பகுத்தறிவு X ஆராய்ச்சி மனப்பான்மை?

09/09/2011

திமுக முன்னாள் மேடை ஏச்சாளரும்  அடாவடி ஆளும் ஆன  வாகை முத்தழகன் (இவர் திமுகவின் முக்கியப் பொறுக்கிகள் போல அளவுக்கு மீறி பணம் பண்ணாதது கவனிக்கத் தக்கது) சென்ற வாரம் பகர்ந்தது:

… கொள்கையை நேசிப்பவர்களுக்கு இனி திமுகவில் இடமில்லை. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால், அவரின் ஆட்டம் இனி எடுபடாது. உறவினர்களுக்காகவும் கொள்ளை கும்பலுக்காகவும், ஸ்டாலினால் நடத்தப் படும் திமுகவை இல்லாமல் போகச் செய்வதே இனி தமிழினத்திற்கு நன்று.

=-=-=-=

வழக்கம் போல, ஒரு விடு தலை மேற்கோள் – உங்கள் நகைப்புணர்வை, அபத்தத்தை மெச்சும் தன்மையை நோக்கி…

…எனவே, மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்தது வேல். இரண்டாவதாகக் கண்டுபிடித்தது வில். வேல் என்பது கந்தபுராணத்தைக் கொண்டது. வில் என்பது இராமாயணக் கதையிலே உள்ளது. எனவே, கந்தபுராணம் முந்தியது; இராமாயணம் அதற்கு அடுத்து வந்தது என்று பெரியார் தனது பகுத்தறிவு கருத்தாலே சிந்தித்துச் சொன்னார். பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்து அவர் சொல்லவில்லை.
http://viduthalai.in/new/headline/17376-2011-09-07-09-34-50.html

ஆக, இவர்கள் எண்ணத்தில், பகுத்தறிவுக்கும் ஆராய்ந்து அறியும் மனப்பான்மைக்கும் வெகு தூரம் என்பது வெள்ளிடை மலை. அரைகுறைகளின் ஆர்பாட்டங்களினால் ‘பகுத்தறிவு’ என்கிற சொல்லாடலே நகைப்புக்கிடமாகி விட்டது. என்ன சோகம்!

எது எப்படியோ, ஆரிய சதி, ஆறாத சதி என்று உளறல்களை, இந்தப் பெட்டைப் புலம்பல்களை விட்டு விட்டு, இவர்கள் ஆதிச்சநல்லூர் உள்ள இப்போதைய நிலைமையை சரி செய்தால் அது மிக்க நன்மை.

ஆனால், மேலும் நாம் சொல்லலாம்:

உயிர் எழுத்துக்களில் அ முதலில். ஆ இரண்டாவது தான். ஆகவே தமிழர்களுக்கு அடிபட்டால், அதன் வலியைப் பொறுத்து  கீழ்க் கண்டவாறு பரிதாபமாகக் கத்தலாம்.

 • ஊசி / முள் கொஞ்சமாகக் குத்தினால் –
 • ஊசி / முள் ஆழமாகக் குத்தினால் – ஆ!

தமிழர்கள் இளிக்க வேண்டுமென்றால்:

 • சிறிய அசடு வழிதல் –
 • குடம் குடமாக அசடு வழிதல் – ஈ!

தமிழினம் ஆச்சரியப் படவேண்டும் என்றால்:

 • சின்ன ஆச்சரியம்:
 • பெரிய்ய்ய ஆச்சரியம் – ஓ!

(மேற்கண்ட அரிய பெரிய தமிழின விளக்கங்களுக்கு, நானும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வில்லை – சும்மனாச்சிக்கும் என் பகுத்தறிவை உபயோகித்து எழுதியது தான்!)

Advertisements

2 Responses to “பகுத்தறிவு X ஆராய்ச்சி மனப்பான்மை?”

 1. Anonymous Says:

  காய்ச்சி எடுக்கிறீர்கள். அடிநாதத்தை, நாட்டு நலனா வூட்டு நலனா என்பதை போட்டு விளாசுகிறீர்கள்.

 2. சம்பூகன் Says:

  அட அறிவாளி(விலி)யே!

  ”பெரியார் தன்னுடைய பகுத்தறிவினைப் பயன்படுத்திச் சொன்னார்” என்பதற்கும், ”பெரிய ஆராய்ச்சி – அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, வரலாற்று ஆராய்ச்சியெல்லாம் செய்து சொல்வதற்கும்” வேறுபாடு உண்டா இல்லையா?

  வெகு சாதாரணமாக விசயம் அறிந்த மாத்திரத்தில் யோசித்து சொன்னார் என்பது தானே முதல் வாக்கியத்தின் பொருள். பகுத்தறிவு என்பதில் ஆய்வும், ஆராய்ச்சியும் அடுத்தடுத்த கட்டம் அல்லவா?

  இரண்டும் ஏதோ எதிரெதிர் என்று சொன்னது போல் வார்த்தைப் பசப்பு செய்திருக்கிறாயே!

  எண்ணாங்கு முப்பத்திரண்டு என்று பட்டென சொல்வதற்கும், 8 x 4 என்று கால்குலேட்டரில் போட்டு பார்த்து சொல்வதற்கும் (விடை ஒன்றே என்றாலும்) செயல்பாட்டில் வித்தியாசம் உண்டா இல்லையா?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: