வீரமணி அவர்களின் மெச்சத்தக்க நேர்மை!

03/10/2011

உண்மையில் நான் வீரமணி அவர்களின் நேர்மையை, அவர்தம் புலமையை, படிப்பறிவை, நகைச்சுவையை மிகவும் மெச்சுபவன்.

கேள்வி : தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் தொடர்கதைக்கு முடிவே இல்லையா? – சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

வீரமணி பதில் : என்ன செய்வது! நமக்கு வந்த சுயராஜ்யத்தின் சுயரூபம் அது! தமிழ்ச்சாதியே! தமிழ்ச்சாதியே என்று ஓலமிட்டு ஒப்பாரி வைத்து மீனவ சகோதரர்களிடம் நாமும் அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. முதுகெலும்புள்ள மத்திய சர்க்கார் வந்தால் நிலைமை மாறக்கூடும்.

:-)

 1. ஆக அய்யா, நீங்கள் ராஜபக்ஷவை, தமிழகத்துப்  பாதுகாப்பில் இருந்துகொண்டு மிரட்டுவது, மயிர்க் கூச்செரிந்து மண்டை காயும்படி காய்ச்சுவது – சும்மனாச்சிக்கும் தானே?
 2. மேலும் திமுக, கருணாநிதி, காங்கிரஸ் போன்ற “மத்திய சர்க்கார்” விசித்திர ஜந்துக்களுக்கு முதுகெலும்பே இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களே!
 3. வெட்கமானமில்லாமல் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து பொய்-துரோக  அழுகை அழுவதை, அரசியல் சாணக்கியமாக மாற்றிய உங்களையும், உங்கள் (தற்போதைய) நண்பர் மஞ்சள்துண்டாரையும், பார்த்து பிரமிப்பது எப்படி என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை

சரி – இப்போது வீரமணி அவர்களின் விஞ்ஞான பூர்வமான எண்ணங்களைப் பார்க்கலாம்.

கேள்வி : சுற்றுச்சூழல் பாதுகாக்க, பருவ நிலை மாறுபடாதிருக்க, புவி வெப்பமாவதைத் தடுக்க, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அசுத்தக் காற்று, காற்று மண்டலத்தில் கலக்காதவாறு எல்லா நாடுகளின் தொழிற்சாலைகளின் கதவுகளையும் மூடினால் என்ன?

–  எம்.ஆர்.பக்கிரிசாமி, மேலசொட்டால்வண்ணம்

வீரமணி பதில் : கதவுகளை மூடுவதைவிட, அசுத்தக்காற்று (கரியமிலவாயு) வெளியேற்றப்படாமல், பூஜ்யமாகும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய சிந்திக்க வேண்டும். ‘Zero Carbon Zone’    என்று நமது தஞ்சை பெரியார்– மணியம்மை பல்கலைக்கழகம் ஆனதை அப்துல் கலாம் அவர்களே நேரில் பார்த்து வியந்து பாராட்டினார்களே. அதுபோன்ற ஆய்வுகளை இணைத்து புதுவழி காணலாம்; காணவேண்டும்.

அய்யோ அய்யா! அறிவியல் என்பது உங்கள் வூட்டு அவியல் இல்லை என்பதை உணருவீர்களா? ஏன், வேண்டுமென்றே அறிவியலவியல் செய்து  எங்களை விலா நோகச் சிரிக்க வைக்கிறீர்கள்? அது என்ன அய்யா ‘Zero Carbon Zone’ – என்ன உளறல் இது! ஏதாவது வெள்ளைக்காரப் பயல்கள் கண்டமேனிக்கும் பகர்ந்தால், ஒன்றுமே புரியாமால் அவற்றைச் சமைத்து எங்களுக்கு பரிமாறுகிரீர்களே! நீங்கள் பெரியாரியம், இளமாரியம் என்று உங்கள் தொழிலை நடத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

நீங்கள் இப்படியே எழுத ஆரம்பித்தால், நீங்களும் ஒரு அரைகுறை தட்பவெப்பவியளாலராகி  விடுவீர்கள், ஐயகோ! இப்போது இருக்கும் NGO சார் தன்னார்வ ‘நிபுணர்’களையே தாங்க முடியவில்லை – நீங்களும் கூடக் குழப்பினால், இது சரியாமோ?

கரியமில வாயு என்பது மோசமான ஒன்று என்று தங்களுக்குப் பகர்ந்தது யாரோ? அவர் நிச்சயம் அப்துல் கலாம் அவர்களாக இருந்திருக்க முடியாது.

ஆனால் உங்கள் நேர்மையை மெச்சுகிறேன். ஏனெனில் நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால்:

 1. உங்கள் ‘பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகம்’ என்பதுள் இருப்பவை (அதாவது, பாவப்பட்ட மாணவர்கள்) கரியமில வாயு – அதாவது, உங்கள் மொழியில் – அசுத்தக்காற்று.
 2. அவர்கள் பூஜ்யமாக்கப் படுகின்றனர்.
 3. மேலும் உங்கள் பல்கொலைக் கழகத்தில், கரிமமே இல்லாததால் (‘‘Zero Carbon Zone’ )  அதன் வளாகத்தில் இருப்பவர்களெல்லாம் மனிதர்களே இல்லை!

ஆஹா!  நன்றி. நன்றி!

மேலும் உண்மை படிக்க

Advertisements

3 Responses to “வீரமணி அவர்களின் மெச்சத்தக்க நேர்மை!”

 1. sathi62 Says:

  சுற்றுச்சூழல் நன்மைக்கு மரம் வளர்த்தல் அல்லது செடி, கொடிகள் வளர்த்தலைப்பற்றி யார் சொன்னாலென்ன? காடுகள் பாதுகாக்கப்படுமல்லவா?

 2. ramasami Says:

  நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே.

  ஆனால், எனக்கு, கர்மயோகிகள் போல மரம், மரமாக,- பொட்டல்வெளி பொட்டல்வெளியாக அலைந்து நட்டு அவைகளைப் பராமரித்து (பிரதி பலன் பார்க்காமல், வெட்டிப் பேச்சு பேசாமல்,அதிகப் பிரசங்கம் செய்யாமல்) புன்முறுவலுடன் அமைதியாக இருக்கும் பலரைத் (‘நல்லார் ஒருவர் உளரேல்’ போன்ற நல்லோர்கள்) தெரியும்.

  சில சமயம் தோன்றுகிறது – ஏன் நாம் வீரமணி போன்ற சுயதம்பட்டக் கலைஞர்களைப் பற்றியோ அல்லது ஆவேச மின்னஞ்சல்களாக அனுப்பும் வெட்டி NGO வெறியர்களைப் பற்றியோ பேசவேண்டுமென்று… ஆனால் இவர்களின் சொல்லிற்கும் செயலுக்கும் உள்ள சமன் செய்ய முடியா இடைவெளி உறுத்துகிறதே!

  எது என்னமோ – ஏதோ வீரமணிகளால் ஒரு மரம் வளர்ந்தால்கூட அது நல்லதே! ஒப்புக் கொள்கிறேன்.

 3. Anonymous Says:

  veeramani ayya avargalai patri pesa ungaluku thaguthi illai ena nenaikiren…. indru tamil naatin valarchiku yaar kaaranam endru kettal thalaivar periyar,, veeramani,,kamarajar ivargalai thavira yaarai solla mudium…..??? epadi endru ketkireerkala??? RESERVATION————> KALVI——> VELAI VAIPPU———-> PORULAATHARAM————> MAHILCHI Ippo purium nu nenaikiren………………


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: