ஓரங்கட்டப் பட்டவரும் ஓரம்போகியாரும்…

02/11/2011

கடந்த பல நாட்களாக வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. ஆகவே நகைச்சுவையுணர்ச்சி, இடுகைகள் பற்றி சிந்திக்கவே இல்லை.

ஆனால், நமக்குத்தான் கருணாநிதி அவர்களின் வற்றாத உளறல் ஜீவநதி இருக்கிறதே!

கருணாநிதி அவர்களின் இன்னொரு நகைச்சுவை அறிக்கை:  கழகத்தைக் காட்டிக் கொடுப்பதா?

துரோகச் சிந்தை யினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மன திலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றைக் கூர் வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்ற னர். கையிலே காசில்லாத போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந் திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவ தற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

துரோகத்தைத் தூள் செய்து பகையைப் புறங் கண்டு நீ தூக்கி உயர்த்தி யிருக்கிற இரு வண்ணக் கொடியை காணும்பொ ழுதும், அந்தக் கொடி யின் பட்டொளியில் 62 ஆண்டு கால இயக்கச் சரித்திரத்தைப் படிக்கும் பொழுதும், ஓரம்போகி யார் எனும் ஒரு பெரும் கவிஞர் எழுதிய புறப் பாடல் ஒன்றை நான் உனக்கு நினைவுபடுத் திட விரும்புகிறேன். அந் தக் கவிஞர் எழுதிய பாட லில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடு கிறார்கள்.

போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒரு வன் உடனே களம்புகு மாறு வீரர்களுக்கெல் லாம் செய்தி அனுப்பு கிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளி லிருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். போர் தொடங்கி விடுகிறது. அந்தப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம் போகியா ரின் விழிகள் வட்டமிடு கின்றன.

அவன் தேர்ப் படையிலோ, யானைப் படையிலோ, புரவிப் படையிலோ இடம் பெற்று அந்தக் களத் திற்கு வரவில்லை. தன் னந்தனியனாக, நூலரி மாலையை அணிந்து கொண்டு, கையில் ஓர் வாளுடன் காலாட் படை வீரனாக களத் திலே நுழைகிறான். கடும் போரிடுகிறான்.

அந்த வீரன்; காலாட் படை வீரன்; எதிரிப் படை வீரனை நோக்கிப் பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன். இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகெனக் கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான். அந்த வாள் வீச்சு, மாரிக்கால மின் வெட்டின் வீச்சு. யானை வீழ்கிறது. யானையை வீழ்த்திய அவன் வாளும் வளைந்து விடுகிறது. யானையின் மீதிருந்து விழுந்த வீரன், எழுந்து வந்து அவனைத் தாக்கி அழிப்பதற்குள் வாளை நிமிர்த்தியாக வேண்டும். என்ன செய் தான் தெரியுமா?

அவன் வாளை நிமிர்த் திக் கொள்ள உடனடி யாக எந்த வசதியும் கிட்ட வில்லை. எதிரியோ எழுந்து விட்டான். விரை வில் நெருங்கி விடுவான். பளிச்செனத் தோன்றி யது ஒரு அரிய யோசனை அந்த மாவீரனுக்கு. கோணிய வாளை எடுத் தான் – அங்கே தன்னால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த யானையின் மத்தகத்திலே அந்த வாளை அழுத்தி நிமிர்த்துக் கொள்கிறா னாம்.

அவனது வளைந்து போன வாளை நிமிர்த் திக் கொண்டான் என்ப தைக் கண்டதும் எதிரிப் படையின் வீரன் எடுக் கிறான் ஓட்டம் – புறங் காட்டி ஓடுகின்ற அவ னைப் பார்த்து அந்த வீரன் நகைக்கத் தொடங் கினான்.

ஓரம்போகியார் சித் தரிக்கும் அந்தத் திறன் மிகு தீரனாகத்தான் உன்னை – நமது கழ கத்தை – நான் கருதுகிறேன். நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல நமது விரோதிகள் ரதங் கள் ஏறி வந்து நம்மைத் தாக்க முயலலாம். நமக் கெதிரான விமர்சனங் கள் யானைகள் மீது ஏறி வந்து நம்மை எதிர்க் கலாம்.

துரோகிகளோ குதிரைப்படை கொண்டு வந்து நம்மை நிலைகுலை யச் செய்ய யத்தனிக் கலாம். நமது புறநானூற் றுப் புலவர் வியந்து பாராட்டிய வீரன் எதி ரிப்படையை விரட்டி யது போல, கொல்ல வரும் பகையை – தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும்.

மேல்  விவரங்களுக்கு படிக்கவும்:  பொறுக்கி நடைத் தமிழ்…

One Response to “ஓரங்கட்டப் பட்டவரும் ஓரம்போகியாரும்…”

  1. Anonymous Says:

    ஒத்திசைவு அல்ல – ஓங்கி அடிக்கும் சம்மட்டி அடி. நொறுக்குவது எது? எதை வெளிக்கொணருகிறது மாய்மாலம் செய்து படிபோரை மயக்கும் எழுத்தாளர்களின் சுய நலத்தையா? அப்போதைய ஊடகங்கள் அப்படியிருந்தன. இப்போது இருக்கும் தகவல் நுட்ப நுணுக்கம் பொய்மைகளை போட்டு உடைக்கிறது “ஒத்திசைவு” போல. ஆசிரியரின் கடும் உழைப்பை பாராட்டுகிறேன். காய்ச்சி எடுக்குமொருவழி பாதையாக இருந்தால் கூட.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s