towards a sustainable future…

03/08/2011

எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய முனைவர் திரு ராஜகோபாலன் அவர்கள் நடத்தும் பணிமனை – ‘Exploring a sustainable future.’  செப்டெம்பர் நான்காம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது.

ராஜகோபாலன் அவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் (IIT-சென்னை, IIT-கான்பூர்) பணி புரிந்தவர். சுற்றுப் புறச் சூழலியலில், ஆழிகள் மேன்மைப் படுத்தப்படல், சமூகவியல், காந்திய சிந்தனை, வாழ்வியல், ஹோமியோபதி போன்ற பல தளங்களில் பணியாற்றியவர், பணி ஆற்றுபவரும்  கூட. (இவர் போன்றவர்கள் – நல்லோர்,  கடற்கோள் இந்தியாவைத் தாக்கியபோது செய்த பணிகள், பின்னர் ஊக்கமூட்டிய புனருத்தாரண, சீரமைப்புப் பணிகள் – பொதுவாக வெளியே தெரிய வருவதே இல்லை)

இவர் எழுதிய கணிதம், கணினியியல், சுற்றுப்புறச் சூழலியல் பற்றிய புத்தகங்கள், பல இந்தியக் கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக் கழகங்களில் பாடப்புத்தகங்களாக வைக்கப் பட்டுள்ளன. சிறார்களுக்கு எழுதிய வரலாறு பற்றிய புத்தகங்கள் NBT, CBT போன்ற பதிப்பாளர்களால் வெளிக் கொணரப் பட்டுள்ளன.

ராஜகோபாலன் அவர்கள் மெத்தப் படித்தவர். பண்பாளர்.  நல்ல நகைச்சுவை (அக்காலக் கடிகள் முதல் இக்கால மொக்கைகள் ஈறாக)  உணர்ச்சி கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். விஷயம் பல தெரிந்தவர். ஆரவாரமில்லாமல் பணி புரிபவர்.

பணிமனை நடக்குமிடம்:  ஆரோவில் (புதுச்சேரி அருகில்)
நடக்கும் நாட்கள்: செப்டம்பர் 4 முதல் 10 வரை (2011)
கட்டணம்: ரூபாய் ஒன்பதாயிரம் (உணவு, தங்குமிடம் உட்பட)

மேலும் விவரங்களுக்கு, AnnouncementFinal; இந்த ஆவணத்தில் மேலும் விவரங்களும், பங்கேற்பாளர் படிவங்களும் உள்ளன.

நண்பர்களே, நிறைய கதவுகள் திறக்கப் படக் காத்திருக்கின்றன…

முடிந்தால் பங்கு பெறவும். உங்கள் நண்பர்களுக்கும் அறிவிக்கவும் / தெரிவிக்கவும் (மறுபடியும், முடிந்தால்…).

நன்றி .

3 Responses to “towards a sustainable future…”

 1. Anonymous Says:

  LOT OF THANKS FOR YOU NFMN.MR RAJAGOPAL I THING THAT HE IS ONE OF THE MEMBER IN SAMACHEER KALVI THITTAM.
  K.RAMESH

 2. sathi62 Says:

  இந்திய தொழில் நுட்பக் கழகங்கள் மட்டும் ‘எதையும் செயக் கூடும்’, என்கிற வகையில் மாணவர்களை உருவாக்கி, பிற்காலத்தில் எல்லாவகையிலும் சமுதாய தொண்டாற்றுபவர்களாக – விளங்குவது எங்ஙனம்? அங்கு கற்பித்தல் கற்றல் செயல் எவ்வாறு நிகழ்கிறது?
  அந்த குறிப்பிட்ட அகில உலகத்தரம் ஏன் நம் ஆரம்ப்பப் பள்ளிகளில் ஏற்படுத்தக்கூடாது?
  நம் நாட்டினெதிர்காலம் ஆரம்ப்பக் கல்வியிலல்லவா உள்ளது.

  தன்னலத்தலைவர்கள் கைகளிலகப்பட்ட ஆரம்பக்கல்வி மீண்டுவரவைப்பது காலத்தின் கட்டாயம்.

  • ramasami Says:

   “sathi62” அவர்களே,

   என்னுடையே எண்ணம் என்னவென்றால் – இந்தியத் தொழில் நுட்பக் கழக மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கலாம் (எந்தச் சிறுவன் அல்லது சிறுமி தான் புத்திசாலியாக இல்லை?) – ஆனால், அதை விட அவர்கள் செய்நேர்த்தி மிக்க system beaters என்பது மேலும் முக்கியமானது.

   எனக்குத் தெரிந்து இவர்களில் மிகச் சிலரே சமூக, சமுதாய உணர்வு கொண்டவரகள். ஆனால், இவர்கள் அடிப்படையில் தங்கள் புத்தி கூர்மையைப் பற்றி அறிந்திருப்பதால், தங்களால் உச்சங்களை எட்டமுடியும் என்கிற அபரிமிதமான தன்னம்பிக்கை இருப்பதால், அவர்களின் வீச்சு அதிகம் – சில சமயம் ஆழமும் அதிகம். ஆகவே இவர்கள் பரவலாக அறியப் படுகிறார்கள்.

   (மேற்கண்ட அனைத்துக்கும் எதிர்-மாதிரிகள் உண்டு)

   இந்தியத் தொழில் நுட்பக் கழகங்கள் இன்னும் எவ்வளவோ செய்யலாம். இவைகள் போக வேண்டிய தூரம் மிக அதிகம்…
   =-=-=-=
   ஆம். ஆரம்பக் கல்வி இரண்டு தலைமுறைகளுக்கு பிரமாதமாகக் கொடுக்க முடியும் என்றால், நம் சமுதாயம் எங்கோ இருக்கும் என என் எண்ணம் – அங்கலாய்ப்பும் கூட!

   எப்படித்தான் இனியொரு விதி செய்வது? சொல்லுங்கள்…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s