சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சி

18/08/2011

மக்களும் ஊடகங்களும் தமிழகத்தில் கருணாநிதி அவர்கள் கட்டிய புசக குட்டிச்சுவரைப் பற்றியும் (புதிய சட்டசபை கட்டிடத்தைத் தான் சொல்கிறேன்!), அதனை ஜெயலலிதா அவர்கள் வேண்டாமென்று ஒதுக்கி விட்டதையும், அதற்காக ஒப்பாரி வைத்து அழுத ‘விடாத தலை’ வீரமணி முதல் தொல்லைத் திருமாவளவன் வழியாக மருத்துவர் ராமதாஸ் வரை – அனைவரும் சலித்துப் போய் வேறு இடங்களுக்குத் தாவி விட்டதையும் அறிவோம்.

ஸ்டாலின், அழகிரி சகோதரர்களுக்கு இறுகிய முகத்துடன் சிறை சிறையாக அலைந்து தங்கள் சகோதரிக்கும் , அடிவருடிப் பொறுக்கிகளுக்கும் ஆறுதல் கூறவே நேரம் போதவில்லை.  இந்த அழகில், இவர்கள் மேலேயே நிறைய விவகாரங்கள், கைது வரை போக மிகுந்த சாத்தியக் கூறுகள் கிளறப் பட்டு வருகின்றன. (இவர்கள் செய்த வன்புணர்ச்சி-கொலை-கொள்ளைகளில் – ஒரு 5 சதவிகிதம் தொடர்பான துப்புகள், சாட்சியங்கள் சரியாக கவனிக்கப் பட்டாலே, இந்தச் சகோதரர்களுக்கு பலப்பல ஆயுள் தண்டனைகள் நிச்சயம்)

இறும்பூதடையுங்கள்! !  கனிமொழிக்கு அவர் சிறையறையில், அவரால் இந்திய (அல்லது, திராவிட) பாணி மலம் கழிப்பானை உபயோகிக்க அவர்தம் சுயமரியாதை இடம் தரவில்லை!  உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்பதெல்லாம் போய்,  அவர்தம் பின்புறத்துக்குக் கூட சாதாரண கழிப்பான் ஒப்பவில்லை. ஆக, மேல்நாட்டு பாணி கழிப்பான் கிடைத்துவிட்டது. ஆஹா!  ஆகவே, அவர் மனமகிழ்ந்து கவிதைகளும், கட்டுரைகளும் என்று அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார். (எச்சரிக்கை அல்லது பொச்சரிக்கை: இவைகளைப் படிப்பதை விடுங்கள், இவை நம் கண்ணில் பட்டுவிட்டாலே, நமக்கும் இரத்த பேதி வரலாம்)

கலாநிதி-தயாநிதி கும்பல், கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு விகிதத்தைத் திரும்பக் கொடுத்து (இதற்குப் பெயர்: ‘Out of Court Settlement’) தங்கள் மேல் போடப்பட்ட சில வழக்குகளை திரும்ப வாங்கச் செய்து, தங்கள் வேசைத் தொழிலை (சன் டிவி) தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நக்கீரன் போன்ற அடிப்படையில் அயோக்கியத்தனமான ஈனத்தொழில்களும் நக்குவதற்கு வேறு இடங்கள், அடுத்தவரின் படுக்கையறை ரகசியங்கள், பரபரப்புகள் தேடிச் சென்று கொண்டிருக்கின்றன.

கருணாநிதி அவர்களோ நாளொன்றுக்கு இரண்டொரு ஒப்பாரி மூலம், உடனிறப்புகளுக்கு சீத பேதி வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.

திருமாவளவளவளவனுக்கு ஐம்பது வயதாகி விட்டதாம்! ஆகத்து 17-ஆம் தேதி (ஆகஸ்ட் மாதம் பிறக்காமல் ஆகத்து மாதத்தில் பிறந்ததால் தான், இவர் ஆ கத்து கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறாரோ என்னவோ!!)  ‘தமிழர் எழுச்சி நாள்’ என்று ஒரே ப்ளெக்ஸ் அட்டைகள். ஆக: ஆகஸ்ட் 16 – தமிழர் குறட்டை நாள்? குமட்டிக் கொண்டு வருகிறது.  கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு சுவர் அ-சித்திரம் இவரை ‘தமிழரை உசுப்பும் ஆயுதமே’ என்கிறது. உண்மைதான் – இம்மனிதர், தமிழரை உசுப்பேற்றும் காரியத்தைத் தான் கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்…  வேறு வேலை இல்லாத காரணத்தால் மறுபடியும் மருத்துவர் ராமதாசுடன் குலாவல்.

இம்மாமனிதர் என்ன தான் செய்வார்? சேகுவேரா, சிறுத்தை, அம்பேத்கர் படங்களுடன் தன் ஒட்டு-காஜ் படம் போட்டுக்கொண்டு  புளகாங்கிதம் அடைந்தாயிற்று. டால்டா தடவி மீசையை கூர்மையாக்கிக் கொண்டாயிற்று. ராஜபக்ஷவைப் பார்த்து அசடு வழிந்து பின் இந்திய வந்து வேண்டிய அளவு எச்சில்-தெறிக்க வீரமாகப் பேசியாயிற்று. இலங்கை பிரச்சினை தீர்த்தாயிற்று. பிரபாகரனை சாவிலிருந்து (அவர் தான் இறக்கவே இல்லையே!) மீட்டாயிற்று. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு படு பயங்கர சவால் பல விட்டாகிவிட்டது.  தமிழர்களை எழுச்சி செய்தாகி விட்டது. அராஜக ஆட்சியுடன் கூட்டு வைத்து அதனையும் ஒழித்தாகி விட்டது. வக்காளொளி, தமிழொளி, தாயோளி போன்ற தூய தமிழ்ப் பட்டங்களைப் பொறுக்கிகளுக்குக் கொடுத்தாகி விட்டது.  வேறு என்ன தான் இவர் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

மருத்துவர் ராமதாஸ் மறுபடியும் திராவிட கட்சிகளுடன் கூட்டே இல்லை என்கிறார். 2016 -ல் பாமக ஆட்சிதான் என்கிறார். தீக் குளிக்கத் தயார் என்கிறார். அதே நாள் அவர் மகன் அன்புமணி, “நாங்கள் போயஸ் தோட்டத்திற்கோ, கோபாலபுரத்துக்கோ இனிப் போக மாட்டோம்; கூட்டணி வேண்டுமானால் அவர்கள் தாம் தைலாபுரம் வரவேண்டும்” என்கிறார். மொத்தத்தில் தந்தைக்கும் மகனுக்கும் நடுவில் கூட ஒத்த கருத்து இல்லாமல், திக்குத் தெரியாதா காட்டில் இருக்கிறது பாமக.

எது எப்படியோ, எங்கள் தலித்களும், வன்னியரும் அடிதடிகளில் ஈடுபடாமல் இந்த இரண்டு அட்டை ஜந்துக்களும் விளம்பர  அட்டைகள்  வைத்துக் கொண்டிருந்து வட தமிழகப் பகுதிகளில் சாந்தி நிலவச் செய்தால் அது சரிதான்…

நம் தமிழக மக்களும் தங்கள் பங்கிற்கு  பங்குச் சந்தை சரிவு முதல் சமச்சீர் கல்விச் சரிவு வழியாக ‘அன்னா’ ஹசாரே ஈறாக பல செய்திகளுக்கு வால் பிடிக்கச் சென்று விட்டனர் – நமக்கு என்ன, அடுத்த பரபரப்பு எவ்விடமோ அவ்விடம் நாம்!

அடுத்த செய்தி எங்கே?

சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சி – பற்றிய பதிவு தொடரும்…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

 

Advertisements

3 Responses to “சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சி”

  1. Anonymous Says:

    அடுத்து வரும் ஒத்திசைவையும் எதிர்பார்க்கவைக்கிறது. இடுகை வகை எழுத்து இன்னார் இப்படிப்பட்டவர் என்று இனம் பிரித்து காட்டுகிறது. கசப்பான மருந்து.

  2. Anonymous Says:

    சாமியார்களின் சண்டித்தனம் வண்டி வண்டியாயுள்ளதே! அவர்களாலேற்படும் பாதிப்புபல. இவைகளை மூன்றாம் விழிகொண்டு பார்க்குமா ஒத்திசைவு. ஆணவப் போக்கை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து காட்டி அதனாலேற்படும் அவலங்களை சுட்டிக்காட்டும் ஒத்திசைவு ஆச்சர்யப்படவைக்கிறது


  3. மிக மிக முக்கியமான இடத்தை எட்டி விட்டீர்கள் நண்பர் ராமசாமி அவர்களே!! இது வெறுமனே தங்களைப் பாராட்டுவதற்காக சொல்லப் படவில்லை! ஏனென்றால் தன்னைத் தானே தமிழ் காக்க வந்த தெய்வப் பிறவி என்று சொல்லிக் கொள்ளும்(மற்றவரையும் தமிழையும் கொல்லும்) முக குடும்பம் என்றழைக்கப்படும் இந்த “சுருட்டு புரட்டு கும்பல்” வரலாற்றை மாற்றி எழுதும் ஜாதி. தங்கள் கட்டுரைகள் மிக மிக முக்கியமான காலப் பெட்டகமாக அமையும்.. தொடர்ந்து வாழ்த்துகள்- தொடர்ந்து எழுதுங்கள்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: