விஜயாலாயச்சோழன் ஆடிய ‘பாண்டியர்-தலை கால்பந்து’

03/09/2011

கலைங்கர்  கருணாநிதி அவர்களே! சோழர்களை விட்டு விடுங்கள்… தயவு செய்து…

இந்தச் சோழர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இக்காலத்தில் இருந்திருந்தால் அவர்கள் உங்களுக்கு, உங்கள் குடும்பத்தினருக்குக் கப்பம் நிச்சயம் கட்டியிருப்பார்கள் அல்லவா?  கருணாநிதிச் சோழனுக்கு கால்-கோள் விழா நடாத்தியிருப்பார்கள் அல்லவா? உங்கள் வாந்திகளைப் திரைப்படங்களாக்கி தலை தெறிக்க திரைகடல் ஓடிப்போய் திரவியம்  கரைத்திருப்பார்கள் அல்லவா? தலைகனம்கனத்த காலத்து எரு தின்ற பாண்டியன் கூட உங்களுக்கு அடிமையாக இருப்பார் தானே? முதலை அமைச்சராக இருந்து பலவித கோப்புகளைப் பார்த்து பெரும் பணம் பண்ணிய உங்களை,  அந்த கோப்பெரும்சோழனே தொழ மாட்டானா? கடையேழு வள்ளல்களும் சேர்ந்து, கடைந்தெடுத்த அயோக்கியரான உங்களை கடையேழு ‘அள்ளல்’ திலகமாக அன்றோ பட்டம் சூட்டுவர்?  கண்டராதித்த்தன்  கூட உங்களை கண்டமேனிக்குஉளறாதித்தன் என்று ஒப்புக் கொண்டு சரணடைந்திருப்பாரே!

ஏன் இப்படி எதற்கெடுத்தாலும், கண்டமேனிக்கு உளறுகிறீர்கள்? உங்கள் எள்ளு, கொள்ளுப் பேரக் குழந்தைகளோடு ‘இயற்கையே’ என்று விளையாடிக் கொண்டிருக்கக் கூடாதா?

அல்லது – உங்கள் உளறல்களை எவரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற தைரியமா?

=-=-=-=-=

கருணாநிதி என்றாலே உளறல் தான் என்பதற்கு இன்னொரு சான்று:

“நான் இன்றைக்கு உங்களையெல்லாம் இந்த மணவிழா மண்டபத்திலே விஜயாலய சோழனைப் போல சந்திக்கின்றேன். விஜயாலாய சோழன் போர்க்களத்தில், அவனுடைய கரங்கள் துண்டிக்கப்பட்டு, அவனுடைய கைகளிலே இருந்த கணைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு, தன்னந்தனியனாக போர்க்களத்திற்கு வந்தபோது சோழன், இரண்டு பேர் என்னைத் தூக்கிக் கொண்டு வாருங்கள். இந்தப் போர்க்களத்தில் படைவீரர்கள் நடுவே நான் சென்று போரிடுகிறேன் என்று விஜயாலய சோழன்…

கருணாநிதி பேச்சு தமிழர் நாகரிகம், பண்பாடு வளர என்றென்றும் துணை நிற்போம்- பதிவு செய்த நாள் : 9/2/2011 0:10:50
http://dinakaran.com/News_Detail_2011.asp?Nid=4301

விஜயாலாயச் சோழன், திருப்புறம்பியப் போர் நடந்த சமயம்  கால்கள் இல்லாமல் இருந்ததால், இரு வீரர்களின் தோள் மீதமர்ந்து போர் செய்ததாக சில சரித்திரங்கள் கூறுகின்றன. உணர்ச்சிகரமான தமிழர்களின் ஒரே அ-வரலாற்று மூச்சாவான ‘பொன்னியின் செல்வன்’ கூட உண்மைகளை (கருணாநிதி அளவுக்கு) மிகவும் திரித்ததாக ஞாபகம் இல்லை. பழுவேட்டரையர் (பெரிய்ய்ய்ய!!) அவர்கள்  சோழனைத் தூக்கியதாக கல்கி அவர்கள் எழுதியதாகத் தான் ஞாபகம்.

கருணாநிதி உளறுவது போல அப்பரிதாபச் சோழன் கைகள் வெட்டப் பட்டிருந்தால், ஏன் பின்னர் அவர் ‘கணைகள்’ பிடுங்கப்பட வேண்டும்? கைகள் இல்லை என்றால் அந்தச் சோழன் காலால் கால்-பந்து தானே விளையாடி இருக்க முடியும்?

யோசிக்கவே மகா கோரமாக இருக்கிறது. விஜயாலயச் சோழன்,  வெட்டப் பட்ட பாண்டிய வீரர் தலைகளை வைத்துக் கொண்டு கால்பந்து ஆடுவது!  என்ன ருத்ர தாண்டவமாக இது இருக்கக் கூடும்! ஐயகோ!!

ஆகவே , அனைத்து (கற்கால, முற்கால, பிற்கால,  தற்கால) சோழர்கள் சார்பாக யாம் கருணாநிதியை தெண்டனிட்டு வேண்டிக்கொள்வது யாதெனில்:

தயை செய்து மலம் கழிப்பதானால், அதற்கு அதன் ஓட்டையை, தேவரீர் உபயோகிக்கவும். ஆனால், அப்படி நீங்கள் முக்கி முக்கி மேடைப்-பேச்சு விட்டே ஆக வேண்டுமென்றால், தயை செய்து, அதனை திருமண விழாக்களில் செய்ய வேண்டா… புதுமணத் தம்பதியர்களின் பூ உங்கள் நாருடன் சேர்ந்து துர்நாற்றம் அடிக்கக் கூடாது அன்றோ?

நன்றி.

இப்படிக்கு:

முதலாம் ராமசாமிச் சோழன்.

2 Responses to “விஜயாலாயச்சோழன் ஆடிய ‘பாண்டியர்-தலை கால்பந்து’”

 1. Anonymous Says:

  கழிப்பறை வசைச்சொல் சில இடங்களில் சில இடங்களிலிசையவில்லை. தம் மக்கள் பற்றா நாட்டுமக்கள் நலனா கட்சிஆட்களுக்கு கருணை நிதியா இயற்கைச் சீரழிப்ப்பா எதை எடுத்துச் சொல்ல……

  • ramasami Says:

   உண்மைதான், ‘பெயரிலி’ அவர்களே, எனக்கே(!). ஒரு விதத்தில் பார்த்தால், கொஞ்சம் ரசக் குறைவாகத்தான் இருக்கிறது.

   ஆனால், திருவாளர் கருணாநிதி அவர்கள் அடிக்கும் கூத்தினைப் புரிந்துகொள்ள(!) இச்சொற்கள் தேவைப்படுகின்றன என்பது என் எண்ணம். இருப்பினும், மலம் கழித்தல் என்கிற இயற்கையான, முக்கியமான, மகத்தான நிகழ்வினை – இவ்வயோக்கியர்களுக்கு, இவர்களின் பேத்தல்களுக்கு இணை வைத்துப் பேசுவது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: