திருவள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்!

07/08/2011

‘சமச்சீர்’ கல்வி, ஜாதி… இடுகையின்  தொடர்ச்சி.

பொதுப் படையாகப் பேசாமல், இந்த திமுக வகையறா கும்பல் செய்யும், செய்த கலாச்சார வன்புணர்ச்சிகளுக்கு ஏதாவதொரு எடுத்துக்காட்டு கொடுக்க முடியுமா?

நல்ல வேளை – நீங்கள் ஒன்று என்று கேட்டீர்கள் – ஏனெனில் இந்த உதிரிகள் தங்கள் வாழ் நாளில் செய்தது,,செய்வது வன்புணர்ச்சிகள் மட்டும் தானே…

பாருங்கள், நம் திருவள்ளுவருக்கே என்ன செய்திருக்கிறார்கள் இந்தப் பாவிகள்!

முதலில் ஒரு குப்பைத் தனமான திருக்குறள்  விளக்கம் – இது நம் சிறுமைக்குரிய தலைவர் கருணாநிதி அவர்கள் எழுதியது – சரி போகட்டும், மன்னித்து விடலாம்.

பின்னர்  கோடம்பாக்கத்தில் அழுக்கான திருவள்ளுவர் கோட்டம் அமைத்த இந்த திமுக கோட்டான்கள், அவர் வீச்சை, அற உணர்ச்சியை, மனிதத் தன்மையை அடக்கி, அதாவது வள்ளுவர் கொட்டத்தை அடக்கியதைக் கூட மன்னித்து விடலாம்.

அண்ணா நாமம் வாழ்க என்று வலக்கையாலும் – மேலும் அதனை மூன்று விரல்களால் நமக்குப் போடும் பண்பாலும் , இடக்கையால் சில ஓலைச் சுவடிகளை ஏந்தி (அவை சர்க்காரியா அறிக்கைகளோ என்னவோ) வெட்கி நெளியும் , பரிதாபத்துக்குரிய அய்யோ திருவள்ளுவர் நிலை…

ஆனால், காமத்துப் பாலை நக்கி, அறத்துப் பாலை அறுத்து, பொருட்பாலைத் அவர்தம் தொந்தி நிறையக்  குடித்து  வள்ளுவரை அவமதித்தது  போதாது என்று இந்த உதிரிகள் – கன்யாகுமரியில் குண்டி நெளிந்த ஓர் திருவள்ளுவரையே சமைத்து விட்டனர்!  அவரைக் கல்லாக்கி விட்டனர். (ஒருவேளை இப்பொறுக்கிகளால் தம் சிலை வைக்கப் பட்டதால்தான், வள்ளுவரே நெளிகிறாரோ என்னவோ!)

அழகான கடற்கரையில், ஆழிகள் சந்திக்குமிடத்தில், ஆபாசமாக, அருவருப்புத் தரும், அழகுணர்ச்சி அற்ற ஆணுறுப்பு வெடித்தெழுந்தது போல உள்ள இச்சிலையைக் காணச் சகிக்கவில்லை.

கண்கள் கூடச் சரியாக இல்லை – ஏதோ கிரேக்க சிலை பார்ப்பது போல் ஒளியில்லாமல்,  வெறித்துப் பார்க்கும் பார்வை.

எங்கே போயிற்று இவர் கண்களில் காட்டப் பட வேண்டிய கருணை? ஏன் வந்தது இவருக்குப் போடப்பட்ட மேல்துணி  – ஒரு புடவைத் தலைப்புப் போல்? ஒரு தோளில் அது  போடப் பட்டால் அது பின் பக்கம் இறங்க வேண்டாமா? இல்லை இன்னொரு தோளின் வழியாக அது முன் பக்கம்  கீழிறங்க வேண்டாமா? எனன  அவசியம் வள்ளுவருக்கு தாவணி போடுவதற்கு?

நல்லவேளை, –  ஒரு பேருந்து   நடத்துனர் போன்று கையில் பயணச்சீட்டுகளும், விரலிடுக்கில் ரூபாய் நோட்டுகளும் கொடுத்து அவரை ஓகே ரைய் ரைய்’ என்று சொல்ல வைக்கவில்லை, அவ்வளவுதான்!

சிலையின் முன் புறம் அழகுணர்ச்சி அசிங்கமாக இருக்கிறது, சரி பின்புறம் பார்க்கலாம், அங்காவது கணபதி அவர்கள் அவர்கள் சிற்ப வேலையைக் காட்டியிருப்பார் என்றால், அங்கும் அவர் புறமுதுகிட்டு விட்டார். அவர் என்ன செய்வார் பாவம். நமக்குத் தான் தெரியுமே, வள்ளுவர் சிலை திட்டம், வடிவம், உருவாக்கம், அனைத்துக்கும் பின்னால் இருந்தது, நம் முத்தமிழ் வித்த கருணாநிதியார் அல்லவா! எப்படி நாம் எந்தவொரு விதத்திலும் தரம் எதிர்பார்கக முடியும்?

… சரி, நாம் பின்புறம் சுற்றிப் போய்ப் பார்த்தால், சீராக இல்லாமல், அடுக்கி வைத்த பாறாங்கற்கள், எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் நம்மைப் பார்த்துப் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன… மேலும் முன் பக்கத்தில் இருந்து பார்த்த போது இருந்தமாதிரி இருந்த  குண்டி கூட இல்லை. வெறும் கற்கள் தான்!

இதற்கு மேல் சோகம்: இவ்வளவு உயரமாக (!) சிலை இருப்பதினால், அதனைப் பராமரிப்பு செய்வது கடினமாக இருப்பது போலும். கடற்பறவைகள் புகுந்து விளையாடி எச்சமிட்டு, வள்ளுவரை அவமானப் படுத்துவதில், கருணாநிதி போன்ற உதிரிகளுக்கு உதவி செய்கின்றன…

எங்கே போயிற்று இம்மாதிரி சிலைகளுக்கு இருக்க வேண்டிய இயல்பான கம்பீரம்?  நம் பண்பாட்டை பிரகடனப் படுத்துபவதா இது? நமது கலை உணர்ச்சியின் உச்சங்களைக் காண்பிப்பதா? ஏதாவது புது மாதிரி சிற்பக் கலை முயற்சிக்கு வித்தாவதா? அல்லது நம் தொழில் நுட்ப  உச்சிகளைக் கோடி காண்பிப்பதா  இது? அல்லது பறவைகள் அடாது விடாது எச்சமிட ஏதுவாக இருப்பதால் இது எச்சக் கலையா?

இது சிற்பக் கலையா அல்லது அற்பர்களால் அற்பர்களுக்கு அளிக்கப் பட்ட அற்பக் கலையா?

நான். அண்மையில் குமரி முனைக்கு எம்பள்ளிச் சிறார்களைக் கூட்டிக் கொண்டு போனபோது, மிகுந்த வருத்தத்தினாலும், பதற்றத்தினாலும், முக்கியமாகக் கோபத்தினாலும், அவர்களை திருவள்ளுவர் சிலை  அமைந்த பாறைக்கு இட்டுச் செல்லவில்லை. குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் அழகுணர்ச்சியால், நேர்மையால் – அவர்கள் புரிந்து கொண்டார்கள், சொன்னார்கள் – நீங்கள் எங்களுக்கு, அசிங்கமாக இருக்கும் ஒரு சிலையை கிட்டே கொண்டு காண்பிக்க வேண்டாம் என்றுதானே எங்களை அங்கு அழைத்துச் செல்லவில்லை?  (பின்பு நாங்கள் வள்ளுவர் பற்றியும், குறள் பற்றியும், அப்போஸ்தலரான புனித தாமஸ் அவருடன் தொடர்பில் இருந்ததாக உள்ள கட்டுக் கதைகளையும் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருந்தோம் என்பது வேறு விஷயம்…)

இந்தக் குப்பை வடிவத்துக்கு, வள்ளுவருக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு, நம் தமிழகத்துக்கு போட்ட நாமத்துக்கு, பல கோடி ரூபாய் தண்டம். எல்லாம் நம் வரிப் பணம்…

இதைத் தவிர, கன்யாகுமரிமுனைக்குச் செல்பவர்களுக்கு, திடுக்கிடும் திகைப்பும், இனம் புரியாத பீதியும், ஓக்காள வாந்தியும், ஒரு ஊக்கத் தொகை, ஒரு போனஸ்!!

இப்போது சொல்லுங்கள் – இது ஒரு மாபாதகமான செயல் இல்லையா? நம் கலாச்சாரத்தையே வன்புணர்ச்சி செய்வது போன்றதில்லையா இது?

(அய்யன் திருவள்ளுவன் சிலை சமைத்த கணபதி ஸ்தபதி அவர்கள் என்னை மிகவும் மன்னிக்க வேண்டும். அவர் அம்பு தான், ஒப்புக் கொள்கிறேன். எனக்குப் பிணக்கு அய்யய்யோன் அயோக்கியோன் கருணாநிதி மேல் தான்)

— சமச்சீர் கல்வி பதிவுகள் தொடரும்…

->>>> ‘கல்வி’ பற்றி…

One Response to “திருவள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்!”

  1. Anonymous Says:

    மக்கள் வரிப்பணம் அரசு செலவழிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப்பற்றி கவலைப்படாதவர். சுற்றுச் சூழல் மாசடைந்து மக்கள் வதைபடுவதை கண்டு கொள்ளாதவர். கட்சிக்காரரும் தன் சுற்றமும் அரசு பணத்தில் கொள்ளையடித்து கொழுப்பது தவறில்லை என்கிற கொள்கையுடையவர் ………..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s