் பணிகள் – பொதுவாக வெளியே தெரிய வருவதே இல்லை)

இவர் எழுதிய கணிதம், கணினியியல், சுற்றுப்புறச் சூழலியல் பற்றிய புத்தகங்கள், பல இந்தியக் கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக் கழகங்களில் பாடப்புத்தகங்களாக வைக்கப் பட்டுள்ளன. சிறார்களுக்கு எழுதிய வரலாறு பற்றிய புத்தகங்கள் NBT, CBT போன்ற பதிப்பாளர்களால் வெளிக் கொணரப் பட்டுள்ளன.

ராஜகோபாலன் அவர்கள் மெத்தப் படித்தவர். பண்பாளர்.  நல்ல நகைச்சுவை (அக்காலக் கடிகள் முதல் இக்கால மொக்கைகள் ஈறாக)  உணர்ச்சி கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். விஷயம் பல தெரிந்தவர். ஆரவாரமில்லாமல் பணி புரிபவர்.

பணிமனை நடக்குமிடம்:  ஆரோவில் (புதுச்சேரி அருகில்)
நடக்கும் நாட்கள்: செப்டம்பர் 4 முதல் 10 வரை (2011)
கட்டணம்: ரூபாய் ஒன்பதாயிரம் (உணவு, தங்குமிடம் உட்பட)

மேலும் விவரங்களுக்கு, AnnouncementFinal; இந்த ஆவணத்தில் மேலும் விவரங்களும், பங்கேற்பாளர் படிவங்களும் உள்ளன.

நண்பர்களே, நிறைய கதவுகள் திறக்கப் படக் காத்திருக்கின்றன…

முடிந்தால் பங்கு பெறவும். உங்கள் நண்பர்களுக்கும் அறிவிக்கவும் / தெரிவிக்கவும் (மறுபடியும், முடிந்தால்…).

நன்றி .