கருணாநிதி வகையறாக்களின் கல்விப் பிணி

18/10/2011

நான் வேலை செய்யும் பள்ளி மாணவர்களுக்கு – பொதுவாகத் தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களுக்கும் கல்விக்கும் நடுவில் ஒரே மாபெரும் மலையாக இருந்து அவர்கள் உய்வதைத் தடுப்பவை மூன்று விஷயங்கள். இம்மூன்று விஷயங்களுக்கும் ஆதார சுருதி – நம் பொறுக்கித் தலைவர் கலைங்கர் கருணாநிதி அவர்களே, மேலும் அவர் சார்ந்து இயங்கும் உயர் மட்ட திமுக அயோக்கியர்களே என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

அந்த மூன்று விஷயங்கள்: மது, தொலைக்காட்சிப் பெட்டிகள், திரைப்படங்கள். இவற்றைப் பற்றி நான் சொல்லித் தான் ஒருவருக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.நம் தமிழகக் குழந்தைகளை முளையிலேயே கிள்ளி, அவர்களைக் காயடித்து, அவர்கள் மூளையைச் சலவை செய்து,  அவர்களை – தாங்கள் செய்யும் வன்புணர்ச்சிகளை  முட்டாள்தனமாகப் பார்க்க வைப்பதில், இந்த உயர்மட்ட திமுகவினரை விட்டால் ஆட்களில்லை. (ஆம். பிற கட்சியினரும் முயன்று கொண்டிருக்கின்றனர் – ஆனால் திமுக உயர்மட்டப் பொறுக்கிகள் அளவு போவதற்கு, அவர்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம், நல்ல வேளை!)

வயிறெரிகிறது எனக்கு.

இந்தப் பொதுப் படியான வயிற்றெரிச்சல்களுக்கு அப்பாற்பட்டு – இன்றைய தலையாய பிரச்சினை என்னவென்றால் – நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள்…

நான் பணி புரியும்  பள்ளி இருப்பது விழுப்புரம் மாவட்டத்து ஒரு ‘டொக்கு’ பகுதியில். .. விழுப்புரம் மாவட்டம் மிக ‘வளம்’ மிக்க மாவட்டம் அல்ல. இருப்பினும் இங்கு ஏகப்பட்ட ஜபர்தஸ்துடன் போட்டியிடும், ‘செலவு’ செய்யும் நபர்கள் அதிகம்.

இளைஞர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ‘தேர்தல் பணி’ செய்தால் ரூபாய் ஐநூறும் ஒரு பீர் போத்தலும் இலவசம். ஒரு வார்ட் வேட்பாளர் அளவு போட்டியிருபவரே முப்பத்தைந்து லட்சம் செலவழிக்கிறார்.

ஆக, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஆகிக்க் கொண்டிருந்த தினம் சுமார் ஒரு கோடி ரூபாய் மது விற்பனை – கடந்த ஒரு வாரமாக ரூபாய் 2.25 கோடிக்கு தலைக்கேறியுள்ளது!  சாராய ஆற்றில் நீந்தும் நம் இளைஞர்கள் எப்படித்தான் கரையேறுவார்கள்?

இதில் ஒரு சுவாரசியமான (?) விஷயம் என்னவென்றால் – இந்த சாராய தமிழ்தேசிய நீரோட்டத்தில் – திமுக, அதிமுக, தேதிமுக – இவர்கள் மட்டுமல்ல – பாமக, விடுதலைச் சிறுத்தைகள்(!) அனைவரும் அடக்கம். இவை தவிர்த்து, ராமதாஸ்களின் இரட்டை வேடங்கள் சமூகவியல் ரீதியாகப் புல்லரிப்பு தரக் கூடியவை…

எனக்குத் தெரிந்து இடதுசாரிகள் தான், இந்தக் கேவலமான கோலத்தில் பங்கேற்காதவர்கள்…

ஹ்ம்ம்…

கருணாநிதிகளின் கள், டிவி, படம் இன்னபிற அயோக்கியத்தனங்கள் பற்றித் தொடரலாம்…

One Response to “கருணாநிதி வகையறாக்களின் கல்விப் பிணி”

  1. Anonymous Says:

    உற்றுநோக்கிய உள்ளாட்சி தேர்தல் நடைமுறை சரியானதே! குடும்ப நலனுக்காக மக்கள் நலனை பலிவைப்பது எவ்வகையிலும் நல்லதல்ல. அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறதே எல்லாதரப்பிலும். ஆகவே தங்களிடம் பயிலும் மாணவர்களை நல்ல குடி மகனாக்குங்கள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s