நான் வேலை செய்யும் பள்ளி மாணவர்களுக்கு – பொதுவாகத் தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களுக்கும் கல்விக்கும் நடுவில் ஒரே மாபெரும் மலையாக இருந்து அவர்கள் உய்வதைத் தடுப்பவை மூன்று விஷயங்கள். இம்மூன்று விஷயங்களுக்கும் ஆதார சுருதி – நம் பொறுக்கித் தலைவர் கலைங்கர் கருணாநிதி அவர்களே, மேலும் அவர் சார்ந்து இயங்கும் உயர் மட்ட திமுக அயோக்கியர்களே என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

அந்த மூன்று விஷயங்கள்: மது, தொலைக்காட்சிப் பெட்டிகள், திரைப்படங்கள். இவற்றைப் பற்றி நான் சொல்லித் தான் ஒருவருக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.நம் தமிழகக் குழந்தைகளை முளையிலேயே கிள்ளி, அவர்களைக் காயடித்து, அவர்கள் மூளையைச் சலவை செய்து,  அவர்களை – தாங்கள் செய்யும் வன்புணர்ச்சிகளை  முட்டாள்தனமாகப் பார்க்க வைப்பதில், இந்த உயர்மட்ட திமுகவினரை விட்டால் ஆட்களில்லை. (ஆம். பிற கட்சியினரும் முயன்று கொண்டிருக்கின்றனர் – ஆனால் திமுக உயர்மட்டப் பொறுக்கிகள் அளவு போவதற்கு, அவர்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம், நல்ல வேளை!)

வயிறெரிகிறது எனக்கு.

இந்தப் பொதுப் படியான வயிற்றெரிச்சல்களுக்கு அப்பாற்பட்டு – இன்றைய தலையாய பிரச்சினை என்னவென்றால் – நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள்…

நான் பணி புரியும்  பள்ளி இருப்பது விழுப்புரம் மாவட்டத்து ஒரு ‘டொக்கு’ பகுதியில். .. விழுப்புரம் மாவட்டம் மிக ‘வளம்’ மிக்க மாவட்டம் அல்ல. இருப்பினும் இங்கு ஏகப்பட்ட ஜபர்தஸ்துடன் போட்டியிடும், ‘செலவு’ செய்யும் நபர்கள் அதிகம்.

இளைஞர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ‘தேர்தல் பணி’ செய்தால் ரூபாய் ஐநூறும் ஒரு பீர் போத்தலும் இலவசம். ஒரு வார்ட் வேட்பாளர் அளவு போட்டியிருபவரே முப்பத்தைந்து லட்சம் செலவழிக்கிறார்.

ஆக, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஆகிக்க் கொண்டிருந்த தினம் சுமார் ஒரு கோடி ரூபாய் மது விற்பனை – கடந்த ஒரு வாரமாக ரூபாய் 2.25 கோடிக்கு தலைக்கேறியுள்ளது!  சாராய ஆற்றில் நீந்தும் நம் இளைஞர்கள் எப்படித்தான் கரையேறுவார்கள்?

இதில் ஒரு சுவாரசியமான (?) விஷயம் என்னவென்றால் – இந்த சாராய தமிழ்தேசிய நீரோட்டத்தில் – திமுக, அதிமுக, தேதிமுக – இவர்கள் மட்டுமல்ல – பாமக, விடுதலைச் சிறுத்தைகள்(!) அனைவரும் அடக்கம். இவை தவிர்த்து, ராமதாஸ்களின் இரட்டை வேடங்கள் சமூகவியல் ரீதியாகப் புல்லரிப்பு தரக் கூடியவை…

எனக்குத் தெரிந்து இடதுசாரிகள் தான், இந்தக் கேவலமான கோலத்தில் பங்கேற்காதவர்கள்…

ஹ்ம்ம்…

கருணாநிதிகளின் கள், டிவி, படம் இன்னபிற அயோக்கியத்தனங்கள் பற்றித் தொடரலாம்…

… அல்லது, கருணாநிதி பிள்ளைத் தமிழ்… (மன்னிக்கவும்)

தமிழில், அதன் எழுத்தில், பேச்சில், பொறுக்கி நடை என்று ஒன்று உண்டு. அரசியல் தமிழ், முரசொலித் தமிழ், மேலும் தமிழகத்தினுடன் பரிச்சயம் உள்ளவர்  இதனை அறிவர்.

பொதுவாக, இதனைப் பலர் ‘அடுக்குமொழித்’ அல்லது ‘அடுக்குத் தொடர்’ தமிழ் நடை எனத் தவறுதலாக அழைப்பர். பாவம், ஆனால் அவர்களுக்குத் தெரியாது – இது நம்முடைய அழகான தமிழ் மொழிக்கு அடுக்காத நடைதான் என்பது…

இதனைத் தெரிந்தோ தெரியாமலோ பெரும் முனைப்போடு   ‘நடை’த்த ஆரம்பித்தவர் வைத்தவர், உபயோகித்தவர் – அண்ணாதுரை அவர்கள். ஆனால் அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை.

இந்த, கவைக்குதவாத பொறுக்கி நடையின் – எழுத்துக்கு அலங்காரம் மட்டுமே வேண்டும் – ‘விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம்’ போல;  ஆனால் எந்தவொரு பொருட்படுத்தத் தக்க உருவமோ அல்லது உள்ளடக்கமோ  தேவையே இல்லை – என்கிற இந்த உணர்ச்சிக் குவியல் நடையின் உச்சகட்டத்தை அடைந்தவர், நம் தானைத் தலைவர் கயமைநிதி அவர்கள்.

1952 – கருணாநிதி – சிறுவயது அடுக்குமொழி பொறுக்கி நடையார்…

வெற்றிடத்தை, குப்பை வார்த்தை ஜாலங்களாலும், உணர்ச்சிக் குவியல்களாலும், மயிர்க் கூச்செறிதல்களினாலும் நிரப்பி,  மக்களை முட்டாள்களாக்கும் வேலையில் கயமைநிதி மிக்க அனுபவமுள்ளவர்.

2011 – பொறுக்கிநடையாரின் பரிணாம வளர்ச்சி… (‘இளைஞன்’ போன்ற இக்காலக் குப்பைகள் ஈறாக!)

பொறுக்கி நடைத் தமிழ் என்பதின் பண்புகள் / கூறுகள் கீழ் வருமாறு:

 • எதுகை, மோனை மட்டும் தாம் முக்கியம். வேறெதுவும் அவசியமே கிடையாது.
 • இரண்டு வரிகளுக்கு ஒரு முறை ‘பார்த்திட்டாயா தம்பி’ அல்லது ‘கேட்டிட்டாயா தம்பி’  அல்லது ‘உணர்ந்திட்டாயா தம்பி’ என இருக்க வேண்டும்.
 • இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தை வன்புணர்ச்சிகளை, பேச்சில் / எழுத்தில் பக்கத்துக்கு ஒரு முறையாவது உபயோகிக்க வேண்டும்.
 • அர்த்தமற்ற அடலேறு, திராவிடச் சிங்கம், அரிமா, சிங்கக் குட்டிகள், காளைகள், கரும்புலிகள், சிறுத்தைகள், பாயும் புலிகள் என்ற வார்த்தைகளால் / சொற்றொடர்களால் தங்களைத் தாங்களாகவோ அல்லது ‘இயக்க’ இளைஞர்களையோ அழைக்க, அழைத்துக் கொள்ள வேண்டும்.
 • எதிரிகளை – குள்ள நரிகள், குல்லுக பட்டர்கள் , வீடணர்கள், ஆந்தைகள், பிணம் தின்னிக் கழுகுகள், வேலி மேலேறும் ஓணான்கள், கழுதைகள், வல்லூறுகள், ஓநாய்கள், அண்டங் காக்கைகள், வல்லூறுகள், கோட்டான்கள் என அழைக்கவேண்டும்.
 • தப்பும் தவறுமாக உலக வரலாற்றை அறிந்து(!) கொண்டு கோயப்பெல்ஸ் (பாவம் கீபெல்ஸ்!), ஹிட்லர், அலெக்சாண்டர், முஸ்ஸோலினி, சீசர், ஸ்டாலின், மார்க்ஸ்,   ரோம் (‘உரோமா புரி’) , உலகப்  போர்கள், சேரன், சோழன், பாண்டியன்  பற்றியெல்லாம் உளறிக் கொட்டவேண்டும்.
 • சங்க கால மேன்மை, லெமுரியா, பஃறுளியாறு, களிறு, ‘புலியை முறத்தால் விரட்டியது’ இன்னபிற பற்றி,  அவை உண்மையோ இல்லையோ, புரிகிறதோ இல்லையோ, அள்ளமுடியாமல் உளறிக் கொட்ட வேண்டும்.
 • கண்ணகி-கோவலன்-மாதவி, ராமன்-சீதை. காந்தி-நேரு, அண்ணாதுரை-ஈவேரா  போன்றவர்களைப் பற்றிப் பேத்தத் தெரிந்திருக்க வேண்டும் – இதில் முக்கியமான விஷயம், அண்ணாதுரையும், ஈவேராவும், இவர்களின் பகுத்தறிவுக் கனவுகளில் வந்து, உருக்கமாகப் பேசவேண்டும்.. (ஆனால் இவர்களும் பாவம், இதே அடுக்கு மொழியில் தான் பேச வேண்டும்)
 • பெண்டிரை, நமது மகளிரை – போகப் பொருட்களாக, கவர்ச்சி ஜிகினாக்களாக, அல்லது கற்பிற் (!) சிறந்தவர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். இரட்டை அர்த்தப்  பொறுக்கிச் சொல்லாடல்களால் அவர்களைக் கூனிக் குறுக வைக்க வேண்டும்.
 • ஒவ்வொரு வரியிலும். கீழ்க்கண்டவைகளில், குறைந்த பட்சம் ஒரு அர்த்தமற்ற வார்த்தையையாவது அல்லது அர்த்தமற்ற ஒரு சொற்றொடரையாவது,  உபயோகிக்க வேண்டும்:
 • போர் சார்ந்த மயிர்க் கூச்செரிதல்கள்:  வீர மறவர்கள், எரிதழல், விழுப்புண்,  திராவிட ரத்தம், போராட்டம், வெற்றிவாகை, செங்கோல், சோழன், போர்வாள், குத்தீட்டி, தீ, இரத்தஆறு, புரட்சி, வீரமரணம், போராளி, வெற்றி முரசு, புறமுதுகு, இரத்தக் களறி, ரத்தத் திலகம், பாசறை, கழகசெயல்வீரர்கள், , வியூகம், உங்களோடு இரண்டறக் கலந்து, உயிரைத் துச்சமாக மதித்து, களப் பணி, வேரோடு, உயிரைத் திரணமாக மதித்து, கோட்டையைப் பிடிப்போம்…
 • தாய், பேய், சேய் மற்றும் குடும்ப அன்பரிப்புகள், கொஞ்சல்-குலாவல்கள்: தமிழ்த் தாய், பெண்டிர், கற்பிற்சிறந்த கண்ணகிகள், மாதரசிகள், புள்ளிமான், அணங்கு, செந்தமிழ்த் தேன்மொழியாள், தாய், சேய்,  கற்பு, உடன் பிறப்பு, அண்ணன், அன்புத் தம்பி, தொண்டர்…
 • எழுச்சி பற்றிய புல்லரிப்புகள்: இனியும் பொறுப்போமா, சிறை வாசம், அடிமைகள், தடைக் கற்கள், சுக்கு நூறு, முழக்கம், திக்கெட்டும், போராட்டக் களம், பீடு நடை, ஒழிப்பு, திரண்டிருந்த பெருங்கூட்டம், கடும் கண்டனம்,  வெற்றிக்கனி, ஆர்பரித்து, திரண்டு வா, மாபெரும் கடலென, கரைபுரண்டு ஓட, புரட்சி சகாப்தம், தன்மானம் தழைத்தோங்கிடும், இலக்கு நோக்கிய ஏவுகணை, சூளுரை, சூறாவளி, புத்துணர்ச்சி, ஆர்ப்பாட்டம்,  எரிமலை, தீக்கதிர், முறியடிப்போம்,  மீட்டெடுப்போம், ஒழிப்பு, ஊர்வலம், வெற்றி,  போராட்டம் வெடிக்கும்…
 • வெட்டி உயர்வு நவிற்சிகளும் , இல்பொருள் உவமைகளும்: இனமானக் கேடயம், வீரவரலாறு, கழகக் குடும்பம், இனஉணர்வாளர்கள்,  வெற்றிக் கனி பறித்திட, பொங்கும்,  கொள்கைத் திருவிழா,  உண்ணாவிரதம், உயிரைப் பணயம், பொற்கிழி, பொற்சால்வை, மாபெரும், வரலாறு காணாத, கூட்டம் அலைமோதியது, முன்னேற்றம், முன்னோடி, இணையற்ற , பீடுநடை, நாடு தழுவிய,  சாதனை, மேம்பாடு,…
 • தமிழை ஒழிக்க உபயோகிக்கும் ‘தமிழின் மேன்மை’ குறித்த உச்சாடனங்கள்: ஆதி பகவன், வான் புகழ் கொண்ட தமிழ்நாடு, தமிழ் மொழி,  தமிழ்மொழியின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் எம் மூச்சு, தமிழ் எம் உயிர், தமிழ்ச்சாதி, கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே, தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு, தமிழ்நாடு அமைதிப் பூங்கா…
 • முழக்கமிடும் குறட்டைகள்: லட்சியம், அறைகூவல்,  திக்கெட்டும், கரவொலி, விண்ணை முட்டும், விண் அதிரும், நாக்கூசும்,  எழுச்சி, வழிகாட்டி, புரட்சிப் பூபாளம்…
 • அற்பத் தனமான ‘தமக்குத் தாமே’ பட்டங்கள்:  தானைத் தலைவர், தமிழர் தலைவர், சமூக விஞ்ஞானி, கொள்கைக் கோமான், பேராசான், பகலவன், செங்கதிரோன், நல்ல தம்பி, அன்புத் தம்பி, தளபதி, மண்டல நாயகர், கொள்கைத் தந்தை, அறிவுலக ஆசான்,  மாமேதை…
 • பரிதாபத்துக்குரிய புலம்பல்கள் : கண்ணீர்க் கவிதை, ஐயகோ, கண்டீரா, கேட்டீரா, நமது கையறு நிலைமை, நம்மால் என்ன தான் செய்ய முடியும், மவுன அழுகை, கண்ணீரும் கம்பலையும், கண்ணீர் பொங்க,  பார்த்தீரா, நம் ஜாதகம், நம் தலையெழுத்து, தண்டனை கொடுத்தது போதாதா,  சூத்திரன், பஞ்சமன், பூணூல் போடாதவன் என்பதாலேதானே, நான் பிறந்த நட்சத்திரம் அப்படி…
 • காலியிடங்களை நிரப்ப வெறுப்புமிழுதல்கள்:  பிற்போக்கு, கூத்தாடி, ஆரியக் கூத்தாடி, கோமாளி, தரகர், ஆரியம், அவாள், இவாள், சைவம், பரதேசி, பண்டாரம், பூணூல், நடிகர், நாட்டியக்காரி, பரத்தை,  விபச்சாரி, மாதவி , மலையாளி, தெலுங்கர், கன்னடியர், சிங்களவன், வடநாட்டான், ஆரிய சதி, கைபர்-போலன் வழி வந்தவர்கள், வந்தேறிகள், பெரு முதலாளிகள், பார்ப்பனர்கள், காவிக் கூட்டம், கொடுங்கோலன், மனுதர்மம், பார்ப்பான், ஆடுகள்-ஓநாய், புல்லுருவி,  அமளிக் காடு, காட்டுமிராண்டித் தனம், அக்ரகார ஆதிக்கம்,  அக்ரஹார சூழ்ச்சி, எட்டப்பர்கள்…
 • கவைக்குதவாத வெறும் சப்தங்கள்:   சகாப்தம், பகுத்தறிவு, முப்பெரும், ஐம்பெரும், கனிந்த கனி, மக்கள் நலம், பொது வாழ்க்கை, தூய்மை, அப்பழுக்கு இல்லாத, வலியுறுத்தல், அரசியல் பண்பு, அரசியல் நாகரீகம், மக்களுக்கான பணி, பொற்காலம், கொள்கை, கேவலம், பெருவிழா, இதயம்,  உவகை, குதூகலம், குவலயம்,    முற்போக்கு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தத்துவம், கொள்கைப் பற்று, தழைத்தோங்கி, கழகம்,   மூடநம்பிக்கை, உண்ணாவிரதம், சமத்துவம்,  திராவிடம், மாயை,  மன்றம், தலைமை, கட்டுப்பாடு,  போராட்டம்,  தொண்டு, உயிர் மூச்சு, இதயத் துடிப்பு, ஓங்கி வளர்ந்திருக்கிறது, அரசியல் காரணம், அரசியல் நோக்கம், பதிலுக்குப் பதில், லாவணி, முகாரி,  கல்வெட்டு, புனிதம், இதயம், ஆல் போல் தழைத்தோங்கி,  கவன ஈர்ப்பு, , இனஉணர்வு, தத்துவார்த்தம், தன்மானம், சுயமரியாதை, தர்மம், கூட்டணி, நல்லிணக்கம், மதச் சார்பின்மை, சான்றோர்,  உரிமை, படுகொலை, விஞ்ஞான ரீதி,  கண்டிடவில்லை …

இன்னமும் எழுதலாம், ஆனால் கொஞ்சம் அலுப்பாக  இருக்கிறது…

சில சமயம் தோன்றுகிறது – ஒரு பேர்ல் (perl) அல்லது பைதன் (python) மொழியில் கணினிக் கட்டளைகள் இட்டு, ஒரு தானியங்கி அடுக்குமொழிப் பொறுக்கிநடை பேச்சு/எழுத்து தயாரிப்பானை உருவாக்கலாமா என்று!

ச்சீ…

தற்பின்குறிப்பு:

நல்லவேளை, சமச்சீரழிவுக் கல்விப் புத்தகத்தில் (பத்தாம் வகுப்புக்கானது) கயமைநிதி-கருணாநிதி அவர்கள் வீறு கொண்டெழுதிய அடுக்கு மொழி, அடக்காத மொழி வகையறா குப்பைகள் கிழித்தெறியப் பட்டு விட்டன.

என் கையால் நான் இப்பக்கங்களைக் கிழிக்க அனுமதி கொடுத்த என் பள்ளி நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கும், என் மனமார்ந்த நன்றி, மெய்யாலுமே!

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

உண்மையில் நான் வீரமணி அவர்களின் நேர்மையை, அவர்தம் புலமையை, படிப்பறிவை, நகைச்சுவையை மிகவும் மெச்சுபவன்.

கேள்வி : தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் தொடர்கதைக்கு முடிவே இல்லையா? – சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

வீரமணி பதில் : என்ன செய்வது! நமக்கு வந்த சுயராஜ்யத்தின் சுயரூபம் அது! தமிழ்ச்சாதியே! தமிழ்ச்சாதியே என்று ஓலமிட்டு ஒப்பாரி வைத்து மீனவ சகோதரர்களிடம் நாமும் அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. முதுகெலும்புள்ள மத்திய சர்க்கார் வந்தால் நிலைமை மாறக்கூடும்.

:-)

 1. ஆக அய்யா, நீங்கள் ராஜபக்ஷவை, தமிழகத்துப்  பாதுகாப்பில் இருந்துகொண்டு மிரட்டுவது, மயிர்க் கூச்செரிந்து மண்டை காயும்படி காய்ச்சுவது – சும்மனாச்சிக்கும் தானே?
 2. மேலும் திமுக, கருணாநிதி, காங்கிரஸ் போன்ற “மத்திய சர்க்கார்” விசித்திர ஜந்துக்களுக்கு முதுகெலும்பே இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களே!
 3. வெட்கமானமில்லாமல் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து பொய்-துரோக  அழுகை அழுவதை, அரசியல் சாணக்கியமாக மாற்றிய உங்களையும், உங்கள் (தற்போதைய) நண்பர் மஞ்சள்துண்டாரையும், பார்த்து பிரமிப்பது எப்படி என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை

சரி – இப்போது வீரமணி அவர்களின் விஞ்ஞான பூர்வமான எண்ணங்களைப் பார்க்கலாம்.

கேள்வி : சுற்றுச்சூழல் பாதுகாக்க, பருவ நிலை மாறுபடாதிருக்க, புவி வெப்பமாவதைத் தடுக்க, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அசுத்தக் காற்று, காற்று மண்டலத்தில் கலக்காதவாறு எல்லா நாடுகளின் தொழிற்சாலைகளின் கதவுகளையும் மூடினால் என்ன?

–  எம்.ஆர்.பக்கிரிசாமி, மேலசொட்டால்வண்ணம்

வீரமணி பதில் : கதவுகளை மூடுவதைவிட, அசுத்தக்காற்று (கரியமிலவாயு) வெளியேற்றப்படாமல், பூஜ்யமாகும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய சிந்திக்க வேண்டும். ‘Zero Carbon Zone’    என்று நமது தஞ்சை பெரியார்– மணியம்மை பல்கலைக்கழகம் ஆனதை அப்துல் கலாம் அவர்களே நேரில் பார்த்து வியந்து பாராட்டினார்களே. அதுபோன்ற ஆய்வுகளை இணைத்து புதுவழி காணலாம்; காணவேண்டும்.

அய்யோ அய்யா! அறிவியல் என்பது உங்கள் வூட்டு அவியல் இல்லை என்பதை உணருவீர்களா? ஏன், வேண்டுமென்றே அறிவியலவியல் செய்து  எங்களை விலா நோகச் சிரிக்க வைக்கிறீர்கள்? அது என்ன அய்யா ‘Zero Carbon Zone’ – என்ன உளறல் இது! ஏதாவது வெள்ளைக்காரப் பயல்கள் கண்டமேனிக்கும் பகர்ந்தால், ஒன்றுமே புரியாமால் அவற்றைச் சமைத்து எங்களுக்கு பரிமாறுகிரீர்களே! நீங்கள் பெரியாரியம், இளமாரியம் என்று உங்கள் தொழிலை நடத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

நீங்கள் இப்படியே எழுத ஆரம்பித்தால், நீங்களும் ஒரு அரைகுறை தட்பவெப்பவியளாலராகி  விடுவீர்கள், ஐயகோ! இப்போது இருக்கும் NGO சார் தன்னார்வ ‘நிபுணர்’களையே தாங்க முடியவில்லை – நீங்களும் கூடக் குழப்பினால், இது சரியாமோ?

கரியமில வாயு என்பது மோசமான ஒன்று என்று தங்களுக்குப் பகர்ந்தது யாரோ? அவர் நிச்சயம் அப்துல் கலாம் அவர்களாக இருந்திருக்க முடியாது.

ஆனால் உங்கள் நேர்மையை மெச்சுகிறேன். ஏனெனில் நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால்:

 1. உங்கள் ‘பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகம்’ என்பதுள் இருப்பவை (அதாவது, பாவப்பட்ட மாணவர்கள்) கரியமில வாயு – அதாவது, உங்கள் மொழியில் – அசுத்தக்காற்று.
 2. அவர்கள் பூஜ்யமாக்கப் படுகின்றனர்.
 3. மேலும் உங்கள் பல்கொலைக் கழகத்தில், கரிமமே இல்லாததால் (‘‘Zero Carbon Zone’ )  அதன் வளாகத்தில் இருப்பவர்களெல்லாம் மனிதர்களே இல்லை!

ஆஹா!  நன்றி. நன்றி!

மேலும் உண்மை படிக்க